Total Pageviews

Sunday 22 April 2012

பண்டார வன்னியன்

இலங்கையில் தமிழ்
இனத்தை பூண்டோடு அழிக்கும்
விதமாக தமிழர்களை இன்னும் கூட
துப்பாக்கியால் சுட்டும்
பட்டினி போட்டும்
கொல்வது மட்டுமின்றி , அது ஈழத்
தமிழினத்தின் தாய் நிலம் என்பதற்கான
வரலாற்று பாரம்பரிய
அடையாளங்களையும்
தொடர்ந்து அழித்து வருகின்றனர்
சிங்கள காட்டுமிராண்டிகள் .
அவற்றில் அண்மையில் நடந்த
ஒரு சம்பவம் .... ஒரு காலத்தில்
சிங்களே அரசே தமது தேசிய
சின்னமாக அறிவித்திருந்த தமிழ்
மன்னன் பண்டார வன்னியனின்
நினைவுச்
சின்னத்தை அழித்தது சிங்கள நாய்கள்
அழித்ததுதான் .
இந்த பண்டார வன்னிய மன்னனின்
வரலாறு அடிப்படையில்
கலைஞரே பாயும்புலி பண்டார
வன்னியன் என்ற
ஒரு வரலாற்று நூலை எழுதிப் பேர்
வாங்கியது எல்லாம்
இப்போது அவரே நினைத்துப் பார்க்க
விரும்பாத பழைய கதை .
யார் அந்த பண்டார வன்னியன் .?
நினைவுச் சின்னம் அழிக்கப் பட்ட
அந்த தமிழ் மன்னனின் நினைவை நாம்
நம் நெஞ்சில் நிலைத்த சின்னமாகப்
பதிய வைக்க வேண்டாமா?
படியுங்கள் அவனது வீர வரலாற்றை !
இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின்
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார்
மாவட்டங்கள் இணைந்த பகுதிதான்
வன்னி நிலம் . வடக்கே கிளிநொச்சி,
தெற்கே மதவாச்சி,
கிழக்கு மேற்கு பகுதியில்
கடலாகவும் உள்ள பிரதேசம் அது .
அங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண்
கிணறுகள் வன்னியின்
தொன்மையை உணர்த்தியுள்ளன .
கி.மு.543-ஆம் ஆண்டு நமது இந்திய
நாட்டில் இருந்த மகத நாட்டு மன்னன்
ஒருவன் , மிருக குணம் கொண்ட தன்
மகன் விஜயனையும்
அவனது தோழர்கள்
எழுநூறு பேரையும்
நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான்.
செல்லுமிடம் தெரியாமல்
மரக்கலத்தில் சென்ற விஜயனும்
அவனது கொடுங்கோல் ஆட்களும்
இலங்கையின் இன்று புத்தளம்
என்று அழைக்கப் படும்
பகுதிக்கு அடுத்த
தம்பப்பண்ணை என்ற இடத்தில்
கரை சேர்ந்ததாக இலங்கையின்
வரலாறு சொல்லும் நூலாக
சிங்களர்களே ஒத்துக்கொள்ளும்
மகாவம்சம் என்ற நூல் கூறுகிறது .
அகதிகளாய் வந்திறங்கிய விஜயன்
தமழினத்தின் மூத்த குடிகளில்
ஒன்றாக வரலாறு கூறும் நாகர் இன
இளவரசி குவேனியைப
பணிந்து நயந்து பின்னர்
ஏமாற்றி மணந்தான் .அதோடு அதற்கு வடக்கே மாதோட்டம்
என்ற பகுதியில் இருந்த தமிழ்க்
குறுநில
மன்னனோடு நட்பு கொண்டான் .
அவன் மூலம் அன்று ,
தமிழகத்தை ஆண்ட பாண்டிய
மன்னர்களோடு நட்பு கொண்டு இலங்கை மன்னனாக
தன்னை முடிசூட்டிக்கொண்டு முப்பதாண்டு காலம்
ஆட்சி புரிந்ததாகக் கூறப் படுகிறது .
விஜயன் இலங்கைக்கு அகதியாய்
வந்தபோது சிங்களம்
என்றொரு இனமே அங்கிருக்கவில்லை.
ஆனால் தமிழினத்தின் மூத்த குடிகள்
இருந்தனர்.
உண்மையில் “சிங்களம்’
என்பதே மொழி, இனம்,
பண்பாடு சார்ந்த சொல் அல்ல.
சிங்களம் என்றால் தமிழில்
கறுவாப்பட்டை என்று பொருள் . . அக்
காலத்தில் கடலோடி வாணிபம்
செய்தோர் அத் தீவுப்
பகுதியை அதிகம் தேடிப்
போனதே அங்கு கறுவாப்பட்டை என்ற
தாவரம் கிடைக்கும்
என்பதற்காகத்தான்.
கறுவாப்பட்டை அதிகம் கிடைத்ததால்
அந் நிலப்பரப்பு சிங்களத் துவீபம் என
அழைக்கப் பட்டது .
புவியியலாளர் டாலமி (உலக
வரைபடத்தை முதன் முதலாக
வரைந்தவர் ) இலங்கையில் தமிழர்
பூமியை தனியாக காட்டி தமிழர்
என்ற ஒரு இனம் அப்போது அந்த
பிரதேசத்தில் இருந்ததாக்
குறிப்பிட்டு உள்ளார் . வேறு எந்த
இனமுமோ அப்போது இருந்ததாக
அவர் கூறவில்லை .இருந்ததற்கான
சான்றும் இல்லை .
விஜயனுக்குப் பின் பன்னிரண் டாம்
அரசனாய் அசேலன் என்பவன் ஆண்ட
காலத்தில், கி.மு.205-வாக்கில் வட
தமிழகம் தொண்டை நாட்டில்
இருந்து ஏலேலன் என்ற இளவரசன்
பெரும் படையுடன் திரிகோண
மலைக்கு சென்று , அனுராதாபுரம்
சென்று அசேலனை வென்று மொத்த
இலங்கைக்கும் தன்னை அரசனாய்
அறிவித்தான். நடுநிலை தவறாமல்
நீதி, நியாயம் , அருள், ஆண்மை,
அறிவுடன் இலங்கைத்
தீவு முழுமைக்கும் நல்லாட்சி தந்த
ஏலேலன்தான் இலங்கைத் தமிழ்
மன்னன் எல்லாளன் என்று அழைக்கப்
படுகிறான் .
பிரபாகரன் கூட தனது போராட்ட
அடையாளமாய்
இலங்கை முழுதையும் ஆண்ட
தமிழ்மன்னன்
ஏலேலனை நிறுத்தவில்லை .
பின்னாளில் வெள்ளைகாரர்கள்
ஆட்சியை எதிர்த்து போரிட்டு (இன்று போலவே அன்றும் )துரோகத்தால்
காட்டிக் கொடுக்கப்பட்டு, வீரமரணம்
தழுவிய வன்னி நில மன்னன் பண்டார
வன்னியனைத்தான்
தனது போராட்டத்தின்
அடையாளமாகக் குறிப்பிட்டார் .
(இன்றும் பண்டார வன்னியனின்
அடையாளங்கள் சிதைக்கப் பட
அதுதான் முக்கியக் காரணம் . )
அப்படியானால் பண்டார
வன்னியனுக்கும்
நமது தாய்த்தமிழ்கத்துக்கும்
சம்மந்தம் இல்லையா என்ற
கேள்வி எழுகிறதா?
இதோ பதில்!
ஏலேலன் இலங்கை முழுதையும்
ஆண்ட தமிழ்ப் பேரரசன்.ஆனால்
பண்டாரக
வன்னியனோ பாரம்பரியமாய் தன்
மூதாதையர்கள் வாழ்ந்த
சிறு நிலப்பரப்பில் தன்மதிப்போடும்,
சுய அதிகாரத்தோடும் வாழ விரும்பிய
தமிழ் குறுநில மன்னன் பண்டார
வன்னியனின் பூர்வீகம் ?
யாழ்ப்பாண வைபவ மாலை என்ற
நூலின் படி சோழப் பேரரசின்
காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய
அனுப்பப்பட்ட வட
தமிழகத்து வன்னியகுல
தளபதியர்களின் வழி வந்தவன்தான்
பண்டார வன்னியன் . வன்னியர்
என்பதற்கு வலிமையுடையோர்
என்று பொருள்
பண்டார வன்னியன் காலத்துக்கும்
முன்பே , 1621-ம்
ஆண்டு போர்த்துக்கீசியர்கள்
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய
போதும்கூட வன்னிப் பகுதிக்குள்
அவர்களால் கால்பதிக்க
முடியவில்லை.
கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற
முடியாமலேயே இலங்கையில்
போர்த்துக்கீசிய அதிகாரம்
முடிவுக்கு வந்தது.
வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக
நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள்தான் , .
டச்சுக்காரர்கள் இலங்கைத் தீவைக்
கைப்பற்ற வந்த போதே தமிழர்
ஆட்சி அங்கு நிலவியது என்பதை அவர்களின்
சிலர் எழுதிய குறிப்பு ஏடுகளில்
காணலாம் .
1782-ல் வன்னியை கைப்பற்ற
அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும்
லூயி என்ற வரலாற்று ஆசிரியர் ,
“”டச்சுக்காரர்கள்
எத்தனையோ நாடுகளில் போர்
புரிந்திருக் கிறார்கள். ஆனால்
இப்படி வீரத்துடன்
போரிட்டவர்களை உலகில்
வேறு எங்கும் அவர்கள்
காணவில்லை”
என்று குறிப்பிடுகிறார் .
( இலங்கையின் வரலாற்றில்
திருகோணமலையைக்
கைப்பற்றவே பலரும்
போரிட்டு மடிநது வழக்கம் .
அதே காரணத்துக்காக பண்டார
வன்னியன் வாழ்ந்த அதே காலத்தில்
கண்டி மன்னனுக்கும்
ஆங்கிலேயருக்கும் இடையில்
சண்டை நடந்தது . அந்த நேரத்தில்
இருந்த சக்தி வாய்ந்த ஆங்கிலேயப்
பிரதி நிதி ராபர்ட் நாக்ஸ் என்பவன்
கண்டி மன்னனால் மூதூர் என்ற
ஊரில்
வைத்து சிறைப்பிடிக்கப்பட்டான் . பல
வருடங்கள் சிறையில் கழித்த ராபர்ட்
எப்படியோ சிறையில்
இருந்து தப்பி அனுராதபுரத்தை நோக்கி ஓடினான் .
அனுராதபுரத்தை அடைந்தவுடன்
அங்குள்ள மக்களையும்
ஆட்சியையும்
பார்த்து வியப்படைந்தான் .அங்கு ஆட்சி செய்த
மன்னனும் தமிழ் மன்னன்தான் .
அவன் பெயர் கைலாய வன்னியன் .
ராபர்ட் நாக்ஸ் தனது குறிப்பேட்டில்
தான் வடக்காக தப்பிச்சென்ற
போது வயல்வெளிகளை எருதுகள்
உழுவதையும் அங்குள்ள மக்கள்
சிங்கள
மொழியை பேசவில்லை என்றும்
அவர்களுக்கு சிங்கள
மொழியே தெரியவில்லை என்றும்
குறிப்பிட்டுள்ளான் .
மேலும் அங்கு கயிலாய வன்னியன்
ஆட்சிசெய்த நாட்டை கயிலாய
வன்னியன் நாடு என்றும் அவன்
யாழ்ப்பாணத்தின் தெற்கு மற்றும்
வன்னியின் கிழக்குப்பகுதியையும்
ஆண்டு வந்ததாகவும்
குறிப்பிட்டுள்ளான் ராபர்ட் நாக்ஸ் )
டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர்
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும்
மன்னார்,
திரிகோணமலை வன்னிக்காடுகள் என
வன்னி மக்கள் இடைவிடாமல் போர்
நடத்தி வந்தனர். அவர்களின் வழியில்
வந்த மறக்க முடியாத மாவீரன்தான்
பண்டாரக வன்னியன்.
வெள்ளையர்கள் முல்லைத்தீவில்
அமைத்திருந்த கோட்டையை முற்றாக
அழித்து நிர்மூலம் செய்தவன் பண்டார
வன்னியன் .
அவனது முழுப்பெயர் குலசேகரம்
வைரமுத்து பண்டாரக வன்னியன்
முல்லைத்தீவில்
இருந்து வற்றாப்பளை அம்மன்
கோவில் வரை உள்ள 2000 சதுர
மைல்
நிலத்தை ஆட்சி செய்து வந்தான்
பண்டார வன்னியன் .
தனது சகோதரர்களை முக்கிய
பதவிகளில்
வைத்து ஆட்சி செய்து வந்தான் .
தனது தம்பி கைலாய
வன்னியனை அமைச்சராகவும்
தனது இறுதி சகோதரன் பெரிய
மன்னன் என்ற
பெயருடையவனை தளபதியாகவும்
நியமித்திருந்தான் .
அதே நேரம் காக்கை வன்னியன்
எனும் இன்னொரு மன்னன்
வன்னியின்
இன்னொரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான் .
பண்டாரவன்னியனுக்கு நளாயினி என்ற
சகோதரியும் உண்டு .
நளாயினி தமது அவைப புலவர்
மீது காதல் கொண்டிருந்தாள்.
மன்னன் காக்கை வன்னியன்
( மேற்குறிப்பிட்ட,
இன்னொரு நிலப்பகுதி மன்னன் )
நளாயினி மீது காதல்
கொண்டு அவளைத் திருமணம்
செய்து தரும்படி பலமுறை பண்டார
வன்னியனுக்கு சேதி அனுப்பியிருந்தான் .ஆனால்
பண்டாரவன்னியன்
எதோ காரணத்தால்
தயங்கி இருக்கிறான் .
இந் நிலையில் புலவரும்
நளாயினியும் காதல்
கொண்டுள்ளதை கண்ட
காக்கை வன்னியன் கோபம்
கொண்டு புலவருடன் போரிட்டான் .
போரில் வென்றது புலவன் !. எனினும்
பக்கத்த் நாட்டு மன்னன்
என்பதாலோ என்னவோ ,
மன்னனை உயிரோடு திருப்பி அனுப்பினான்
அனுப்பினான் .
அதன்பின்புதான் புலவனும் அரச
குலத்தில் வந்தவன் என்பது பண்டார
வன்னியனுக்குத் தெரிந்திருகிறது .
எனவே தனது சகோதரியின்
காதலுக்கு சம்மதித்தான் பண்டார
வன்னியன் . .
விஷயம் அறிந்த காக்கை வன்னியன்
பொருமினான் . பண்டாரவன்னியன்
மீது வெளையர்கள் பல
முறை படை எடுத்து தோல்வி அடைவதைப
பார்த்த காக்கை வன்னியன் , தன்
ஆசையின் தோல்விக்குப் பழி தீர்க்க
வெள்ளையர்களுடன்
சேர்ந்து சதி செய்து பண்டார
வன்னியனை கொல்ல திட்டமிட்டான் .
நல்லவன் போல நடித்து பண்டார
வன்னியனிடம்
மன்னிப்பு கேட்டு சேர்ந்து கொண்டு சமயம்
பார்த்து ஆங்கிலப் படைகளிடம்
பண்டார வன்னியனை சிக்க வைத்தான்
பலமுறை படை எடுத்து வந்தும்
வெல்ல முடியாத பண்டார
வன்னியனை மூன்று ஔரத்தில்
இருந்தும்
படை எடுத்து வந்து தாக்கி வென்றனர் .
1803 ஆம் வருடம் அக்டோபர் மாதம்
31 ஆம் நாள் கற்சிலைமடு என்ற
இடத்தில் அங்கிலேய தளபதி ரிபேக்
என்பவனால் பண்டார வன்னியன்
கொல்லப்பட்டான் .
எனினும்
அவனது வீரத்தை வியந்து அவனைக்
கொன்ற அந்த ஆங்கிலேயத்
தளபதி ரிபேக்கே பண்டார
வன்னியனுக்கு சிலை ஒன்றும்
நடுகல் சின்னமும் வைத்தான்
ஒருவனுக்கு அவனுக்கு பிடித்தவர்கள்
உறவினர்கள் யார்
வேண்டுமென்றாலும்
சிலை வைக்கலாம் ஆனால்
எதிரியாலேயே வைக்கப்பட்ட
சிலை பண்டாரவன்னியன் சிலை .
இந்த நூற்றாண்டில் இந்த ஆண்டில்
சுமார் இரண்டு வாரம்
வரை காலத்தை வென்று நின்றிருந்த
அந்த நடுகல்லைதான்
தற்போது உடைத்து இருக்கின்றனர்
சிங்கள வெறியர்கள் . இது சிங்களனின்
அற்ப புத்தியையே காட்டுகிறது
முல்லைமணி என்பவர் மற்றும்
அவர்களின் சக நண்பர்களின்
முயற்சியின் விளைவாய்
எத்தனையே ஆண்டுகளுக்குப்
பிறகு 2002ம்
ஆண்டு கற்சிலைமடுவில் பனை மரக்
காட்டில் பண்டார
வன்னியனுக்கு புதிய சிலை ஒன்றும்
நிறுவப்பட்டது .
பண்டார வன்னியன் ஆண்ட நாட்டின்
எல்லையாக இருந்த வற்றாப்பளையில்
உப்பு நீரிலே விளக்கெரியும்
கண்ணகி அம்மன் ஆலயம் ஒன்றும்
இருந்தது .இப்போது அவை எல்லாம்
என்ன ஆயின
என்பதே தெரியவில்லை .
இப்படி எதிரியும் பாராட்டிய பண்டார
வன்னியன் வீரம் சொன்ன சின்னங்கள்
அழிக்கப் பட்ட இந்த நேரத்தில்.....
கலைஞர் எழுதிய பாயும்புலி பண்டார
வன்னியன் தொடர் இரண்டாம்
முறையாக முரசொலியில் வெளியிடப்
பட்டு நிறைவுற்றபோது..... முதல்வர்
கருணாநிதி வெளியிட்ட
அறிகையை இங்கே நினைவு கூர்வதன்
மூலம் யாருடைய
மனசாட்சியாயாவது அசைக்க
முடிகிறதா என்று பார்ப்போம் .
"இரண்டாவது முறையாக
முரசொலியில்
வெளிவந்து கொண்டிருந்த "பாயும்
புலி பண்டாரக வன்னியன்''
வரலாற்று ஓவியம்;
முடிவுற்றுவிட்டது.
எத்தனை முறை அந்த வீரனின்
வரலாறு வெளிவரினும்; அந்த
வீரகாவியம்
வாழ்ந்து கொண்டே இருக்கும்.
அதை விளக்கவே இந்தக் கடிதம்:
1991ஆம் ஆண்டு வாக்கில்
வெளியிடப்பட்டதும், நான் எழுதிய
வரலாற்றுப் புதினமுமான "பாயும்
புலி பண்டாரக வன்னியன்'' எனும்
எழுச்சி மிக்க காவியத்தில், நான்
படைத்துள்ள கதாபாத்திரங்கள்
பண்டாரக வன்னியனும், அவன்
உள்ளங்கவர்ந்த காதலி,
குருவிச்சி நாச்சியாரும், அவன்
அருமைத் தங்கையர், நல்ல நாச்சியும்,
ஊமைச்சி நாச்சியும்
இலங்கை மண்ணில் தமிழர்களின்
உரிமை காக்கப் போராடியவர்கள்
என்று நான் சித்தரித்துள்ளேன்.
துரோகிகளைச் சந்திக்க நேர்ந்த அந்த
தூயவனுக்கு நல்ல நண்பர்களும்
இல்லாமலில்லை. கி.பி. 1815ஆம்
ஆண்டு வரையில்
கண்டியை ஆட்சி செய்து ஆங்கிலேயர்களால்
சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்து வேலூர்
சிறையில் பதினாறு ஆண்டுக்காலம்
அடைக்கப்பட்டு அந்தச்
சிறையிலேயே உயிர்நீத்த
கண்ணுசாமி என்ற விக்ரம ராஜ
சிங்கன், பண்டாரக வன்னியனின்
உயிர்த்தோழனாவான்.
காட்டிக் கொடுப்போரால் மனம்
நொந்த அந்த மாத்தமிழனின்
எரிமலை இதயத்தை சிறிது மாற்றியமைத்து,
அவன் இளைப்பாறும் குளிர் தருவாக
குருவிச்சி நாச்சியார் என்னும்
கோதையொருத்தியும் இருந்தாள்!
மனஉறுதியின் அடிப்படையில்
கட்டப்பட்ட அந்தக் காதல் மாளிகை,
ஒரு வைராக்கிய மாளிகை! தியாக
மாளிகை!
போர்வாளைத் தனது கொடியின்
சின்னமாகக் கொண்டு, புலியெனப்
பாய்ந்து களம் பல கண்ட, பண்டாரக
வன்னியனின் உருவமோ; உயர்ந்த
தோற்றம்! விரிந்த மார்பு! ஒடுங்கிய
இடை! பரந்த நெற்றி! உரமேறிய
தோள்கள்! கூரிய பார்வை! அந்தத்
தீரனின் அஞ்சாநெஞ்ச வாழ்க்கையின்
அடிச்சுவட்டில் விளைந்த
வீரமண்ணின் தீரர்களையும்,
வீரர்களையும், தியாகிகளையும்
அவர்களின் சரிதங்களையும்
முத்தாரமாகக் கோத்து நான் வழங்கிய
அந்தப் போர்க் காதையின்
முடிவை எவ்வாறு தீட்டியுள்ளேன்
என்பதைப் படித்துப் பார்த்தால்,
இதோ படித்துத்தான் பாருங்களேன்!"
என்றெல்லாம் எழுதிக் குவித்த
அதே முதல்வர் கருணாநிதிதான் ...
எதிரிகளின் மரியாதையையும்
வரலாற்றையும் கூட வென்று நின்ற
பண்டார வன்னியனின் நினைவுச்
சின்னங்கள் இன்று வேசித்தனமாக
அழிக்கப் பட்டதை எதிர்த்து ,
கண்டித்து ஒரு வார்த்தை கூடப்
பேசவில்லை ஒரு வரி கூட
எழுதவில்லை என்றால் இந்தக்
கொடுமையை -
அவலத்தை எங்கு போய்ச் சொல்ல?
Login or register to post comments 1051 reads
புதியவைகள்
தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள்
சிறப்பான கட்டுரை தொடருங்கள்
vinoth
இழப்பை நோக்கி இன்னொரு ஆற்று நீர்
உரிமை!
கண்டிப்பாக நமது தமிழக அரசு
vinoth
சித்த மருத்துவம்
அத்தனை கேவலமானதா?
நன்றி vinoth
கருத்திற்கு நன்றி நண்பரே vinoth
நண்பரே தங்களுக்கும் நமது
rajudranjit
(No subject) dharshini
சித்த மருத்துவத்தின் rajudranjit
கருத்திற்கு நன்றி vinoth
எப்படியாவது நல்லது நடந்தால்
vinoth
தமிழ் நண்பர்கள் போன்ற ஏனைய
டணிஸ்கரன்
ந.கோபிநாத்தின் "மண்ணிழந்த
தேசத்து மலர்கள்" நூலறிமுகம்
சிறப்பாக விமர்சனம் vinoth
வணக்கம் ஐயா, உங்களுடைய
selvakumaar
நன்றி. yarlpavanan
மிக்க நன்றி ஐயா selvakumaar
தங்கள் பாராட்டுக்கு நன்றி.
yarlpavanan
தங்கள் கருத்திற்கு நன்றி.
yarlpavanan
"நெஞ்சிலே புண்பட்டுச்
gk4gbi@hotmail.co.uk
சித்திரமும் கைப்பழக்கம்
yarlpavanan
அன்பரே! அருமையான விமர்சனம்,
rajudranjit
காதல் படுத்தும்பாடு
சிறந்த பதிவு yarlpavanan
வெகு நாட்களுக்குப் பிறகு மிக
Ponvannan
தங்களது எழுத்து என்னை
rajudranjit
good article dharshini
நானும் நானும்: கடவுள்: மதம்:
இஸ்லாம்
நன்றி vinoth
கருத்திற்கு நன்றி. குரான் vinoth
வாக்குப்பதிவு
more
Tweet 0
ஓர் மொழியினை எளிமையாக
கற்றுக் கொள்ள செய்ய
வேண்டியவை?
Choices
அந்த மொழியின் மீது அதிகம்
பற்று வைத்திருப்பவரை நாடலாம்
காசு கொடுத்தால்
வீடு தேடி வரும் புத்தகம்.
அதை படிச்சா தீர்ந்தது.
இந்த
வெட்டி பொழப்பு எனக்கு எதுக்கு?
ஒரு மொழிய
கத்துகறது சுலபம் இல்ல?
முதலில் தாய்
மொழியை ஒழுங்காக படிக்க
விரும்புகிறேன்
VOTE
Your rating: None Average: 8 (2
votes)
கேள்வி பதில்
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
மார்ச் 2012 மின் இதழ்
பிப்ரவரி 2012 மின் இதழ்
தமிழ் நண்பர்களில் உங்கள்
படைப்புகளை பதிவது எப்படி?
(Submit your post to Tamil nanbargal)
வலைப்பதிவை தமிழ் நண்பர்களில்
இணைப்பது எவ்வாறு?
(blog posts to Tamil nanbargal)
வலைப்பதிவில் உங்கள்
நண்பர்களை இணைக்க விக்ஜட்
(Tamil nanbargal widgets for your
blogs)
பழமொழி
ஓர் ஊருக்கு ஒரு வழியா?
ஒன்பது வழி
ஒன்பது வாயில் (வாசல்) கொண்ட ஊர்
என மனித உடம்பை குறிப்பார்கள்
சித்தர்கள்.
மேலும்...
Home
Site Updates
Tamil Friends
Tamil Friends Wall Post
Tamil Friends Activity
தமிழ் (Tamil Language)
Where are you my Friend?
தமிழில் எழுத
எம்மைப்பற்றி
Tamil Kavithaigal
Tamil Katturaigal
Tamil Kathaigal
Tamil Samayal
Tamil Blogs
Tamil Jokes
Health Beauty Fashion
Tamil Noolgal
புதிய பதிவுகள்
புதிய கருத்துகள்
Most Discussed
Top rated posts
Most Viewed
Top rated - all time
Tamil Forums
Polls
Tamil Websites
Friends on MAP
Terms & Conditions
Privacy Policy
தொடர்பு
Tweet 16
Copyright © 2011
TamilNanbargal.com, All rights
reserved.
தமிழ் நண்பர்கள் [Tamil Friends,
Profiles, Chat, Blogs, Articles, Tamil
Literature, Jokes, Samayal, Tamil Girls
& Guys social networking &... ]
அனுப்பு விருப்பம்
அனுப்பு விர

No comments:

Post a Comment