Total Pageviews

Thursday 26 April 2012

தமிங்கிலம்

தமிங்கிலம்
தமிழ்
செந்தமிழ்
கொடுந்தமிழ்
முத்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
துறை வாரியாகத் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
ஆட்சித் தமிழ்
சட்டத் தமிழ்
அறிவியல் தமிழ்
மீனவர் தமிழ்
மருத்துவத் தமிழ்
செம்மொழித் தமிழ்
வட்டார வழக்குகள்
அரிசனப் பேச்சுத் தமிழ்
கொங்குத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
மட்டக்களப்பு பேச்சுத் தமிழ்
மலேசியத் தமிழ்
பிராமணத் தமிழ்
முஸ்லிம்கள் தமிழ்
திருநெல்வேலித் தமிழ்
தஞ்சாவூர்த் தமிழ்
மதுரைத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
குமரிமாவட்டத் தமிழ்
கரிசல் தமிழ்
சென்னைத் தமிழ்
மணிப்பிரவாளம்
தமிங்கிலம்
ஜுனூன் தமிழ்
தொகு
தமிழ் மொழியின்
பேச்சிலோ எழுத்திலோ ஆங்கில
சொற்களின் பயன்பாடு அதிகம்
காணப்படும் பொழுது அந்த
பேச்சையோ எழுத்தையோ
தமிங்கிலம் எனலாம். தமிங்கிலிஷ்,
தங்லிஷ் என்றும் சிலர்
குறிப்பிடுவதுண்டு. தமிங்கிலம்
ஆங்கில வட்டார மொழி இல்லை.
இது தமிழ் மொழியின் திரிபே ஆகும்.
தமிங்கிலத்தை தமிழில் அதிக
சமசுகிரத சொற்களின் பயன்பாட்டால்
தோன்றிய மணிப்பிரவாள
நடையோடு ஒப்பிடுவது தகும். சில
தமிழர்கள் ஆங்கிலத்தில்
தமிழரோடு உரையாடும்
பொழுது தமிழ்
சொற்களை இடையிடையே பயன்படுத்துவதும்
உண்டு.
காரணங்கள்
குடியேற்றவாதம்
ஆங்கில காலனித்துவ ஆட்சியில்
ஆங்கிலம் கல்வி, நிர்வாக, சட்ட, அரச
மொழியாக இருந்தது. அது ஆங்கில
மொழி தமிழ்நாட்டிலும்,
இலங்கையிலும் பரவ வழி வகுத்தது.
தமிழ் மொழியும் ஆங்கில மொழியின்
பல சொற்களை உள்வாங்கியது.
வர்க்கவாதம்
தமிங்கிலம் பேசுவதால்,
அதாவது அதிக ஆங்கில சொற்கள்
பயன்படுத்திப் பேசினால்,
தம்மை படித்தவராக, அல்லது உயர்
வர்க்கத்தவராக
அடையாளப்படுத்தலாம்
என்று எண்ணிப் பலர்
பயன்படுத்துகிறார்கள்.
இது காலனித்துவ காலத்தில் உயர்
கல்வியை அல்லது உயர்
பதிவிகளை ஆங்கிலம் படித்தோர்
மட்டும் பெற்றதன் தொடர்சியான
மனிப் படிவம் ஆகும்.
ஊடகங்கள்
இன்று ஊடகங்களில், குறிப்பாக
தொலைக்காட்சியில் நல்ல தமிழ்
தெரியாத அல்லது சரியான தமிழ்
உச்சரிப்புத் தெரியாத
தொகுப்பாளர்கள் தமிங்கிலத்தைப்
பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.
இதைப் பின்பற்றி பலரும் தமிங்கிலம்
பேசுகிறார்கள்.
உலகமயமாதல்
மொழிக் குறைபாடுகள்
தமிழ் மொழியில் இலகுவாக உயர்
கல்வி பெற இயலாது. குறிப்பாக
கணிதம், பொறியியல், வேதியியல்,
மருத்துவம் போன்ற துறைகளில்
தமிழ் மொழியில் ஆக்கங்கள் அரிது.
இதனால் அன்றாடம் பயன்படும்
மொழியாக ஆங்கிலம்
தமிழ்நாட்டிலும், இலங்கையிலும்
உள்ளன. இப்படி துறைசார்
உரையாடல்களில் ஆங்கிலம் அதிகம்
பேசுப்படுவது அறிவியல் தமிழ்
போதிய வளர்ச்சி பெறாமை காரணம்
ஆகும்.
தமிங்கிலச் சொற்கள் பட்டியல்
மம்மி - Mommy - அம்மா
டாடி - Daddy - அப்பா
பிறதர் - brother - அண்ணா, தம்பி
சிஸ்டர் - sister - அக்கா, தங்கச்சி/
தங்கை
ஃபிரண்ட் - friend - நண்பர்,
நண்பன், நண்பி
ஃபமிலி - family - குடும்பம்
லவ் - love - காதல்
கலோ - Hello - வணக்கம்
சொறி - சாரி - Sorry - மன்னிக்க,
மன்னிக்கவும்
பிளீஸ் - Please - தயந்து,
தயவுசெய்து
தேங்ஸ் - Thanks - நன்றி
குட் னைற் - Good night -
நல்லிரவு, 'நாளைய
பொழுது நன்றாக விடியட்டும்'
பாய் - Bye - போய் வருகிறேன்.
கான்சப்ட் - Concept - கருத்துரு,
கருத்துருவம், கரு,
கருத்துப்படிமம், கருப்பொருள்,
ஐடியா - Idea - எண்ணம்,
எண்ணக்கரு, யோசனை
கிளாசிக் - Classic - செவ்வியல்
இசுக்கூல் - school -
பள்ளிக்கூடம், பாடசாலை
கார்பேய் - garbage - குப்பை,
கழிவு
கம்பியூட்டர் - computer - கணினி
இண்டர்னெட் - internet -
இணையம்
டிரிங்ஸ் - drinks - பானம்,
குடிபானம்
ரயிஸ் - rice - சோறு
கான்வெண்ட் - convent - பள்ளி
இசுபெசல் - special - சிறப்பு
லன்ச் - lunch - மதிய உணவு
டினர் - dinner - இரவு உணவு
ஸ்ருடன்ஸ் - students -
மாணவர்கள், மாணவர்,
மாணவன், மாணவி
ஃபீலிங் - feeling - உணர்ச்சி
கொம்பட்டிசன் - competition -
போட்டி
கொம்பிளையின் - complain -
முறையீடு
பொலிசு - Police - காவல்துறை
னைட் - night - இரவு
சுயசைட் - suicide - தற்கொலை
ஃபோரின் - foreign - வெளிநாடு
ஃபிளட் - flat - மாடி, அடுக்குமாடி
ஊடகங்களில் தமிங்கிலம்
அச்சு மற்றும் எழுத்து ஊடகங்களில்
தமிங்கிலத்தில் பேசுவதும்
எழுதுவதும் நாகரிகமாக
கருதப்படுகின்றது. குறிப்பாக
இளைய
தலைமுறையினரோடு இயல்பாக
தொடர்பாடுவதற்கு தமிங்கிலமே நன்று என்ற
ஒரு கருத்து இருக்கின்றது. ஆங்கிலம்
கலக்காத தமிழில் பேசுவோர் மொழித்
தீவிரவாதிகள்
என்று சித்தரிக்கப்படுவதும்
நகைப்புக்குண்டாவதும் உண்டு.

No comments:

Post a Comment