Total Pageviews

Monday, 23 April 2012

வேலூர்

வேலூர் , இந்திய மாநிலமான
தமிழகத்தைச் சேர்ந்த நகரமும்,
வேலூர் மாவட்டத்தின் தலைநகரும்
ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள
வேலூரின் முக்கிய இடமாக வேலூர்
கோட்டை விளங்குகிறது.
இக்கோட்டையின் உள்ளே இந்துக்
கோயில் , கிறித்தவ ஆலயம்,
இஸ்லாமியரின் மசூதி
ஆகியவை உள்ளன.
இந்த நகரில் பல கல்லூரிகள்,
பழமை வாய்ந்த கோயில்கள் மற்றும்
இந்தியாவின் சிறந்த
மருத்துவமனைகளில்
ஒன்றான கிறித்தவ மருத்துவக்
கல்லூரி மற்றும்
மருத்துவமனையும் உள்ளது.
வேலூருக்கு அருகில்
இரத்தனகிரி பாலமுருகன் கோயில்
உள்ளது.
வரலாறு
வேலூர் கோட்டை 16ஆம்
நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின்
போது சின்ன பொம்மி நாயக்கரால்
கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின்
மத்தியில் பிஜாப்பூர் சுல்தான்
இக்கோட்டையை கைப்பற்றினார்.
பின்னர் மராட்டியர்களாலும்,
தில்லியின் தௌத் கானாலும்
கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர்
ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில்
இக்கோட்டை விடப்பட்டது. 1760ஆம்
ஆண்டு இக் கோட்டை பிரிட்டிஷ்
கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம்
சென்றது. திப்பு சுல்தானை வென்ற
பிறகு அவருடைய
மகன்களை இக்கோட்டையில்
ஆங்கிலேயர் சிறை வைத்தனர். 1806
ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு
எதிராக இக்கோட்டையில் இந்திய
சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய்
எழுச்சி என்று இந்திய வரலாற்றில்
குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment