Total Pageviews

Sunday 22 April 2012

சோழன்-3

விசயால சோழன் (கி.பி.850-871)
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ்
நாட்டில் பல்லவர்களுக்கும்,
தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த
பாண்டியர்களுக்கும் இடையில்
போட்டி நிலவியது. இக்காலத்தில்
சோழச் சிற்றரசர்கள்
பல்லவர்களுக்கு ஆதரவாக
இருந்ததாகத்
தெரிகிறது. பழையாறையில்
தங்கி குறுநில மன்னனாக இருந்த
சோழ மன்னன் விசயாலயன்
என்பவன், கி.பி 850-இல் தஞ்சையைத்
தலைநகராகக்
கொண்டு ஆண்டு வந்த
முத்தரையர்களைத் தோற்கடித்துத்
தஞ்சையைக்
கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான்.
பாண்டியர்களையும் போரில்
தோற்கடித்துத்
தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.அது முதல்
கி.பி. பதின்மூன்றாம்
நூற்றாண்டு வரை துங்கபத்திரை
ஆற்றின் தெற்கில் உள்ள
நிலப்பகுதி முழுவதிலும் சோழப்
பேரரசின் செல்வாக்கு ஓங்கியது.
இம்மன்னன் தஞ்சையில்
நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் என
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்
தெரிவிக்கின்றன. விசயாலன்
கி.பி 871 இல் இறந்தான்.
முதலாம் ஆதித்த சோழன்
(கி.பி.871-907 )
விசயாலயனைத்
தொடர்ந்து பதவிக்கு வந்தவன்
ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்'
என்று அழைக்கப்படும் அரசியல்
ஆற்றலும் போர்த்திறமும் மிக்க
இவன்
சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான்.
கி.பி.880-ல்
பல்லவர்களிடையே ஏற்பட்ட
அதிகாரப் போட்டியின் காரணமாக
நிருபத்துங்க பல்லவனுக்கும்
[[பல்லவர்|பல்லவன்
அபராசிதனுக்கும்
இடையே திருப்புறம்பியம் என்னும்
ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில்
அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன்,
கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர்
துணை நின்றனர். நிருபத்துங்க
பல்லவனுக்கு பாண்டியன்
வரகுணன் துணை நின்றான்.
இப்போரில் அபராசிதன்
வெற்றிபெற்றான்.
பிருதிவிபதி மரணமடைந்தான்.
தோல்வியுற்ற பாண்டியன் தன்
நாடு திரும்பினான். திருப்புறம்பியப்
போர் சோழநாட்டின்
எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக
அமைந்தது. இப்போரில்
அபராசிதனுக்கு எதிராக நின்ற
பாண்டியர்கள் , வடக்குப்
பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர்.
இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான்.
அபராசிதனும் சோழர்களுக்கு சில
ஊர்களைப் பரிசாக அளித்தான்.
அக்காலத்தில் சோழ நாட்டின்
பெரும்பகுதி பல்லவர் வசம்
இருந்தது. மனம்
கொதித்து அதை மீட்கும்
முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான்.
பல்லவர் மீதும் படையெடுத்த
ஆதித்த சோழன் அபராசித
பல்லவனைக்
கொன்று தொண்டை மண்டலத்தையும்
சோழ நாட்டுடன் இணைத்தான்.
இவனுடைய அதிகாரம் கங்கர்
நாட்டிலும், கொங்கு நாட்டிலும்
பரவியிருந்தது. சேர நாட்டுடனும்,
இராட்டிரகூடருடனும், வேறு அயல்
நாடுகளுடனும் நட்புறவைப்
பேணிவந்த அவன்
சோழர்களை மீண்டும்
உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்.
முதலாம் பராந்தக சோழன்
(கி.பி.907-955)
கி.பி 907 இல் முதலாம் ஆதித்த
சோழனை அடுத்து அரசனானவன்
பராந்தக சோழன். இக்காலத்தில்
சோழப் பேரரசு வடக்கே காளத்தி
முதல் தெற்கே காவிரி
வரை பரவியிருந்தது. இவனும் போர்
நடவடிக்கைகளில் தீவிரமாக
ஈடுபட்டான். பாண்டியர்களுடன்
போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக்
கன்னியாகுமரி வரை பரந்த
பாண்டிநாட்டை சோழநாட்டுடன்
இணைத்துக் கொண்டான். இந்திய
வரலாற்றில் முதன் முதலில்
குடியுரிமை மற்றும் வாக்குச்
சீட்டு ஆகியவற்றை அறிமுகம்
செய்தவன் இவனே ஆவான்[3] . இவன்
காலத்தில் குடவோலை முறையில்
கிராம சபை உறுப்பினர், கிராம
சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை,
அமைக்கும் முறை, கிராம
ஆட்சிமுறை பற்றிய
விவரங்களை உத்திரமேரூரிலும்
வேறு சில ஊர்களிலும் உள்ள
கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன.
இவன் காலத்துக்குப் பின்னும் சோழர்
ஆட்சி 300 ஆண்டுகள்
வரை தொடர்ந்தது.
கண்டராதித்த சோழன் (கி.பி.950-951)
பிற்காலத்தில் இராட்டிரகூடருடன்
ஏற்பட்ட போரில் அவனது மகன்
இறந்ததைத்
தொடர்ந்து சோழநாட்டின்
விரிவு வேகம் தணியத்
தொடங்கியது. இராட்டிரகூடர்ர்கள்
சோழநாட்டின் சில பகுதிகளைக்
கைப்பற்றிக் கொண்டனர். பராந்தக
சோழனின்
இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன்
உயிருடன்
இருந்தபோதே அவனது தம்பியான
கண்டராதித்தன் கி.பி 950 -இல் சோழ
மன்னனாகப் பட்டம்
சூட்டிக்கொண்டான். ஆனாலும்
இவனது ஆட்சியும் குறுகிய
காலமே நிலைத்தது. இவன்
காலத்தில், இராட்டிரகூடர் சோழ
நாட்டின் வடபகுதிகளைக்
கைப்பற்றிக் கொள்ள,
பாண்டியர்களும் சோழர்களின்
கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர்.
சிவ பக்தனான கண்டராதித்தன் பாடிய
பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில்
இடம் பெற்றுள்ளன. இவன்
மனைவி செம்பியன் மாதேவி எடுத்த
கோயில்கள் சோழ நாட்டில் இன்னும்
பல உள. இவன் காலத்தில்
தொண்டை மண்டலம் முழுவதும்
இராட்டிரகூடர்கள்
ஆட்சிக்குட்பட்டிருந்தது.
அரிஞ்சய சோழன்
கண்டராதித்தனை அடுத்து அவன்
தம்பி அரிஞ்சயன் சோழ அரசனானான்.
முதலாம் பராந்தக சோழனின் மூத்த
மகனான இராசாதித்தன்
திருக்கோவிலூரில் இராட்டிரகூட
மன்னனை எதிர்க்கப் படையுடன்
தங்கியிருந்த போது அவனுக்குத்
துணைபுரிய இவனும் தங்கியிருந்த
சிறப்புடையவன். இராட்டிர கூடன்
கைப்பற்றிய தொண்டை நாட்டைத்
தான் மீட்க முயற்சிகள் செய்தான்.
இடையில்
சிறிது காலமே ஆட்சி புரிந்த
அரிஞ்சய சோழனும் குறுகிய
காலத்தில் போரில் மடிந்தான்.
சுந்தர சோழன்(கி.பி.957-973)
சோழ நாட்டின் இழந்த
பகுதிகளை மீட்பதில்
வெற்றி பெற்றவன் 957 இல்
பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன்
ஆவான். இவன்
இராட்டிரகூடர்களைத்
தோற்கடித்தது தொண்டை மண்டலத்தைக்
கைப்பற்றியதுடன்,
பாண்டியர்களையும்
வெற்றி கொண்டான். எனினும்,
பகைவர் சூழ்ச்சியால்
பட்டத்து இளவரசனான, சுந்தர
சோழனின் மூத்த மகன் ஆதித்த
கரிகாலன் கொல்லப்பட்டான். ஆதித்த
கரிகாலனின் பேரிழப்பால்,
சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில்
மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான்.
'பாண்டிய தலைகொண்ட
கரிகாலச்சோழனை' கொலை செய்த
குற்றத்திற்காகச் சிலருடைய
சொத்துக்களைப் பறிமுதல்
செய்து விற்கும் பணியினை மன்னன்
கட்டளைப்படி திருவீர நாராயண
சதுர்வேத மங்கலச்
சபை மேற்கொண்டதாக,
இராசகேசரி இரண்டாம்
ஆண்டு உடையார்குடிக்
கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம்
ஆதித்தன் ஒரு சதியின் மூலம்
கொலை செய்யப்பட்டான்
என்பது இந்தக் கல்வெட்டால்
தெளிவாகிறது.
அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த
அநிருத்த பிரமாதிராசன் என்பவன்
இவனுக்கு அமைச்சராய் இருந்தவன்.
கருணாகர மங்கலம் என்ற
ஊரினை இறையிலியாக
அவனுக்கு அளித்த
செப்பேடுகளே அன்பில் செப்பேடுகள்
ஆகும்.
உத்தம சோழன் (கி.பி.970-985)
கி.பி 973 இல் சுந்தரசோழன் இறந்த
பின்பு, அவன் மகன் இராசராசன்
மன்னனாகவில்லை.
கண்டராதித்தனின் மகனும்
இராசஇராசனின் சிறிய
தந்தையுமாகிய உத்தம சோழன்
அரசுரிமை பெற்றான்.
இவனுக்கு முன்னமேயே கிடைத்திருக்கவேண்டிய
அரசுரிமை நீண்ட காலம்
மறுக்கப்பட்டிருந்ததாகவும்
வேறு சில ஆய்வாளர்கள்
கூறுகிறார்கள். இவன் காலத்தில்
நாடு அமைதியுடன் இருந்தது.
உத்தம சோழனின்
செப்பேட்டிலிருந்து அக்காலத்தில்
வரிவடிவில் இருந்த தமிழ்
எழுத்துக்களின்
தன்மையை அறியலாம்.
புலியுருவம்
பொறித்து உத்தமசோழன்
என்று கிரந்த எழுத்துகளைத் தாங்கிய
நாணயம் இவன்
காலத்து வரலாற்றுச் சான்றாகும்.
இராசராச சோழன் (கி.பி 985-1014)
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்
பின்னர், 985 இல் உத்தம சோழன்
இறந்தபின்னர், சுந்தர சோழனின்
இரண்டாவது மகனான இராசராச
சோழன் மன்னனானான்.
இவனுக்கு அருள்மொழிவர்மன்,
ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப்
பட்டதாக அழகர் கோவில்
கல்வெட்டுகளில்
இருந்து அறியப்படுகிறது. இவன்
காலத்தில் சோழநாட்டின்
வலிமை பெருகியது.
நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின்
எல்லைகள் விரிந்தன.
காந்தளூர்ச் சாலை
இவற்றுக்காக இராசராசன் நடத்திய
போர்கள் பல. சேரர் , பாண்டியர் ,
சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச்
சாலை என்ற இடத்தில்
சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர
மன்னன் பாசுகர ரவிவர்மனைத்
தோற்கடித்தான். சேர மன்னனுடைய
கப்பற்படையை அழித்து உதகை ,
விழிஞம் ஆகிய பகுதிகளையும்
வென்றான். இப்போரில்,
சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற
பாண்டிய மன்னன் அமரபுயங்க
பாண்டியனை வென்று,
இவர்களுக்கு உதவிய இலங்கை
மீதும் படைநடத்தி அதன்
தலை நகரைக் கைப்பற்றினான்.
இலங்கைத் தீவின் வடபகுதி சோழ
நாட்டுடன் இணைக்கப்பட்டது.
கொல்லம் சென்று சேரனுடன்
இரண்டாவது முறைப் போர்
புரிந்து சேர நாட்டின் எஞ்சிய
பகுதிகளையும் வென்றான்.
கங்கபாடி, நுளம்பாடி
சோழ நாட்டுக்கு வடக்கிலும்,
கங்கர்களைத்
தோற்கடித்து கங்கபாடியைக்
( மைசூரின்தென்பகுதியும் சேலம்
மாவட்டத்தில் வட பகுதியும்
அடங்கிய நாடு) கைப்பற்றினான்.
தலைக்காட்டைத் தலைநகராகக்
கொண்டு கங்கர்கள்
இந்நாட்டைஆண்டனர். மைசூர்
நாட்டின் கீழ்ப்பகுதியும்
பல்லாரி மாவட்டமும் கொண்ட
நுளம்பாடியைப் பல்லவர்களின்
வம்சத்தவராகிய நுளம்பர்களுடன்
போரில் வென்று இப்பகுதியைக்
கைப்பற்றினான். இப்போர்களில்
தலைமை ஏற்று நடத்தியவன்
இராசராசனின் மகனான முதலாம்
இராசேந்திரன் ஆவான். சாளுக்கிய
நாட்டின்மீதும்
படையெடுத்து அதனைக்
கைப்பற்றினான். துளுவர் ,
கொங்கணர் , தெலுங்கர் ,
இராட்டிரகூடர்
ஆகியோரை வென்று வடக்கே
வங்காளம் வரை இவனது படைகள்
சென்று போர் நடவடிக்கைகளில்
ஈடுபட்டதாகத் தெரிகிறது.
ஈழத்துப் போர்
இராசராசன் வலிமை மிக்கக்
கடற்படையைக் கொண்டு
இலங்கையை வென்றான் என
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்
புகழ்கின்றன. அப்போது ஐந்தாம்
மகிந்தன் இலங்கை வேந்தனாக
இருந்தான். சோழ
நாட்டு மண்டலங்களில் ஒன்றாக
மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ
மண்டலம்' எனப் பெயர் பெற்றது.
இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த
அநுராதபுரம் போரில் அழிந்தது.
'சனநாத மங்கலம்' என்று புதிய
பெயர்
சூட்டப்பட்டு 'பொலன்னருவை'
ஈழத்தின் புதிய தலைநகராயிற்று.
இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின்
பெயர் ராசராச பெரும்பள்ளி .
ராசராசசோழ மன்னனின் பெயரில்
இது இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள
நாகப்பட்டினத்தில் ஒரு புத்த
விகாரை அக்காலத்தில்
இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இராசேந்திரன் 'வானவன்
மாதேச்சுரம்' என்ற பெயரில்
இங்கு கற்றளி எடுத்தான். ஈழ
மண்டலத்தில் உள்ள சில ஊர்களை
தஞ்சைப் பெருவுடையார்
ஆலயத்திற்கு நிவந்தமாக
அளித்ததைக் கல்வெட்டுகள்
கூறுகின்றன. சிறந்த கடற்படையைப்
பெற்றிருந்த இராசராசன், தெற்கில்
ஈழத்தின்மீது மட்டுமன்றி,
இந்தியாவின் மேற்குக்
கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள
முந்நீர்ப்
பழந்தீவு எனப்படும்இலட்சத்தீவு
மீதும், கிழக்குப் பகுதியில்
தென்கிழக்காசியப் பகுதியிலுள்ள
கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக
இவன் காலத்திய செப்பேடு
ஒன்று தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment