Total Pageviews

Friday 27 April 2012

பாரம்பரிய உணவு

நலம் தரும் பாரம்பரிய
உணவுகள
நலம் தரும் பாரம்பரிய உணவுகள்
"தோலுடன் சாப்பிடுபவை மிகச்சிறந்த
உணவு' :
இயற்கை மருத்துவ சங்க கூட்டத்தில்
தகவல் கும்பகோணம்: கும்பகோணம்
அருகே ஆடுதுறை இயற்கை மருத்துவ
சங்கத்தின் 333வது கூட்டம்
ஆடுதுறை மாவட்ட ஆசிரியர்
கல்வி நிறுவனத்தில்
செயற்குழு உறுப்பினர் மழைநீர்
பொறியாளர் வரதராஜன் தலைமையில்
நடந்தது. செயலர் ராமலிங்கம் கூட்ட
அறிக்கை, கணக்கை படித்தார்.
இணை செயலாளர்
திருநீலக்குடி உலகநாதன்
வரவேற்றார். தலைவர் வரதராஜன்
உடற்பயிற்சிகளை செய்து காட்டினார்.
கும்பகோணம் குழந்தைகள் நல
மருத்துவர் விருதகிரி, "நலம் தரும்
பாரம்பரிய உணவுகள்,' என்ற
தலைப்பில் பேசியதாவது:
சுவாமிமலை முருகனுக்கு தேனும்,
தினைமாவும், சூரியனார்கோவில்
நவக்கிரகங்களுக்கு நவதானியங்கள்
படைக்கப்படும். இவை தோலுடன்
சாப்பிடக்கூடிய உணவுகள்.
தோலுடன் சாப்பிடக்கூடிய
உணவுகளே மிகச்சிறந்த உணவுகள்.
கம்பு, கேழ்வரகு, வரகு, தினை,
சாமை முதலிய தானியங்களை நம்
முன்னோர்கள் அதிகம்
உண்டு நோயின்றி ஆரோக்கியமாக
வாழ்ந்தனர்.
குழந்தைகளின் மிகச்சிறந்த
சத்துணவு தாய்ப்பால்தான்.
குழந்தை பிறந்த
அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால்
கொடுக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு பின்
இரண்டாண்டுகள்
வரை தாய்ப்பாலுடன் பருப்பு, நெய்,
கீரை, காய்கறிகள் சேர்ந்த
உணவு கொடுக்கலாம். தாய்ப்பால்
சுரக்க அரிசி சாதத்துடன் பூண்டு,
பச்சைப்பயறு முதலியவற்றை சமைத்துக்
கொடுக்கலாம். டப்பாக்களில்
அடைக்கப்பட்ட
உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க
தேவையில்லை. பதப்படுத்தப்பட்ட
உணவுகள் பயனில்லாத உணவுகள்.
நாட்டில் எளிமையான சத்துகள்
உண்டு.
கைக்குத்தல் புழுங்கல் அரிசி மிகுந்த
சத்துள்ளது. குறுணை அரிசியில்
இட்லி, கொழுக்கட்டை முதலிய
பலகாரங்கள் செய்து சாப்பிடலாம்.
வரகரிசியில் பொங்கல்,
உப்புமா செய்து சாப்பிடலாம்.
ஊறவைத்த அரிசி இரண்டு பங்கு,
முடக்கத்தான்
இலை அல்லது செம்பருத்தி இலை ஏதேனும்
ஒரு கீரை, தோலுடன் ஊற வைத்த
உளுந்து அரை பங்கு அரைத்து தோசையாக
சாப்பிடலாம். கீரைகள்
சிறுநீரகத்தை கெடாமல் காப்பாற்றும்.
நெல்லிக்காயும், எலுமிச்சையும்
மிகச்சிறந்த உணவுகள்.
நம் முன்னோர்கள்
பிஞ்சு வாழைக்காயை சேர்த்து சாப்பிட்டுள்ளார்கள்.
இஞ்சி, பூண்டு, பெருங்காயம்
ஆகியவற்றில் நுண்தாதுப் பொருள்கள்
உள்ளன. மஞ்சள் மிகச்சிறந்த
கிருமிநாசினி. இது ஞாபக
மறதி நோய்க்குத் தடுப்பாக
அமைகிறது. நல்லெண்ணைய்,
கடலை எண்ணையும் நம் உடல்
நலத்துக்கு ஏற்றவை. மலைத்தேன்
உடலுக்கு தி தரக்கூடியது.
தேங்காய் மிகச்சிறந்த உணவு.
அதனால் தான்
இறைவனுக்கு படைக்கிறார்கள். அதில்
நடுத்தரமான அமிலம் உள்ளது.
அது சிறுநீரகத்திலும், கல்லீரலிலும்
கொழுப்பாக படியாது.
"மாறுபாடில்லாத
உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு,'
என்று வள்ளுவர் கூறியுள்ளார். நம்
நாட்டில் எளிய
சத்துணவுகளை வறுத்தல்,
பொரித்தல், எண்ணையில்
வேகவைத்தல் முதலிய
முறைகளை பயன்படுத்தி மாறுபடுத்தாமல்
நீரில் வேகவைத்தல், நீராவியல்
வேகவைத்தல் முதலிய
முறைகளை பயன்படுத்தி அளவு மீறாமல்
உண்டு வந்தால்
நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment