Total Pageviews

Tuesday 24 April 2012

அயோத்தி தாசர்

அயோத்தி தாசர்
பா • உ • தொ
அயோத்தி தாசர்
இந்த கட்டுர
உரை
கொண்டுள்ளது அ
நடையில் இல்ல
நடைக்
குறிப்பி
விக்கிப்படுத்து
இதன் வளர்ச்சி
இந்த க
திருத்தி
அயோத்தி தாசர் ( மே 20, 1845 - 1914 ;
தமிழ்நாடு )
ஒரு சாதிக்கொடுமை எதிர்ப்பாளர்,
சமூக சேவகர், தமிழ் அறிஞர் மற்றும்
சித்த மருத்துவர் ஆவார். திராவிட
இயக்கம் உருவாக வித்திட்ட
முன்னோடிகளில் இவர் ஒருவர்.
தலித் பின்புலத்தில் இருந்து வந்த
இவர், 19 நூற்றாண்டின் இறுதியில்
தலித் மக்களின் முன்றேற்றத்துக்காக
அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய
களங்களில் தீவரமாக செயற்பட்டார்.
அவரது இயற்பெயர் காத்தவராயன்.
கல்வியும், புலமையும்
அயோத்திதாசர் தமிழ், சித்த
மருத்துவம் மற்றும் தத்துவம்
ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும்
ஆங்கிலம், வடமொழி, மற்றும்
பாலி போன்ற மொழியறிவும்
பெற்று விளங்கினார்.
அயோத்திதாசர் 1845 மே 20 இல்
சென்னை ஆயிரம் விளக்குப்
பகுதியில் பிறந்து, பிறகு நீலகிரிக்கு
புலம்பெயர்ந்தார். தன்னுடைய 25
ஆம் வயதில் நீலகிரியில்
ஒடுக்கப்பட்ட மக்களான
தோடர்களை அணிதிரட்டி 1870 களில்
'அத்வைதானந்த சபை'
ஒன்றை நிறுவி மதமாற்றத்திற்கு எதிராக
செயல்பட்டார். அவரது குடும்பம்
வைணவ சமய மரபுகளைப்
பின்பற்றிய நேரம் தன்
குழந்தைகளுக்கு மாதவராம்,
பட்டாபிராமன், ஜானகி ராமன்,
இராசராம் எனப் பெயர் சூட்டினார்.
அத்வைத வேதாந்தத்தில்
ஈடுபாடு கொண்டிருந்தாலும்
அதனுடைய இறைக்கொள்கை,
சடங்குவாதம், பிராமணீய ஆதிக்கம்,
ஆண்மீகக்கொள்கை, மத
பண்பாட்டுத்தளங்கள் என
அனைத்து வடிவங்களுக்கும் எதிரான
ஒரு பகுத்தறிவுரீதியான
விடுதலை மெய்யியலே அவரது தேடலாக
இருந்தது. அதன் அடிப்படையில் சுய
சிந்தனை, சுய கருத்தியல்
தேடலாகவுமிருந்தது.
தலித்கள் கல்வியில்
மட்டுமே முன்னேறமுடியும் என்ற
நம்பிக்கையில், வெசிலியன் மிஷன்
பள்ளியை ஆயிரம் விளக்கு பகுதியில்
தலித்களுக்காக நடத்திய
அருட்திரு டி ஜான்ரத்தினம்
அவர்களோடு தொடர்பு ஏற்பட்டது.
ஜான்ரத்தினம் நடத்திய 'திரவிடர்
கழகம்' அதன் சார்பாக வெளிவந்த
'திராவிட பாண்டியன்' என்ற
செய்தி இதழிலும் பண்டிதர்
பங்கெடுத்துக் கொண்டார். இந்த
அனுபவமே பின்னால் 1907 இல்
ஒரு பைசாத் தமிழன் மற்றும் தமிழன்
நடத்துவதற்கும்
சென்னை மையப்பகுதியில் 1892 இல்
5 பஞ்சாம பள்ளிகள் துவங்க
காரணமாக இருந்தார்.
பண்டிதருடைய காலம் (19
நூற்றாண்டின் பிற்பகுதியில் )
இந்துத்துவம் மீட்டுருவாக்கம்
செய்யப்பட்ட காலம். பிரம்ம சமாஜம்,
ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள்
மூலம் அனைத்தையும் இந்துக்குள்
திணித்த காலம். 'யாரெல்லாம்
கிறித்துவர்கள், இசுலாமியர்
இல்லையோ' அவர்களெல்லாம்
இந்துக்கள் என 1861 முதல் 1891
வரை மக்கள் தொகை கணக்கெடுபில்
'இந்து' அடையாளத்திற்குள் வலிய
திணிக்கப்பட்டார்கள். பண்டிதர்
வைணவ மரபை ஆதரித்தாலும்
'இந்து' என்ற அடையாளத்தை ஏற்க
மறுத்தவர் அவ்வாறு 'இந்து'
அடையாளத்தை ஏற்றுக்கொண்டால்
'இந்து' சமூகத்தின் சாதீய
அமைப்பை ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
சாதியக்கொடுமையை மிக அதிகமாக
அனுபவிக்கும் தலித்து மக்கள்
இந்து அடையாளத்தை ஏற்கக்கூடாது என்பதில்
மிக எச்சரிக்கையாக இருந்தார்.
அதற்கு மாற்றாக இந்து அல்லாத
மாற்று அடையாளம் ஒன்றைத்
தேடத் துவங்கினார். தமிழகத்தில்
பக்தி வடிவங்களில் 'தமிழ் சைவ'
மீட்டுருவாக்கம்முயற்சி நடந்தது.
இதுவும் ஒரு வகையில்
சாதியத்தை உள்வாங்களின்
முயற்சியாகவே இருந்தது. 'தமிழ்
சைவம்' பிராமண எதிர்ப்புப்
பேசியது 'சாதி ஒழிப்பு'
பற்றி எதுவும் பேசவில்லை.
அதனால் பண்டிதர் தமிழ்
சைவத்தோடு இணையவில்லை.
பண்டிதரால் துவக்கப்பட்ட 'சாதியற்ற
திரவிட மஹா ஜன சபையின்' சார்பாக
1891 திசம்பர் 1
திகதி நிறைவேற்றப்பட்ட இலவசக்
கல்வி, கோவில் நுழைவு,
தரிசு நிலம் ஒதுக்குதல் போன்ற 10
கோரிக்கை அடங்கிய
மனு ஒன்றை இந்திய தேசிய
காங்கிரசு கட்சிக்கு அனுப்பினார்.
அந்த கோரிக்கைகள்
இறுதிவரை நிறைவேற்றப்படவே இல்லை.
சென்னை மகா ஜன சபை 1892 இல்
ஏற்பாடு செய்த கூட்டத்தில்,
நீலகிரி மாவட்டப் பிரதிநிதியாய்ப்
பண்டிதர் கலந்துகொண்டு,
மேற்படி 10
கோரிக்கையை சமர்ப்பித்து, விஷ்ணு,
சிவன் கோவில்களில் நுழைய
அனுமதி கேட்டார்.
அது உடனே மறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார்.
இந்த அவமானபடுத்துதல்
பண்டிதரை இன்னொரு சிந்தனைக்கு இட்டுச்
சென்றது. நாம் யார்? இந்துக்களா ?
சாதி இழிவுகள் ஏன்
நம்மீது திணிக்கப்படுகிறது?
சுயத்தைத்தேடி நகர்கிறார். வேதம்,
இந்து,
பிராமணீயம்,சடங்குவாதம்..கேள்விக்குட்படுத்துகிறார்.
1881 இல் நடந்த மக்கள் தொகைக்
கணக்கெடுப்புப் பணியில்
புகுந்து தலித்களுக்கு ஒரு தனித்துவமான
அடையாளத்தை பதிவு செய்கிறார்
"ஆதி தமிழன்" என்று பதிவு செய்ய
வேண்டுமென வற்புறுத்துகிறார்.
அப்போதெல்லாம் சாதியைச்
சொல்லிதான் செட்டியாரே,
நாயக்கரே, பிள்ளைவாள் என
அழைப்பார்கள்,
சாதியே தமிழனுக்குஅடையாளமாக
இருந்தகாலத்தில், "சாதியற்ற
தமிழர்கள்" எனப் பதிவு செய்தார்.
1886 களில் ஆதி தமிழர்கள்
இம்மண்ணின் மைந்தர்கள் அவர்கள்
"இந்துக்கள்" அல்ல
என்று அறிக்கை விட்டார்,
அதோடு நீண்ட காலத்திற்கு முன்
நிலவிய பிராமண எதிர்ப்பின் மரபின்
வாரிசுகளே தலித்கள் என்றார்.
இது உண்மையில்லை என
மெய்ப்பிக்க முடியுமா? என
எதிராளிகளுக்கு அறைகூவல்
விடுத்தார். தமிழ், தமிழன்
அடையாளத்தை தலித்
மக்களை மையமாகக்கொண்டு ஒரு தமிழ்த்தேசியத்தைக்
கட்டமைக்க முயற்சிக்கிறார்.
அப்போதிருந்த ஒரே கட்சி இந்திய
தேசிய
காங்கிரசு கட்சி அதை இரண்டு பிரிவாக
பிரித்து ஒன்று வடநாட்டு காங்கிரசு,
அது வங்காளின்
கங்கிரசு மற்றொன்று தென்னாட்டு காங்கிரசு அது பிராமண
காங்கிரசு என
விமர்சித்து காங்கிரசு கட்சியை ஒதுக்கிவிட்டார்.
ஆக மத மாற்றம், அத்வைதம், தமிழ்
சைவம், தியாசப்பிகல் தொடர்பு,
காங்கிரசு கட்சி,
அனைத்திலுமிருந்து வேறுபட்டும்
அதனுடைய
பிற்போக்குத்தனத்திற்கு எதிராகவும்
சுய கருத்தியலை, சுய
அரசியலை நோக்கி தன்
தேடுதலை துவங்குகிறார்.
தலித்
மக்களை ஒடுக்குவதற்கு எழுப்பிய
பண்பாட்டு,
மதத்தடைகளை நீக்குவதுமட்டுமே ஒடுக்கப்பட்ட
மக்களின் மெய்யான
விடுதலையைக்கொண்டுவரும்.
அதற்கான மரபுகளைத்
தேடிக்கண்டுபிடித்தார்
அது பௌத்தம் என்ற சாதி, வருண
எதிர்ப்பு மதம்தான்
பண்டிதருக்கு புகலிடமாகப்பட்டது.
தலித்களின் மூலமதமாகவும்
பௌத்தம் இருந்தது. தலித்களின்
தாழ்வு நிலைக்கு காரணம் பௌத்தம்
சமயம்தான். அதே பௌத்தம்
சமயம்தான் தலித் விடுதலைக்கும்,
அதிகாரம் பெறுவதற்கும்
உறுதுணையாகவும் வழியாகவும்
இருக்கவேண்டியுள்ளது. இந்திய
பாரம்பரியம் பௌத்த மதமாக
இருந்தது என்கிறார் அதனை தன்
தமிழ் புலமை மூலம் விளக்குகிறார்.
இந்திய என்ற சொல் 'இந்திரம்'
என்பதன் திரிபு. இந்திரனாகிய
புத்தனும் அவனைக் குருவாக
கருதும் மக்களும் வாழும்
நாட்டிற்கு 'இந்திரதேசம்' என்ற பெயர்
வந்தது. ஆரியார் வாருகைக்கு முன்
இங்கே ஒரு தேசம் இருந்தது அந்த
தேசியத்தை பௌத்தம்
உருவாக்கியது. அதில் பகுத்தறிவு,
மனித நேயம்,
சமத்துவம்,அறக்கருதொற்றுமை மெய்யியல்
மற்றும்
நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது.
இதில் அன்னியரான வெளியாரின்
ஊடுருவால். படையெடுப்பால்
கால்ப்போக்கில் அது மந்திர
அல்லது மாயத்தன்மையென
திரிக்கப்பட்டது என்று பண்டிதர்
விளக்குகிறார். சொந்த நாட்டின்
சாதியற்ற பண்பாட்டை அயல்
சக்திகள், வெளியாட்கள்
நசித்துதிரித்துவிட்டார்கள். பிறப்பால்
ஏற்ப்படும்
ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி நடைபோடும்
ஓர் அரசியல்
கருத்தியலை உருவாக்கும்
ஒரு தேசியத்தை கட்டமைக்க
முயற்சிகிறார்.
1912 அக்டோபர் 30 தமிழன் இதழிளில்,
இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தால்
இம்மணிண் மைந்தர்களாம்
ஆதி தமிழர்களிடம் அரசியல்
அதிகாரத்தை வழங்கவேண்டுமென
ஆங்கிலேயர்களிடம் 35
வருடங்களுக்கு முன்
கோரிக்கை வைக்கிறார்.
"கருனைதாங்க்கிய பிரிட்டீஷ்
துரையவர்கள், சுதேசிகள்
மீது கிருபை பாவித்து சுயராட்சியத்தை அளிப்பதாயினும்
இத்தேச
பூய்வக்குடிகளுக்கு அளிப்பதே கருனையாகும்.
நேற்று குடியேறி வந்தவர்களையும்,
முன்னாடி குடியேறி வந்தவர்களையும்
சுதேசிகள் என கருதி அவர்கள் வசம்
சுராட்சிய ஆளுகையை கொடுத்தால்
நாடு பாழாகி சீர்கெட்டுப்போகும்
"என்றார். ஆக தலித்கள் அரசியல்
அதிகாரம் பெறவேண்டும் என்கிறார்.
இதே கருத்தை வலியுருத்தி புரட்சியாளர்
அம்பேத்கார் 1930 களில் " சுதந்திர
இந்தியாவில் நாம் ஒரு ஆளும்
சமூகமாக மாறவேண்டும் என
உறுதி எடுத்துக்கொள்வோம்"
என்றார். நம்முடைய
பிரச்சனை வெறும் சமூகப்
பிரச்சனை மட்டுமல்ல
அது முதன்மையாக அரசியல்
பிரச்சனை அதை அரசியல்
அதிகாரத்தோடுதான்
அனுகவேண்டும். தலித்கள் அரசியல்
அதிகாரம் பெறுவதற்கு பண்டிதர்
அயோத்திதாசரும் புரட்சியாளர்
அம்பேத்காரும் வழிகாட்டியாக நம்
முன் நிற்கிறார்கள்.
தமிழன் இதழ்
தமிழகத்தில் பத்தொன்பதாம்
நூற்றண்டின் இறுதிப்பகுதியில்
ஆதி தமிழர்கள், சாதியற்ற
திராவிடர்களின் உரிமைகளைப்
பற்றிப்பேசி வேத,
பிராம்ணீயத்தை எதிர்த்து சாதி ஒழிப்பு,
சுயமரியாதை, பகுத்தறிவு.
பிரதிநித்துவம் போன்ற நவீன
கருத்தாக்கங்களை உருவாக்கிய
பண்டிதர் க அயோத்திதாசர் அவர்கள்
தொடர்ந்து நடத்திய 'தமிழன்' வார
இதழ் 104 வருடங்கள்
நிறைவு பெற்றுள்ளது.
சென்னை இராயப்பேட்டையிலிருந்து புதன்
கிழமைதோறும் 19.06.1907 முதல்
நான்கு பக்கங்களுடன் அன்றைய
காலனா விலையில் "ஒரு பைசாத்
தமிழன்" என்று தனித்துவமாய் பெயர்
சூட்டப்பட்டு வெளிவந்தது. இந்த
இதழ் வெளிவருவதற்கான
தேவையையும்
யாருக்கானது எனவும் பண்டிதர்
அந்த இதழில் விளக்குகிறார்.
"உயர் நிலையும், இடை நிலையும்,
கடை நிலையும் பாகுபடுத்தி அறிய
முடியாத மக்களுக்கு நீதி, சரியான
பாதை,
நேர்மை ஆகியவற்றை கற்பிப்பதற்காக
சில தத்துவவாதிகளும்
இயற்கை விஞ்ஞானிகளும்,
கணிதவியலாளரும்,
இலக்கியவாதிகள் பலரும்
ஒன்று கூடி இப்பத்திரிக்கையை "ஒரு பைசாத்
தமிழன்" வெளியிட்டுருக்கிறோம்.
தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர்
ஒவ்வொருவருக்கும் கையொப்பம்
வைத்திதனை ஆதரிக்க
கோருகிறோம்"
என்று அறிவிக்கிறார்.”
இதழின் முகப்பில் 'ஒரு பைசாத்
தமிழன்' என்ற இதழின்
பெயரை புத்தக்
குறியீட்டு வடிவமான
ஒன்பது தாமரை இதழ்களின்
மீது எழுதி அதன் இடப்புறம் 'ஜெயது'
என்றும் வலப்புறம் 'மங்கள்ம்'
என்றும் எழுதியும் நடுவில்
'நன்மெய்க் கடைபிடி' என எழுதி,
இருபுறமும் மலர் கொத்து என
அழகுணர்வோடு மிக நேர்த்தியாக
தன் இதழின்
சின்னத்தை வடிவமைத்திருக்கிறார்.
முதல் இதழில், கடவுள் வாழ்த்து,
அரசர் வாழ்த்து, தமிழ் வாழ்த்து,
பூய்வத்தமிழொளி (அரசியல் தொடர்)
வர்த்தமானங்கள்
(நாட்டு நடப்புச்செய்திகள்) சித்த
மருத்துவ குறிப்புகள் என
செய்திகளின் முக்கியத்துவம்
கருதி வகைப்படுத்தி பிரசுரித்திருக்கிறார்.
ஓராண்டுக்குப் பிறகு வாசகர்களின்
வேண்டுகோளுக்கிணங்க,
'அச்சுகூடமும் பத்திரிக்கைப்பெயரும்
மாறுதலடைந்து' (26.08.1908 - பக் 2)
என விளக்கமளித்து 'ஒரு பைசாத்'
நீக்கப் பெற்று 'தமிழன்' என்ற
பெயரோடு 26.08.1908 முதல்
வெளிவந்தது. தமிழனில் வெளி வந்த
செய்திகளும் விரிவாக்கம்
செய்யப்பட்டிருந்தன. சிறப்பாக Ladies
column தலைப்பில் பெண்கள் கல்வி,
வேலை வாய்ப்பு, பெண்கள்
முன்னேற்றம் பற்றிய செய்திகள்
இடம் பெற்றது. அடுத்து Genaral
news பகுதியில் பொது வர்த்தமானம்,
நாட்டு நடப்புகள், பொதுச் செய்திகள்,
வானிலை அறிக்கை, வாசகர்
கடிதங்கள் அயல் நாட்டுச் செய்திகள்,
விளம்பரங்கள் மற்றும் நூல்
விமர்சனங்களும் தொடர்ந்து இடம்
பெற்றிருக்கின்றன. தமிழர்கள் அதிகம்
வசித்த கர்நாடகா கோலார் தங்க
வயல், குடகு, பர்மா,
தென்னாப்பிரிக்கா, இரங்கூன்,
சிங்கப்பூர்.. போன்ற அயல்
நாடுகளிலும் தமிழன் இதழ் பரவியது.
மூட நம்பிக்கை,
தீண்டாமை கொடுமைக்கு ஆதரவளிக்கும்
வேத இதிகாசப் புரட்டுகள் பற்றி,
பிராமணீய மேலாதிக்கம்
பற்றி விரிவாக ஆய்வு செய்தார்.
யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
வேஷ பிராமண வேதாந்த விவரம்,
ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு,
விபூதி ஆராய்ச்சி போன்ற நூல்களில்
வேத மத எதிர்ப்பு, பிராமணீய
எதிர்ப்பு, மூடப்பழக்கம்
எதிர்ப்பு,சாதி ஒழிப்பு போன்ற
கருத்துக்களைக் குறித்து விரிவாக
எழுதினார்.
தமிழகத்தில் எந்த இயக்கமும்
தோன்றாத காலத்தில், சமூக நீதி,
சமூக மதிப்பிடுகள்
விளிம்பு நிலை ஒடுக்குமுறைகள்
குறித்து பேசினார். அதிகாரத்தில்
பங்கு, பிரதிநித்துவ அரசியல்
ஒடுக்கப்பட்டோர் விடுதலை,
பெண்ணியம், தமிழ் மொழியுணர்வு,
பகுத்தற்வு, சுயமரியாதை,
சாதி ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு,
வேத மத, பிராமணீய எதிர்ப்பு,
தீணடாமை போன்ற
கருத்துகளை உரையாடல் செய்து பல
இயக்கங்களுக்கு ஒரு முழுமையான
அரசியல்கொள்கை தொகுப்பை வழங்கி தமிழன்
இதழின்
நூற்றாண்டு விழாவை தமிழக
அரசு கொண்டாடி பெருமைபடுதியது.
இதழியலிலும், அரசியலிலும் நவீனம்
குறித்த கருத்தாக்கங்கள் தமிழன்
இதழிலிருந்தே துவக்கம் பெற்றன
என்று நாம் உறுதியாக கூறலாம்.
பௌத்த இயக்கம்
திராவிட உணர்வுக்கு உந்துதல்
பெரியார் ஈ. வெ. ராமசாமி
தன்னுடைய பகுத்தறிவு ,
சுயமரியாதை
கருத்துகளுக்கு அயோத்திதாசர் தான்
முன்னோடி என்று பதிவு செய்திருக்கிறார்.
படைப்புகள்
க. அயோத்திதாசப் பண்டிதர் நவீன
இந்தியா கண்ட மாபெரும்
அறிஞர்களுள் ஒருவர். தென்னிந்திய
சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர்.
தனித்தமிழ் இயக்கத்தைத்
தொடங்கி வைத்தவர். அசோகருக்குப்
பிறகு தமிழகத்தில் பௌத்த
மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்.
தலித் மக்களின் விடுதலையைத்
தொடங்கி வைத்தவர். ‘தமிழன்’ என்ற
அடையாளம் தந்தவர்.
இவரது கருத்துகள் ‘தமிழன்’ இதழ்
மூலமும், ‘தென்னிந்திய சாக்கிய
பௌத்த சங்கத்தின்’ மூலமும்
தமிழ்நாடு, கோலார், மைசூர்,
ஐதராபாத், ரங்கோன், மலேசியா,
ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா எனப்
பல்வேறு இடங்களுக்குப்
பரவி ஒரு மாபெரும் இயக்கமாக
வளர்ந்தது. அவரது அறிவு ஒளி,
இன்றும் சமூகத்திற்கு வெளிச்சமாக
இருக்கிறது. க. அயோத்தி தாசர்
நூல்கள்
1. அம்பிகையம்மன் அருளிய
திரிவாசகம
2. அம்பிகையம்மன் சரித்திரம
3. அரிச்சந்திரன் பொய்கள்
4. ஆடிமாதத்தில்
அம்மனை சிந்திக்கும் விவரம
5. இந்திரர் தேச சரித்திரம
6. இந்திரர் தேச பௌத்தர்கள்
பண்டிகை விவரம
7. கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
8. சாக்கிய முனிவரலாறு
9. திருக்குறள் கடவுள் வாழ்த்து
10. திருவள்ளுவர் வரலாறு
11. நந்தன் சரித்திர தந்திரம்
12. நூதன சாதிகளின் உள்வே பீடிகை
13. புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
14. புத்த மார்க்க வினா விடை
15. பூர்வ தமிமொளியாம்
புத்தாது ஆதி வேதம்
16. மாளிய அமாவாசை எனும்
மாவளி அமாவாசி தன்ம விவரம்
17. முருக கடவுள் வரலாறு
18. மோசோயவர்களின் மார்க்கம்
19. யதார்த்த பிராமண வேதாந்த
விவரம்
20. விபூதி ஆராய்ச்சி
21. விவாஹ விளக்கம்
22. வேஷ பிராமண வேதாந்த விவரம்
23. பூர்வ தமிமொழியாம்
புததரது ஆதிவேதம்
24. இந்திரர் தேச சரித்திரம்
25. சாக்கிய முனிவரலாறு
26. வேஷபிராமண வேதாந்த விவரம்
27. யதார்த்த பிராமண வேதாந்த
விவரம்
28. மோசோயவர்களின் மார்க்கம்
29. ஆடிமாதத்தில்
அம்மனை சிந்திக்கும் விவரம்
30. மாளிய அமாவாசை எனும்
மாவளி அமாவாசி தன்ம விவரம்
31. நூதன சாதிகளின் உற்சவ பீடிகை
32. அம்பிகையம்மன் சரித்திரம்
33. இந்திரர் தேச பெயத்தர்கள்
பண்டிகை விவரம்
34. விவாஹ விளக்கம்
35. அம்பிகையம்மன் அருளிய
திரிவாசகம்
36. நந்தன் சரித்திர தந்திரம்
37. முருக கடவுள் வரலாறு
38. கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
39. விபூதி ஆராய்ச்சி
40. திருக்குறள் கடவுள் வாழ்த்து
41. அரிச்சந்திரன் பொய்கள்
42. திருவள்ளுவர் வரலாறு
43. புத்தமார்க்க வினா விடை.
தொடங்கி நடத்திய இதழ்கள்
1. திராவிடப்பாண்டியன் (1885)
(ரெவரென்ட் ஜான் ரத்தினம்
அவர்களுடன் இணைந்து)
2. ஒரு பைசாத் தமிழன் (தமிழன் (1907
-1914) பண்டிதர் க. அயோத்திதாசர்
சுமார் 25 நூல்கள் 30
தொடர்கட்டுரைகள் 2 விரிவுரைகள்,
12
சுவடிகளுக்கு உரை எழுதியவை தவிர
அரசியல் கட்டுரைகள்
கேள்வி பதில்கள் பகுத்தறிவுக்
கட்டுரைகள் எனச் சில
நூறு கட்டுரைகளை அவர்
எழுதினார். தான்
மறைவதற்கு ஒரு வருடம்
முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள்
உரையானது 55 அதிகாரங்களுடன்
நின்று விட்டது. பண்டிதரின் மரணம்
தான் அதற்குக் காரணம்.

No comments:

Post a Comment