Total Pageviews

Friday 27 April 2012

கல்4-4

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் வேப்பூர் செக்கடி பெரிய
வேடியப்பன் கோவிலில்
வட்டெழுத்து பொறிப்புள்ள நடுகல்
கல்வெட்டு (நடு.பக். 184) உள்ளது.
இதன் காலம் 8 ஆம் நாற்றாண்டு.
கோவிசைய நரசிங்க
பருமற்கு யாண்டு பத்தாவது மீகொன்றை நாட்டுப்
பாலைக்கோட்டுத் தொறுக்கொண்ட
ஞான்று தொறு இடுவித்து தாசமாரியார்
பட்டார்.
கொண்ட - கவர்ந்த; இடுவித்து -
மீட்டு, விடுவித்து
இரண்டாம் நரசிம்ம வர்மப்
பல்லவனின் பத்தாம் ஆட்சி ஆண்டில்
(710 CE) மேல்
கொன்றை நாட்டு பாலைக்
கோடு பகுதியின் ஆநிரைகளைக்
பகைவர் கவரும் போது.
இங்கு பகைவர் யார் என்ற
குறிப்பு இல்லை. பாலைக் கோட்டின்
ஆநிரைகளை மீட்டு விடுவித்து அப்பூசலில்
தாசமாரி என்பவன் வீர சாவடைந்தான்
என உள்ளது. இவனுடைய
பதவியோ அல்லது யாருக்கு சேவகன்
என்ற குறிப்பபோ ஏதும் கல்வெட்டில்
இல்லை.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் தாழையூத்து வேடியப்பன்
கோவிலில்
வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல்
கல்வெட்டு (செங். நடு.
73/1971)உள்ளது. இதன் காலம் 8 ஆம்
நூற்றாண்டு.
கோவிசைய நரசிங்க பரு /
மற்கு யாண்டு பத்தாவது மீ /
வேண்ணாட்டுக் கோவலூ ஊரரைச /
ர் பெரும்பாணதியரைசர் சேவக / ன்
சிற்றுப்பாடி பனையனார் மறித் /
தொறுக் கொண்ட ஞான்று / பட் / டார்.
மறி- ஆடு; சேவகன் -
படைத்தலைவன் அல்லது வீரன்
இரண்டாம் நரசிம்ம வர்மனின் பத்தாம்
ஆட்சி ஆண்டில் (710CE) மேல்
வேணாட்டு கோவலூரின் அரசரான
பெரும்பாண அதியரசனின்
படைத்தலைவன் சிற்றுப் பாடியைச்
சேர்ந்த பனையன் என்பான்
ஆட்டு நிரைகளைக் கவர்ந்த
போது மீட்புப் படையினரின் எதிர்த்
தாக்குதலில் வீர சாவடைந்தான்.
பனையன் எந்த
நாட்டு ஆட்டுநிரைகளைக் கவர்ந்தார்
என்ற குறிப்பு இல்லை.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம்
சின்னய்யன்பேட்டை சாவுமேட்டு வேடியப்பன்
கோவிலில் ஒரு நடுகல்
கல்வெட்டு (செங். நடு. 57/ 1971)
உள்ளது. இதன் காலம் 9 ஆம்
நூற்றாண்டு.
கோவிசைய கம்பபர்மற்கு /
யாண்டு ஆறாவது கொங்க / த்
தெழுமாத்தூர் இருந்து / வாழுஞ்
சாகாடச் சிற்றன் /
மீகொன்றை நாட்டு / ப் புளியூர் எரு /
மை கொண்ர ஞா /
ன்று பூசல்லோடி / மேல்
வேணாட்டு மணி / க்கலவடவூரில்
முட்டி எ / ருமைத்
தொறு மீட்டு மட்டா / ன் சாகாடச்
சிற்றன்
இருந்து - தங்கி: பூசல்ஓடி - மோதல்
ஏற்பட்டு; முட்டி - எதிர்த்துப்
போரிட்டு; மட்டான் - பட்டான்
கம்ப வர்மப் பல்லவனுடைய 6 ஆம்
ஆட்சி ஆண்டில் (875 CE) கொங்க
நாட்டின் எழுமாத்தூரில்
தங்கி வாழும்சாகாடச் சிற்றன்
என்பவன் மேல் கொன்றை நாட்டில்
அமைந்த புளியூர் என்னும் ஊரின்
கண் உள்ள எருமை நிரைகளைப்
பகைவர் கவர்ந்து சென்ற
போது ஏற்பட்ட பூசலின் காரணமாக
அவர்களைப் பின்
தொடர்ந்து வழி இடையே மேல்
வேணாட்டின் மணிக்கடவூரில்
அவர்களை மறித்து எதிர்த்துப் போர்
செய்து எருமை நிரைகளை மீட்டான்.
அப்போது சாகாடச் சிற்றன் அப்போரில்
வீர சாவடைந்தான் என உள்ளது.
சாகாடச்சிற்றன் எந்த அரசனுக்குக் கீழ்
எந்த பொறுப்பில் இருந்தான் என்ற
குறிப்பு ஏதும் கல்வெட்டில் இல்லை.
பட்டான் என்பது தவறாக மட்டான்
எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஒரு எதியோபிய மன்னன் பெயர் Akate
(Za Sagado) IV 1276 -1256 BCE >
அக்கத்தி (சா சாகாடன்)
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் தா. வேளுர்
சாவுமேட்டு வேடியப்பன் கோவிலில்
ஒரு நடுகல் கல்வெட்டு (நடு. பக்.199)
உள்ளது. இதன் காலம் 9 ஆம்
நூற்றாண்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய கம்ப
பருமற்கி யாண் / டெட்டாவது வயிர
மேக வாணகோவரையரா / ளத்
தகடூர் நாட்டுப் பாகாற்றூர்க் கதவ /
மாதேவன் மகன் காளமன் மீய்கொன் /
றைநாட்டு மேல் வேளூர்
இருந்து வாழாநின்ற காலத் /
து முருங்கைச் சேர்ந்ததன்ற
மையனார் / மகளைக் கள்ளர் /
பிடிகரந்துரந / று கொண்டய/ ந்
அவளை விடு / வித்துக் தா /
ன்பட்டான் கா / ளமன்.
மேல் - மேற்கு; பிடி - பிடித்து; கரந்துர
- மறைத்துவைத்து அச்சுறுத்த;
நறு கொண்டையன் - அகல்
பூ (coromandel ailango) சூடிய
கொண்டையன் அல்லது மணம்வீசும்
மலர்ச்சூடிய கொண்டையன்
கம்ப வர்மப் பல்லவனுடைய எட்டாம்
ஆட்சி ஆண்டில் (877 CE)
அவனுக்கு அடங்கிய வாண
மன்னனான வயிரமேக
வாணகோவரையன் தகடூர்
நாட்டை ஆண்டு வரும் காலத்தில்
இவனுடைய ஆட்சிப் பகுதியான மேல்
கொன்றை நாட்டு உட்பிரிவான மேல்
வேளூரில் தகடூர்
நாட்டு பாகற்றூரைச் சேர்ந்த
கதவமாதேவன் என்பவன் மகன்
காளமன் வாழ்ந்து இருந்தான். இவன்
தமையன் முருங்கு எனும் ஊரைச்
சேர்ந்தவன். இவனுடைய மகளைக்
கள்ளர் பிடித்து மறைத்து அச்சுறுத்த
நறுமணம் கமழும் கொண்டயன்
காளமன்
போரிட்டு அவளை விடுவித்தான்.
அப்போரில் காளமன் வீர
சாவு எய்தினான்.
காளமன் எந்த அரசன் கீழ்
பொறுப்பு ஏற்று இருந்தான் என்ற
செய்தி குறிப்பிடப்
படவில்லை ஆதலால் கள்ளர் பணம்
பறிக்க ஆள்கடத்தலில் ஈடுபட்டனர்
எனக் கொள்ளலாம். இது அரசியல்
சாராத சாவு என்றாலும் வீரத்தின்
பாற்படுவதே. காளன் என்ற பெயர்
'மன்' ஈறு பெற்று உள்ளது. வாண
அரசன் வயிரமேகன் பெயரில் உள்ள
வயிர என்பதும் மேக என்பதும் தூய
தமிழ்சொற்கள் ஆகும். வயிர
என்பது ஒளிரும் கீற்று எனப்
பொருள்படும். கார் மேகன்,
காளமேகன், நீல மேகன் ஆகிய
பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன.
தென் அமெரிக்கப் பெருவின்
ஒரு இன்கா மன்னன் பெயர் Viracocha
1410-1438AD > வயிர காக்க(ன்); தென்
கிழக்கு மெக்சிகோவின் ஒரு மாயப்பன்
அரசன் பெயர் Mehen Cocom
1238-1242 > மேகன் கக்கம். தய்ரி நகர்
ஆண்ட ஒரு போனீசிய மன்னன் பெயர்
Baal Termeg 1220 BC > பால் திர மேக்
> வால் திர(ய) மேக(ன்). கதவன் என்ற
தனிப் பெயர் மாதேவன் என்ற
பெயருடன் இணைந்து வந்தது.
- - - -
வேலூர் மாவட்டம் மேல்
சாணாங்குப்பம் என்ற ஊரில் 9 ஆம்
நூற்றாண்டு வட்டெழுத்து பொறிப்பு உள்ள
நடுகல்
ஒன்று அறியப்பட்டு உள்ளது (து.
தயாளன்,ஆவணம் 6 -1995)
ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய கம்ப
விக்கிரம பரும /
ர்க்கு யாண்டு முப்பதாவது படுவூர்கோ /
ட்டத்து மேலடையறு நாடு புக்கடைகளாட
பாலி / ன - - - ம நாயகன் சாகூழன்
வேளாளன் விண்ட பா / டிக்கள்ளர்
இவ்வூர் தொறுக் கொள்ளப்பட்டான் /
இவனுக்கு (ஊருங்)
கோவு நான்று அரசஞ்செ /
று நெத்தல்பட்டி அட்டித்து
.புக்கு + அடை > புக்கடை - தங்கும்
இடம், புகலிடம், சத்திரம்: ஆட - விழ,
வெற்றி பெற; நான்று - ஞான்று;
நெத்தல்பட்டி - நீத்தார் பட்டி;
அட்டித்து - நீர் வார்த்து.
கம்ப வர்மனின்
முப்பதாவது ஆட்சி ஆண்டில் (899CE)
பகைவர் தாக்குதலில் படுவூர்க்
கோட்டத்திற்கு உள்ளடங்கிய மேல்
அடையறு நாட்டு வழிப்போக்கர்
தங்கும் விடுதிகள்
அல்லது சத்திரங்கள் பகைவர்
கைக்குள் விழ அவ் வெற்றிக்குப் பின்
விண்டப்பாடிக் கள்ளர் தன் ஊரான
பாலினாட்டு ஆநிரைகளைக் கவர்ந்த
போது பாலினாட்டு ஊர்த்தலைவன்
சாகூழன் வேளாளன் அதைத் தடுக்க
நடந்த போரில் வீர சாவடைந்தான்
அப்போது இவனுக்காக ஊராரும்
அரசனும் சேர்ந்து 'அரசஞ்செறு'
எனும் பெயரில் வீர சாவடைந்த
வீரனுக்குக் கொடையாக நல்கும்
நீத்தார்பட்டி நிலத்தை நீர்
வார்த்து அட்டிக் கொடுத்தனர்.
புக்கடைகள் எனப் பன்மையில்
வருவதால் அது ஓர் ஊர்ப் பெயர்
அன்று. அதோடு அடுத்து வரும் ஆட
என்ற வினைச் சொல் விழ,
வெற்றி கொள்ளப்பட என்ற பொருளில்
வருவதால் புக்கடைகள்
என்பது புகலிடத்தையே குறிக்கும்
எனக் கொள்ளாமல். சா என்பதும்
கூழன் என்பதும் தனித்தனிப்
பெயர்கள்.
தென்கிழக்கு மெக்சிகோவின்
ஒரு மாயப்பன் அரசன் பெயர் Cuzam
Cocom AD 1396-1401 > கூழம் கக்கம்
> கூழன் கக்கன். துருக்கியின்
ஒரு Hittite மன்னன் பெயர் Huzziya I
1530-1525 BCE > கூழய்யன் என்பது.
நன்னூல் மூலத்திற்கு 19 ஆம்
நூற்றாண்டில் உரை எழுதியவர்
கூழங்கை தம்பிரான். தொல் ஈரானின்
அன்சனையும், சூசாவையும் ஆண்ட
ஒரு எலாமிய அரசன் Unpatar-
Humban 1340 BC > ன்பட்டர் கம்பன்
(son of Pahir-Ishshan > பகிர் ஈசன்
மகன்)
- - - -
தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரை வட்டம்
ஒட்டம்பாடி எனும் ஊரில் முதல்
வரி கிரந்தம் அடுத்த வரிகள்
வட்டெழுத்தில்
பொறிப்பு பெற்று உள்ள ஒரு நடுகல்
கல்வெட்டு (செங். நடு.16/1972)
உள்ளது. இதன் காலம் 8 ஆம்
நூற்றாண்டு.
சிவமார பருமர்க்கு யாண்டு யிருபத் /
திரண்டாவது மாவலி வாணரயர் க /
ங்க நாடாள இந்தரன் தகடூ / ர் மேல்
வந்த ஞான்று மறவனா / ர் சேவகன்
கண்ணனூருடைய கமிய / த் தழமன்
பட்டான்
கங்கரான கொங்கணி அரசன் முதலாம்
சிவமாறன் என்பான்
தனி ஆட்சி செய்து வரும்
இருபத்திரண்டாவது ஆட்சி (701 AD)
ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண
அரசன் மாவலி வாணரயன் கங்க
நாட்டை ஆண்டு கொண்டிருக்கும்
வேளையில் இராட்டிரகூட மன்னன்
இந்திரன் என்பவன் தகடூர்
மீது படைநடத்தி வந்த
போது தகடூரின் வேள் மறவன்
என்பானுடைய படைத் தலைவன்
கண்ணனூர் கமியத் தழமன் என்பான்
வீர சாவு எய்தினான்.
இந்திரன் எந்த நாட்டினன்?
எங்கிருந்து வந்தான்? ஆகிய செய்திகள்
இக் கல்வெட்டில்
குறிக்கப்படவில்லை. பிற கல்வெட்டுக்
குறிப்புகளை வைத்து அறிஞர் இவன்
இராட்டிரகூட மன்னன் என்கின்றனர்.
சிவமாறன் கட்டாணை பருமானின்
தந்தை ஆவான். கமிய என்பது கம்மிய
என்ற தொழில் பெயர் ஆகலாம்.
- - - -
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்
கோட்டை வட்டம் சின்னட்டி என்ற
ஊரில் முதல் வரி கிரந்தம் அடுத்த
வரிகள் வட்டெழுத்தில்
பொறிப்பு பெற்று உள்ள ஒரு நடுகல்
கல்வெட்டு (நடு. பக். 498) உள்ளது.
இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ
கட்டிணை பந்மற்கு யாண்டைந்தாவது /
வேட்டுவதி அரையர் சேவர்
குமாரபம்மர் / மக்கள் மாகற்நாகஅவர்
தம்பி இருவரும் / வேளூர்
தொறு மீட்டுப்பட்டார்
கங்கரான பிரிதி கொங்கண அரசர்
கட்டிணை அல்லது கட்டாணை பருமர்
(வர்மர்) பேரரசராக
தனி ஆட்சி நடத்தி வந்துள்ளார்.
அவருடைய ஐந்தாவது ஆட்சி (730 AD)
ஆண்டில் அவருக்குக் கட்டுப்பட்ட
வேட்டுவனான அதிஅரசன் எனும்
பொறுப்பு கொண்ட
வேளுக்கு படையாள் குமாரபம்மன்
என்பவன் பெற்ற பிள்ளைகள்
மாகற்நாகன் மற்றும் அவன்
தம்பி இருவருமாக பகைவர்
கவர்ந்து சென்ற வேளூர்
கால்நடைகளை மீட்டு அப்பூசலில்
வீர சாவு எய்தினர்.
தொறு எருமை, ஆடு,
மாடு ஆகியவற்றை குறிக்கும்.
கட்டாணை பருமன் என்பவன் கங்க
மன்னன் இரண்டாம் சிவமாற
வர்மனின் தந்தையான ஸ்ரீ
புருஷனே என்பர்
அறிஞர்.குமாரபம்மன் எந்த நாடன்,
ஊரன் என்ற செய்தி இல்லை. அவன்
வேட்டுவ மரபினன்
என்பது புலனாகிறது. மாகல் > மாகற்
என வழங்குகிறது. சமற்கிருதத்தில்
மாக(ன்) என்பவர் சிசுபாலவதம் என்ற
இலக்கியம் செய்தார்.பம்மன் ஐகார
ஈறு பெற்று பம்மை எனவும், அல்
ஈறு பெற்று பம்மல் எனவும்
வழங்கும். ஒரு தைரி நகர் ஆண்ட
போனீசிய மன்னன் பெயர் Pygmalion
(Pummay) 831-785 BC > பிக்மலையன்
அல்லது பிக்கமல்லையன் (பம்மை).
- - - -
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம்
கைலாவரம் எனும் ஊரில் முதல்
வரி கிரந்தம் அடுத்த வரிகள்
வட்டெழுத்தில்
பொறிப்பு பெற்று உள்ள ஒரு நடுகல்
கல்வெட்டு ( தரும. கல். 5/1973)
உள்ளது. இதன் காலம் 8 ஆம்
நூற்றாண்டு.
ஸ்ரீ
கட்டிணை பருமற்கு யாண்டு முப்பத்தே /
ழாவது கந்தவாணதிஅரையர்
புறமலை நாடாள அருட்டிறையர்
தொறுக் கொண்ட ஞா / ன்று அமர
நீலியார் சேவகர் / பையச்சாத்தனார்
தொ / று மீட்டு / பட்டார் கல்
கங்கரான பிரிதி கொங்கண அரசர்
கட்டிணை அல்லது கட்டாணை பருமர்
(வர்மர்) பேரரசராக
தனி ஆட்சி நடத்தி வந்துள்ளார்.
அவருடைய
முப்பத்தேழாவது ஆட்சி (757 AD)
ஆண்டில் அவருக்குக் கட்டுப்பட்ட
வாண அரசன் கந்தவாண் அதிஅரையன்
புறமலை நாட்டை ஆண்டு கொண்டிருக்கும்
வேளையில் அருள் திறையன் என்பான்
(இக்காலக் கைலாபுரப் பகுதியில்)
ஆநிரைகளைக் கவர்ந்த
பொழுது கைலாபுரப் பகுதியின் வேள்
அமரநீலி என்பானுடைய படைவீரன்
பையச்சாத்தன் என்பான் அவ்
ஆநிரைகளை மீட்டான். அப்பூசலில்
அவன் வீர சாவு எய்தியதன்
நினைவில் நிறுவப்பட்ட நடுகல்
என்பது செய்தி.
அருள் திறையன் என் நாட்டினன்?
அவன் யார் தூண்டுதலில்
ஆநிரை கவர்ந்தான்?
அல்லது அருள்திறையர் ஒரு சாதியா?
அமரநீலியின் நாடு யாது? என்பன
குறித்த குறிப்புகள் ஏதும்
கல்வெட்டில் இல்லை. தமிழில்
அறிவில் சிறியவன் எனும் பொருளில்
சிறுவனை பையன் என
அழைப்பது இக்கால் பொது வழக்காக
உள்ளது. ஆனால் பையச்சாத்தனின்
பெயரில் அச்சொல் அவ்வாறான்
பொருளில் வழங்கவில்லை. தமிழிய
மொழியாம் தெலுங்கில் பய்
என்பது உயரக் கருத்தைக் கொண்டது.
இந்தி உள்ளிட்ட வடஇந்திய
மொழிகளில் பையா (Bhayya) என்றால்
அண்ணன் என்று பொருள்.
எனவே தமிழிலும் அண்ணன் என்ற
பொருளிலேயே பையன் என்ற சொல்
வழங்கி வந்ததற்கு இந்த
பையச்சாத்தன்,
செல்லம்பட்டி ;நடுகல்1. இல்
மழற்பையன் ,
ஊத்தன்கரை ரெட்டியூர் நடுகல்லில்
இருசப்பையன், சிந்து முத்திரையில்
சானப்பையன் ஆகிய பெயர்கள்
சான்றாக உள்ளன. கொரியாவின் Gija
வழிவந்த ஒரு வேந்தன் பெயர்
Heungpyeong 957-943 BC > கிய்யன்
பய்யன், Jangpyeong 251-232 BC >
சான் பையன், Beopheung (514 - 540)
> விய்யபியன் > விய்யபையன்,
Jinpyeong (579 - 632) > சின்
(ன)பையன். கொரியத்தில் 'ன்' னகர
மெய் 'ங்' என சீனத் தாக்கதால்
திரியும்.
- - - -
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம்
கடத்தூரில் முதல் வரி கிரந்தம்
அடுத்த வரிகள் தமிழிலும்
பொறிப்பு பெற்று உள்ள 13 ஆம்
நூற்றாண்டு நடுகல்
கல்வெட்டு (தரும. கல். 10/1973)
ஒன்று உள்ளது.
ஸ்வஸ்தி ஸ்ரீ போசள வீர ராமனாத /
தேவற்கு யாண்டு 33 ஆவது /
ஆடி மாதம் பதினேழாந்தி /
யதி மகத்தி நன்று கடத்தூர் /
நாட்டு நாயகஞ் செய்வான் ஆ /
ரோதன் இருகன் பெருமாள் / மகன்
ஆண்பிளைப் பெருமா / ள் புலியைக்
கொன்று வீர / ஸ்வர்கம் பெற்றான்.
போசளப் பேரரசன் வீர இராமநாதனின்
33 ஆம் ஆட்சி ஆண்டில் (1287 AD)
ஆடி மாதம் பதினேழாம் நாள் மக
நட்சத்திரம் கூடிய நாளில் வீர
இராமநாதன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த
கடத்தூர் நாட்டு ஊர்த் தலைவன்
ஆரோதன் இருகன் பெருமாள் என்பான்
பெற்ற மகன் ஆண்பிளைப் பெருமாள்
என்பவன் ஊருள்
புகுந்து உயிருக்கு அச்சம்
ஏற்படுத்திய புலியை எதிர்த்துப்
போராடிக் கொன்றான் அவனும்
புலியின் தாக்குதலில் காயமுற்று வீர
சாவடைந்தான்.
13 ஆம் நூற்றாண்டில்
கருநாடகத்தை ஆண்ட போசளர்
திருவண்ணாமலை வரை தம்
ஆட்சியை விரிவு படுத்தி இருந்தனர்.
அப்போது கடத்தூர் எனும்
ஊருக்கு தலைவனாய்
இருந்து ஆண்டவன் ஆரோதன். ஆர் +
ஓதன் = ஆரோதன். பட்டான் என்ற
சொற்பயன்பாடு நீங்கி வீர சுவர்க்கம்
பெற்றான் எனக்
குறிக்கப்படுவது குமுகத்தில் மத,
புராணக் கருத்துகள்
வேரூன்றி விட்டதையே காட்டுகின்றது.
ஈரானின் ஒரு எலிமய மன்னன் பெயர்
Elymais king Orodes I 25 - 50 AD >
ஆரோத்S > ஆரோதன்.
- - - -
தருமபுரி மாவட்டம் ஆரூர் வட்டம்
இருளப்பட்டி அல்லது பாப்பம்பாடி என
வழங்கும் ஊரில் 5 ஆம்
நூற்றாண்டு நடுகல் (நடு. பக். 148)
அமைந்து உள்ளது. இதுவே பல்லவர்
காலத்தின் மிகப் பழமையான நடுகல்
என் அறிஞரால் அறியப்பட்டு உள்ளது.
கோவிசைய
விண்ணபருமற்கு நான்காவ /
து (தகடூரு) நாடாளும் கங்கரைசரு /
மேல் வந்த தண்டத்தோடு எ /
றிந்து பட்ட வாண பெருமரைசரு / - - - -
தண்டம் - படை: தண்டநாயகம்
என்பது படைத்தலைவனைக்
குறிப்பதை நோக்குக.
விஷ்ணு வர்மனுடைய நாலாம்
ஆட்சி ஆண்டில் தகடூர்
நாட்டை ஆளும் கங்க அரைசர் மேல்
படைநடத்தி வந்த
போது அப்படையுடன்
போரிட்டு வெல்லப்பட்டு வீர
சாவு எய்திய வாண பெரும் அரைசர்
என்ற மட்டில் கல்வெட்டுப்
பொறிப்பு உள்ளது அடுத்த ஐந்தாம்
வரி பொரிந்து போய் உள்ளதால்
இறந்தது யார் என்பதும் எவருக்கான
நடுகல் இது என்பதும் தெரியவில்லை.
கங்க அரசன் மேல்
படைநடத்தி வந்தவன் யார் என்பதும்
தெரியவில்லை. வீரசாவு எய்தியவன்
வாண அரசனின்
சேவகனாகவே இருத்தல் வேண்டும்.
பல்லவன் விஷணு வர்மன் சிம்ம
வர்மனுக்கும் மூதாதையாய்
இருத்தல் வேண்டும்.பல்லவருள் சில
மன்னர் விஷ்ணு கோபன், குமார
விஷ்ணு என்ற பெயருடன்
இருந்துள்ளனர்
என்பது ஈண்டு நோக்கத்தக்கது.
தலைப்பின் கீழ் உள்ள புடைப்புச்
சித்திரம் கொண்ட நடுகல் படம்
இதே விண்ண பருமன் எனப்படும்
விஷ்ணு வர்மனின் ஏழாம்
ஆட்சி ஆண்டில்
பொறிக்கப்பட்டதாகும். இதன்
கல்வெட்டுப்
பகுதி இங்கு தனியே ஒட்டப்பட்டு உள்ளது.
இதனை வரலாற்று ஆர்வலர்
திரு பிரகாஷ் செங்கம் வட்டம்
தண்ணாரம்பட்டிற்குச் சென்று படம்
பிடித்து வந்துள்ளார்.
கோவிசைய வி / ண்நக பருமந்கு யா /
ண்டேழாவது மேன்கு / போர் மேல்
வாணகோ விண்ண / ன் தன் ஊரழிய
விடேன் என்று
என்பது வரை உள்ள
கல்வெட்டு எழுத்துகளை (எட்டில்
ஐந்து வரிகள் மட்டும் நடுகற்கள்
நூலில் உள்ள
எழுத்துகளோடு ஒப்பிட்டு படித்து உள்ளேன்.இதில்
தவறு இருக்கலாம்.
இதனை கல்வெட்டியலார் எவரேனும்
திருத்தமாகவும் முழுமையாகவும்
படித்துக் காட்டினால்
கல்வெட்டு வாசகத்தின்
பொருளை முழுமையையும்நன்றாக
உணரலாம்.
இக்கல்வெட்டில் சில தமிழ்
பிராமி எழுத்துகள் உள்ளன
அதோடு சில எழுத்துகள்
புள்ளி பெற்று உள்ளன. எனவே இதன்
காலம் 5 ஆம் நூற்றாண்டு எனக்
கொள்வதில் தவறு இல்லை.
- - - -
இறுதியாக கன்னட மொழியது என
அறியப்படும்
ஒரு நடுகல்லை ஒப்பிட்டு ஆய்வோம்.
இது கிருஷண்கிரி வட்டம்
கன்னடபள்ளியில்
இருந்து கொண்டுவரப்பட்டு சென்னை கலாக்சேத்திராவில்
வைக்கப்படுள்ளது. இதன் காலம் 9 -
10 ஆம் நூற்றாண்டு என
கொள்ளப்பட்டு உள்ளது.
சுவஸ்தி ஸ்ரீ - - - - யர கன்தேய
செட்டிய மகன் / கன்னடம்பள்ளிய
போறியம்காடோள் துறு கொள்ள /
சத்த பலரோடே கண்ட
கோட்டழி முட்டி.
போறியம் - காப்பு என்ற பொருள்
கொண்ட போற்றி என்ற தமிழ்ச்
சொல்லின் திரிபாக இருக்கலாம்;
துறு - தொறு; கொள்ள - கவர; சத்த -
பட்டான், வீர சாவடைந்தான்; கண்ட -
ஏற்பட்ட; கோட்டழி > (கோட்டம் -
பகைமை , அழி - வருந்த, அழிய,)
முட்டி - ஆய்தம் பிடித்து, போரிட்டு
சிற்றரசனாகவோ ஊர்த்தலைவனாகவோ இருந்த
கந்தைய்ய செட்டி உடைய மகன்
கன்னடம்பள்ளி உடைய
காவற்கட்டுகொண்ட காட்டுள்
தொறு என்னும் ஆநிரைகளைக் கவர
முயன்ற போது எதிர்த்து நின்ற
பலரோடு ஏற்பட்ட பூசலில் பகைவர்
வருந்தி அழிய ஆய்தம் ஏந்திப்
போரிட்டு வீர சாவு எய்தினான் என்
உள்ளது.
சுவஸ்தி ஸ்ரீ என்பதைத் தவிர
ஏனைய சொற்கள் யாவும் தமிழ்
வழிப்பட்ட சொற்களே எனினும்
சொற்றிரிபு மிக்குள்ளது. கந்தைய்ய
என்பதில் ஐகாரம் ஏகாரமாகத்
திரிந்துள்ளது. தமிழின் ஆறாம்
வேற்றுமை உருபான உடைய
என்னும் சொல்லில் யகரம் மட்டும்
நிலைத்து மற்ற முன்
இரண்டு எழுத்துகளும்
தொலைந்து கன்னடத்தின்
வேற்றுமை உருபு தோன்ற இடம்
தந்தது எனலாம். உள் என்பது ஒள் >
ஓள் என திரிந்து உள்ளது. பட்டான்
என்பது சத்த என்று வழங்குகிறது.
தொறு துறு எனத் திருந்து உள்ளது.
அதே நேரம் தமிழுக்கே சிறப்பாக உரிய
ழகரச் சொல்
அழி இங்கு வழங்குவது என்பது தமிழ்
கன்னட நாட்டு மக்கள் பேச்சில் 10
ஆம் நூற்றாண்டு வரைத் தன்
பிடியை இறுக்கமாகக்
கொண்டிருந்தது என்பதைக்
காட்டுகின்றது. எனவே இதை முழுக்
கன்னடமாக ஏற்க
முடியவில்லை அதே நேரம் தமிழின்
இலக்கண
வேற்றுமை உருபு சிதைந்து உள்ளதால்
இதை முழுத் தமிழாகவும் கொள்ள
முடியவில்லை. ஆதலால் இதைக்
கன்னடம் என்றும் தமிழ் என்றும்
கூறாமல் அரைத்தமிழ் (Demi Tamil)
என்று கொள்வதே பொருத்தமானது.
கருநாடகத்தில் அரசர்களும்
மதத்துறையோரும் தமிழ் அல்லாத
சமற்கிருத, பிரகிருத சொற்களைத் தம்
கல்வெட்டிலும், செப்பேட்டிலும்
அதிகமாகப் பயன்படுத்தியதால்
கருநாடகத்தில் 10 ஆம் நூற்றாண்டில்
வழங்கிய மொழிப் பற்றி துலக்கமாக
அறியமுடியாத நிலை உள்ளது.
எனினும் எளியோர் செய்த
நடுகற்களில் அவ்வாறான மொழிக்
கலப்பு இல்லாமல் அன்றாட வழக்குச்
சொல் அதிகமாக வழங்குவதால் 11
ஆம் நூற்றாண்டு வரையான
நடுகற்களின்
மொழி அமைதியை நன்கு ஆராய்ந்து கன்னட
மொழி உண்மையில்
எபபோது தோன்றியது என்பதை வரையறுக்கலாம்.
ஏனெனில் கன்னடமும் தெலுங்கும்
உருவாவதற்கு முன்
அவை ஒரே மொழியாய் இருந்து பின்
பிரிந்தன என்று சொல்லப்படுகின்றது.
இது எப்போது நிகழ்ந்தது என்பதை நடுகற்களின்
துணையோடு நிறுவலாம்.
கருநாடகத்தில் இதுகாறும் 2650
நடுகற்கள் அறியப்பட்டுள்ளன.
இவற்றுள் கணிசமான
கல்வெட்டு நடுகற்களும் அடங்கும்.
இவை இந்த மொழித் தோற்ற
ஆய்விற்கு பெரிதும் உதவும்.
பன்மொழி அறிஞர் திரு. பிரபாத் ரஞ்சன்
சர்க்கார் பழந்தமிழ் திரிந்த பின் அது வட
அரைத் தமிழாகவும், தென் அரைத்
தமிழாகவும் பிரிந்தது என்கிறார். வட
அரைத் தமிழ் மேலும்
திரிந்து பின்பு கன்னடம்
தெலுங்கு எனப்
பிரிந்தது என்று கூறி உள்ளார். அவர்
கூற்றை மெய்ப்பிக்கும் வகையில்
தான் மேற் சொன்ன கன்னட நடுகல்
கல்வெட்டு மொழி அமைதி உள்ளது.
எனவே கன்னட தெலுங்கு நடுகல்
கல்வெட்டுகளின் மொழி அமைதியைக்
கொண்டு கன்னடமும் தெலுங்கும்
தனியே பிரிந்த
காலத்தை முடிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் அவற்றின் தோற்ற
காலத்தை துலக்கமாக அறிய
இயலும்.

No comments:

Post a Comment