Total Pageviews

Wednesday 27 June 2012

96 தத்துவங்கள்

96 தத்துவங்கள்
96 tattvas
அகக்கருவிகள் 36
1. பூதம் 5
1. மண்
2. நீர்
3. தீ
4. காற்று
5. ஆகாயம்
2. தன்மாத்திரை 5
1. ச்ப்தம்
2. ஸ்பரிசம்
3. ரூபம்
4. ரசம்
5. கந்தம்
3. கன்மேந்திரியம் 5
1. வாக்கு
2. பாதம்
3. கை
4. எருவாய்
5. கருவாய்
4. ஞானேந்திரியம் 5
1. செவி
2. கண்
3. மூக்கு
4. நாக்கு
5. மெய்
5. அந்தக்கரணம் 4
1. மனம்
2. அகங்காரம்
3. புத்தி
4. சித்தம்
6. வித்தியா தத்துவம் 7
1. புருடன்
2. அராகம்
3. வித்தை
4. கலை
5. நியதி
6. காலம்
7. மாயை
7. சிவத்டத்துவம் 5
1. சுத்தவித்தை
2. ஈச்சுரம்
3. சாதாக்கியம்
4. விந்து
5. நாதம்
புறக்கருவிகள் 60
1. பிருதிவியின் காரியம்
1. மயிர்
2. தோல்
3. எலும்பு
4. நரம்பு
5. தசை
2. அப்புவின் காரியம்
1. நீர்
2. உதிரம்
3. மூளை
4. மச்சை
5. சுக்கிலம்
3. தேயுவின் காரியம்
1. ஆகாரம்
2. நித்திரை
3. பயம்
4. மைதுனம்
5. சோம்பல்
4. வாயுவின் காரியம்
1. ஓடல்
2. இருத்தல்
3. நடத்தல்
4. கிடத்தல்
5. தத்தல்
5. ஆகாயத்தின் காரியம்
1. குரோதம்
2. லோபம்
3. மோகம்
4. மதம்
5. மாற்சரியம்
6. வசனாதி 5
1. வசனம்
2. கமனம்
3. தானம்
4. விசர்க்கம்
5. ஆனந்தம்
7. வாயு 10
1. பிராணன்
2. அபானன்
3. வியானன்
4. உதானன்
5. சமானன்
6. நாகன்
7. கூர்மன்
8. கிருதரன்
9. தேவதத்தன்
10. தனஞ்சயன்
8. நாடி 10
1. இடை
2. பிங்கலை
3. சுழுமுனை
4. காந்தாரி
5. அத்தி
6. சிங்குவை
7. அலம்புடை
8. புருடன்
9. சங்கினி
10. குகு
9. வாக்கு 4
1. சூக்குமை
2. பைசந்தி
3. மத்திமை
4. வைகரி
10. ஏடணை 3
1. தாரவேடணை
2. புத்திர்வேடணை
3. அர்த்தவேடணை
11. குணம் 3
1. சாத்துவீகம்
2. இராசதம்
3. தாமதம்

எத்தனை காலம் தான்

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த
நாட்டிலே
இன்னும் எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம்ம
நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன்
போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன்
போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த
நாட்டிலே
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம்ம
நாட்டிலே
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்வி தெரியாத பேர்களை இல்லாமல்
செய்வோம்
கல்வி தெரியாத பேர்களை இல்லாமல்
செய்வோம்
கருத்தாக பல தொழில் பயிலுவோம்
கருத்தாக பல தொழில் பயிலுவோம்
ஊரில் கஞ்சிகில்லை என்ற
சொல்லினை போக்குவோம்
ஊரில் கஞ்சிகில்லை என்ற
சொல்லினை போக்குவோம்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த
நாட்டிலே
சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
அதில் ஆய கலைகளை சீராக பயில்வோம்
அதில் ஆய கலைகளை சீராக பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினை போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாக
திரட்டுவோம்
இன்னும் எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த
நாட்டிலே

அச்சம்

அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடைமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
கனக விசயரின்
முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
கனக விசயரின்
முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
கருவினில் வளரும் மழலையின்
உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
கருவினில் வளரும் மழலையின்
உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

Tuesday 26 June 2012

தசாவதாரம்்

ஒவ்வரு மதத்திட்கும் ஒவ்வரு விதமான
கோட்பாடுகள் உண்டு. மதம் எப்பொதும்
மனிதர்களை நல்ல வழிகளில்தான்
செல்லச் சொல்கிறது. மனிதனின் ஆணவமும், அகங்காரமும்தான் அவனை அழிவின்
பாதைக்கு கொண்டு செல்கின்றது. இந்து மதத்தின்படி இறைவன் என்பவன் ஒவ்வரு யுகத்திலும்
ஒவ்வரு வடிவெடுத்து மக்களை காப்பதோடு மக்களுக்கு நன்மை, தீமைகளை புரியவைப்பதோடு  அவனது
அவதாரம் முடிவடைகிறது. இப்படியாக அவரது  9 அவதாரங்கள் முடிவடைந்த  பிறகு தசாவதாரமான கடைசி
அவதாரம்  கல்கி அவதாரமே மிச்சமிருக்கிறது.
இந்த அவதாரங்கள்
உலகத்தோடு ஒப்பிட்டு பார்த்தல் சில
முக்கிய விசையங்கள் தெளிவாகும்.
எதற்காக இறைவன் இத்தகைய அவதாரம்
எடுத்தான் அதற்கு என்ன அவசியம் என்பது.
முதல் அவதாரமாக மச்ச அவதாரம். உலகம்
தோன்றியபொழுது முதல் முதலில்
தோன்றிய உயிரினம் நீரில்தான் என்பதனால்
முதல் முதலாக இறைவன் மச்ச அவதாரம்
என்ற ஒரு அவதாரத்தை எடுத்தார்.
மனிதனின் மூதாதையர் மீன்களாக
கூட இருக்கலாம். டார்வின் கொள்கைப்படி உலகின் முதல்
உயிரினம் கடல் மார்கமாக வந்தது என்பது. அதன் அடிபடையாகதான் முதல்
அவதாரம்
சிரிஷ்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அடுத்து இறைவன் அவதாரமாக
சிரிஷ்டிக்கப்பட்டது கூர்ம அவதாரம்
ஆமை வடிவம். நீர் வழியான உயிரினம்
நிலத்திலும்
வாழும்படி இறைவனே ஒரு அவதாரமாக
காட்சியளிக்கிறார். இதன் படி நீரிலும்
வாழும் நிலத்திலும் வாழும்படியான
ஒரு அவதாரமாக
தன்னை காட்டிகொள்கின்றார் போலும்.
இந்த உலகம்
என்பது கொஞ்சம்  இன்பமும் நிறைய  துன்பமும்
நிறைந்தது. அப்படிப்பட்ட உலகில்
எல்லா விதமான ஜீவராசிகளுக்கும்
இடமுண்டு அப்படியான ஒரு ஜீவன்
நீரிலும், நிலத்திலும் வாழ்வதாக
இல்லாமல் சேற்றிலும், சகதியிலும்
வாழும்படியாக
ஒரு அவதாரத்தை எடுத்ததுதான்
பன்றி அவதாரம் என்னும் வராக அவதாரம்
எனலாம்.
யுகங்கள் மாறும்போது காட்சிகளும்
மாறும் அவதாரங்களும் மாறும்.
இதுவரை எடுத்த அவதாரங்கள்
சாந்தமானது. ஆனால்
அதற்கு பிறகு எடுத்த அவதாரம்
மிகவும் உக்கிரமான நரசிம்ம அவதாரம்.
இந்த அவதாரம்
ஒரு கொலை செய்வதட்காகவே எடுக்கபட்டது. இதட்கு பிறகுதான் மற்றவைகளை கொன்று அதை உணவாக உட்கொண்டு
வாழும் உயிரினங்கள் அவதரித்திருக்க
வேண்டும். உலகம்
பொதுபடையானது என்பதட்காகவே தானே அந்த
அவதாரத்தை எடுத்து மக்களுக்கு உலகம்
தோன்றியதன் விளக்கமாக
காட்சியளிதிருக்க வேண்டும்.
இறைவனின் கணக்குப்படி மனிதன் என்னும்
பிறவி இப்போதுதான் பூமியில் அவதரிகிறது.
எல்லா 5 அறிவு ஜீவராசிகளும் படைக்கப்பட்ட பிறகுதான் மனிதக் குழந்தை இந்த
பூமியில் பிறக்கிறது. இதை வலியுறுத்தவே வாமன அவதாரம்
எடுத்து மூன்றடி நிலம் கேட்டு மனிதனின் குணதிசையங்கள் விளக்குவதாக அவதரித்தார். அப்போதிருந்தே
மண்ணாசை மனிதனுக்கு இருந்திருக்க
வேண்டும் என்பதே இதன் அடிப்படையாக
இருக்கலாம்.
ஒவ்வரு மனிதனின் அழிவும் ஆசையினாலும், கோபத்தினாளும்தான் என்பதை வலியுறுத்தவே
மனிதனின் முதல் அவதாரத்தில் மண்ணாசையை என்னும் ஆசையை உட்பொருளாக அவதாரம்
மேற்கொண்டவன் அடுத்த அவதாரத்தில் கோபத்தால் தன் தாயையே கொலை செய்த பரசுராம
அவதாரம். இதிலிருந்து எப்போதும்
கோபப்படும் மனிதன்  மற்றவர்களால் புறகணிக்கப்படுவான்  அது
கடவுளாக இருந்தாலும்
சரி என்பதை உணர்த்தவே இந்த அவதாரம்
அமைகப்பட்டிருக்கலாம்.
அடுத்த அவதாரத்தில் ராமவதாரம்
எடுத்து தன் மனைவியைத் தவிர எந்த
பெண்ணையும் நினைக்காத உத்தமனாக
அவதாரம் மேட்கொண்டன் அப்போது  தன்
மனைவியை வஞ்சத்தால் அபகரிக்க முயன்ற ராவணனை வதம் செய்து  தன் மனைவியை
மீட்டு வருவதான அவதாரம்
ராமவதாரம். இதில் என்னதான் உத்தமனானாலும் ராமன்  தன்
மனைவியை ஒருமுறையாவது  சந்தேகப்படுவான் காரணம் அவன் மனிதன்
அது மனிதனின்
இயல்பு   என்பதை உணர்த்தவே ராமன்  சீதையை சிதையில்
இறங்கச் செய்திருக்கலாம்.
அடுத்த அவதாரம் பலராம அவதாரம். இதில்
கிருஷ்ணனுக்கு அண்ணனாக
கிருஷ்ணனை காப்பவனகவும் எடுத்த
அவதாரத்தின் நோக்கம் அனைவருக்கும்
உணவளித்து காக்கும்
விவசாயத்தை மையமாக கொண்டமையால்தான்
பலராமன் ஏர் கலப்பையை கையில்
வைத்திருக்கிறார். இந்த அவதாரம்
முழுக்க முழுக்க
விவசாயத்தை உணர்த்துவதாக
இருக்கலாம்.
இதுவரை எடுத்த அவதாரங்கள் ஓவ்வொன்றும்
இந்த பூமியின் படைப்பை ஒத்திருந்தது.
ஒரு மனிதன்
எப்படி வாழவேண்டும் என்பதை எப்படி தன்னை அடைவது என்ற பாடத்தை கற்றுகொடுக்க
நினைத்த இறைவன்
தன்னை கிருஷ்ணனாக அவதரித்து கொண்டு. சிறுவதில் சிறுபிள்ளையாக விளையாடிக்கொண்டு ஒவ்வரு வயதிலும்
ஒரு மனிதன்
எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற
பாடத்தை மக்களுக்கு போதித்ததோடு இறுதி நிலையான முக்தி நிலையை அடைய வேண்டிய
பாடத்தை அர்ஜுனனுக்கு உபதேசிப்பது போல்
உலக மக்கள் அனைவர்க்கும்
உபதேசிக்கிறார். இந்த கீதா உபதேசம்
உணர்ந்தால்
தன்னை அடைவதாகிய  பிறப்பற்ற  முக்தி அடையலாம்
என்ற
பாடத்தை மனிதர்களுக்கு போதிக்கவே எடுக்கப்பட்ட
அவதாரம் இந்த கிருஷ்ணா அவதாரமாக
இருக்கலாம்.
தசாவதாரத்தில் இறுதி அவதாரமாகிய கல்கி அவதாரம்.
இதுவரை எடுத்த அவதாரம்
பூமியின் தொடக்கமும், மனிதர்களின் குணாதிசையங்களும் , மனிதனுக்கான பாடமும்.
ஒன்று துவக்கம் என்றிருந்தால்
அதற்கு முடிவு என்ற ஒன்று கட்டாயம்
உண்டு. அப்படி துவங்கிய பூமியின்
முடிவில் மனிதன்
மட்டுமே மிஞ்சி நிற்பான்.
எப்படி ஒரு உயிரினம்
தோன்றியதோ அப்படியே அது அழியவும்
செய்யும். நீருக்குள்
தோன்றியது நீருக்குள் அழியும்.
நிலத்தில் தோன்றியது நிலத்தில்
அழியும். அப்படி இறைவன் மனிதனாக
அவதரித்த முதல் அவதாரம் மண்ணிற்காக
ஆகையால் மனிதன்
அழிவது அதே மண்ணிற்காக
என்பதை உணர்த்தும் போர்கல வீரனாக
கல்கி அவதாரம் காட்டப்பட்டிருக்கலாம்.











நீதிகதை

ஒரே விதமான நீதிகதைகள்
காலத்திற்கேற்றார்போல்
மாற்றி சொல்லப்படுவதை
இப்போதெல்லாம் தவிர்க்க முடியவில்லை.
காரணம் தலைமுறை இடைவெளி மாற்றங்கள்.
பாட்டி வடை சுட்ட கதை கூட
நவீனத்துவத்தில் கிளைமாக்ஸ்
மாற்றப்பட்டு விட்டது.
காக்காவை பாட சொன்ன
நரியை பார்த்து காக்கா வடையை எடுத்து விரலிடுக்கில்
வைத்துக்
கொண்டு போடா போடா புண்ணாக்கு என்று பாடியதாக
திருத்தி கூறினால்தான் குழந்தைகள்
கூட ரசிக்கின்றன...இங்கும் நாம் அதிகம்
அறிந்த மரம்வெட்டியும் தேவதை கதையும்
இப்போது மாற்றப்பட்ட
விதத்தை இப்போது பார்க்கப் போகிறோம்.
ஒரு வித்தியாசம் - இந்த
கதை இப்போது மூன்றாவது பாகமும்
வந்து விட்டது.
1. மூல கதை
ஒரு விறகு வெட்டி - கடும்
உழைப்பாளி - தினமும்
காட்டுக்கு சென்று மரம் வெட்டி விறகு
கொணர்ந்து விற்று வாழ்க்கையை நடத்துபவன்.ஒருநாள்
மரம் வெட்டும்போது கை தவறி
கோடாரி அருகிலிருந்த நதியில்
தவறி விழுந்து விடுகிறது.
வருத்தமாய் கடவுளை
பிராத்திக்க ஒரு தேவதை தோன்றி அவன்
பிரச்னையை கேட்கிறது.
நதியிலிருந்து
தேவதை முதலில் ஒரு தங்க
கோடாரி வரவழைத்து தருகிறது.
இது இல்லை என்று
மறுக்கிறான்.
அடுத்து ஒரு வெள்ளி கோடாரியை வரவழைக்கிறது.
அதுவும் தன்னுடையது
இல்லை என மறுக்கிறான்.மூன்றாவதாக
அவனுடைய
இரும்பு கோடாலியை வரவழைத்து
தர மகிழ்ந்து போய்
நன்றி சொல்லி பெற்று கொள்கிறான்.அவனுடைய
உண்மையையும்
நேர்மையையும்
பாராட்டி தேவதை அவனுக்கு தங்க,வெள்ளி கோடாரிகளையும்
பரிசு
அளித்து மறைகிறது.
நீதி : நேர்மைக்கும் உண்மைக்கும்
எப்போதும் பிரதிபலன்
அதிகமாகவே இருக்கும்.
2.முதல் தலைமுறை மாற்ற கதை.
அடிக்கின்ற மனைவியுடன் ஐயோபாவ
வாழ்க்கை நடத்தும் முனியன்
(மணியா அல்ல)
தன் மனைவியுடன் பிழைப்பு தேடி நகரம்
செல்கிறான். போகும் வழியில்
ஒரு இடத்தில்
ஒரு நதிக்கரையில் கொஞ்சம்
ஒய்வெடுத்து விட்டு குளித்து விட்டு மனைவியையும்
குளிக்க சொல்கிறான். கொஞ்சம் அதிக
ஆழத்தில் இறங்கி விட்ட
மனைவியை நதி இழுத்து
சுழலில் மூழ்கடித்து விடுகிறது.
இது கடவுளின் மிகப்பெரிய கி�ப்ட்
என்றாலும் முனியனுக்கு
இனி வேறு யார் பெண் கொடுப்பார் என்ற
கவலையில் சோகமாக அமர
உடனே ஒரு தேவதை
அங்கே பிரசன்னமாகி அவன்
பிரச்னையை கேட்கிறது. முனியன்
பிரச்னையை சொன்னவுடன்
தேவதை உடனே நடிகை ரம்பாவை தோற்றுவிக்கிறது..
"இது தான் உன் மனைவியா....?"
"ஆமாங்க..ஆமாங்க..இவங்கதான்
இவங்களேதான்..."
"அடப்பாவி..இப்படி பொய்
சொல்றியே...இவளா உன் மனைவி"
"ஆமாங்க .... நீங்க
மொதோ ரம்பாவை வரவழைப்பீங்க...அப்புறம்
சிம்ரனை
வரவழைப்பீங்க...நான் இவங்கள்ளாம் என்
மனைவி கிடையாது என்பேன்...கடைசியா என்
மனைவியை தந்து உன்
நேர்மைக்கு பரிசா மூணு பேரையும்
தந்துடுவீங்க...ஒருத்தி கையாலே
அடிவாங்கி வாழ்க்கையை ஒட்ட
முடியவில்லை...இதுல ரெண்டுபேரோட
வாழ்றதை பார்த்தா
என் மனைவி தெனமும்
பத்ரகாளிதான்..அதுக்குதான் இவங்க என்
பொண்டாட்டின்னேன்..."
தேவதை அதிர்ச்சியாகி இனி யார்முன்னும்
தோன்றுவதில்லை என மறைந்து விட்டது.
நீதி : 1. உயர்ந்த பரிசுகள்
எல்லாமே எல்லோர்க்கும் உகந்த பரிசுகள்
அல்ல...
2 கூடா பரிசும் சில சமயங்களில்
கேடாய் முடிந்து விடும்.
3. இப்போதைய தலைமுறை கதை
அப்பா வாங்கி கொடுத்த புதிய
கேஸியோ கால்குலேட்டரை லேபில்
தொலைத்துவிட்டான் கணேஷ்...
வீட்டுக்கு போனால் கோபமான
அப்பா பெல்ட்டை உருவி தோலை உரித்து
விடுவார். ரொம்ப பயந்து போய் கிணற்றில்
குதிக்க முடிவு செய்த கணேசின் முன்
அந்த பழைய தேவதை தோன்றி அவன்
பிரச்னையை கேட்டது. கணேஷ்க்கு மட்டும்
உதவலாம் என
முயற்சி செய்து ஒரு ஆற்றல் வாய்ந்த
ஹைபவர் பால்ம்டாப்பை (Palm Top)
வரவழைத்து இதை வைத்துக்கொள் என்றது.
அது பற்றி ஏதும் தெரியாததால் கணேஷ்
அதை மறுத்து விட்டான்.
அடுத்து ஒரு ஐபிஎம்
லேப்டாப்பை வரவழைத்து இதை வைத்துக்கொள்
என்றது.அதுவும் தெரியாததால் கணேஷ்
மறுக்க மூன்றாவதாய் அவன்
கால்குலேட்டரை திருடியது அவன்
பின்னால் உட்கார்ந்திருக்கும்
முகேஷ்தான் என
சொல்லிவிட்டு மறைந்து விட்டது.பாவம்
கணேஷ்க்கு பால்ம்டாப்பும்
கிடைக்கவில்லை.லேப்டாப்பும்
கிடைக்கவில்லை.
நீதி :1. தேவதைகளும் தம்
அனுபவத்திலிருந்து பாடம்
கற்று கொள்கின்றன.
2. உயர்ந்த பரிசுகள்
தேடி வரும்போது தவற விட கூடாது.
3. இன்றைக்கு என்ன புதியன
என்பது பற்றியும் தெரிந்திருக்க
வேண்டும்.

நீதிகதை

காட்டாறு எங்கே போகுது!
புத்திசாலி மகன்
ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள்
தனது பத்து வயது மகனையும்
அழைத்துக்
கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச்
சென்றார்.
பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக்
கேள்விகளால் துளைத்தெடுத்துக்
கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப்
பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.
மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன்
அப்போதும் கேள்விகள் கேட்டான். “”நாம
அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல
பையனாம். அப்பா வெட்டுற
மூங்கிலை எல்லாம்
எடுத்து அடுக்கி வைப்பியாம்”
பையனும் மகிழ்ச்சியுடன்
தலையசைத்தான்.
அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார்.
“”அப்பா…அப்பா… ” என்றான் பையன்.
“”என்னடா?” கோபத்துடன் கேட்டார்.
“இந்தக் காட்டாறு எங்கே போகுது?”
“”நம்ம வீட்டுக்குத்தான்”
பையன் அதற்குப் பிறகு கேள்விகள்
கேட்கவில்லை. மாலை நேரம் ஆனது.
மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப்
பிடித்துக் கொண்டு “”வா, போகலாம்.
நான் வெட்டிய மூங்கிலையெல்லாம்
எங்கே அடுக்கி வைச்சிருக்க?”
என்று கேட்டார்.
பையன் சொன்னான்: “”நீங்க
வெட்டினதை எல்லாம்
ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம்
அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!’
ன்னும் பொறுமையா பதில் சொன்னான்
செல்ல மகன்
இளம்
வயது குழந்தைகளுக்கு சொல்லுவதை
திருந்த சொல்லுங்கள். சரியாக
சொல்லுங்கள


பழமொழி

பழங்கால பழமொழிகள் இன்றும்
நடை முறையில் !!!
அகத்தினழகு முகத்தில் தெரியும்.
அடிமேல் அடியடித்தால் அம்மியும்
நகரும்.
அடியாத மாடு படியாது.
அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
அரசன் அன்று கொல்வான் தெய்வம்
நின்று கொல்லும்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
அழுதாலும்
பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த
ராத்திரியில் குடை பிடிப்பர்.
அற நனைந்தவனுக்குக் குளிரென்ன
கூதலென்ன.
அறுக்க முடியாதவ இடுப்புல
ஆயிறத்தெட்டு அறிவாள்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
ஆடத் தெரியாதவள்
மேடை பிழையென்றாளாம்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப்
பாடிக் கற.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும்
ஒரு சந்திரன் ஆகாது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்
பூ சர்க்கரை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன்
ஓங்கி அடிப்பான்.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத்
தப்புமா?
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
எறும்பூரக் கல்லும் தேயும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல்
போல்.
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
கல்லானாலும் கணவன் புல்லானாலும்
புருஷன்.
கலங்கிய குட்டையில் மீன்
பிடிப்பது போல.
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காகம் இருக்கப் பனம்பழம்
விழுந்தது போல்.
காகம் திட்டி மாடு சாகாது.
காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
காவோலை விழக்
குருத்தோலை சிரிப்பது போல்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
குண்டுச் சட்டியில்
குதிரை ஓடுவது போல்.
குரைக்கிற நாய் கடிக்காது.
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
சந்திரனைப் பார்த்து நாய்
குரைப்பது போல.
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும்
வீடு வந்து சேராது.
சுவரிருந்தால்தான் சித்திரம்
வரையலாம்.
தடியெடுத்தவன் தண்டக்காரன்.
தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
தன் வினை தன்னைச் சுடும்.
தனிமரம் தோப்பாகாது.
தாயும் பிள்ளையுமானாலும் வாயும்
வயிறும் வேறு.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன
முழமென்ன.
நடுக்கடலுக்குப் போனாலும்
நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல
பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
நிறைகுடம் தளும்பாது.
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும்
ஆட்டுவது போல்.
புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார்
காடாள்வார்.
போதுமென்ற மனமே பொன் செய்யும்
மருந்து.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்
பேய்.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள்
உடைத்தால் பொன் குடம்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
முடக் குதிரைக்குச்
சறுக்கினது சாட்டு.
முடவன் கொம்புத்
தேனுக்கு ஆசைப்பட்டது போல.
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போடுவது போல்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானை வரும் பின்னே மணியோசை வரும்
முன்னே.
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
விளையும் பயிரை முளையிலே தெரியும்.
வெண்ணெய் திரண்டுவர
தாழி உடைவது போல்.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பூவிற்றகாசு மணக்குமா?
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத்
திண்டாட்டம்.
பேராசை பெருநட்டம்.
பூ மலர்ந்து கெட்டது வாய்
விரிந்து கெட்டது
வேலிக்கு ஓணான் சாட்சி.
ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச்
சொன்னால் முடவனுக்குக் கோபம்.
கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில்
வழக்குக்குக் குறைவில்லை.
சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும்
சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்
தினை விதைத்தவன் தினையறுப்பான்
வினை விதைத்தவன் வினையறுப்பான்.
சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக்
கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட
வரும்? —