Total Pageviews

Monday 23 April 2012

போகர்

போகர் பதினெண் சித்தர்களுள்
ஒருவர் ஆவார். இவர் பிறப்பால் சீனர்
என்று சிலரும் தமிழ்நாட்டில்
பிறந்து பின்னர் சீனா சென்றவர்
என்று சிலரும் கூறுகின்றனர். இவர்
நவசித்தர்களுள் ஒருவரான
காளங்கி நாதரின் சீடர் ஆவார்.
போகரின் சீடர் புலிப்பாணி ஆவார்.
சீனாவில் போகர் போ-யாங்
என்று அறியப்படுகிறார். போகர்
ஏழாயிரம், 700 யோகம், போகர்
நிகண்டு மற்றும் 17000 சூத்திரம்
ஆகிய நூல்கள் போகரால்
இயற்றப்பட்டவை என்று கருதப்படுகின்றன.
பழநி முருகன் சிலை
பழநி முருகனின் மூலத்திருவுருவச்
சிலை போகரால்
செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது.
இச் சிலை நவபாடாணங்களைக்
கொண்டு செய்யப்பட்ட நவபாடாணச்
சிலை என்று கருதப்படுகிறது.
இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது.
எனவே இச்சிலைக்கு அபிடேகம்
நடைபெறுவதில்லை.
போகர் நூல்கள்
போகர் நூல்கள் பல
உள்ளன.அவற்றுள் சில
நூல்களே அறியப்பட்டுள்ளன.
போகர் 12000
சப்த காண்டம் 7000
நிகண்டு 1700
வைத்தியம் 1000
சரக்குவைப்பு 800
செனன சாகரம் 550
கற்பம் 360
உபதேசம் 150
இரணவாகமம் 100
ஞானசாராம்சம் 100
கற்ப சூத்திரம் 54
வைத்திய சூத்திரம் 77
முப்பு சூத்திரம் 51
ஞான சூத்திரம் 37
அட்டாங்க யோகம் 24
பூசா விதி 20
போகர் 7000

No comments:

Post a Comment