Total Pageviews

Sunday 22 April 2012

சோழன்-4

முதலாம் இராசேந்திர சோழன்
(கி.பி.1012-1044)
இராசராசன் காலத்தில்
இளவரசனாகப் பட்டம்
சூட்டப்பெற்றவன் இராசேந்திர
சோழன் . இராசராசனின்
மறைவுக்குப்பின், 1012-இல்
அவனது மகனான இராசேந்திரன்
சோழநாட்டின் மன்னனானான்.
ஏற்கனவே தந்தையோடு, போர்
நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும்
ஈடுபட்டு அனுபவமும் திறனும்
பெற்றிருந்த இராசேந்திரன்,
ஆளுமை கொண்டவனாக
விளங்கினான். இவனது ஆட்சியில்
தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர ,
கேரள மாநிலங்களையும் மைசூர்
நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ
நாட்டையும் உள்ளடக்கியதாக
இருந்த சோழநாடு மேலும்
விரிவடைந்தது.
சேர நாட்டின்
மீது படையெடுத்து அதன் அரசனான
பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு,
அந்நாட்டை சோழரின்
நேரடி ஆட்சியின் கீழ்
கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும்
படையெடுத்து முழு நாட்டையும்
கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய
பாண்டியன் இலங்கையில்
மறைத்து வைத்திருந்த
பாண்டி நாட்டு மணிமுடியையும்,
செங்கோலையும் மீட்டு வந்தான்.
வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள்,
கலிங்கர்களுடனும், ஒட்ட
விசயர்களுடனும்
சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர்.
இதனால் சோழர் படைகள்
வடநாடு நோக்கிச் சென்றன.
சாளுக்கியர் , கலிங்கர், ஒட்ட விசயர்
ஆகியவர்களையும், பல
சிற்றரசர்களையும் வென்று, வங்காள
நாட்டையும்
சோழர்படை தோற்கடித்தது. சோழர்
கைப்பற்றியிருந்த இடங்களில்
அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும்,
வடக்கு எல்லையில் சாளுக்கியரின்
தொல்லைகள்
தொடர்ந்து வந்ததாலும்,
இராசேந்திரனின் ஆட்சிக்காலம்
முழுவதும் அமைதியற்ற
காலப்பகுதியாகவே கழிந்தது.
வடநாட்டை வென்று பெற்ற கஙகை
நீரைத் தமிழகத்திற்குக்
கொண்டு வந்ததன் நினைவாக
கங்கை கொண்ட சோழீச்சுரம்
என்னும் நகரை ஏற்படுத்தினான்.
இங்கு பெருவுடையார்க் கோவிலைப்
போலவே கட்டப்பட்ட கோவில்
சிற்பக்கலையின்
பெருமிதத்தை விளக்குகிறது.
தனது வெற்றியின் நினைவாக
இங்கு 'சோழ கங்கை' என்ற பெரிய
ஏரியினை வெட்டச் செய்தான்
என்று செப்பேடுகள் கூறுகின்றன.
இவன் காலத்தில்
பாதுகாப்பு நோக்கங்களுக்காக
நாட்டின் தலை நகரம்,
தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட
சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது.
தான் போரில் வென்ற
நாடுகளுக்கு அரச குமாரர்களைத்
தலைவர்களாக்கி ஆட்சியைத்
திறம்படப் புரியும்
முறையை முதலில் பின்பற்றியவன்
இரசேந்திரனே ஆவான்.
பின்வந்த சோழ மன்னர்கள்
முதலாம் இராசாதிராசன்
இராசேந்திர சோழனுக்குப் பின் 1044
ஆம் ஆண்டில் அவனது மகன்
முதலாம் இராசாதிராசன்
அரசனானான். இவன் காலத்தில்
சோழப் பேரரசின் தென் பகுதிகளான
ஈழம் , பாண்டிநாடு, சேரநாடு ஆகிய
இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம்
அடையத் தொடங்கின எனினும்,
அவற்றை அவன் அடக்கினான்.
சாளுக்கியர்களில்
தொல்லைகளை அடக்குவதற்காக
அங்கேயும் சென்று போர் புரிந்தான்.
சோழர்கள் இறுதி வெற்றியைப்
பெற்றனராயினும் கொப்பம்
என்னுமிடத்தில் நடைபெற்ற
சண்டையொன்றில் இராசாதிராசன்
இறந்துபோனான்.
இரண்டாம் இராசேந்திரன்
இவனைத் தொடர்ந்து அவன்
தம்பி 'இராசேந்திரன்' என்னும்
அரியணைப் பெயருடன்
முடி சூட்டிக்கொண்டான். இவன்
இரண்டாம் இராசேந்திரன்
எனப்படுகின்றான். கொப்பத்துப்
போரில் தன் அண்ணன் மாண்டதும்
படை நடத்திப்
பகைவர்களை வென்றான்.
இவனது மகள்
மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன்
என்றழைக்கப்பட்ட
இரசேந்திரனுக்கு மணம்
முடித்து வைக்கப்பட்டாள். இவள்
தஞ்சை பெரிய கோவிலில்
இராசராசேச்சுவர நாடகம் நடத்த
ஆண்டுக்கு 120 கலம் செல்
நிவந்தமாக அளித்ததாகக்
கல்வெட்டு கூறுகிறது.
பிற மன்னர்கள்
இவனுக்குப் பின்னர் இவன்
தம்பி வீரராசேந்திரனும், பின்னர்
அவன் மகனான அதிராசேந்திரனும்
வரிசையாகப் பதவிக்கு வந்தனர்.
அதிராசேந்திரன் அரசனான
சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச்
சொல்லப்படுகின்றது.
சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன்
இறந்து போனதால்,
தந்தை வழிசாளுக்கிய - தாய்வழியில்
சோழர் மரபில் வந்த இளவரசன்
ஒருவன் குலோத்துங்கன் என்னும்
பெயருடன் சோழப் பேரரசின்
மன்னனானான். இது, பிற்காலச்
சோழர் மரபுவழியை நிறுவிய
விசயாலய சோழனின்
நேரடி வாரிசுகளின்
ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சாளுக்கிய சோழர்கள்
முதலாம் குலோத்துங்கன்
கி.பி.1070-1120
இராசராசசோழனின் மகளான
குந்தவையின் மகனுக்கும் முதலாம்
இராசேந்திரனின் மகள்
அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன்
குலோத்துங்கன். மேலைச்
சாளுக்கிய ஆதிக்க
விரிவை எதிர்த்து வீரராசேந்திரன்
போர் புரிந்த போதும் கடாரத்துக்குச்
சோழப்படை சென்ற போதும்
குலோத்துங்கன் அதில்
பங்கு கொண்டிருந்தான். குழப்பம்
மிகுந்து அரசனில்லாது சோழ
நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள்
சோழ நாடு சிதையாமல் காத்தவன்
முதலாம் குலோத்துங்க சோழன்.
முதலாம் குலோத்துங்கனுடைய
காலமும் பெரும் கிளர்ச்சிகளைக்
கொண்ட
காலப்பகுதியாகவே அமைந்தது.
பாண்டிய நாட்டிலும், சேர
நாட்டிலும் படை நடத்திக்
கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது.
வட பகுதிகளிலும் போர்
ஓய்ந்தபாடில்லை. எனினும்
ஈழநாட்டில், விஜயபாகு என்பவன்
சோழருடன்
போரிட்டு ஈழத்திலிருந்து சோழர்
ஆட்சியை அகற்றினான். ஈழத்தில்,
ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய
சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது.
சோழநாட்டின் பிற பகுதிகளில்
நிலவிய நிலைமைகளைக்
கருத்திற்கொண்டு, குலோத்துங்கன்
ஈழநாட்டை மீட்கப்
படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது.
குலோத்துங்கன் இயன்ற
வரை பயனற்ற போரை ஒதுக்கினான்.
இராசராச சோழன் கைப்பற்றிய
நாடுகள் அந்நாட்டு மன்னர்களின்
முயற்சியாலும் குலோத்துங்கனின்
அமைதிக் கொள்கையாலும் சோழர்
கையை விட்டு நழுவின.
குலோத்துங்கனின் இறுதிக்
காலத்தில் தெற்கிலிருந்தும்
வடக்கிலிருந்தும் பிரச்சினைகள்
உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம்
காணும் நிலை ஏற்பட்டது.
வடக்கிலிருந்து வந்த
படையெடுப்புகள் சோழநாட்டுக்குப்
பெரும் சேதத்தை விளைவித்தன.
வெளிநாட்டுத் தொடர்புகள்
முதலாம் இராசராசன்மற்றும்
முதலாம் இராசேந்திரன்
காலங்களிலேயே சீன நாட்டுடன்
சோழ நாட்டிற்குத்
தொடர்பு இருந்து வந்தது.
குலோத்துங்கனும் தன் ஆட்சிக்
காலத்தில் வாணிகத்
தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 72
பேர்களடங்கிய ஒரு தூதுக்
குழுவை சீனத்திற்கு அனுப்பிவைத்தான்[4]
மேலும் கடாரம், சுமத்திரா போன்ற
தீவுகளுடனும் வாணிகத்
தொடர்பு கொண்டிருந்தான்.
ஆட்சிப் பணிகள்
குலோத்துங்க சோழனின் ஆட்சியின்
போது வரியை நீக்கினான். எனவே
சுங்கம் தவிர்த்த சோழன் என
அழக்கப்பட்டான். [5] .இராசராசனின்
ஆட்சிக்குப்பின் இவனது ஆட்சிக்
காலத்தில் சோழ
நாடு முழுவதையும் அளக்கும்
பணி தொடங்கி இரு ஆண்டுகளில்
முடிவுற்றது. நிலமளந்த செயல்
இவனது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த
மற்றொரு சிறப்பான செயலாகும்.
இவன் சைவ சமயத்தைச்
சேர்ந்தவனாக் இருந்த போதும்
வைணவ, சமண, பௌத்த
சமயங்களையும் ஆதரித்ததாகக்
கல்வெட்டு கூறுகின்றது.
குலோத்துங்கனது அவைக்களப்
புலவராகத் திகழ்ந்தவர்
செயங்கொண்டார் . இவர்
குலோத்துங்கனின் கலிங்க
வெற்றியைப் புகழ்ந்து கலிங்கத்துப்
பரணி இயற்றினார்.
சோழப் பேரரசின் வீழ்ச்சி
முதலாம் குலோத்துங்கனுக்குப்
பின்னர் அவனது மகனான விக்கிரம
சோழன், இரண்டாம் குலோத்துங்கன்,
இரண்டாம் இராசராசன், இரண்டாம்
இராசாதிராசன், மூன்றாம்
குலோத்துங்கன் ஆகியோர்
வரிசையாகச் சோழ
நாட்டை ஆண்டனர். இக்காலத்தில்
சோழர்
தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர்.
நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின்
செல்வாக்கு உயர்ந்தது. குறுநில
மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம்
பார்த்திருந்தனர். தெற்கே
பாண்டியர்கள் வலிமை பெறலாயினர்.
உள்நாட்டுக் குழப்பங்களும்
விளைந்தன.
1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம்
இராசராசன் காலத்தில் மாறவர்மன்
சுந்தர பாண்டியன் தலைமையில்
பாண்டியர்கள் கங்கைகொண்ட
சோழபுரம்
மீது படையெடுத்து அதனைக்
கைப்பற்றிக் கொண்டனர். எனினும்,
சோழர்களுக்கு ஆதரவாகப் போசள
மன்னனான இரண்டாம் நரசிம்மன்
சோழநாட்டில்
புகுந்து பாண்டியர்களைத்
தோற்கடித்து மன்னனைக்
காப்பாற்றினான். மூன்றாம்
இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246
இல் மூன்றாம் இராசேந்திரன்
மன்னனானான். இவன் காலத்தில்
வலிமை பெற்ற பாண்டியர்கள்
சோழர்களை வென்று அவர்களைச்
சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர்.
மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச்
சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.

No comments:

Post a Comment