Total Pageviews

Friday 27 April 2012

மருத்துவ சின்னம்

அஸ்லெப்பியசின் தடி ( Rod of
Asclepius ) (⚕)
என்பது சோதிடத்துடனும்,
அஸ்லெப்பியஸ் என்ற கிரேக்க
கடவுளுடனும், மருந்துகள் மற்றும்
சிகிச்சை முறைகளுடனும்
தொடர்புடைய பண்டைய கிரேக்கச்
சின்னம் ஆகும். இந்தச் சின்னத்தில்
ஒரு பாம்பானது தடியொன்றில்
படர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும்.
குறித்த சின்னத்தின் பெயருக்கான
துவக்கம், கிரேக்கப் பழங்கதைகளில்
வரும் வைத்தியரும் அப்போலோவின்
மகனுமான அஸ்லெப்பியஸ்
என்பவரோடு அதிகளவில்
தொடர்புடையதாகச்
சொல்லப்படுகிறது. அத்தோடு
ஹிப்போகிரட்டீஸ் ,
அஸலெப்பியஸை வணங்குபவராக
இருந்தார். [1]
சின்னம்
பாம்பு தனது தோலை உரித்து வளரும்
பண்பானது வளர்ச்சி,
மறுபிறவி போன்றவற்றைக்
குறிப்பதால் அஸ்லெப்பியசின்
தடியில் பயன்படுத்தப்படுகிறது.
இச்சின்னம், உலக சுகாதார
நிறுவனம் , அமெரிக்க மருத்துவ
அமைப்பு, கனேடிய மருத்துவ
அமைப்பு, மற்றும் அமெரிக்க
கால்நடை மருத்துவ
அமைப்பு ஆகியவற்றின்
சின்னங்களாகப்
பயன்படுத்தப்படுகின்றது.
மருத்துவ அடிப்படையிலான
விளக்கம்
இச்சின்னத்தில் இருக்கும்
பாம்பு உண்மையில் பாம்பு அன்று.
தமிழில் நரம்புச் சிலந்தி என
அழைக்கப்படும் டிராகன்குலஸ்
புழுவே ஆகும். முற்காலத்தில்
இப்புழுவை குச்சியைக்
கொண்டு எடுப்பர்.
இதுவே மருத்துவத் துறையைக்
குறிக்கும் சின்னம் என்றும்
கூறப்படுகிறது. [2]

No comments:

Post a Comment