Total Pageviews

Thursday 26 April 2012

இரும்பொறை

சேரமான் கணைக்கால்
இரும்பொறை
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன்
சோழன் செங்கணான்
என்பவனோடு போரிட்டு அவனால்
பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன்.
சிறையில் தாகத்துக்குத் தண்ணீர்
கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக்
கொடுத்ததால் அதனைக்
குடியாது ஒரு செய்யுளைப்
பாடிவிட்டு வீழ்ந்ததாகச்
சொல்லப்படுகிறது.
தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச்
செய்யுள் புறநானூற்றின் 74
ஆவது பாடலாக உள்ளது[1] .
பாடல்
குழவி இறப்பினும்
ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின்
இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத்தானே?
அக்கால வழக்கம்
பிறந்ததும்
குழந்தை இறந்துவிட்டாலும்,
பிறக்கும்போதே சதைப் பிண்டமாகப்
பிறந்துவிட்டாலும் அந்தப் பிறவிக்
குழந்தை ஆள்
அன்று என்று எண்ணி அதனை வாளால்
காயப்படுத்துவர். இப்போது நான்
காயமில்லாமல் வஞ்சகத்தால்
பிடிபட்டுக் கிடக்கிறேன். நான்
ஆண்மகன் ஆவேனா?
அன்றியும் என் வயிற்றுத் தீயைத்
தணித்துக்கொள்வதற்காகத்
தண்ணீரைக் கேட்டுப்
பெற்றிருக்கிறேன்.
இதனை உண்ணவும் வேண்டுமா?
(உண்ணக்கூடாது என்று எண்ணி நீரையும்
உண்ணாமல்
கிடந்து நா வறண்டு உயிர் நீத்தான்)
அருஞ்சொல்
மதுகை = மன வலிமை
கேளல் கேளிர் = பகைவர் தந்த
உறவாளி (காவலன்)
வேளாண் = உதவும் ஆண்மை
சிறுபதம் = சிற்றுணவாகிய
தண்ணீர

No comments:

Post a Comment