Total Pageviews

Monday 23 April 2012

வேலூர் சிப்பாய் எழுச்சி

வேலூர் சிப்பாய் எழுச்சி
வேலூர் சிப்பாய் எழுச்சி ஜூலை 10,
1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க்
கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய்
எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும்.
பின்புலம்
1805இல், வேலூர் கோட்டையில்
இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை
சார்ந்த தென்னிந்திய துருப்புகள்
கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த
வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி,
இந்தியப் படைகள் விபூதி , நாமம்
போன்ற சமய
அடையாளஙளை போடக்கூடாது,
தலையில் 'கிருதா'வை சீவ
வேண்டும், காதில்
தோடு போடக்கூடாது, மேலும்
ஐரோப்பிய ராணுவ
உடைகளை அணிய வேண்டும் என
ஆணயிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய
முறைப்படி குழாய் வடிவ
தொப்பியை போட்டு அதில் தோல்
பட்டையை போடவேண்டும் எனவும்
உத்தரவு வந்தது. அதனால்
அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம்
துருப்புக்கள் கோபமடைந்து,
வெடித்தெழுந்தனர். அந்த
கலகக்காரர்களின்
தலைவர்களுக்கு 600
பிரம்படி கிடைத்தது. ஆனால்
அது துருப்புக்களை இன்னும்
கோபமூட்டியது. இதற்கிடையில்,
வேலூரில் சிறை வைக்கப் பட்டிருந்த
திப்பு சுல்தானின் மகன்கள்
துருப்புக்களுக்கு ஆரவாரம்
கொடுத்து தூண்டி விட்டதாக
சொல்லப் படுகிறது.
கலகப் போக்கு
10-7-1806 அதிகாலையில் பல
ஆங்லேய அதிகாரிகள் அவர்கள்
படுக்கையில் கொல்லப்பட்டனர்.
அங்கிருந்த 350 பிரிட்டிஷ் ஆட்களில்,
100 பேர் கொல்லப் பட்டனர். ஆனால்
இந்த கலகம் அரசியல், ராணுவ
குறிக்கோள்களுடன் எழவில்லை.
அதனால், இந்திய துருப்புக்களை,
அதிகாரிகளை கொன்று களித்து வந்தனர்.
அவர்கள் வேலூர் கோட்டையின்
கதவைக் கூட மூடவில்லை.
இரண்டு நாட்களில்,
ஆர்காட்டிலிருந்த 19ம் சிறிய
குதிரைப் படை (19த் லைட்
ட்ரகூன்ஸ்) வேலூர்
நோக்கி பாய்ந்து, வேலூர்
கோட்டையை கைப்பற்றியது. அந்த
சண்டையில் 350 துருப்புகள் உயிர்
துறந்தன; அந்த
அளவு காயமடைந்தனர். மற்ற
இந்திய துருப்புக்களும்
கைது செய்யப் பட்டனர்.
கைது செய்யப் பட்ட துருப்புகள்
பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப்
பட்டு, பீரங்கி சுட்டு, கொல்லப்
பட்டனர்.
அஞ்சல் தலை
இக்கலகம், 1857 பெரும்
கலகத்திற்க்கு முன்னோடியாகும்.
இந்நிகழ்வின் ஞாபகமாக, இந்திய
அரசு ஜூலை 2006ல் , அஞ்சல்
தலை வெளியிட்டது.

No comments:

Post a Comment