Total Pageviews

Sunday 22 April 2012

சோழன்-2

இவன் காலத்துக்குப் பின் ஆண்ட
சோழ மன்னர்களில் இராசசூய யாகம்
வேட்ட பெருநற்கிள்ளி , போர்வைக்
கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய
நாட்டுப் புலவர்
பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட
கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத்
துஞ்சிய
கிள்ளிவளவன் ,இலவந்திகைப்
பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி,
குராப்பள்ளித் துஞ்சிய பெருந்
திருமாவளவன் போன்ற பலரின்
பெயர்கள் சங்க இலக்கியங்களில்
இடம்பெறுகின்றன. இவர்களுள் போர்
அவைக்கோப்
பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில்
இராசசூயம் வேட்ட
பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான்
என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள்.
மேலும் நல்லுருத்திரன்,
கணைக்கால்
இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய
கோச்செங்கணான் ஆகிய
மன்னர்களின் பெயர்கள் சங்க
இலக்கியங்களில் காணப்படுகின்றன.
முற்காலச் சோழர்களின் வீழ்ச்சி
கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப்
பின் சோழரிடையே அதிகாரப்
போட்டிகள் வலுப்பெற்றதால்
அவர்கள் வலுவிழந்த நிலையில்
இருந்தனர். இவ்வாறு சோழர்
வலுவிழந்ததைப்
பயன்படுத்தி 'களப்பாளர்' அல்லது
களப்பிரர் எனப்படும் ஒரு குலத்தவர்
தமிழ்
நாட்டுக்கு வடக்கிலிருந்து வந்து சோழநாட்டின்
பல பகுதிகளைப் படிப்படியாகக்
கைப்பற்றிக் கொண்டனர்.
கி.பி இரண்டாம் நூற்றாண்டின்
இறுதியில் காஞ்சியை மையமாகக்
கொண்டிருந்த சோழநாட்டின்
பகுதி களப்பிரர்களிடம்
வீழ்ச்சியடைந்தது. சோழர்கள் பல
இடங்களுக்கும் சிதறினர்.
கி.பி நான்காம் நூற்றாண்டின்
முற்பகுதியில், அச்சுத களப்பாளன்
என்னும் களப்பிர மன்னன் காவிரிக்
கரையிலிருந்த உக்கிரபுரத்தில்
இருந்து ஆட்சி செய்து வந்ததாகத்
தெரிகிறது. எனினும்
இக்காலப்பகுதியில் சோழநாட்டின்
ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும்
களப்பிரருக்கும் இடையில்
போட்டி இருந்து வந்துள்ளது. ஆறாம்
நூற்றாண்டுக்குப் பின்னர் பல்லவ
மன்னன்
சிம்மவிட்டுணு களப்பிரர்களிடமிருந்து இப்பகுதிகளைக்
கைப்பற்றிக் கொண்டான்.
பல்லவர்களுடைய
ஆட்சிக்காலத்திலும் சோழர்கள்
சிற்றரசர்களாக
ஆங்காங்கே ஆட்சி செய்து வந்தனர்.
எனினும், பண்டைய சோழநாட்டின்
பெரும்பகுதி,
பல்லவர்களுக்கு அடங்கிய
முத்தரையர்களினால்
ஆளப்பட்டு வந்தது.
களப்பிரர்கள்
நாட்டில் தெளிவற்ற பல அரசியல்
மாறுதல்களுக்குக் காரணமாக
இருந்தவர்கள் களப்பிரர்கள்.
களப்பிரர்களைப்பற்றிப்
பாண்டியர்களின்
வேள்விக்குடிப்பட்டயமும்,
பல்லவர்களின் சில பட்டயங்களும்
கூறுகின்றன. பாண்டியர்களும்
பல்லவர்களும் தம்
ஆட்சியை நிலைநாட்ட
வேண்டி ஆறாம் நூற்றாண்டின்
இறுதியில்
இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள்
மேற்கொண்ட முதல்
நடவடிக்கையாகும்.
இவர்களில் குறிப்பிடத்தக்க
ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன்.
இம்மன்னனே சேர சோழ பாண்டிய
மன்னர்களைச் சிறையெடுத்தான்
என்று இலக்கியங்களில் சிறப்பித்துக்
கூறப்படும் அச்சுதன் ஆவான்.
கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த
யாப்பருங்கலக் காரிகையின்
ஆசிரியரான அமிர்தசாகர்
இவனைப்பற்றிய சில
பாடல்களை மேற்கோள்
காட்டியுள்ளார். இவன் பௌத்த
மதத்தைச் சேர்ந்தவனாய்
இருக்கக்கூடும்.
ரேனாண்டு சோழர்கள்
களப்பிரர் ஆட்சி காரணமாக
சோழர்கள் தமிழகத்தில்
செல்வாக்கிழந்த நிலையில், சோழ
இளவரசர்கள் சிலர்
தமிழகத்தை விட்டு வெளியேறித்
தெலுங்கு, கன்னட நாடுகளுக்குச்
சென்று குடியேறி ஆட்சியை நிறுவினார்கள்.இவர்கள்
ரேநாட்டுச் சோழர்கள் என்றும்
அழைக்கப்படுகிறார்கள்.இவ்வாறு சென்ற
சோழர்கள் கடப்பை, கர்நூல்,
அனந்தப்பூர் மாவட்டங்களில்
குடியேறி 'ரேனாண்டு சோழர்கள்'
என்று சிறப்புப் பெற்று விளங்கினர்.
இவர்கள் தாங்கள் கரிகாலன்
வழியினர்
என்று உரிமை கொண்டாடினர்.
மைசூர்
தலைக்காடு பகுதியை ஆண்ட
கங்கர்கள்
தம்மை விருத்தராஜா முத்தரைசர்
என்று அழைத்துக் கொண்டார்கள்.
இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக்
குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்-
முத்தரசர் என்று கூறிக்கொண்டனர்
எனக் கண்டோம் .கங்க அரசர்களில்
கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட
துர்விநீதன் என்ற சிறந்த மன்னனின்
தேவி ஒரு சோழ இளவரசியாவாள்
அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால
சோழனின் வழிவந்தவனும் பரம
க்ஷத்திரியனுமான சோழ அரசனின்
பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள்.
அதைக் குறிக்கும்
செப்பேடு "உரகபுராதிப பரம
க்ஷத்திரிய சோழகுலதிலக
ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண
என்றால் தீயால் கருகிய
காலை உடையவன்.
அவனது சந்தானம் வழித் தோன்றிய
என்று பொருள்.
'யுவான் சுவாங்' என்ற சீனப்
பயணி இவர்கள் நாட்டை' சூளியே'
என்றும் அவர்கள் தம்மைச் சோழன்
கரிகாலன் பரம்பரையினரைச்
சேர்ந்ததாகக் கூறிக்கொண்டனர்
என்றும் குறிப்பிடுகிறார். இச்சோழப்
பேரரசர்களின் சோழநாட்டு எல்லை,
தான்ய
கடகத்திற்கு தென்மேற்கே 200 கல்
தொலைவில் அமைந்திருந்ததாகவும்
அது 480 கல்
சுற்றளவு கொண்டதாகவும்
தலைநகரம் 2 கல்
சுற்றளவு கொண்டதாகவும்
அச்சீனப்பயணி தன்
பயணக்குறிப்புகளில்
குறிப்பிட்டுள்ளார். [2]
தமிழகச் சோழர்கள்
சங்க கால மன்னனான
திருமாவளவன்(கரிகால்
பெருவளத்தான்) ஆட்சிக்குப் பின்
சோழ நாடு களப்பிரர்
படையெடுப்பால் வீழ்ச்சியடைந்தது.
அச்சுத விக்கிராந்தகன் என்னும்
களப்பிர மன்னன்
சோழநாட்டை ஆண்டான்.
அச்சுதனின் ஆட்சிக்காலத்திற்குப்
பிறகு களப்பிரர்களை முறியடித்த
பல்லவர்களும் , பாண்டியர்களும்
தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர்,
தம் சுதந்திரத்தை மீண்டும்
நிலைநாட்ட இயலாத சோழ
மன்னர்கள்,
காவிரிக்கரைப்பகுதிகளில் குறிப்பாக
உறையூர் , பழையாறை போன்ற
பகுதிகளில் ஏறத்தாழ நூறாண்டுகள்
புகழ் மங்கிய நிலையில்
வாழ்ந்து வந்தனர். இக் காலத்தில்
வாழ்ந்த சோழ
மன்னர்களைப்ற்றி அறிய
முடியவில்லை, இக்காலத்தைச்
சேர்ந்த கல்வெட்டுக்களும்
இலக்கியமும் இச்சோழ
மன்னர்களைப்பற்றி மேலெழுந்த
வாரியாக கூறும்போது,
காவிரிக்கரையில் இவர்கள்
தொடர்ந்து வாழந்தனர்
என்று கூறுகின்றனவே தவிர,
வரலாற்றுச் செய்திகளைத்
தரவில்லை. இதன் காரணமாக கி.பி.
3-ம் அல்லது 4-ம்
நூற்றாண்டு முதல் 9-ம்
நூற்றாண்டு வரை சோழர்களைப்
பற்றிய செய்திகள் கிடைக்கப்
பெறவில்லை.
தமிழகத்தில் இருந்த சிற்றரசர்களான
சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும்
ஏற்படுத்த தக்க
சமயத்தை எதிர்பார்த்திருந்தனர்.
வடக்கிலும் தெற்கிலும் புதிதாக
ஏற்பட்ட அரசுகள் சோழ
மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும்
இவர்களது பழம் புகழை மதிக்கின்ற
வகையில், சோழர்குல
மகளிரை மணந்ததோடு, தம்மிடம்
பணியாற்ற விரும்பிய சோழ
இளவரசர்களுக்குப் பதவிகளையும்
அளித்தனர்.பல குறுநில
மன்னர்களோடு திருமணத் தொடர்பு
கொண்டு இழந்த
செல்வாக்கை சோழர்கள் மீட்க
முயன்றனர். இறுதியில்
உறையூரை ஆண்ட சிற்றரசனான
விசயால சோழன், களப்பிர மன்னர்
குலத்தைச் சேர்ந்தவர்களாகக்
கருதப்படும்
முத்தரையர்களிடமிருந்து
தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச்
சோழர் பரம்பரையைத்
தோற்றுவித்தான்.
பிற்காலச் சோழர்கள்
பிற்காலச் சோழர்களின்
வரலாற்றை அறிய வெங்கையா,
உல்ச், கிருட்டிணசாத்திரி ஆகியோர்
தொகுத்த கல்வெட்டுகளும்
மன்னர்கள் வெளியிட்ட
செப்பேடுகளும் வழி செய்கின்றன.
அன்பில் பட்டயங்கள்,
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,
கரந்தைச் செப்பேடுகள்,
ஆனைமங்கலம் செப்பேடுகள்,
லெடன் செப்பேடுகள்
ஆகியவை அவற்றுள் சில.
இவை தவிர இலக்கிய,
இலக்கணங்களும் கலிங்கத்துப்பரணி ,
மூவருலா , பெரியபுராணம்,
பன்னிரு திருமுறைகள்,
திவ்யசூரிசரிதம், வீர சோழியம்,
தண்டியலங்காரம் போன்ற
நூல்களும் இக்காலத்தை அறிய
உதவும் சன்றுகளாக உள்ளன.

No comments:

Post a Comment