Total Pageviews

Sunday 22 April 2012

சோழன்-1

சோழர் என்பவர்
பழந்தமிழ்நாட்டை ஆண்ட
மூவேந்தர்களுள்
ஒரு குலத்தவராவர். மற்ற இருவர்
சேரர்களும் பாண்டியர்களும் ஆவர்.
நெல் இயற்கையாகவோ,
மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ
நாடெனப்பட்டது. 'சோழ
நாடு சோறுடைத்து என்பது பழமொழி'.
எனவே சோறுடைத்த
நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ
நாடாகியது என்பர். நெல்லின்
மற்றொரு பெயரான சொல் எனும்
பெயரே லகரம்-ழகரம் ஆகத்
திரிந்து "சோழ"
என்று வழங்கிற்று என்பார்
தேவநேயப் பாவாணர். [1] சேரர் ,
பாண்டியர் என்ற பெயர்களைப்
போன்று சோழர் என்பது பண்டைக்
காலந்தொட்டே ஆட்சி செய்து வரும்
குடி அல்லது குலத்தின் பெயராகும்
என்பது பரிமேலழகர் கருத்து. சோழ
மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த
பகுதிகளும், மக்களும்
பண்டைக்காலம்
முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர்.
சோழர் குலம் வளம் பொருந்திய
காவிரி ஆற்றுப் படுகைப்
பகுதியிலேயே தோற்றம் பெற்றது.
கிறித்துவுக்கு முந்தைய
நூற்றாண்டுகளிலேயே சோழர்
குலம்
பெருமையுற்று விளங்கியதாயினும்,
கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப்
பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர்
நிலைக்குத் தாழ்ந்து போயினர்.
பழைய சோழமண்டலப் பகுதிகளிலே,
உறையூர் , பழையாறு போன்ற
இடங்களில் அவர்களது சிற்றரசுகள்
நிலவின. கி.பி ஒன்பதாம்
நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ்
நாட்டில் சோழர்கள் மீண்டும்
வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம்,
பதினோராம் நூற்றாண்டுகள் சோழர்
குலத்தின் பொற்காலமாக
விளங்கியது. கி.பி 13-ஆம்
நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில்
நிலவியது.
கி.பி இரண்டாம் நூற்றாண்டையும்
அதற்கு முந்திய காலப்பகுதியையும்
சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என
வரலாற்று ஆய்வாளர்களினால்
குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச்
சோழர்களில் கரிகால் சோழன் புகழ்
பெற்று விளங்கினான். 9 ஆம்
நூற்றாண்டுக்குப் பின்
வலிமை பெற்று விளங்கிய சோழ
மன்னர் பிற்காலச் சோழர்
எனப்படுகின்றனர். இவர்களில்,
முதலாம் இராசராச சோழனும் ,
அவனது மகனான முதலாம்
இராசேந்திர சோழனும் , இந்திய
வரலாற்றில் குறிப்பிடத்தக்க
மன்னர்களாவர்.
கி.பி.10-12-ஆம் நூற்றாண்டுகளில்,
சோழர்கள் வலிமை பெற்று மிகவும்
உயர் நிலையில் இருந்தனர்.
அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட
மன்னர்களில், முதலாம்
இராசராசனும், முதலாம்
இராசேந்திரனும்
முதன்மையானவர்கள். அவர்கள்
காலத்தில் சோழநாடு, படையிலும்,
பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும்
வலிமை பொருந்திய பேரரசாக
ஆசியா முழுவதிலும் செல்வாக்குக்
செலுத்தியது. இவர்களுடைய
எல்லை வடக்கே ஒரிசா வரையிலும்
கிழக்கில் ஜாவா , சுமத்ரா , மலேசியா
வரையும், தெற்கே மாலத்தீவுகள்
வரையிலும் விரிந்து இருந்தது.
இராசராசன், தென்னிந்தியா
முழுவதையும்
வெற்றி கொண்டதுடன், தெற்கே
இலங்கையின் வடக்குப்
பகுதியையும், மாலத் தீவையும்
கூடக் கைப்பற்றியிருந்தான்.
இராசேந்திரன் காலத்தில் சோழர்
படை வட இந்தியாவிலுள்ள கங்கைக்
கரை வரை சென்று
பாடலிபுத்திரத்தின் மன்னனான
மகிபாலனைத் தோற்கடித்தது.
அத்துடன் சோழரின் கடற்படை
மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம்,
ஸ்ரீவிஜயம் மற்றும் சில
நாடுகளையும் வென்றதாகத் தெரிய
வருகிறது. இந்திய அரசர்களுள் கடல்
தாண்டி கடற்படை மூலம்
வெற்றி கொண்டவர்கள்
சோழர்களே ஆவர்.
சோழர்களின் கொடி புலிக்கொடி .
சோழர்களின் அடையாள
முத்திரையான புலிச்சின்னம்
அவர்களது கொடியிலும்
பொறிக்கப்பட்டது. இப்புலிச்
சின்னத்தைப்பற்றி பல இடங்களில்
கூறும் இலக்கியங்கள், இதன்
தோற்றத்தைப்பற்றி ஒன்றும்
கூறவில்லை. சோழர் சூடும் மலர்
ஆத்தி .
தோற்றமும் வரலாறும்
சோழர்களின் தோற்றம் பற்றிய
தெளிவான சான்றுகள் எதுவும்
இல்லை. பொதுவாகத் தமிழ்
நாட்டு அரச குடிகள் பற்றிய
தகவல்களைப் பெற உதவும்
மூலங்களான, சங்க இலக்கியங்கள்
கிறித்து சகாப்தத்தின் தொடக்க
காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள்
பற்றி ஓரளவு தகவல்களைப் பெற
உதவினாலும், அவர்கள் வாழ்ந்த
காலப்
பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ,
அவர்கள்
வரலாறுகளை முழுமையாக
அறிந்து கொள்வதோ இயலவில்லை.
இலங்கையின் பாளி மொழியில்
எழுதப்பட்ட வரலாற்று நூலான
மகாவம்சத்தில் தரப்படுகின்ற
செய்திகள் சில சோழ மன்னருடைய
காலங்களைத் தீர்மானிப்பதற்குப்
பயனுள்ளவையாக அமைகின்றன.
இவற்றைவிட, சோழ நாடு மற்றும்
அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில
தகவல்களைப் பெறுவதற்கு,
கிறித்து சகாப்தத்தின்
முதலாவது நூற்றாண்டில்,
அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த
வணிகன் ஒருவன் எழுதிய
எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல்
(Periplus of the Erythraean Sea),
அதன் பின்
அரை நூற்றாண்டு கழித்து தொலெமி
(Ptolemy) என்னும் புவியியலாளரால்
எழுதப்பட்ட நூல்
என்பவை ஓரளவுக்கு உதவுகின்றன.
இவற்றுடன் கல்வெட்டுகள் , செப்புப்
பட்டயங்கள் என்பனவும் சோழர்
பற்றிய தகவல்களைத் தருகின்றன.
முற்காலச் சோழர்கள்
இன்றைய தஞ்சை, திருச்சி உள்ளிட்ட
காவிரி பாயும் மாவட்டங்கள்
தன்னகத்தே கொண்டது சோழ நாடு.
இந்நாடு எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு ஆகிய சங்க
நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின்
தோன்றிய பல இலக்கியங்களிலும்
போற்றப்படுகிறது. சங்க
இலக்கியங்களில் காணப்படும்
காலத்தால் முந்திய சோழ மன்னன்,
வேல் பல் தடக்கைப்
பெருவிறல்கிள்ளி என்பவனாவான்.
இவனை பரணர் , கழாத்தலையார்
ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.
மற்றொரு சோழன் உருவப் பல்தேர்
இளஞ்சேட்சென்னி என்னும் பெயர்
கொண்டவன். இவன் மௌரியரும்,
கோசரும் சேர்ந்த படையைத்
தோற்கடித்தவன் என்று
அகநானூற்றுப் பாடலொன்றில்
புகழப்படுகின்றான்.
இவனே முதலாம் கரிகால் சோழனின்
தந்தையாவான். புறநானூற்றில்
இவனைப் பற்றிய குறிப்புக்கள்
உள்ளன.
முதலாம் கரிகாலன்
முதன்மைக் கட்டுரை: கரிகால்
சோழன்
கரிகால சோழன் இரண்டாம்
நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ
மன்னன் ஆவான். கரிகாலன்
முற்காலச் சோழர்களில் மிகப் புகழ்
பெற்றவன் இவனே.
இவன்இளஞ்சேட்சென்னியின் மகன்
ஆவான்.கரிகால
சோழனுக்கு திருமாவளவன்,மற்றும்
பெருவளத்தான் என்னும்
பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம்
கரிகாலன் தாய் வயிற்றில்
இருந்தபோதே அவன் தந்தையான
இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய்
வயிற்றிலிருந்தபடியே அரச
பதவி பெற்றான்.கரிகாலன்
என்பதற்குக் கருகிய
காலை உடையவன்
என்பது பொருள்.இளம் வயதில்
இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின்
காரணமாக இப்பெயர்
இவனுக்கு வழங்கலாயிற்று.ஆனால்
பிற்காலத்தில்
வடமொழி செல்வாக்குப்பெற்ற
போது(எதிரிகளின்)யானைகளின்
யமன் என்று இப்பெயருக்கு விளக்கம்
தரப்பட்டது.
கரிகாலன்
சோழகுலத்தை ஒரு குறுநில
அரசிலிருந்து காஞ்சி முதல்
காவிரி வரை பரவ வழிவகுத்தான்.
பிற்கால வரலாற்றில்
இவனது வெற்றிகளும்
சாதனைகளும் மிகவும்
மிகைப்படுத்தப்பட்டன. அரியாசனம்
ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான
அரச பதவியை இழந்து சில
ஆண்டுகள் சிறையில்
வைக்கப்பட்டான்.
சிறையினின்று இவன்
தப்பிச்சென்று ஆட்சியைக்
கைப்பற்றியதை வருணித்துள்ளனர்.
கரிகாலன் சிறையில்
சிறைக்காவலரரைக்
கொன்று தப்பித்தான்,
பிறகு படிப்படியாகப் புகழும்
பெருமையையும் அடைந்தான்.
கரிகால் சோழன், சேர மன்னன்
பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான்.
வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற
போரில் கரிகாலனுடைய
அம்பு சேரமன்னன்
பெருஞ்சேரலாதனின் முதுகில்
பாய்ந்ததால் அதை அவமானமாகக்
கருதிய சேரன் வடக்கிருந்து உயிர்
விட்டது பற்றிச் சங்க இலக்கியப்
பாடலொன்று கூறுகிறது. பாண்டிய
மன்னர்களையும்
பதினோரு வேளிரையும்
வெற்றிகொண்ட கரிகாலனுடைய
ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது.
காவிரி ஆற்றின்
குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை
இவனது காலத்தது ஆகும். உலகின்
மிகப் பழமையான அணைக்கட்டாக
"கல்லணை விளங்குகிறது. இவன்
இமயம் வரை சென்று பல
அரசர்களை வென்று இமயத்தில்
புலிக்கொடியை நாட்டித்
திரும்பினான் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment