Total Pageviews

Friday 27 April 2012

கல்-4-1

களப்பிரர் படையெடுப்பால்
தமிழகத்தில் தமிழ மூவேந்தர்
ஆட்சி குலைந்து சங்க காலம்
முடிவுற்ற பின்பு எல்லாத்
துறைகளிலும் கோலோச்சிய
தமிழ்என்ற நிலை மாறி தமிழ் அரசின்
ஆட்சி மொழி, மத
வழிபாட்டு மொழி என்று இல்லாமல்
போகும் அவலநிலை தோன்றியது.
களப்பிரரும், பல்லவரும்
தமிழருக்கு அயலான
பிராகிருதத்தை அரசவை மொழி ஆக்கினர்.
தமது அரசாணைகளையும், நிலக்
கொடை ஆவணங்களையும்
பிராகிருதத்திலேயே வெளியிட்டு மக்கள்
மொழியாம் தமிழைப் புறக்கணித்தனர்.
பல்லவர்
பின்பு சமற்கிருதத்தை ஆதரித்தனர்.
ஆயினும் பல்லவருக்கு அடங்கிய
சிற்றரசர்களும் வேளிரும் எளியோரும்
தமிழைப் போற்றிப் பாதுகாத்தனர்.
இதற்கு சான்றாக அமைந்தவை தாம்
போரிலும், பூசலிலும்
பங்கெடுத்து வீர சாவு எய்திய
மறவர்களின் நினைவாக
எடுப்பிக்கப்பட்ட நடுகல்
கல்வெட்டுகள்.
மதப்பித்து கொண்டு பல்லவ வேந்தர்
சமற்கிருதப் பெயர்களை ஏற்றிருந்த
வேளையில் அவருக்குக்
கட்டுப்பட்டு அடங்கிய சிற்றரசர்கள்,
வேள்கள், படைத்தலைவர், படைவீரர்
உள்ளிட்டு தமிழ எளியோர்
பெரும்பலரும் தமிழ் மீது மாறாப்
பற்று கொண்டு தமிழ்ப்
பெயர்களை ஏந்தி இருந்தனர்.
ஈண்டு நடுகற்களில் உள்ள தமிழ்ப்
பெயர்களைக் குறிப்பாகச் சுட்டவும்,
அவற்றுள் சில பெயர்கள் அயலக
நாகரிக மன்னர் பெயர்களுடன்
ஒத்திருப்பதைக் கோடிட்டுக்
காட்டுவதுமான
எனது பார்வையை வாசகருக்கு இந்
நடுகல் கல்வெட்டுச் செய்திகளுடன்
தருவதே இந்த நடுகல்
கல்வெட்டு விளக்கத்தின் தலையாய
நோக்கம்.
இனி, நடுகற்கள்
குறித்து சிறு அறிமுக உரைக்குப்
பின்பு நடுகல் விளக்கம் தொடங்கும்.
போரிட்டு மாண்ட
மறவர்களுக்கு ஈமக் கடன் ஈந்து அவர்
வீரத்தைப் பாராட்டி அவர் நினைவில்
கல் ந்ட்டு வழிபடுவது பண்டைய
தமிழ் மரபாக இருந்துள்ளது.
இவ்வாறு நடப்பட்ட கற்களை நடுகல்,
வீரகல் என்று தமிழில் அழைப்பர்.
தெலுங்கில் வீர சிலாலு எனவும்
ஆங்கிலத்தில் 'Hero Stones' எனவும்
கூறுவர். நடுகற்கள்
இந்தியா முழுமையிலும் காணக்
கிடைக்கின்றன. தமிழில்
தொல்காப்பியம், புறப்பொருள்
வெண்பா மாலை உள்ளிட்ட
இலக்கியங்களில் இவற்றுக்கான
குறிப்புகள் உள்ளன. வெட்சிப்
பூ சூடி கள்வர் ஆநிரைகளைக்
கவர்ந்து வருவர். இது நடுகற்களில்
தொறுக் (தொழு) கொள்ளல்
எனப்படுகின்றது. அதே நேரம்
கரந்தைப் பூ சூடி பகைநாட்டுக்
கள்வர் கவர்ந்து சென்ற
ஆநிரைகளை தாயக மறவர்
மீட்டு வருவர். இவ்வாறான தொறுப்
பூசலில் இருபக்கமும் மறவர்கள்
மாள்வர்.
போரில் வீழ்ந்துபட்ட
மறவர்களுக்கு நடப்பட்ட நடுகற்கள்
அவர்கள் வீழ்ந்த
ஊர்களிலேயே நடுப்படுவது உண்டு.
ஒரே போரில் இறந்த
வீரர்களுக்கு ஒரே இடத்தில்
தனித்தனி நடுகற்கள் நடப்படுவதும்
உண்டு. இதற்கு ஊரின்
ஒரு புறத்தைத்
தேர்ந்து ஈமக்காடு போல்
எண்ணி அங்கு மாண்ட
வீரர்களுக்கு சடங்குகள்
ஆற்றி நடுகல் எடுத்து உள்ளனர்
என்று கொள்வதற்கும் சான்றுகள்
உள்ளன. சில நடுகற்கள் ஏரிக்
கரைகளிலும், ஆற்றுக் கரைகளிலும்
காணப்படுகின்றன. இன்னும் சில
நடுகற்கள் ஊருக்கு வெளியே நடுக்
காடுகளில் காணப்படுகின்றன.
இது ஆகோள் எனும் தொறுக்
கவரப்பட்ட இடம் ஆகலாம்.
தமிழகத்தில் நடுகற்கள் உள்ள
இடங்கள் மக்களால் வேடியப்பன்
கோவில்
என்று அழைக்கப்படுகின்றன. சில
நடுகற்கள் நாய், எருது, கிளி,
யானை போன்ற விலங்குகளின்
நினைவாகவும்
எடுக்கப்பட்டு உள்ளன.
கல்வெட்டு ஆய்வாளர் திரு. ச.
கிருஷ்ணமூர்த்தி நடுகற்களை இருபத்து எட்டு வகையினதாகப்
பிரிக்கின்றார்.
சங்க காலத்தில் நடுகற்கள்
ஓவியங்களாகவே இருந்துள்ளன.
அதற்கு அடுத்து கோட்டு உருவ (Line
drawing figures) நடுகற்கள்
ஏற்பட்டன. பல்லவர் காலத்தில் தான்
புடைப்புச் சிற்பங்கள் கொண்ட
வட்டெழுத்து வாசகம் பொறித்த
நடுகற்கள் ஏற்பட்டன என்கிறார்
கல்வெட்டு ஆய்வாளர் திரு. ச.
கிருஷ்ணமூர்த்தி.
நடுகல்லில் வீரனின் புடைப்புச்
சிற்பம் அல்லது உருவம், அவன்
சமர்புரியும் நிலை, அவன் கையில்
ஏந்திய படைக் கலன்
வகை அதன்மேலோ,
கீழோ அல்லது பக்கவாட்டிலோ அவன்
காலத்தில் வழங்கிய எழுத்துகளில்
மன்னனின் ஆட்சி ஆண்டு,
அவனுக்குக் கட்டுப்பட்டு அடங்கிய
சிற்றரசர் பெயர், அவருடைய
படைத்தலைவர் பெயர், அவருடைய
மறவர் பெயர், வீர சாவடைந்த மறவன்
பெயர், அவனைப் பற்றிய சேதிகள்,
தொறுப் பூசல் என பல செய்திகள்
குறிக்கப்பட்டு இருக்கும்.
தமிழ் நாட்டில் தென்பெண்ணை,
சேயாறு, பாலாறு பாயும்
கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர்,
திருவண்ணாமலை (செங்கம்),
விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்
மட்டுமே 80% நடுகற்கள்
கண்டறியப்பட்டு உள்ளன. சேலம்,
கோவை, மதுரை,
திருநெல்வெலி ஆகிய இடங்களிலும்
நடுகற்கள்
கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.
ஆனால் சோழர் ஆண்ட தஞ்சை,
நாகை பகுதிகளில் அதிகமாக
நடுகற்கள் கிட்டவில்லை.
இந்நடுகற்கள் பல்லவர், வாணர்
(பாணர்), கங்கர், நுளம்பர், சோழர்,
போசளர், பாண்டியர், விசயநகர
மன்னர் ஆகிய அரசர் காலங்களைச்
சார்ந்தவை. இவை 4 ஆம்
நூற்றாண்டு முதல் 18 ஆம்
நூற்றாண்டு வரை தொடர்ந்து உள்ளன.
தமிழி எனும் தமிழ்ப் பிராமியிலும்
நடுகற்கள் 2006 ஆம் ஆண்டில்
தேனி மாவட்டம்
புலிமான்கோம்பையில் மூன்றும்,
தாதப்பட்டில் ஒன்றுமாக
நான்கு நடுகல் வகை சார்ந்த
கல்வெட்டுகள் கிட்டி உள்ளன.
வாணர் அல்லது பாணர் பிரிக்கப்படாத
வட ஆர்க்காடு, விழுப்புரம் ஒட்டிய
தென் ஆர்க்காடு, தருமபுரியின்
தகடூர் நாடு, கோலார் ஆகிய
பகுதியை ஆண்டுள்ளனர். சங்க காலம்
தொட்டே ஆட்சியில் உள்ள இந்த
மன்னரின் கீழ் சில குறுநில
மன்னர்கள் இருந்துள்ளனர்.
பல்லவர்க்கு அடங்கிய இவர்கள்
கங்கருடனும், நுளம்பருடனும்
போரிட்டு உள்ளனர்.
சங்க கால குறுநில மன்னரான கங்கர்
கொங்கணர் என்றும் குறிக்கப்படுவர்.
இவர்கள் காவிரியின்
தெற்கே குடகு நாட்டையும்
மைசூரின் சில பகுதிகளையும்
ஆண்டுள்ளனர். பல்லவர்க்கு அடங்கிய
இவர்கள் சில போது பல்லவருடனும்,
வாணருடன் அதிக அளவும் போர்
புரிந்து உள்ளனர்.
பல்லவர் கால நடுகற்கள்
பெரும்பாலும் வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளன.
இவை பிராமியில்
இருந்து வட்டெழுத்து வளர்ந்து வந்ததன்
கால அளவை அறிய உதவுகின்றன.
சில தமிழ் எழுத்திலும்
பொறிக்கப்பட்டு உள்ளன. எளியோர்
ஆக்கிய இந்நடுகற்களில் தமிழ்
பீடுநடை போடுகின்றது. பிற மொழிச்
சொல் கலப்பில்லாமல், சமற்கிருத
பெயர்களைத்
தமிழ்ப்படுத்தி எழுதி இருப்பது அக்கால
மக்களின்
தமிழ்ப்பற்றை பறைசாற்றுவதாய்
உள்ளது. ஆள் பெயர்கள் 'ஆர்', 'அர்'
என்று மதிப்புரவாகவும், உகரச்
சாரியை உடனும்
குறிக்கப்பட்டு உள்ளன. சில
நடுகற்களில் 'மகன்' மக்கள் என்றும்,
'மருமகன்' மருமக்கள் என்றும்
பன்மையில் சுட்டப்பட்டுள்ளன.
இச்செய்கை மக்கள் பொதுவாக
வீரர்களை மதித்துப்
போற்றியதற்கு அடையாளம் எனலாம்.
நடுகற்கள் கூறும்
வரலாறு எளியோரின் பண்டைய
குமுக வரலாறு மட்டும் அன்று,
இன்னும் சொல்லப் போனால்
அது தமிழின் வரலாறும் கூட
என்று கூறுவது மீகை ஆகாது.
இத்தகு எளியோர் வரலாற்றை, தமிழ்
வரலாற்றை தமிழகத் தொல்லியல்
துறை அறிஞர்கள் அரிதின்
முயன்று கண்டுபிடித்து,
படியெடுத்துப்
படித்து விளக்கி நூலாக
வெளியிட்டு உள்ளனர். அவர்தம்
முயற்சிகள் பாராட்டுக்கு உரியன,
உலகத் தமிழரின் நன்றியறிதலுக்கும்
உரியன.
இங்கு மேற்கோளாக எடுத்துக்
கொள்ளப்பட்ட நடுகல் வாசகங்கள்
தமிழகத் தொல்லியல் துறை 1972
ஆம் ஆண்டு வெளியிட்ட 'செங்கம்
நடுகற்கள்' எனும் நூலில் இருந்தும்,
மெய்யப்பன் பதிப்பகம் வெளியீட்டில்
கல்வெட்டு அறிஞர் திரு ச.
கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'நடுகற்கள்'
எனும் நூலில் இருந்தும்
பெறப்பட்டவை என்பதை நன்றியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.
செங். நடு. > நூல் செங்கம்
நடுகற்கள்,1972,
தமிழ்நாடு தொல்லியல்
துறை வெளியீடு
தரும. கல். > நூல்
தருமபுரி கல்வெட்டுகள்,1975,தமிழ்நாடு தொல்லியல்
துறை வெளியீடு
நடு. > நடுகற்கள்' எனும் நூல்,
2004,மெய்யப்பன் பதிப்பகம்வெளியீடு,
ஆசிரியர் கல்வெட்டறிஞர் திரு ச.
கிருஷ்ணமூர்த்தி
கல்வெட்டு விளக்கம்
தருமபுரி ஊத்தங்கரை வட்டம்
புலியானூர் என்ற ஊரில் வேடியப்பன்
கோவில் வளாகத்தில்
வட்டெழுத்து பொறிப்பு உள்ள
ஒரு நடுகல் கல்வெட்டு (தரும. கல்.
4/1972)உள்ளது . இதன் காலம் 6 ஆம்
நூற்றாண்டு.
கோவிசை செயவிரு / மர்கே இருபது /
(ஆவது) மீவெண் நாடு / சிரு பாழ்
ஆள் / வார் பாலாசிரிரு மக் / கள்
மாறன் க(பெ)லூரு தொறு கொண் / ட
ஞான்று பட்டா / ன் கல்
மீ - மேல், மேற்கு; ஆள்வார் -
ஆள்பவர்; மக்கள் - அரசருக்கு அடுத்த
அதிகாரப் பொறுப்பு நிலை கொண்ட
வீரர் அல்லது மகன்; தொறு -
ஆநிரையை குறிக்கும் தொழு என்ற
சொல்லின் திரிபு; ஞான்று - காலத்தில்
(at the time of),பொழுது ; பட்டான் -
செத்து வீழ்ந்தான், வீர சாவடைந்தான்
மகேந்திர வர்மனின் தந்தை சிம்ம
விஷ்ணுவிற்கு முன் (545 AD
இவனது இறுதி ஆட்சி ஆண்டு)
ஆண்ட சிம்ம வர்மனின்
இருபதாவது ஆட்சி ஆண்டில் மேல்
வேணாட்டு சிறுபாழ் எனும் பகுதியில்
ஆட்சி செய்த வேள் பாலாசிரியன்
என்பானுக்கு 'மகன்'
பொறுப்பு படைத்தலைவன்
அல்லது மகன் மாறன் என்பவன்
கப்பலூர் ஆநிரைகளைக் கவர்ந்த
போது அங்கத்து மறவர்களின் எதிர்த்
தாக்குதலில் வீர
சாவு அடைந்துள்ளான். அவன் நடுகல்
இது என்பதே செய்தி.
கல்வெட்டில் எழுத்துப் பிழைகள்
மலிந்து உள்ளன.
வர்மருக்கே என்பது விருமருக்கே என
பொறிக்கப்பட்டு உள்ளது.
வேணாடு வெண்நாடு என்று உள்ளது.
சிறு என்பது சிரு என
எழுதப்பட்டு உள்ளது. மாறன்
பாண்டிய நாட்டுப் பெயராக உள்ளது.
வால் அசிரியன்
என்பது இங்கு பாலாசிரியன் என
வழங்குகிறது. வால் > பால்
என்பது ஒளிரும்
வெண்மையை குறிக்கும். அசிரியன்,
ஆசிரியன், அசுரன் என்பன அசீரிய
நாட்டினன் என்பதை குறிக்கும். இவன்
முன்னோர் அந்நாட்டவருடன்
தொடர்பு கொண்டவர் ஆகலாம்.
அதனால் இவன் பெயர் ஆசிரியன் என
வழங்கியது போலும். அசூர்
பாணி பால் 668 -626 BC என்ற அசீரிய
மன்னன் பெயரை நோக்குக. பால்
என்ற பெயர் மேலை நாகரிகங்களில்
பல மன்னர் பெயர்களில் இடம்
பெறுகிறது. மகேந்திர வர்மனின் 14
ஆம் ஆண்டு மாக்கனூர் நடுகல்லும்,
பதினெட்டாம்
ஆண்டு தண்டம்பட்டு நடுகல்லும்
ஈண்டு கருத்தில் கொள்ளத் தக்கன.
ஒரு எதியோபிய மன்னன் பெயர் Amen
Asero 659 - 643 BCE > ஆமின் அசிர
(ன்) > ஆமன் அசுரன். பாலாசிரியன்
பெயரைச் சுட்டும் கல்வெட்டுகள்
சிம்மவிஷ்ணுவின் பத்தென்பதாம்
ஆட்சி ஆண்டு புலியனூர்
கல்வெட்டு ஒன்றிலும், மகேந்திரனின்
20 ஆம் ஆட்சி ஆண்டில் புலியனூரில்
அமைந்த கல்வெட்டு ஒன்றிலும் ஆக
மூன்று கல்வெட்டுகள் இவன் 60
ஆண்டுகள் வாழ்ந்ததைக்
குறிக்கின்றன.
- - - -
திருவண்ணாமலை மாவட்ட செங்கம்
வட்டம் பெருங்குளத்தூர் எனும் ஊரின்
வேடியப்பன் கோவிலில்
வட்டெழுத்தில் நடுகல்
கல்வெட்டு (நடு.பக். 152).
அமைந்து உள்ளது. இதன் காலம் 6
ஆம் நூற்றாண்டு.
கோவிசை சிங்க பருமற்கு அ -- /
துவது கங்கதிரை மகன் / விண்ணன்
ஊர் எறிபட்ட / கெலவர் பொன்னக்க
கடுரூ / பெருங் குளத்தூரு ப / ட்டார்
கல்
எறிபட்ட - அழிபட்ட
அல்லது வெல்லப்பட்ட எனக்
கொள்ளலாம்; கெலவர் - அச்சத்தால்,
மனக்கலவரத்தால்; கல் - நடுகல்.
சிம்ம வர்மனின் ஐ
(ந்தா)வது ஆட்சி ஆண்டில் கங்க
அதியரசனின் 'மகன்' என்ற அதிகாரப்
பொறுப்பு பெற்ற விண்ணன் என்பவன்
பெருங்குளத்தூரைத் அழித்த
போது வென்ற
போது மனக்கலவரத்தால் அவ்வூர்த்
தலைவன் பொன்னக்க
கடுரூ சாவு எய்தியதன் நினைவில்
எடுத்த நடுகல்.
ஆண்டுக் குறிப்பில் சில எழுத்துகள்
அழிந்து உள்ளன.
ஐந்து என்பது உய்த்துணர்வு தான்.
கங்க அதியரசன் என்பவன்
பல்லவருக்கு அடங்கிய கங்க மன்னன்
ஆவான். பொன் நக்க கடு ஊர்(அன்)
என்பதே புணர்ந்து எழுதப்பட்டு உள்ளது.
ஊரன் என்று ஆள் பெயர் உண்டு. இக்
கல்வெட்டில் அன்
ஈறு சுட்டப்படவில்லை. ஒரு கொரிய
மன்னன் பெயர் Godumak 108-60 BCE
> கடு மாக்(அன்). கெலவர்
என்பதற்கு மிகத் துலக்கமான பொருள்
காண முடியவில்லை.
கெலவு என்பதற்கு அச்சம் என்ற
பொருள் உள்ளது.
- - - -
தருமபுரி மாவட்ட
ஊத்தங்கரை வட்டம்
கோரையாறு எனும் ஊரில்
வட்டெழுத்தில் பொறிப்பு உள்ள
ஒரு நடுகல் கல்வெட்டு (S. Hariharan
- Seminar on Herostones,Pg. 69)
உள்ளது. இதன் காலம் 6 ஆம்
நூற்றாண்டு.
கோவிசைய சிங்கவி / ண்ண
பருமற்கு பதினான்காவது / பெரும்
பாண்ணரைசர் மக்கள் சாத் / த
பரவனார் சேவகன் / வன்ன ஊர் பா /
வன் பூசலுட்ப / ட்ட கல்
மக்கள் - அதிகார பொறுப்பு உள்ள
படைத் தலைவன், சிற்றரசன்
அல்லது மகன்; சேவகன் - மறவன்,
வீரன்; பூசல் - சிறு போர்
சிம்ம வர்மனின் மகன்
சிம்மவிஷ்ணுவின்
பதினான்காவது ஆட்சி ஆண்டில் (560
CE) அவனுக்கு அடங்கிய வாண
மன்னன் பெரும் பாண அரசன்
என்பவனுக்கு 'மகன்' எனும் அதிகாரப்
பொறுப்பில் இருந்த சிற்றரசன் சாத்த
பராவன் என்பவனின்
படைப்பிரிவு தலைவன் வன்னவூர்
சார்ந்த பாவன் என்பவன் பூசலில் வீர
சாவு அடைந்ததால் அவன் நினைவில்
எடுப்பித்த நடுகல்.
சிம்மவிஷ்ணு என்ற சமற்கிருதப்
பெயர் சிங்க விண்ணன் என தமிழ்ப்
படுத்தப்பட்டு உள்ளது. வர்மன்
என்பது வருமன் என மக்கள் வழக்கில்
சுட்டப்பட்டு உள்ளது இக்கல்வெட்டின்
ஒரு சிறப்பு ஆகும். பரவன் என்ற
சொல் பராவன் என
எழுதப்பட்டு உள்ளது. பரவன்
என்பது மீனவனைக் குறிக்கும்.
ஒரு எதியோபிய மன்னன் பெயர்
Senefrou 4014 - 4034 BCE >
சேனி பராவு > சேனன் பரவன்.
இன்னொரு எதியோபிய மன்னன்
பெயர் Barawas 60 - 50 BCE > பரவன்.
- - - -
தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரை வட்டம் புளியனூர்
எனும் ஊரில் அமைந்த நடுகல்
கல்வெட்டு (தரும. கல். 2/1972)
வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இதன்
காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய சிங்கவிண்ண பருமற் /
குப் பத்தொன்பதாவது மேல்
வேண்ணா / ட்டுச் சிறுப்பாழாளும்
பாலாயிரியரு மக்கள் /
சிறுப்படுவாணாரு கருங்காலிப்பாடித் /
தொறுக் கொளப் பூசல் சென்று புய /
நாட்டுப் பில(யாசதங்)கள் /
எறிந்து பட்டான்
சிம்மவிஷ்ணுவின் பத்தொன்பதாம்
ஆட்சி ஆண்டில் (565 CE) அவன்
ஆட்சிக்கு உட்பட்ட மேல்
வேணாட்டுப் பகுதியின் சிறுப்பாழ்
எனும் ஊரை ஆளுகின்ற வேள்
பாலாசிரியன் என்பானிடத்தில் 'மகன்'
எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற
படைத்தலைவன் அல்லது மகன்
சிறுப்படுவாண் என்பவன்
கருங்காலிப்பாடியின் ஆநிரைகளைக்
கவர்ந்து வரப் பூசல் மேற்கொள்ளச்
சென்ற போது புயநாட்டைச் சேர்ந்த
பிலயா சதங்கன் அவனை எதிர்த்துத்
வென்றிடவே அப்பூசலில் வீர
சாவு எய்தினான்.
பாலாசிரியன் என்னும் பெயர்
பாலாயிரியன் என
சகரத்திற்கு பகரமாக யகரம்
எழுதப்பட்டு உள்ளது. சிம்மவர்மனின்
புலியானூர் 20 ஆம் ஆண்டுக்
கல்வெட்டு பாலாசியர் எனபாரும்
இவரே. மகேந்திரனின் 20 ஆம்
ஆண்டுக்கால பாலாசிரிகனும் இவரே.
சத்தன் + அங்கன் என்ற
இரு வேறு பெயர்கள்
புணர்ந்து சதங்கன்
என்று வழங்குகின்றது.
சிறுப்படுவாண் என்பதில் உள்ள
சிறு என்பது சங்க காலத்தே இள என
வழங்கியது. படு என்றால் பெரிய எனப்
பொருள். வாண் என்பது இவன் வாண
அரசகுடியினன்
என்பதற்கு சான்றாகும். பெரும் பாண்
அரைசர் என்ற பெயரின்
பொருளை ஈண்டு கருதுக.
துருக்கியின் ஒரு மித்தானி அரசன்
பெயர் Suttarna I 1490 - 1470 BCE >
சத்தரண(ன்) > சத்தன் அரணன். Gija
வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர்
Sudo 634-615 BC > சத்த(ன்)
- - - -

No comments:

Post a Comment