Total Pageviews

Wednesday 21 November 2012

கொஞ்சம் சைக்காலஜி

கொஞ்சம் சைக்காலஜி
தெரிஞ்சுக்கலாமா?
1. மொக்கை மேட்டருக்கெல்லாம்....
ஒருத்தன் ரொம்ப,
விழுந்து விழுந்து,
குதிச்சு குதிச்சு
சிரிக்கிறான்னு வைங்க.....அவனோட
அடி மனசுல கேட்ட எண்ணங்கள்
இருப்பதற்கான
வாய்ப்பு நிறையவே இருக்காம்.
2. ஒருத்தர் ரொம்ப
அதிகமா தூங்கராருன்னா .......
அவர் ரொம்ப தனிமையை விரும்பும்
ஆளாக இருக்கணும்,
இல்லைன்னா தனிமையில்
விடப்பட்டவரா இருக்கணுமாம்.
3. எப்போதும் கம்மியா பேசுற
ஆளு.....ஏதாவது ஒரு
விசயத்துக்கு மட்டும்
அதிகமா பேசினால், அந்த
விஷயத்துல இருக்கும் ரகசியம்
எதையோ அவர் மறைக்க
விரும்புராருன்னு அர்த்தமாம்.
4. செமையான சோக
மேட்டருக்கு கூட ஒருத்தருக்கு
அழுகாச்சியே வரலைன்னா,
அவரு மனசளவுல ரொம்ப
வீக்கானவராம்.
5.
சாதரணமா இல்லாம......சாப்பிடும்
போது,
பறக்காவட்டி தனமா ஒருத்தர்
சாப்பிட்டாக்க ,
அவரு ஒரு டென்ஷன் பார்ட்டியாக
இருக்க
வாய்ப்பு ஜாஸ்தியா இருக்காம்.
6. சின்ன சின்ன
விஷயத்துக்கெல்லாம்....
உண்மையிலேயே ஒருத்தர்
அழுதாருன்னா, அவரு ஒரு விவரம்
தெரியாத, இளகிய
மனசு உள்ளவராம்.
(பச்சை மண்ணு.)
7. சப்பை மேட்டருக்கெல்லாம்
தாவி குதிக்கராருன்னு
வச்சுக்கங்க, அவரு காதலில்
விழுந்து கோட்டை கட்டிக்கிட்டு
இருக்கற கொத்தனாராம்.

Tuesday 20 November 2012

தமிழரின் கோவில்

தமிழர்கள் பெரும்பாலோர் ”குலதெய்வ
வழிபாடு” செய்வார்கள். நம்
முன்னோர்களை வழிபடுவதே ”குலதெய்வ
வழிபாடு”.
பண்டை காலத்தில் கோவில்கள் கீழ்காணும்
வகையில் வகைப் படுத்தபட்டுள்ளன.
பெருங்கோயில் - மாடக் கோயில்
குன்றுகள் மேல்
கட்டப்பட்டவை பெருங்கோயில்கள்.
கரக்கோயில்
தேரைப் போன்ற அமைப்புள்ளது.
ஞாழற் கோயில்
நறுஞ்சோலைகளின்
நடுவே யமைந்தது ஞாழற்கோயில்.
இளங்கோயில்
பழமையான கோயில்களுக்கு மாறாகக்
காலத்தால் பிற்பட்ட கோயில்கள்
இளங்கோயில்கள்.
மணிக்கோயில்
மணிபோன்ற விமான அமைப்பைக் கொண்ட
கோயில்.
கொகுடிக் கோயில்
முல்லைக் கொடிகள் படந்த சூழ்நிலையில்
அமைந்தது.
ஆலக்கோயில்
ஆலமரத்தடியில் எழுந்த கோயில்கள்
ஆலக்கோயில்கள்.


பெரிய கோவில்

தஞ்சைப் பெருங்கோவில்: தமிழர்களின்
சாதனை..!
சித்தபெருமான் கருவூரார் அவர்களால்
வடிவமைக்கப்பட்டு சோழப்பேரரசால்
கட்டப்பட்ட தஞ்சைப் பெருங்கோவில்.
உலகின் அதிசயம் என கூறப்படும்
இத்தாலியில் உள்ள "பீசா கோபுரம்"(pisa
tower) மூன்று கட்டமாக 177 வருடங்கள்
கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை முதலில்
கட்டும் போது, இதன் கீழ் உள்ள
மண்ணை சோதிக்காமல் (soil test)
ஒரு கட்டிடம் கட்டுவதற்கான
அடிப்படை விசயங்களைக் கூட
கடைப்பிடிக்காமல் கட்டிட
அடித்தளத்தை காத்திரமில்லாமல்
கட்டினர். இதனால் இந்த கட்டிடம்
சாயத்தொடங்கியது... இரண்டாம் தளம்
கட்டும் போது போர் மூண்டதால் இதன்
கட்டுமானம் சிறிது காலம்
நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர்
தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள
மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால்
மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது !
ஒரு காத்திரமில்லாத கட்டுமானத்திற்க
ு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக
அதிசயப்பட்டியலில் இன்றும் உள்ளது !
(AUG 8TH 1173 - 1372)
நம் தஞ்சையில் உள்ள சித்தபெருமான்
கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்ட
ு, சோழப்பேரரசால் கட்டப்பட்ட 216
அடி உயரமான உலகையே மிரளச்செய்யும்
தஞ்சை பெரிய கோயில் வெறும் 12
ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன்
கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன்
( 80,000 கிலோ ) எடை கொண்டது.
உலகையே வியக்க வைக்கும் இந்த 1000
வருடங்களாக்கு மேலாக கம்பீரமாக
நிற்கும் இப்பிரமாண்டான கட்டிடம்
இன்று வரை எந்த தொழில் நுட்பமும்
இல்லாத அந்த காலத்தில்
எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாக
வைத்துள்ளது. இப்படிப்பட்ட கட்டிடம்
உலக அதிசய பட்டியலில் இடம்
பெறாதது வருத்தத்திற்குரியது.
காணொளி (video doumentary by BBC)
http://video.google.com/videoplay?
docid=-5096103596865842301
If you don't have the access 4
google video, try the following
youTube links.
1. http://youtu.be/SnANjdReAlY
2. http://youtu.be/yJomuGsi2fU
3. http://youtu.be/za6nYK4L9ns
4. http://youtu.be/c2a0GcoJAjw
5. http://youtu.be/hkCjoSJpkJ8
watch the full video.
200 தாஜ்மகால்களுக்கு ஈடான நில,
கலை, கட்டட நிபுணத்துவம் கொண்ட
கோவில். இருந்தும் இது உலக
அதிசயங்களில்
இடம்பெறாதது கேள்விக்குரியது
நவீன கட்டிட நிர்மானத் தொழில்நுட்பங்கள
ால் கூட தஞ்சைப் பெரிய கோவிலின்
மகிமையை இன்றுவரை முழுமையாக
விளங்கிக்கொள்ள முடியாதுள்ளது.
சில நேரங்களில் வெளியில் உள்ளதைப்
பற்றி வியப்படையும் நாம், நம்
தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும்
சிறப்பாக உள்ளவற்றைப்
பற்றி மறந்து விடுகின்றோம் !
இந்த தகவலை நண்பர்களுடன்
பகிர்ந்து கொளுங்கள்!
வாழ்க தமிழ்!