Total Pageviews

Wednesday 25 April 2012

மாயா

மாயா நாகரிகம்
மொழிகள் | மக்கள்
கட்டிடக்கலை | நாட்காட்டி
மனிதப்பலி | தொன்மம்
மக்கள் | சமயம்
சமூகம் | புடவைகள்
கொலம்பசுக்கு முந்திய இசை
வணிகம் | எழுத்து
மாயா வரலாறு
மாயாவின் வீழ்ச்சி
யுக்தானின் ஸ்பானிய ஆக்கிரமிப்
மாயா நாகரிகம்
என்பது பண்டைக்கால மத்திய
அமெரிக்க நாகரீகம் ஆகும். இப்பகுதி,
தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ ,
குவாத்தமாலா, ஹொண்டுராஸ்
போன்ற நாடுகள் விரவியிருக்கும்
மத்திய அமெரிக்கப்
பகுதிகளிளை உள்ளடக்கியது.
கொலம்பசுக்கு முந்தியகால
அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற
ஒரே எழுத்து மொழியைக்
கொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச்
சேர்ந்த மக்களே. கி.மு. 2600 வாக்கில்
மாயன் நாகரிகம் தோன்றியது.
மாயன் இனத்தவர் கணிதம்,
எழுத்துமுறை , வானியல் போன்ற
துறைகளிலெல்லாம்
மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான,
நுனுக்கமான கட்டிடக்கலை மாயன்
இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150
வாக்கில் மாயன் நாகரிகம்
உச்சத்தை அடைந்தது. அதன்பின்
பல்வேறு காரணங்களால்
அது சீரழியத் தொடுங்கியியது.
ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம்,
விசித்திரமான மூட நம்பிக்கைகள்,
பங்காளிச் சண்டைகள் மற்றும்
முறையற்ற விவசாயம்
போன்றவை மாயன் கலாச்சார
பேரழிவிற்கு காரணிகளாக
இருக்கலாம் என நிபுணர்கள்
கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார்
ஆறு இலட்சம் மாயன் இனத்தவர்
மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற
நாடுகளில் இருப்பதாக அறியப்
படுகிறது.
மாயன் கணிதம்
முதன்மைக் கட்டுரை : மாயர் எண்
முறைமை 20 அடிமான (base-20)
எண் முறையை மாயன்கள்
பயன்படுத்தினர். மாயன்களின்
கணிதத்
திறமைக்கு சான்று அவர்களின்
பூஜ்ஜியம்
பயன்பாட்டு முறையாகும்{[fact}}.
மிக வளர்ச்சியடைந்ததாகக்
கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள்
கூட பூஜ்ஜியம்
பயன்பாட்டுமுறையை
அராபியர்களிடம்
இருந்தே அறிந்து கொண்டார்கள்.
மாயன்கள் எண்களை குறிப்பிட மிக
எளிமையான அதே சமயத்தில் மிகப்
பெரிய எண்களைக் கூட எழுதவல்ல
ஒரு குறியீட்டு முறையைக்
கையாண்டார்கள்.
இக்குறியீட்டு முறை ஒரு "_"
மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு
நீள்வட்டக்
குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.
மாயன் கட்டிடக் கலை
அமெரிக்காவின் பூர்வ குடிகளில்
கட்டிடக்கலையில் மிகச்
சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள்
என்று சொன்னால் அது மிகையாகது.
நவீன வரலாறு , தொல்லியல் மற்றும்
சமூகவியல்
ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன்
கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில்
சிதிலமடைந்த மாயன் நகரங்களும்
கட்டிடங்களும் பெரும்
பங்காற்றியிருக்கின்றன.
மற்ற தொல் நாகரிகங்களைப் போல்
அல்லாமல், மாயன்கள்
இரும்பு போன்ற உலோகங்கள்
மற்றும் சக்கரங்களைப் பயன்
படுத்தாமலயே மிகப் பெரிய மத
சடங்குகளுக்கான இடங்களையும்,
பிரமிடுகளையும்
இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர்.
மிக நுணுக்கமான வேலைப்பாடுகள்
நிறைந்த சிற்பங்களையும் அவர்களின்
கலாச்சார சின்னங்களாகக்
காணலாம்.
மாயன் வானியல்
மற்றைய பெரு நாகரிகங்களைப்
போல் மாயன்களும் வானியலில்
வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள்
சூரியன் , சந்திரன், புதன் , சுக்கிரன்
போன்றவற்றின்
சுழற்சி முறைகளை வெகுவாக
அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர்.
சந்திர மற்றும் சூரிய
கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத்
தீர்மனிக்கும் அளவிற்கு திறன்
பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத
நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள்
வானியல்
நிகழ்ச்சிகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர்.
ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன்
பஞ்சாங்கக்
குறிப்பேட்டிலிருந்து இதற்கான
ஆதாரங்கள் பெறப்படுகின்றன.
மாயன் நம்பிக்கைகள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய
நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள்
பல்வேறு மத சடங்குகளையும்
நம்பிக்கைகளையும்
கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை
சிற்றரசர்கள் அவர்களுடைய
கடவுளிடம்
பேசி ஆலோசனை பெறும்
ஒரு சடங்கை நடத்துவர்.
இலக்கியம்/நூல்கள்
ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில்
அழைக்கப்படும் பட
எழுத்து முறையை மாயன்கள்
பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள்
சிற்பங்கள் போன்றவற்றில்
எழுதியது மட்டுமில்லாமல்,
ஒருவகையான புத்தகம் தயாரிக்கும்
முறையையும் அவர்கள்
பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல
புத்தகங்களை அவர்கள்
எழுதியிருக்கலாம் எனக் கருதப்
படுகிறது. ஸ்பானிய
ஏகாதிபத்தியத்துடன் வந்த
அடிப்படைவாத கிருத்துவர்கள் பல
மாயன்
நூல்களை அழித்துவிட்டார்கள். இதில்
தப்பியவை நான்கே நான்கு நூல்கள்
தாம்.
வீழ்ச்சி
இவ்வளவு வளமையாக
ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம்
ஏறக்குறைய புல், பூண்டு
இல்லாமல் போய்விட்டது. அதற்கான
காரணத்தை அறிஞர்கள் இன்னும்
அறுதியிட்டுக் கூறவில்லை.
இவையாக இருக்கலாம் எனக்
கருதப்படும் சிலவற்றில்
முக்கியமானது,
அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட
பங்காளிச் சண்டைகள், காடுகளை
அழித்து அவர்கள் நடத்திய விவசாயம்
வெகு காலம் தாக்குப்
பிடிக்கவில்லை, ஸ்பானிய
குடியேற்றங்களுடன் வந்த அம்மை
மற்றும் காலரா போன்ற வியாதிகள்
பெருவாரியான மாயன்களை மிகக்
குறுகிய காலத்தில்
அழித்திருக்கலாம். ஆனால்
இவையெல்லாம் தாண்டி சுமார் 6
இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும்
மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற
நாடுகளில் வசிக்கிறார்கள்.

No comments:

Post a Comment