Total Pageviews

Wednesday 25 April 2012

மூ

மூ என்பது கடலில் மூழ்கிவிட்டதாக
கூறப்படும் ஒரு தொன்பியல்
கண்டமாகும். இந்த தொன்பியல்
கண்டம் பற்றிய கோட்பாடுகள்
முதலில்
அகசுடசு லே ப்லொஙியொன் என்ற
தொன்பியல் நாகரிக ஆய்வாளரால்
கூறப்பட்ட அட்லாண்டிக் கடலில்
மூழ்கிய மூ கண்ட
அழிவிலிருந்து மீண்டவர்களே எகிப்து மற்றும்
அமேரிக்க
நாகரிகங்களை ஆரம்பித்தனர் என்ற
கருத்தை மூலமாக கொண்டு[2]
அவரை பின்பற்றிய சேம்சு சர்ச்வேர்ட்
என்றவரால்
பிரபலப்படுத்தப்பட்டது. [3]
குமரிக்கண்டம்
போன்றே இவ்வளவு பெரிய
நிலப்பரப்பு சில வருடங்களில்
ஒரேடியாக கடலில்
மூழ்கிவிட்டதை ஆய்வாளர்கள் நம்ப
மறுக்கின்றனர். [4][5] அதனால்
தற்போதைய ஆய்வாளர்கள்
இதை ஒரு புனைவிடம்
என்றே கூறிவருகின்றனர். [6][7]
லே
அகசுடசு லே ப்லொஙியொன் (1825–
1908) என்பவரே முதலில்
மூ என்னும் கண்டம் இருந்ததற்கான
சாத்தியங்களை யுகாட்டன் மாயன்
சிதையல்களிலிருந்து கண்டறிந்தார். [2]
மேலும் கிரேக்க
எகிப்து நாகரிகங்களுக்கெல்லாம்
முன்னோடியாக இந்நாகரிகம்
இருந்தது போன்ற
கருதுகோள்களை உருவாக்கினார்.
லே பின்பு இந்த மூ பற்றிய கதைகள்
அட்லாண்டிசு என்ற கடலில்
மூழ்கியதாக கருதப்படும்
மற்றொரு தொன்பியல்
கண்டத்தோடு ஒப்பிட்டு இரண்டும்
ஒன்றே எனக்கூறினார்.[8] மேலும்
மூ அழிவின் போது தப்பிச்
சென்றவர்களே எகிப்து நாட்டின் மூ
அரசியென்றும் மற்றொரு பிரிவினர்
மாயன் நாகரிகம் தொடங்கிய மாயன்
இன மக்கள் எனவும் கூறினார்.[5]
சர்ச்வேர்ட்
பின்பு சர்ச்வேர்ட் என்பவரால்
மூ கண்டம் பசிபிக் கடலில்
மூழ்கியதாக எழுதப்பட்ட
ஐந்து புத்தகங்களும் மூ கண்ட
கருதுகோள்களை மேலும்
பிரபலமாக்கியது. மேலும் சர்ச்வேர்ட்
கி.மு. 48,000 முதல் கி.மு.10,000
வரை மூ கண்ட நாகரிகம் உச்சத்தில்
இருந்ததாகவும், கிமு 10,000த்தில்
நிலநடுக்கங்கள் மட்டும்
எரிமலை கொந்தளிப்புகளில்
ஒரே நாளில் முற்றிலும்
அழிந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
மற்ற கருத்துகள்
எசுகோட் எலியட் போன்றவர்கள்
மூ கண்டம் 8 லடசம்
ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாகவும்
[9] : p. 194 கிமு 9564ஆம் ஆண்டில்
அழிந்ததாகவும் கூறுகிறார். [9]
: p. 195
1930களில், துர்க்கிய
குடியரசை கண்டுபிடித்தவரான
அடடுர்க் சர்ச்வேர்ட்டின்
கண்டுபிடிப்புகளால்
ஈர்க்கப்பட்டு மூ கண்டத்தின்
இருப்பிடம் துர்க்கியர்களின் பழைய
தாய்நிலமான உர்கிமய்ட்டாக
இருக்கலாம் என்று கூறுகிறார்[10]
ருத் மொன்ட்கொமெரி என்பவர்
மூ கண்டமும் லெமூரியா
கண்டமும் ஒன்றெனவும், [11]
மசாகி கிமுரா என்பவர் சப்பான்
நாட்டின்
யொனகுனி தீவுகளே மூ கண்டம்
என்றும் கூறுகின்றன

No comments:

Post a Comment