Total Pageviews

Friday 27 April 2012

கல்4-3

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் தண்டம்பட்டு எனும் ஊரில்
அமைந்த நடுகல் கல்வெட்டு (செங்.
நடு. 77 /1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம்
நூற்றாண்டு காலத்தது.
கோவிசைய மயீந்திரபரு /
மற்கு பதின்எட்டாவது மீ /
வேணாட்டு ஆந்தைபாடி ஈசை /
பெரும்பாணரைசரு மருமக்கள் /
பொற்சேந்தியாஞ் சேவகரு தொறு / க்
கொண்ட ஞான்று மீட்டு பட்டா / ன்
(வே)ணாட்(டு) நந்தி / (யார்) கல் க - -
மீ - மேல், மேலை; மருமக்கள் -
மன்னனுக்கு அடுத்த அதிகாரப்
பொறுப்பு வேள் அல்லது குறுநில
மன்னன்; தொறு - ஆநிரை; சேவகர் -
படைத்தலைவர்; பட்டான் -
சாவடைந்து வீழ்ந்தான்
முதலாம் மகேந்திர வர்மப்
பல்லவனுடைய பதினெட்டாவது (608
CE) ஆட்சி ஆண்டில்
அவனுக்கு அடங்கியமேல்
வேணாட்டு ஆந்தைப்பாடியை ஆளும்
மன்னன் ஈசைபெரும்பாணரைசர்
என்பானுக்கு 'மருமகன்'
பொறுப்பு அதிகாரி ஆன குறுநில
மன்னன் பொற்சேந்தியான் என்பானின்
படையினர்
வேணாட்டு ஆநிரைகளைக் கவர்ந்த
பொழுது வேணாட்டைச் சேர்ந்த
நந்தி என்பான் அவ்
ஆநிரைகளை மீட்டு வீர
சாவடைந்ததன் நினைவில் நடுவித்த
நடுகல் என்பது செய்தி.
ஈசன் என்பது இங்கு ஐகார
ஈறு பெற்று ஈசை என வாண
அல்லது பாண மன்னன் பெயரில்
வழங்குகிறது. ஓர் அசீரிய வேந்தன்
பெயர் Esar Haddon > ஈசர் அட்டன்; ஓர்
எலாமிய வேந்தன் பெயர் Palar-
Ishshan 1890 BC > பள்ளர் ஈசன்.
ஒரு தய்ரி நகர போனீசிய மன்னன்
பெயர் Baal Eser 946 - 930 B C > பால்
ஈசர் > வால் ஈசன். எனவே ஈசன்
என்பது சமற்கிருத சொல்
அன்று அது ஒரு தூய தமிழ்ப் பெயரே.
ஈச என்ற பெயர் கொண்ட
மேலை நாகரிக மன்னர் முன்னோரும்
தமிழர் தாமே என்பதுடன் வாண
(பாண) அரசர் முன்னோரும் அசீரியா,
எலாம், போனீசிய
நாகரிகத்தாரோடு குருதித்
தொடர்பு உடையவர் என்று கொள்ள
இடமளிக்கின்றன இந் நடுகற்களில்
வழங்கும் பெயர்கள்; அல்லது புற: 201
ஆம் பாடலில் "நீயே, வடபால்
முனிவன் தடவினுள் தோன்றி" என
கபிலரால் குறிப்பிடப்படும்,
துவரை மன்னன் கண்ணனால்
தமிழகத்துக்கு அனுப்ப்பபட்டதாக
கருதப்படும் 12 வேளிர் குலத்தவருள்
வாணர் ஒருவராகலாம். சேந்தன்
என்பது இகர
ஈறு பெற்று சேந்தி ஆனது.
அதே போல் நந்தன் இகர
ஈறு பெற்று நந்தி ஆனது.
- - - -
தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரை வட்டம் நடுப்பட்டி எனும்
ஊரில் அமைந்த இக் கல்வெட்டு (செங்.
நடு. 21/1972) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இதன்
காலம் 7 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய ம(யீ)ந்திர
பருமற்கி பத்தொண் /
பதாவது மீவெண் / ணாட்டுக் /
கிப்பை (ஊ)ரா / ளும்
வாணிகரு ஊரு கொள(ப்) / பட்டாரு /
கிணங் / கன் / கல் / அவருது கா /
ராண்மை
கொளப் - கைப்பற்ற, கவர; கல் -
நடுகல்; காராண்மை - பயிர் தொழிலில்
ஈடுபடுவார்க்கான பங்கு.
மகேந்திர வர்மப் பல்லவனின்
பத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில்
(619 CE) அவன் ஆட்சிக்கு உட்பட்ட
மேல் வேணாட்டுப் பகுதியான
கிப்பை ஊரை ஆளும் குறுநில
மன்னன் வாணிகன் என்பான் ஊரைக்
கைப்பற்ற வந்த போது கிணங்கன்
என்பவன்
அத்தாக்குதலுக்கு ஆளாகி வீர
சாவு எய்தினான். அக்கிணங்கனுடைய
தொழில் காரண்மை. இதாவது, பயிர்
தொழிலில்
ஈடுபடுபவருக்கு விளைச்சலில்
பங்கு பெறும்
உரிமை காராண்மை அல்லது கீழ்வாரம்
ஆகும்.
வாணிகன் கைப்பற்றிய ஊர் பெயர்
குறிக்கப்படவில்லை. அது நடுகல்
உள்ள இன்றைய நடுப்பட்டி ஆகலாம்.
வாணிகத்தில் ஈடுபட்ட சிலர்
வாணிகத்தை விட்டுவிட்டு ஆட்சிப்
பொறுப்பு ஏற்றிருந்தனர் எனத்
தெரிகின்றது. பண்டு நெடுவழியில்
கள்வர்களின் தாக்குதலில்
இருந்து தப்ப வணிகர் தம்
பாதுகாப்பிற்கென
சிறு படை ஒன்றை பேணி வந்து உள்ளனர்.
அவ்வாறான வணிகப் படையினர்
அமைத்த பாளையத்தின் படைத்
தலைவன் பின்னாளில்
அப்பகுதியை மேம்படுத்தி அப்பகுதிக்கு வேள்
ஆகி இருக்கலாம் என எண்ணத்
தோன்றுகின்றது. சீனாவின் Jin
ஆள்குடியில் வாணியன் என்ற பட்டப்
பெயரை 1115 -1234 வரை ஆண்ட பல
மன்னர்கள்
கொண்டு உள்ளனர்.காட்டாக,Wányán
Āgǔdǎ > வாணியன் ஆகூட(ன்).
- - - -
தருமபுரி மாவட்ட தருமபுரி வட்டம்
புலியனூர் எனும் ஊரில் இக்
கல்வெட்டு வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இதன்
காலம் 7 ஆம் நூற்றாண்டு. (நடு.பக்.
169)
கோவிசைய மசீந்திர பரு / மற்
கிருபதாவது மீவெண் / ணாட்டு க /
ட்டைஊ / ற் றொறு / கொண்ட ஞா /
ன்று சிறுபாழா / ளும் பாலா / சிரி க /
ரு மகன் / வீரவரு / கல்
மீ - மேல், மேற்கு; தொறு - ஆநிரை;
மகன் - மைந்தன் அல்லது படைத்
தலைவன்.
மகேந்திர வர்மப் பல்லவனின்
இருபதாவது ஆட்சி ஆண்டில் (610 CE)
அவனுக்கு அடங்கிய மேல்
வேணாட்டு கட்டை ஊரின்
ஆநிரைகளை கவர்ந்த போது நிகழ்ந்த
பூசலில் சிறுபாழ் எனும்
பகுதியை ஆண்ட வேள் பாலாசிரிகன்
என்பானுடைய படைத்தலைவன்
அல்லது மகன் வீரவன் என்பவன் வீர
சாவு அடைந்தான். இந்த
வீரவனுக்கு எடுப்பித்த நடுகல்
இது என்பது இதன் பொருள்.
வால் ஆசிரிகன் என்பதே பாலாசிரிகன்
என திரிந்து வழங்குகின்றது. 'கன்'
ஈறு பண்டு தமிழில் வழங்கியது.
அசீரியன், ஆசிரியன், அசுரன் என்பன
அசீரியா நாட்டவரையே குறிக்கும்
என்பது வரலாற்று அறிஞர் கருத்து.
இங்கு ஆசிரிகன் என வழங்குகிறது.
வால் > பால் என்பதற்கு ஒளிர்தல்,
ஒளிரும் வெண்மை எனப் பொருள். ஓர்
அசீரிய மன்னன் பெயர் அசூர்
பாணி பால் 668 - 626 BCE > அசூர்
வாணி வால்.தருமபுரி பகுதியில்
ஆண்ட இந்த வேள் பாலாசிரியனின்
முன்னோர் அசீரிய நாட்டவராய்
இருந்திருத்தல் கூடும். மகேந்திர
வர்மனின்
பதினான்காவது ஆட்சி ஆண்டு நடுகல்
ஒன்று இக்கூற்றுக்கு சான்றாக
உள்ளது. சிம்ம வர்மனின் இருபதாம்
ஆட்சி ஆண்டுப் புலியனூர் நடுகல்
கல்வெட்டில் இவன் பெயர் இடம்
பெற்று உள்ளது. மன்னன் > மன்னவன்
என்றும், வய்ரன் > வய்ரவன் என்றும்
அவன் ஈறு பெற்று வழங்குவது போல
வீரன் வீரவன் என அவன்
ஈறு பெற்றுள்ளது.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் மோத்தகல் எனும் ஊரில்
அமைந்த நடுகல் கல்வெட்டு (செங்.
நடு. 88 /1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம்
நூற்றாண்டுக் காலத்தது.
கோவிசைய ம / ந்திரபரும(ற்கு மு) /
ப்பத்திரண்டாவது - - - - - யை தொ /
றுக்கொண்ட
ஞான்று பொன்மோதன்னா / ர்
சேவகன் அக்கந்தைகோடன் /
தொறு விடுவித்துப் பட்டா / ன் கல்
முதலாம் மகேந்திர வர்மப்
பல்லவனின் முப்பத்திரண்டாம்
ஆட்சி ஆண்டில் (622 CE) பகைவர்
ஆநிரைகளை கவர்ந்த
போது பொன்மோதன் என்பானின்
படைவீரன் அக்கந்தைக்கோடன்
என்பவன் அவ் ஆநிரைகளை மீட்டு வீர
சாவடைந்ததன் நினைவில் நட்ட
நடுகல் என்பது செய்தி.
மோதன் என்ற பழம் பெயரில் அமைந்த
ஓர் ஊர் மோதூர். அக்கன்
என்பது பண்டு அண்ணன், அப்பன்,
ஐயன், அத்தன் போல் வழங்கிய
ஒரு சிறப்பு அடை. இங்கு பெயர் முன்
வந்து உள்ளது. கந்தன் ஐகார
ஈறு பெற்று கந்தை என வழங்குகிறது.
அக்கந்தைகோடன் மூன்று பெயர்ச்
சொற்களின் ஒட்டுப் பெயர்.
ஒரு எதியோப்பிய அரசியின் பெயர்
Nicauta Kandae (Queen) 740-730 BCE
> நய்காத்த கந்தை
இகர ஈறு பெற்று கந்தன்
கந்தி எனவும் வழங்கும். இப்பெயர்
சூசாவை ஆண்ட ஒரு எலாமிய
மன்னன் பெயரில்
வழங்குகின்றது kutir nakhante 693
BCE > கதிர் நக்கந்தி.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் மோத்தகல் எனும் ஊரில்
அமைந்த நடுகல் கல்வெட்டு (செங்.
நடு. 89 /1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம்
நூற்றாண்டு காலத்தது. இது மேல்
உள்ள நடுகல் செய்தி மாந்தருடன்
தொடர்புடையது.
கோவிசைய மயேந்திர /
பருமற்கு முப்பத்திரண்டா /
வது பொன்மோதனார் சே / வகன்
வின்றண் (வ)டுகன் / புலி குத்திப்
பட்டான் / கல்.
குத்தி - ஆய்தத்தால் குத்திக் கொன்று
முதலாம் மகேந்திர வர்மனின்
முப்பத்தி இரண்டாவது ஆட்சி ஆண்டில்
(622 CE) பொன்மோதன்
என்பானுடைய படைஆள் வின்டன்
வடுகன் என்பான் புலியை எதிர்
கொண்டுப் போராடி அதைக் குத்திக்
கொன்று தானும் வீர சாவடைந்ததன்
நினைவாய் நட்ட நடுகல்.
பண்டு றகரம் டகர ஒலிப்புப்
பெற்று இருந்தது எனவே விண்டன்
வடுகன் என செப்பமாகப் படிக்க
வேண்டும். இவன் பொன்மோதனின்
மற்றொரு படைஆள்.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் கொட்டையூரில் அமைந்த
நடுகல் கல்வெட்டு (செங். நடு.
63/1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இதன்
காலம் 7 ஆம் நூற்றாண்டு. மேல்
உள்ள கல்வெட்டு மாந்தருடன்
தொடர்பு உடையது.
கோவிசைய ம / சீந்திரபருமற்கு /
முப்பத்து மூன்றாவது /
வாணகோ அரைசரு மரும / க்கள்
பொன்னரம்பனார் / மேல்
வாணகோ அரைசரு மரு / மக்கள்
கந்தவிண்ணனா / ர் வேல்மறுத்திச்
சென்ற ஞா / ன்று கந்தவிண்ணனா / ர்
தஞ்சிற்றப்பனார் பொ / ன்னி(தன்)னார்
இளமகன் / பொங்கியார் மகன் கத் /
தி எய்து பட்டான் கல்.
மறுத்தி - கொண்டு போய்; இளமகன் -
இளையமகன்; எய்து - குத்துப்பட்டு,
தைத்து; கல் - நடுகல்
முதலாம் மகேந்திர வர்மப்
பல்லவனின்
முப்பத்து மூன்றாவது (623 CE)
ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய
வாண கோ அரசனிடம் 'மருமகன்'
எனும் அதிகாரப் பொறுப்பில் உள்ள
சிற்றரசன் பொன்னரம்பன் என்பான்
மீது வாண கோ அரசனிடம்
அதே 'மருமகன்' எனும் அதிகாரப்
பொறுப்பில் உள்ள சிற்றரசன்
கந்தவிண்ணன் என்பவன்
அவனை எதிர்த்து வேல்
கொண்டு போய் போர் செய்த
போது அப் போரில் அக்
கந்தவிண்ணனின் சிற்றப்பன்
பொன்னிதன் என்பானுடைய
இளையமகன் பொங்கி என்பவன்
வழிவந்த பேரன் கத்திக் குத்துப்
பட்டு வீர சாவடைந்ததன் நினைவில்
அவனுக்கு நிறுவப்பட்ட நடுகல்
என்பதே செய்தி.
நடுகல் வீரனாகிவிட்ட பேரன் பெயர்
குறிக்கப்படவில்லை.நரம்பன்
என்பது நறன், அம்பன் ஆகிய
இரு பெயர்களின் ஒட்டுப் பெயர்.
பொங்கன், பொங்கல் என்றவாறும்
பெயர்கள் வழங்கி இருத்தல்
வேண்டும். காட்டாக, ஓர் ஊர்ப் பெயர்
பொங்கலூர். பொன் + இத்தன்
புணர்ந்து பொன்னிதன் என
வழங்குகிறது.ஒரு தய்ரி நகர
போனீசிய மன்னன் பெயர் Itho baal
878 - 847BC > இத்த பால் > இத்தன்
வால். ஒரு கொரிய மன்னன் பெயர்
Wina BC 1610-1552 > விண்ணன்.
- - - -
மேல் உள்ள
கல்வெட்டு மாந்தர்களுடன்
தொடர்புடைய
மற்றொரு கல்வெட்டு இது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் கொட்டையூரில் அமைந்த
நடுகல் கல்வெட்டு (செங். நடு.
64/1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இதன்
காலம் 7 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய மயேந்திரபருமற்கு /
முப்பத்து மூன்றாவது வாணகோ அரைசரு /
மருமக்களுட் பொணைமன்னார்
மகன் / னார் பொன்னரம்பனார்
இண்ணபந்த மகன்னார் கந்த
(வி)ண்ணனார் வெலட்டு(ண்) / மேல்ச்
சென்றெறிந்த ஞான்று / நல்ல / னாய்
தி / ரிந்து ப / ட்டான் / கந்தவிண்ண /
னார் (சேவக) / ன் புத / ண்டி மக்(க) /
ள் - - - - / - - - - - / தனெத ம / - னாதன் /
- - - -
வெலட்டு > வெல் + அட்டு -
வெற்றி மேல் வெற்றி சேர்த்து;
நல்லனாய் - நற்பெயர் ஈட்டியவனாய்;
திரிந்து - சண்டைக்குப் போதல்,
போர்மேல் செல்; ஞான்று - அக்கால்.
முதலாம் மகேந்திர வர்மப்
பல்லவனின் முப்பத்து மூன்றாம் (623
CE) ஆட்சி ஆண்டில்
அவனுக்கு அடங்கிய மன்னன் வாண
கோ அரசனிடம் 'மருமகன்' எனும்
அரசு அதிகாரப் பொறுப்பு பெற்ற
சிற்றரசன் பொணை மன்னன் என்பவன்
மகனான பொன்னரம்பன் என்பவன்
மேல் வாண கோ அரசனிடம்
அதே போல் 'மருமகன்' எனும்
அரசு அதிகாரப் பொறுப்பு பெற்ற
சிற்றரசன் இண்ணபந்தன் என்பவனின்
மகன் கந்தவிண்ணன் என்பவன் போர்
தொடுத்து அட்க்கடுக்கான
வெற்றிகளைக்
குவித்து போர்புரிந்து வரும்
வேளையில் அந்தக் கந்தவிண்ணனின்
படைத் தலைவனான புதண்டியின்
மகன் - -தனெதம- -னாதன் என்பவன்
போர்க்களத்தில் நற்பெயர்
ஈட்டியபடி போர்மேல் செல்கையில்
ஒரு கட்டத்தில் பகைவர் தாக்குதலில்
வீர சாவு எய்தினான் என்ற மட்டில்
கல்வெட்டு தெளிவாக உள்ளது.
அடுத்து உள்ள நான்கு சிறு வரிச்
செய்திகள் நடுகல்லில்
சிதைந்து உள்ளன.
புதண்டி என்பான் மகன் பெயர்
சிதைந்து உள்ளது.சிந்து முத்திரைகளில்
பு என்பது தனித்து குறிப்பிடப்படுகின்றது.
தண்டன் இகர
ஈறு பெற்று இங்கு தண்டி ஆகப்
பதிவாகி உள்ளது.
- - - -
மேல் உள்ள
கல்வெட்டு மாந்தர்களுடன்
தொடர்புடைய
மற்றொரு கல்வெட்டு இது.திருவண்ணாமலை மாவட்டம்
செங்கம் வட்டம் கண்ணக்கந்தல்
எனும் ஊரில் அமைந்த நடுகல்
கல்வெட்டு (செங். நடு. 48 /1971)
வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம்
நூற்றாண்டு காலத்தது. தொடக்கம்
சிதைந்தும் பிறவரிகளில் சில
எழுத்துகள் சிதைந்தும்
காணப்படுகின்றன.
- - - - / - - - மருமக் / - - - - னரம்பனா / -
- - ண கோ அரைசரு / - - - - கள்
கந்தவிண்ண / - - - (ற)லப் புஞ்சிச்
சென்ற / ஞான்று பொன்னரம்பனார்
சே / வகன் வளியப்பூரார் மக / ன் தா /
ளச்சா / மி கல்
புஞ்சி - ஒன்றாதல், குவியலாதல்;
மருமக்கள் - சிற்றரசனை ஒத்த
ஒரு அதிகாரப் பொறுப்பு; மகன் -
படை ஆள் அல்லது பெற்ற மகன்
ஆட்சி ஆண்டு சிதைந்து உள்ளதால்
இப்போர் நிகழ்வு மகேந்திரன் வர்மன்
அல்லது நரசிம்ம வரமனின்
காலத்தினதாகலாம்.
அவருக்கு அடங்கிய வாண அரசனிடம்
'மருமகன்' என்னும் அதிகாரப்
பொறுப்பு பெற்ற சிற்றரசன்
பொன்னரம்பன் மீது வாண அரசனிடம்
அதே 'மருமகன்' எனும் அதிகாரப்
பொறுப்பு பெற்று இருந்த
மற்றொரு சிற்றரசன் கந்தவிண்ணன்
என்பவன் தாக்கிப்
போரிட்டு வெற்றி மேல் வெற்றியாக
குவித்துக்கொண்டே (புஞ்சி) சென்ற
போது பொன்னரம்பனின்
படைத்தலைவன் வளியப்பூரன்
என்பவன் மகன் அல்லது படைஆள்
தாளச்சாமி என்பான் போரில் வீர
சாவடைந்ததன் நினைவாக நடுவித்த
நடுகல்.
மேல் உள்ள கொட்டையூர்
கல்வெட்டில் பொன்னரம்பன் மற்றும்
கந்தவிண்ணனுடைய தந்தையர் பெயர்
குறிக்கப்பட்டு உள்ளது.
எனவே இக்கல்வெட்டு இவர்
தந்தையர் காலம் முதல் இருந்து வந்த
பகையின் தொடர்ச்சியை எடுத்துக்
கூறுகின்றது. அதோடு இந்தப் போர்
முன் உள்ள கல்வெட்டுப் போர்
நிகழ்விற்கு சில ஆண்டுகள்
கழித்து நிகழ்த்திருக்கிறது எனலாம்.
மகேந்திர வர்மனின் 38 ஆம்
ஆட்சி ஆண்டில் இருவருக்கும் போர்
நிகழ்ந்து உள்ளது நோக்கத்தக்கது.
வளியன் + பூரன். இதில் பூரன்
என்பது இகர ஈறு பெற்று பூரி என்ற
பெயராக சங்க இலக்கியத்துள்
பதிவாகி உள்ளது. பூரன் சிங் இன்றும்
பஞ்சாபில் வழங்கும் பெயர்.
இது வலியப் பூரன் என்பதாக
இருந்தால் வலிய என்பதற்கு சேரச்
தமிழில் பெரிய, மூத்த எனும் பொருள்
கொள்ளலாம்.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் எடுத்தனூர் எனும் ஊரில்
அமைந்த நடுகல் கல்வெட்டு (செங்.
நடு. 59 /1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம்
நூற்றாண்டு காலத்தது.
கோவிசைய / மயிந்திர பருமற்கு /
முப்பத்து நான்காவது வாணகோ /
அரைசரு மருமக்கள் பொற்றொக்கை /
ஆர் இளமகன் கருந்தேவகத்தி தன் /
னெருமைப் / புறத்தே வா /
டி ப்பட்டா / ன் கல் / கோபால /
ன்னென்னு / ந் நாய் ஒ / ரு கள்ள /
னைக் கடித் / துக் காத்திரு / ந்தவாறு
மருமக்கள் - மருமகன்
என்பது ஒரு அதிகாரப் பொறுப்பு,
இளமகன் - புதிதாக போர்ப்
பயிற்சி பெறும் வீரன், வீரமகன்,
வாடி - போரில் தோல்வியுற்று;
பட்டான் - செத்து வீழ்ந்தான்.
முதலாம் மகேந்திரன் வர்மப்
பல்லவனின்
முப்பத்து நான்காவது (624 CE)
ஆட்சி ஆண்டில்
அவனுக்கு அடங்கி ஆண்ட வாண
அரசனிடம் 'மருமகன்' எனும்
அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன்
பொற்றொக்கை என்பானின் இளைய
மகன் அல்லது இளம்வீரன்
கருந்தேவகத்தி என்பவன் தன்
எருமை நிரைகளைப் பகைவரிடம்
இருந்து மீட்கும் கால் பகைவரின்
தாக்குதலில் தோல்வியுற்று தன்
எருமைக்குப் புறத்தே உயிர் நீத்து வீர
சாவடைந்து வீழ்ந்திருந்தான். அந்த
எருமை நிரைகளைக் கவர வந்திருந்த
கள்ளருள் இருவரைக்
கருந்தேவகத்தியின் கோபாலன் எனும்
பெயருடைய நாய் கடித்துத்
துரத்தி எருமை நிரையைக்
காத்து நின்றது என்பதனை நடுகல்
குறிப்பு தருகின்றது.
கத்தன் என்ற பெயர் இகர
ஈறு பெற்று கத்தி என இப்பெயரில்
வழங்குகிறது. பொன் + தொக்கை =
பொற்றொக்கை. பொன் என்பது செல்வ
நிலை குறிக்கும் ஒரு சொல்.
இன்றைய சமீன்தார்
நிலையை ஒத்தது எனலாம். தங்கன்
வழிவந்த ஒரு கொரிய வேந்தன் பெயர்
Dohae 1891-1834 B C E > தொக்கை.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் சே. கூடலூரில் அமைந்த
ஒரு நடுகல் கல்வெட்டு (செங். நடு.
50/1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இதன்
காலம் 7 ஆம் நூற்றாண்டு.
கோவிசை / ய மஇந்திர பரு /
மற்கு முப்பத்தெட்டா /
வது வாணகோஅரைசரு மரு / மக்கள்
கந்தவிண்ண / னார் கூடல் தொறுக்
கொண்ட /
ஞான்று தொறு இடுவித்துப் பட்டா /
ன் பொன்னரம்பனார் கொல்லகச் /
சேவகன் காகண்டி அண்ணாவன் கல் /
கூடல் இள மக்கள் நடு / வித்த கல்.
தொறு - ஆநிரை; இடுவித்து -
விடுவித்து, மீட்டு; கொல்லகம் -
கருவூலம், சேவகன் - காவற்காரன்;
பட்டான் - செத்து வீழ்ந்தான், வீர
சாவடைந்தான். இள மக்கள் -
இளநிலைப் அல்லது தொடக்க நிலைப்
போர் வீரர்கள்.
முதலாம் மகேந்திர வர்மப்
பல்லவனின் முப்பதெட்டாவது (628
CE) ஆட்சி ஆண்டில்
அவனுக்கு அடங்கி ஆண்ட வாண
அரசனிடன் 'மருமகன்' எனும்
அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன்
கந்தவிண்ணன் என்பவன் கூடல்
எனும் கூடலூர் ஆநிரைகளைக்
கவர்ந்து சென்ற போது பொன்னரம்பன்
என்பவனின் கருவூலக்
காவற்தலைவன்
காகண்டி அண்ணாவன் என்பான்
கவரப்பட்ட ஆநிரைகளை மீட்டுப்
போரில் வீர சாவடைந்தான்
என்பதை நினைவூட்டும் நடுகல். அந்
நடுகல்லை கூடல் ஊரைச் சேர்ந்த
இள மறவர்கள் நடுவித்தனர் என்ற
செய்தியும் உள்ளது. இது மகேந்திர
வர்மனின் 33 ஆம்
ஆண்டு கொட்டையூர் நடுகல்லில்
குறிக்கப்பிடும்
சிற்றரசரொடு தொடர்புடைய செய்தி.
கூடலூரைச் சேர்ந்த
காகண்டி கூடலூர்ப் போரில்
மாண்டதால் அவ்வூர் இளமறவர்
நடுகல் நட்டனர்.காகண்டி >
சிந்து முத்திரைகளில்
கா என்பது தனிச் சொல்லாக
வழங்குகின்றது. கண்டன் இகர
ஈறு பெற்று கண்டி என
இங்கு வழங்குகிறது.
சுமேரியாவை ஆண்ட தொடக்க கால
Kassite அரசன் பெயர் Gandas 1730 BC
> கண்ட(ன்).
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் மல்லிகாபுரம் (சாத்தனூர்)
எனும் ஊரில் அமைந்த நடுகல்
கல்வெட்டு (செங். நடு 35/1968)
வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. அதன்
காலம் 7 ஆம் நூற்றாண்டு. மகேந்திர
வர்மனின் 34 ஆம்
ஆண்டு எடுத்தனூர் நடுகல்
செய்தியுடன் தொடர்புடையது
கோவிசைய மசீந்திரபரு /
மற்கு முப்பத்தொன்பதாவது /
வாணகோ அரைசரு மருமக்கள் பொ /
ற்றொக்கையார் சருக்கிருந்த ஊர் போ /
ந்தை மேற் சக்கரவரு படை வந்த ஞா /
ன்று ணாக்கையார் இளமகன்
வத்தாவ / ன் மகன் னந் /
(தி எறி)ந்து பட்டா / ன் கல்
சருக்கிருந்த - தன்
இருப்பிடத்தை விட்டு நீங்கி வேறோர்
இடத்தில் தங்கி இருந்த
முதலாம் மகேந்திர வர்மப்
பல்லவனின்
முப்பத்தொன்பதாவது (629 CE)
ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய
வாண அரசனிடம் 'மருமகன்' எனும்
அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன்
பொற்றொக்கை என்பான் தங்கி இருந்த
ஊரான போந்தை மேல் சக்கரவன்
படை வந்து தாக்கிய
போது நாக்கை என்பான் இளையமகன்
வத்தாவன் என்பானுடைய மகன்
நந்தி என்பவன், இதாவது, நாக்கையின்
பேரன் வெல்லப்பட்டு வீர
சாவடைந்தான். அவன் நினைவாக
எழுந்ததே இந் நடுகல்.
நாக்கன் என்ற பெயர் ஐகார
ஈறு பெற்று நாக்கை என
வழங்குகிறது.பொன் + தொக்கை =
பொற்றொக்கை. இப்பெயரில் ஓர் ஊர்
இருந்தது பற்றி அரசர்
பெயரோ ஆட்சி ஆண்டோ குறிக்கப்படாத
செங்கம் நகரின் ஏரிக்கரையில்
அமைந்த 10 ஆம் நூற்றாண்டு நடுகல்
கல்வெட்டு ஒன்று நமக்கு தெரிவிக்கின்றது.
ஸ்வஸ்தி ஸ்ரீ தொக்கைபாடி /
இரையமன் மகன் கத்தைய / ன்
தொக்கைபாடி தொறுமீட்டு /
ப்பட்டான்.
தொக்கைப்பாடியில் பகைவர்
ஆநிரைகளைக் கவர்ந்து சென்ற
போது தொக்கைப்பாடியைச் சேர்ந்த
இறையமன் என்பானின் மகன்
கத்தைய்யன் அவ்
ஆநிரைகளை பகைவரிடம்
இருந்து மீட்டான். அப்பூசலில் அவன்
வீர சாவடைந்ததால் அவனுக்கு இந்
நடுகல் எடுக்கப்பட்டது.
இறையன் என்ற பெயர் 'மன்'
ஈறு பெற்று இறையமன் ஆகி உள்ளது.
கத்தன் என்ற பெயருடன்
மதிப்புரவு அடையாக அய்யன் என்ற
சொல் சேர்க்கப்பட்டு உள்ளது.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் தண்டராம்பட்டு எனும் ஊரில்
அமைந்த நடுகல் கல்வெட்டு (செங்.
நடு. 68/1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம்
நூற்றாண்டுக் காலத்தது.
கோவிசைய நரை /
சிங்கபருமற்கு யா /
ண்டேழாவது மேற்கோவ / லூர் மேல்
வாணகோ முத்தரைசர் நாடு பாவிய
தஞ்சிற் / றப்படிகள் பொன்மாந்தனார்
மேற் / வந்த
ஞான்று பொன்மாந்தானார்க்காய்ப்
பட்டா / ன் கடுவந்தையார் மகன்
விற்சிதை கல் வாண / கோக்கடமர்
பாவிய - பரவிப் படர்ந்து, பரப்பி,
எல்லை விரித்து, பவ்வது என்பதும்
இதே பொருளதே
முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனின்
ஏழாம் ஆட்சி ஆண்டில் (637 CE)
அவனுக்கு அடங்கிய
வாணகோ முத்தரசன் தன்
நாட்டு எல்லையைக்
கடந்து முத்தரசனின் நாட்டுள் பரவிப்
படர்ந்து அவன் நாட்டுப் பகுதிகளைக்
கவர்ந்து தன்
நாட்டு எல்லையை விரிவுபடுத்திய
தன் சிற்றப்பன் பொன்மாந்தன்
என்பவன் மேல் போர் செய்ய மேல்
கோவலூர் நாட்டின் மேல்
படை செலுத்திய
போது பொன்மாந்தன் சார்பில்
கடுவந்தை என்ற வேளின் மகன்
அல்லது வீரன் விற்சிதை என்பவன்
போரிட்டு வீர சாவடைந்தான். அவன்
வீரத்தை நினைவு கொள்ளும்
வகையில் எழுந்ததே இந் நடுகல்.
இக்கல்லை நிறுவியவன் வாணகோக்
கடமன் என்று தெரிகின்றது.
கடு +அந்தை = கடுவந்தை, வில் +
சிதை = விற்சிதை.இந் நடுகல்லில்
வாணகோ அரசன் பெயர் முத்தரசன்
என குறிக்கப்பட்டு உள்ளது.
இன்னொரு வாண அரசன் வாணகோக்
கடமன் என்பது முத்தரசனின்
சிற்றப்பன் ஆகலாம். முத்தரசனின்
பாட்டன் தன் நாட்டை முத்தரசனின்
தந்தைக்கும் வாணகோக்
கடமனுக்கும் பிரித்துக் கொடுத்ததில்
தொடர்ந்து வந்த எல்லைச்
சர்ச்சையால் இப்போர்
நிகழ்ந்து இருக்கலாம். மாந்தன் எனும்
பெயர் ஐகார
ஈறு கொண்டு மாந்தை என
ஒரு பண்டைய சேர நகருக்குப்
பெயராக வழங்கியது. ஒரு எதியோபிய
மன்னர் பெயர் Manturay 2180 - 2145
BCE > மாந்தரை.
இன்னொரு எதியோபிய மன்னன்
பெயர் Mandes 1533 -1514 BCE >
மாந்தி. அடிகள் என்ற சொல் சமண
மதத் தொடர்பு கொண்டதாக
இருக்கலாம்.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் தண்டராம்பட்டு எனும் ஊரில்
அமைந்த நடுகல் கல்வெட்டு (செங்.
நடு.69/1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம்
நூற்றாண்டுக் காலத்தது.
மேலே காட்டப்பட்டு உள்ள நடுகல்
அரசர்களுடன் தொடர்புடையது.
கோவிசைய நரை /
சிங்கபருமற்கு யா /
ண்டேழாவது வாணகோ முத் /
தரைசரு நாடு பாவிய மேற் கோ /
வலூர் மேல் வந்து தஞ்சிற்றப் /
படிகளை எறிந்த ஞான் / று பட்டான்
சேவர்பரி அட்டுங் கொள் / ளி துருமா /
வனார் மக / ன் மாற்கடலன்.
சேவர்பரி - படைவீரர்க் குதிரை;
அட்டும் - முழுவதும், செறிவு, திரள்;
கொள்ளி - காவல் பொறுப்பு கொண்ட;
பாவிய - பராவிப் படர்ந்த, நாட்டுப்
பகுதியைக் கவர்ந்த
முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனின்
ஏழாம் (637 CE) ஆட்சி ஆண்டில்
அவனுக்கு அடங்கியவாணகோ முத்தரைசன்
தன் நாட்டு எல்லைக்குள் வந்து தன்
நாட்டுப் பகுதிகளில்
தமது ஆட்சியை விரித்து நாடு கவர்ந்த
மேல் கோவலூரில் வாழும் தன்
சிற்றப்பன் (பொன்மாந்தன்)
மீது படை கொண்டு வென்ற
போது குதிரைப் படைவீரர்தம்
குதிரைத் திரள் முழுமைக்கும் காவல்
பொறுப்பு கொண்ட துருமாவன்
என்பான் மகன் மாற்கடலன்
அப்போரில் வீழ்ந்துபட்டு வீர
சாவடைந்தான்.
நரசிம்ம வர்ம என்ற சமற்கிருதச் பெயர்
நரை சிங்கபருமன் என தமிழ்ப்
படுத்தப்பட்டு உள்ளது. விரைவுக்
கருத்தின் அடிப்படையில்
உருவானது துரு துரு என்னும் சொல்.
விரைவுஓட்டம் கருதி குதிரையைக்
குறிக்க துருமா என்ற சொல்
பண்டு தமிழில் வழங்கியது. ஆதலால்
துருமாவன் என்பதை இயற் பெயராகக்
கொள்ளாமல் குதிரைக்காரன் எனக்
கொள்வதே தகும். மாற்கடலன்
என்பதை மால் கடலன் என
பிரித்து அறியலாம் அல்லது 'அன்'
ஈறு அற்ற மாறன் கடலன் என்பதாகக்
கொள்ளலாம். மாங்குலம்
கல்வெட்டில் கடலன் என்ற பெயர்
குறிக்கப்படுவதால் இவன் பாண்டிய
வழியினன் அல்லது நாட்டினன் எனக்
கொள்ள இடமுண்டு.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் போந்தை எனும் ஊரில்
வட்டெழுத்துக்
கல்வெட்டு பொறிப்பு உள்ள நடுகல்
(நடு. பக். 182) உள்ளது. இதன் காலம்
7 ஆம் நூற்றாண்டு.
-- - - ரைசிங்க / விண்ண பருமற்கு யா /
ண்டு பத்தாவது மே / ன் மீ
கொன்றை நாடா / ளுஞ்ச - - - -
படை ஆரு / சேவகர் சென்னடைபு /
க்கு டனாளும் மு / தியப் போவனார் /
தொறுக் கொளிற் / பட்டார் கல்
மேன் - மேல்; மீ - மேல், மேற்கு;
சென்னடைபுக்கு - நேர்த்தியான
வெறித் தாக்குதலுக்கு; கொள்ளில் -
கவரும் போரில்; கல் - நடுகல்
நரசிம்ம வர்மனின் 10 ஆம்
ஆட்சி ஆண்டில் (640 CE) (பாங்கு)டன்
ஆளும் முதியப் போவன் என்னும்
சிற்றரசன், மேல்
கொன்றை நாட்டை ஆளுகின்ற
சக்கரவன் மீது போர்
தொடுத்து சக்கரவன்
நாட்டு ஆநிரையைக் கவரும் போரில்
சக்கரவன் படை வீரர்களுடைய
நேர்த்தியான வெறித்
தாக்குதலுக்கு ஈடுகொடுக்க
முடியாமல் போரில் வீர சாவடைந்தார்.
அதன் நினைவில் முதியப்
போவனுக்காக எடுப்பித்த நடுகல்.
மேல் எனும் பொருளுடைய மேன், மீ
எனும் சொற்கள்
அடுத்துடத்து எழுதப்பட்டு இருப்பது பிழையான
வழக்கு. மேன் என்ற
சொல்லை முதியப் போவன் மேல்
கொன்றை நாட்டின் மேல்
படை நடத்தினார் என்பதாகக்
கொள்ளலாம்.
முது அகவையை எய்தி சிறப்புடன்
ஆட்சி புரிதலாலே (பாங்)குடன் என்ற
சொல்லால் போவன்
சிறப்பிக்கப்படுகின்றார் எனக்
கொண்டேன். பாங்கு என்ற சொல்
கல்வெட்டில் இல்லை. மகேந்திர
வர்மனின் 39 ஆம்
ஆண்டு மல்லிகாபுரம் (சாத்தனூர்)
நடுகல்லில் சக்கரவன் என்ற பெயர்
உள்ளது. அவர் இன்னும்
பத்து ஆண்டுகள் நீடித்து நரசிம்ம
வர்மன் காலத்திலும் வாழ்ந்திருக்க
வாய்ப்பு உண்டு. கல்வெட்டில் ச - - -
படை ஆகிய
எழுத்துகளுக்கு இடையே சிதைந்த
எழுத்துகளை சக்கரவன் படை எனக்
கொள்ளவதே மிகப் பொருத்தமானது.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் சாத்தனூர் எனும் ஊரில்
அமைந்த நடுகல் கல்வெட்டு (செங்.
நடு.36/1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம்
நூற்றாண்டுக் காலத்தது.
கோவிசைய நரைசிங் / க
பருமற்கு பதினொன் /
றாவது மேற்கோவலூர் நாட்டு அள /
இற்பாடி கடிபகையார்
தொறு கொண்ட (ஞா) /
ன்று சென்று தொறு இடுவித்து பட்டாரு உணங்க /
யார் மகனார் கோத்தையார் சேவகன்
ஆரோகவண்க / ர் மக்கள் / கணிமாத /
னார் கல்
மக்கள் - அதிகாரப் பொறுப்பு கொண்ட
படைத் தலைவன் அல்லது மகன்;
இடுவித்து - விடுவித்து
முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனின்
பதினொன்றாவது ஆட்சி ஆண்டில்
(641 CE) மேல்கோவலூர் நாட்டுப்
பகுதியான
அளவிற்பாடிக்கு சிற்றரசனான
கடிபகை என்பான் ஆநிரைகளைக்
கவர்ந்து சென்ற போது அவ்
ஆநிரையை உணங்கன் என்ற வேளின்
மகன் கோத்தை என்பானின்
படைப்பிரிவுத் தலைவன்
ஆரோகவங்கன் என்பவனுடைய மகன்
அல்லது படைவீரன் கணிமாதன்
என்பான்
மீட்டு விடுவித்து அப்பூசலில் வீர
சாவு எய்தியதன் நினைவில் நடப்பட்ட
நடுகல்.
ஆர்+ஓக+வங்கன் = ஆரோகவங்கன்.
ஆர் என்பது ஒரு மரத்தின் பெயர்.
அதன் கீழ் ஓகம் (யோகம்) இயற்றும்
வங்கன் என்பது பெயருக்கான பொருள்.
ஒரு தவ வாழ்க்கைச் சான்றோருடைய
பெயரை இப்படைத்
தலைவனுக்கு அவன் பெற்றோர்
இட்டுள்ளனர்.கணி என்பது தொழில்
பெயராகலாம். மாதம்பாக்கம்,
மாதவரம் போன்ற ஊர்கள் மாதன்
என்பான் பெயரில் அமைந்தவை.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் போந்தை எனும் ஊரில்
அமைந்த நடுகல் கல்வெட்டு (செங்.
நடு.90/1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம்
நூற்றாண்டுக் காலத்தது.
கோவிசய நரசி /
ங்கபருமற்கு யாண்டு பன்னிரண் /
டாவது மீகொன்றை நாட்டு பாசாற்று பகைம /
தர் சேவகன்
தொறு இடுவித்து பட்டான் ப / ணய
நாத்தன்
பாசாறு - ஓர் ஊர்ப் பெயர்; இடுவித்து -
விடுவித்து
முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனின்
பன்னிரெண்டாவது (642 CE)
ஆட்சி ஆண்டில் மீகொன்றை நாட்டுப்
பகுதியான பாசாறு எனும் ஊரின்
வேள் பகைமதன் என்பானுடைய
படைவீரன் பணய நாத்தன் என்பவன்
பகைவர் கவர்ந்து சென்ற
ஆநிரைகளை மீட்டு விடுவித்தான்.
அப்போரில் அவன் வீர
சாவு எய்தினான்.
பனைய நாற்றன் என்பதே செப்பமான
வழக்கு
- - --
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் போந்தை எனும் ஊரில்
அமைந்த நடுகல் கல்வெட்டு (செங்.
நடு.91/1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம்
நூற்றாண்டுக் காலத்தது. மேல் உள்ள
நடுகல் அரசருடன்
தொடர்பு உடையது.
கோவிசய நரசிங்க /
பருமற்கு யாண்டு பன்னிரண்டாவது மீ /
கொன்றை நாட்டு பாசாறாள் பகைமதர்
சேவகர் / தொறு இடுவித்து பட்டார்
வண்ணக்க சாத்தனார்
முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனின்
பன்னிரண்டாவது ஆட்சி ஆண்டில்
(642 CE) அவனுக்கு அடங்கிய மேல்
கொன்றை நாட்டு பகுதியில் ஒன்றான
பாசாறு பகுதியின் வேள் பகைமதன்
என்பானின் இன்னொரு படைவீரன்
வண்ணக்க சாத்தன் என்பவன் பகைவர்
கவர்ந்து சென்ற
ஆநிரைகளை மீட்டு விடுவித்த
போரில் வீர சாவு எய்தினான்
என்பது நடுகல் செய்தி.
ஒரே போரில் இறந்த
இரு மறவர்க்கு தனித் தனியே நிறுவிய
நடுகற்களுக்கு இது ஒரு சான்று.
அக்கன் என்ற பெயர் அப்பன், அத்தன்,
அண்ணன், ஐயன், அத்தன்
என்பது போன்ற பொருளைக்
கொண்டது. அதனால்
மதிப்புரவு ஒட்டுப் பெயராக
பண்டு வழங்கி வண்ணக்கனில்
வழங்குகிறது. பிற நாகரிகங்களிலும்
அக்கன் வழங்குகிறது.
- - - -
சேலம் வட்டம் பள்ளத்தாண்டனூரில்
ஊருக்கு வெளியே தனிக்கல்லில்
வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல்
கல்வெட்டு (A.R.E.248/1969; நாடு.
பக். 490) உள்ளது. இதன் காலம் 7 ஆம்
நூறறாண்டு.
கோவிசைய ஈச்சுர பருமற் /
கு பன்னீராட்டைக் கெதிரா மா /
ண்டு கொங்க பருமரையர் / நொன்
கம்பூர் எரிந் / த ஞான்று பட்டான்
வா / ண பெருமிள வரையர / ப்ப
வாரத்தான் ம - / மக - ன்- கல்
ஆட்டை - ஆண்டு: எதிராம் ஆண்டு -
அடுத்து தொடரும் ஆண்டு; பருமன் -
வேந்தன் நிலையில் வைக்கத்தக்க
மன்னன்: எரிந்த ஞான்று -
கொள்ளையிட்ட
போது அல்லது அழித்த போது
ஈச்சுர வர்மனின் பதின்மூன்றாம்
ஆட்சி ஆண்டில் கொங்கரான கங்க
வேந்தன் நொன் கம்பூரைத்
தாக்கி அழித்த போது வாண பெரும்
இளவரையர் அப்ப வாரத்தான்
என்பானின் மருமகன்
பொறுப்பு அதிகாரியோ அல்லது அவன்
மகனோ இறந்தான். அவன் நினைவில்
நிறுவிய கல்.
கோவிசைய என்பது இவன் பல்லவன்
வழியினன் என்பதைக் குறிக்கின்றது.
இவன் ஏழாம் நூற்றாண்டில் நரசிம்ம
வர்மனுக்குப் பின்பு ஆண்டவனாதல்
வேண்டும். கங்கரே கொங்கர்
எனப்பட்டனர். வாணன் அப்ப
வாரத்தான் என்பதை அடுத்து வரும்
சொல் சிதைவு பட்டு உள்ளது.
அது மருமகன்
என்பதாகவோ அல்லது மகன்
என்பதாகவே இருக்கலாம்.
இதாவது வாணனிடம் மருமகன்
பட்டம் பெற்றவன்
அல்லது அவனுடைய மகன்
இறந்தான் என் ஊகிக்கலாம்.
ஒரு எத்தியோய மன்னன் பெயர்
Aksumay Warada Tsahay 782 - 765
BCE > அக்சுமய் வாரத்த (வார் + அத்த
(ன்) சாக்கை; மற்றொரு எதியோபிய
மன்னன் பெயர் Psmenit
Waradanegash 21 457 > பசுமன் இத்
(தன்) வாரத்த நெக(ன்). பிற
மேலை நாகரிகங்களிலும் வாரத்த
என்ற பெயர்
பதிவாகி உள்ளது விந்தையாக
இன்றும் அது வழங்குகிறது. Dr.
Mohamed ElBaradei > எல் பாரத்தெய்
> எல் வாரத்தை was Director General
of the International Atomic Energy
Agency (IAEA) from December 1997
until November 2009. ஆந்திரத்தின் ஓர்
ஊர் வாரங்கல்.
- - - -

No comments:

Post a Comment