Total Pageviews

Wednesday 25 July 2012

தாலியின மகிமை்

Semmozhi ( செம்மொழி )
பெண்கள் அணியும் தாலியின் மகிமை –
ஒன்பது இழைத் தத்துவம்
இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான
நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும்
மஞ்சள் நிறத்தில்
தரப்பட்டது என்று விளக்குகிறார்கள்,
தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில்
தாலி இருந்ததாக, இலக்கியங்களில்
குறிப்பிடப்படவில்லை.
சங்க காலத்தின்போது நடந்த
திருமணங்களில் புதுமணல் பரப்பி,
விளக்கு ஏற்றி, வயதில் மூத்தபெண்கள்,
மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி
அவள் விரும்பியவனுடன்
அவளை ஒப்படைத்தனர்.நாளடைவில் “”தாலம்”
என்ற பெயர்தான் தாலியாகமாறியிரு
க்கிறது.பதினோராம்நூற்றாண்டில்தான்
திருமணச் சின்னம்என்ற ரீதியில்
தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்
பட்டது என்கிறது உலகத் தமிழ்
ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட
்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற
புத்தகம்.மாங்கல்யச்
சரடானது ஒன்பது இழைகளைக்
கொண்டது.ஒவ்வொரு இழைகளும்
ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.
1.தெய்வீகக் குணம்,
2.தூய்மைக் குணம்,
3.மேன்மை,தொண்டு,
4.தன்னடக்கம்,
5.ஆற்றல்,
6.விவேகம்,
7.உண்மை,
8.உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.
9.மேன்மை
இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம்
இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
ஒன்பது இழைகள் கொண்ட
திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறத


Saturday 21 July 2012

தாய்லாந்தில் தமிழ்

கீழ்க்காணும் படம் ;- தாய்லாந்தில்
கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம்
நூற்றாண்டைச் சேர்ந்த,
தமிழி எழுத்து படிந்த மட்பாண்டம்.
தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ்
சொற்களின் வேர்கள்..
தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால்
ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ்
மொழியில் இருந்து பலச் சொற்கள்
தாய்லாந்து மொழிக்குத்
தருவிக்கப்பட்டன.
தாய்லாந்து மொழி தமிழ் மொழியின்
துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக்
கூடும்.
அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு,
------------------------------------
1. தங்கம் -> தொங்கம்
2. கப்பல் -> கம்பன்
3. மாலை -> மாலே
4. கிராம்பு -> கிலாம்பு
5. கிண்டி -> கெண்டி
6. அப்பா -> பா
7. தாத்தா -> தா
8. அம்மா -> மே, தான்தா
9. பட்டணம் -> பட்டோம்
10. ஆசிரியர் -> ஆசான்
11. பாட்டன் -> பா, புட்டன்
12. திருப்பாவை -> திரிபவாய்
13. வீதி -> வீதி
14. மூக்கு -> சாமுக்
15. நெற்றி -> நெத்தர்
16. கை -> கை
17. கால் -> கா
18. பால் -> பன்
19. கங்கை -> கோங்கா
20. தொலைபேசி -> தொரசாப்
21. தொலைக்காட்சி -> தொரதாட்
22. குலம் -> குல்
23. நங்கை -> நங்
24. துவரை -> துவா
25. சிற்பம் -> சில்பா
26. நாழிகை -> நாளிகா
27. வானரம் -> வானரா
28. வேளை -> வேளா
29. மல்லி -> மல்லி
30. நெய் -> நெய்யி
31. கருணை -> கருணா
32. விநாடி -> விநாடி
33. பேய்/பிசாசு -> பிச/பிசாத்
34. கணம் -> கணா
35. விதி -> விதி
36. போய் -> பாய்
37. சந்திரன் -> சாந்
38. ரோகம் -> ரூகி
39. தூக்கு -> தூக்
40. மாங்காய் -> மாங்க்
41. மேகம் -> மேக்,மீக்
42. பிரான், -> எம்பிரான் பிரா
43. யோனி -> யூனி
44. சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு -> சான்க்
46. தானம் -> தார்ன்
47. பிரேதம் -> பிரீதி
48. நகரம் -> நகான்
49. பார்வை -> பார்வே
50. ஆதித்தன் -> ஆதித்
51. உலகம் -> லூகா
52. மரியாதை -> மார-யார்ட்
53. தாது -> தாட்
54. உலோகம் -> லூகா
55. குரோதம் -> குரோதீ
56. சாமி -> சாமி
57. பார்யாள் -> பார்ய
58. திருவெம்பாவை -> த்ரீயம்பவாய

தாயலாந்து தமிழ்்

தாய்லாந்து மக்கள்
பேசும் தாய் மொழிக்கும்
தமிழுக்கும் உள்ள
ஒற்றுமை. .
தமிழே தாய்லாந்து மொழிக்கு தாய்.


ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்

ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!
தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும்
நாம் நிறைய
சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த
அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும்
நம்மை அவமானப்படுத்துவதாக
நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத
ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது.
அங்கிருக்கும் அதிபர் மாளிகையான
கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள்
அழகு தமிழில் எழுதியுள்ளார்கள்.
முதலாவதாக அவர்கள் தாய்மொழியான
ரசியத்திலும், இரண்டாவதாக
அண்டைநாட்டு மொழியான சீனத்திலும்,
உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில்
ஆங்கிலத்திலும், நான்காவதாக
தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.
தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள்
பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன.
ஆனால் அவற்றையெல்லாம்
விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர்
மாளிகையின்
பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும்
காரணம் , தமிழர்களாகிய நம்மைச்
சிந்திக்க வைப்பதாக உள்ளது.
“உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும்
தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன்,
எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம்.
இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள்
இன்று வழக்கில் இல்லை.
இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி.
எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய
மொழிகளான 642 மொழிகளிலும் சரியான,
தகுதியான மொழியாக “தமிழ்
மொழி “தென்பட்டது. அந்த மொழியைச்
சிறப்பிக்கவே “கிரெம்ளின் மாளிகை”
என தமிழில் எழுதினோம்”
என்று கூறுகிறார்கள்.
வெளிநாட்டினருக்குக் கூட தமிழின்
அருமை பெருமை தெரிந்திருக்கிறது.
நமக்குத்தான் தெரியவில்லை..
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம்
தமிழின் பெருமை தெரிந்து உள்ளது.
ஆனால் நாமோ’தமிழில் எழுதுங்கள்
என்பதற்கு ஒரு கருத்தரங்கம்
நடத்திக்கொண்டு இருக்கிறோம்’.
சிந்தியுங்கள்……..தமிழர்களே……


Friday 20 July 2012

சிதம்பர ரகசிய அறிவியல்

அக்னி ஏந்திய மேல்
இடக்கை சற்றே வளைந்து பிறை வடிவில்
காணப்படும்
இது அழித்தலைக்குறிக்கின்றது .
பிரபஞ்சம் தோன்றியபோதே பல நுண்
துகள்களும்
தோன்றி நிர்மூலமாகுதலை இது உணர்த்துவதாய்க்
கூறுகின்றனர் . வலது கரங்களில்
ஒன்று அபய ஹஸ்தம்
காட்டுகின்றதல்லவா ? இது நான்
உன்னைக் காக்கின்றேன் என்னும்
காத்தல் தொழிலைக்
குரிப்பிடுவதோடல்லாமல்,
பெரு வெடிப்பு மூலம் தோன்றிய
நுண்துகள்கள்
உடனே அழிந்து விடாமல் காக்கப்
பட்டுப் பின்னர்
அவை ஒன்றோடொன்ரு சேர்ந்து பெரும்
துகள்களாய் மாறி , பின்னர்
அவையே கோள்களாயும்
உருமாறியதாய்க் கூறுகின்றனர் .
இப்படித் துகள்கள் அழிந்திடாமல்
காப்பதையும் இந்தக் காக்கும் கரம்
கூறுவதாய்ச் சொல்லுகின்றனர்.
இடக்கை யானையின் தும்பிக்கையைப்
போல் காணப்படும் இது கஜஹஸ்த
முத்திரை காட்டுகின்றது.
இறைவனின் இந்த
நான்கு திருக்கைகளும்
நான்கு திசைகளையும்
சுட்டுகின்றன . தீ
ஜுவாலைக்கு நடுவே நின்று ஆடுகின்றாரல்லவா நடராஜர்?
அந்தப் பேரொளியைத்
தானே திருவாசியாக வடிவமைக்கப்
பட்டிருக்கின்றது . இந்தத்
திருவாசி பிரகிருதியைக்
குறிக்கின்றது. தீ ஜுவாலை நம்மைச்
சுற்றிச் சுற்றி வரும் இறப்பையும் ,
பிறப்பையும் அதிலேயே நாம்
உழலும் சம்சார சாகரம் என்னும்
பெரும் சக்கரத்தையும்
குறிக்கின்றது. நமது சராசரம்
சுழன்று கொண்டே இருக்கும்
ஒரு சக்கரம் என்ற இயற்பியல்
தத்துவம் இதைக் குறிப்பதாய்ச்
சொல்லுகின்றனர்.
நடராஜத் திருமேனியின் ஆனந்தத்
தாண்டவத்தின் வேகம் மிக அதிகம்
என்றாலும், அந்த அசைவின் வேகம்
காட்டாமாலேயே, திருமுகம் மிக
மிக அமைதியாக
புன்முறுவலோடு காணப்
படுகின்றது . இறைவனின்
பல்வேறுவிதமான
கோட்பாடுகளையும்
இது காட்டுவதாய்ச் சொல்லப்
படுகின்றது . வலச் செவியில் ஆண்
அணியும் தோடும் , இடச் செவியில்
பெண்கள் அணியும் தோடும்
காணப்படுவதால் உலகியல்
தத்துவத்தில் உள்ள ஆண், பெண்
கோட்பாடுகளை வலியுறுத்துவதாய்ச்
சொல்லப் படுகின்றது .
மூன்றாவது நெற்றிக்
கண்ணானது ஞானத்தையும், வளர்பிறை,
மற்றும் தேய்பிறையைக் குறிக்கும்
சந்திரன் மூலம் காலச்
சக்கரத்தையும் , நடராஜர் ஆடி,
ஆடிச்
சுழன்று வருவது ஆக்கலையும் ,
அழித்தலையும் குறிக்கின்றது.
சிரசில் உள்ள மண்டையோடு உயிர்கள்
மரணத்தை வென்று மரணமிலாப்
பெருவாழ்வைப் பெறவேண்டும்
என்பதையும் காட்டுகின்றது.
இந்து சாஸ்திரங்களின்படி இந்த
அண்ட சராசரமும் பஞ்சபூதங்களால்
ஆனது . நீர், நிலம் , காற்று, அக்னி ,
மற்றும் ஆகாசம் ஆகியவற்றின்
வடிவமாகவே நடராஜத்
திருமேனியின் அங்கங்கள் குறிக்கப்
படுகின்றன . ஊன்றிய வலப்பாதம்
பூமியையும் , மேலிருக்கும்
இடக்கை அக்னியையும் , மெய்ம்மறந்த
ஆனந்த நடனத்தால் பரந்து விரிந்த
ஜடாமுடியின் மூலம் காற்றையும் ,
சிரத்தில் உள்ள கங்கை நீரையும்,
கையிலுள்ள டமரு , ஆகாயத்தையும்
குறிக்கின்றது. பஞ்சபூதங்களும்
நடராஜத் திருமேனிக்குள் அடக்கம் .
இந்தப் பிரபஞ்சம்
எவ்வாறு இயங்குகின்றது என்ற
ஆழ்ந்த கருத்தை உள்ளடக்கியதே சிவ
தாண்டவம் ஆகும் . இத்தாண்டவ
நிலையில் மிகச் சிறிய
அணுத்துகள்கள் முதல் மிகப் பெரிய
கோள்கள் வரை அனைத்துப்
பொருட்களின் இயக்கங்களும்
அடங்கியுள்ளன .
கல வரலாற்று அறிஞர் ஆன ஆனந்த
குமாரசாமி எந்த ஒரு கலையும்
மதமும் பெருமைப்படும் வகையில்
அமைந்த இறைவனின்
செயலை உணர்த்தும்
தத்துவமே நடராஜத்
திருமேனி என்கின்றார். " Tao of
Physics " என்னும் நில்லாசிரியர் ஆன
இயற்பியல் வல்லுனர் ஆன பிரிட்ஜாப்
காப்ரா என்பவர் நவீன
இயற்பியலுக்கும் , கிழக்கத்திய
ஆன்மீகத்திற்கும் நெருங்கிய
தொடர்பு உள்ளதாய்க் கூறுகின்றார் .
1975 -ம் ஆண்டு வெளியான இந்த நூல்
25 ஆண்டுகளுக்கு மேலாகத்
தொடர்ந்து பதிப்பிக்கப்
பட்டு விற்பனையாவதோடு அல்லாமல்
25 மொழிகளில் மொழி பெயர்க்கவும்
பட்டுள்ளது .
காப்ரா அவர்கள் " நவீன
இயற்பியலின்படி ஆக்கல் ,
அழித்தலின் தாளம் , - Rhythm
என்பது காலங்களில் ஏற்படும்
மாற்றம் , பிறப்பு, இறப்பு ஆகிய
மாற்றங்கள் மற்றும் எல்லாவிதமான
உயிர்பொருள் சார்பில்லாத மூலக்
கூறுகளின் உட்பொருளாகும்.
ஒவ்வொரு நுண் அணுவும் சக்தித்
தாண்டவத்தின் ஆக்கல் மற்றும்
அழித்தலில்
முடிவில்லா ஒரு பயணமாகச்
செயல்படுகிறது . நவீன இயற்பியல்
அறிஞர்கலுக்கு சிவ தாண்டவன்
என்பது ஒரு நுண் அணுவின்
தாண்டவமே. இந்து புராணங்களிலோ,
இந்தத்
தாண்டவமானது அண்டசராசரமே அடங்கும்
ஒரு பகுதியாகக் கருதப் படும்
ஆக்கல் மற்றும் அழித்தலின் ஓர்
அங்கமாகும் . இதுவே எல்லாவித
உயிரினங்கலுக்கும் அடிப்படையான
ஓர் இயற்கையான சம்பவம் . பண்டைய
இந்தியக் கலைஞர்கள் இந்தத்
தாண்டவத்தை வெண்கலச்சிலைகளாய்
உருவாக்கினர் . இக்கால
விஞ்ஞானிகளோ , அதி நவீன
சாதனங்களைக் கொண்டு இந்தத்
தாண்டவத்தை நடத்துகின்றனர்.
இவ்வாறு நடராஜ வடிவம் பண்டைய
புராணம் , மதம் போற்றும் கலையையும்
மற்றும் நவீன கால இயற்பியலையும்
ஒன்றிணைக்கிறது ."
அமெரிக்க விண்வெளி ஆராய்சியாளர்
காரல் சேகன் "பண்டைய கால
இந்துக்கள் இந்த ஆக்கல் , காத்தல் ,
அழித்தல் அடங்கிய தாண்டவத்தை ஓர்
இறைவடிவாகவே கண்டு அதையே அவர்கள்
சிலையாக வடித்தனர்" என்கின்றார் .
quantum physics and the Dance
of Nataraja என்ற கட்டுரையில்
ஜார்ஜ் காலமரஸ் என்பவர் இந்தத்
தத்துவத்தைப்
பாராட்டி எழுதி இருக்கின்றார்.
சுவாமி விவேகானந்தர் "எண்ணற்ற
பெருமைகளையும் , வானம் போல்
தெளிவையும் , அனைத்திற்கும்
தலைவனான, தன்னையே கடந்தவனான
சிவபெருமானிடம் மாறாத
பக்தி ஏற்படட்டும் "
என்று பிரார்த்திக்கின்றார் .
பிரம்மா படைப்பார்,
விஷ்ணுவோ காத்தலோடு படைக்கவும்
செய்வார் . ருத்ரரோ அழித்தலுக்கான
கடவுளாய் இருந்தாலும்
படைத்தலும் , காத்தலும் செய்வார் .
மகேஸ்வரரோ மாயையை விலக்குகின்றார்
ஆனலும் , அவரும் படைத்தல், காத்தல்
அழித்தலையும் மேற்கொள்கின்றார் .
சதாசிவர் மட்டுமே உலக
பந்தங்களிலிருந்து நம்மை விடுவிப்பவர்.
சதாசிவர் நடராஜ வடிவத்தில்
பஞ்சகிருதி எனப்படும்
ஐந்தொழில்களையும் செய்கின்றார் .
இந்த ஐந்தொழில்களுமே நடராஜர்
வடிவில் அமைக்கப்
பட்டிருக்கின்றது நாம்
உணருகின்றோம் என
ஸ்வாமி விபுலானந்தர் "நடராஜ
வடிவம் " என்ற நூலில்
எழுதி இருக்கின்றார் .
நடராஜப் பெருமான் நமக்கும்
அப்படியே அருள் புரிய அனைவரும்
பிரார்த்திப்போம் . நடராஜ
தத்துவதை விட மர்மமாக
இன்று நடராஜர் படம் போட
முடியாமல் ரொம்பவே சிரமமாகப்
போய்விட்டது . பல நடராஜ
வடிவங்களையும் ப்ளாகர்
ஏத்துக்காமல் இந்த வடிவத்தையும்
அரை மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளது.

படித்ததில் பிடித்தது வளைத்தளத்தில்

தலைப்பு புகழ்பெற்ற ஜான் டோன்னின்
கவிதையிருந்து பிறந்தது. "எந்த
மனிதனும் தீவு அல்ல, இந்த பெரும்
நிலப்பரப்பின் ஒரு அங்கம்தான்'
என்று ஆரம்பித்து, இந்த மனித
சமூகத்தோடு கலந்து இருப்பதால்
ஒவ்வொரு மனிதனின் மரணமும்
என்னை கலங்கச் செய்கிறது. அதனால்,
யாருக்காகவோ  இந்த மணியடிப்பதாக
தெரியவில்லை, எல்லோருக்காகவும்தான்
கேட்கிறது " என்று வரும் அதன்
இறுதி வரிகள். மரணத்தின்
ஓசையை அனைவருக்குமாக
உணர்ந்து வேதனைப்படும் ஆன்மாவின்
செய்தியே இந்தக் கவிதையின்
அடி நாதமாக இருக்கிறது. நாவல்
நெடுக மரணம் குறித்த சிந்தனைகள்
மேலெழும்பி கொண்டிருக்கின்றன.
அதற்கான களமாக ஸ்பானியப் போர்க்
காலம் நம்முன் விரிகிறது.
ஸ்பானியப் போர் என்றதும் பிகாசோவின்
கூர்னிகா நினைவுக்கு வரும்.
உருக்குலைந்து கதறும் மனிதர்களின்
முகங்களும், மிருகங்களின்
மிரட்சியும் காட்சிப்  படலங்களாக
ஊடுருவும் ஓவியம் அது.
வேட்டையாடப்பட்டு வீழ்ந்த மனிதர்களின்
இறுதித் துடிப்புகள் அந்த
நிலமெங்கும் பரவிக் கிடக்கின்றன.
இன்றைக்கு  உலகம் முழுவதும்
நீடிக்கும் இரண்டு பெரும்
முகாம்களின், தத்துவங்களின்
முரண்பாட்டை,
பகைமையை அன்றைக்கு அந்த
நாடு சுமந்து கொண்டிருந்தது.
வரலாற்றில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள்
பற்றிய ஒரு தொடர்-5
1930களில் ஸ்பெயினில் அரசியல்
குழப்பங்கள் தொடர்ந்து நிலவுகின்றன.
1931ல் அரசன்
அல்போன்ஸா தலைமறைவாகிவிடுகிறார்.
இடதுசாரி அரசு ஏற்படுகிறது.
இருந்தும் நிச்சயமற்ற
தன்மை நீடிக்கிறது. 1933ல்
வலதுசாரி பழமைவாதிகள்
அதிகாரத்துக்கு வருகின்றனர். 1936ல்
ஜோஸ் கால்வாஸ் ஒட்டெல்லோவின்
மரணத்திற்குப் பிறகு மக்கள்
வாக்களித்து இடதுசாரி அரசை
தேர்ந்தெடுக்கின்றனர்.
மாறி மாறி நிகழ்ந்த வரலாற்றுத்
திருப்பங்களின் உச்சக்கட்டமாக 1936ல்
ஸ்பெயினில் உள்நாட்டுப் போர்
ஏற்படுகிறது. கம்யூனிசத்திற்கும்,
பாசிசத்திற்கும் ஏற்பட்ட மோதலாக
உருவெடுக்கிறது.
இடதுசாரிகளுக்கு ஆதரவாக
ரஷ்யாவும், சர்வாதிகார
வலதுசாரிகளுக்கு ஆதரவாக
ஜெர்மனியும் இத்தாலியும்
ஸ்பெயினுக்குள்
காலடி எடுத்து வைக்கிறார்கள்.
இரண்டாம் உலகப் போருக்கான
பரிசோதனைக் களமாக அந்த
நாடு மாறுகிறது. சர்வாதிகார
சக்திகளுக்கு எதிராக பல ஜனநாயக
நாடுகளிலிருந்து உதவிகள்
கிடைக்கின்றன. 1939ல் யுத்தம்
முடிவுக்கு வருகிறது.
படைபலமிக்க சர்வாதிகார
சக்திகளே வெற்றி பெறுகிறார்கள்.
இரத்தம் தோய்ந்த இந்த காலமே 'For
Whom the bell tolls    ' என்னும்
நாவலாக ஹெம்மிங்வேயிடமிருந்து
வெளிப்படுகிறது.
ஹெம்மிங்வேயின் வாழ்க்கையே  போர்க்கள
அனுபவங்களாலும், பயணங்களாலும்
நிரம்பியதாக இருக்கிறது. 1899ல்
தங்கள் இரண்டாவது மகனாக பிறந்த
அவரை இசை ஆர்வம் மிக்கவராக வளர்க்க
ஆசைப்படுகின்றனர் அவரது பெற்றோர்.
அவருக்கோ வேட்டைக்குச் செல்வதில்தான்
நாட்டம் இருக்கிறது. பள்ளியில்
கால்பந்து விளையாட்டிலும்,
குத்துச்சண்டையிலும் ஆர்வம்
காட்டுகிறார். 1918ல் முதல் உலகப்
போரில் ரெட் கிராஸ் அமைப்பின்
சார்பில்
ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக
பணியாற்றுகிறார். 1920ல்
'டொரண்டோ ஸ்டார்' பத்திரிக்கைக்காக
துருக்கிப் போரைப் பற்றிய
செய்தியாளராக இருக்கிறார்.
1921லிருந்து ஐரோப்பியாவில்
அந்நியச் செய்தியாளராக
பாரிஸிலிருந்து பணியாற்றுகிறார்.
முசோலினி போன்ற பெரும்
தலைவர்களிடம் பேட்டி காண்கிறார்.
1926ல் Farewell to arms அவரது
முக்கிய நாவலான எழுதுகிறார்.
இரக்கமற்ற உலகமாக போர்க்களம்
இருப்பதைப் பார்க்கிறார். 1929ல் அவர்
எழுதிய the sun also rises என்னும்
நாவலுக்கும் இந்த
அனுபவங்களே பின்புலமாக
இருக்கின்றன. 1937ல் போர்க்கள
செய்தியாளராக ஸ்பெயினுக்குச்
செல்கிறார். அப்போதுதான் for whom
the bell tolls நாவலுக்கான களமும்,
காட்சிகளும், கதாபாத்திரங்களும்
அவருக்குள் படருகிறார்கள். வசீகரமான
நிலப்பரப்பை சத்தங்களாலும், ராட்சச
உருவங்களாலும் பிளந்து செல்லும்
டாங்கிகளை அவர்
வேதனையோடு பார்க்கிறார்.
ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பாசிச
சக்திகளுக்கு எதிராக, இடதுசாரிகள்
ஆதரவு பெற்ற
ஜனநாயகவாதிகளுக்கு உதவி செய்ய
அமெரிக்காவிலிருந்து
ஸ்பெயினுக்கு ராபர்ட் ஜோர்டான்
வருகிறான். அவன் ஒரு அமெரிக்க
ஸ்பானியன். டைனமேட் நிபுணன். சர்வதேச
படைகளின் தலைவரான ரஷ்யாவின்
ஜெனரல் கோல்ஸ் ஆணையின் பேரில்
ஒரு பாலத்தை தகர்க்கும் பணி அவனிடம்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அதையொட்டிய சம்பவங்களோடு அவனுடைய
வாழ்வின்
கடைசி நான்கு நாட்களை நாவல் சொல்ல
ஆரம்பிக்கிறது.
காட்டில் அடர்ந்த
தேவதாரு மரங்களடியில் நிலத்தில்
கிடந்தபடி ஜோர்டான் உற்றுக்
கவனித்துக் கொண்டிருக்கிறான்.
ஒரு விவசாயி போல அவனது உடைகள்
இருக்கின்றன. அன்செல்மோ என்னும்
வயதான மனிதன் தூரத்தில் இருக்கும்
ஆலையொன்றைக் காண்பித்துக்
கொண்டு இருக்கிறான். அதன் அருகில்
சாலையை பழுது பார்த்துக்
கவனிப்பவனின் குடிசையொன்றும்
இருக்கிறது. எதிரிகளின் முக்கிய
தளங்கள் அவை.
வேகமாக மலை ஏறும் அன்செல்மோதான்
அவனுக்கு வழிகாட்டி. தாக்குதல்
ஆரம்பித்த பிறகே பாலத்தை தகர்க்க
வேண்டும். அப்போதுதான்
எதிரிப்படைகளின் டாங்கிகளும்,
படைகளும் அந்தப் பாலத்தின்
வழியே நகர முடியாது.
நிலைகுலைந்து போகும் நேரத்தில்
வான்வழி தாக்குதல்கள் எதிரிகள்
மீது தொடரப்பட வேண்டும். இதுதான்
திட்டம். வெற்றியோ, தோல்வியோ ஜெனரல்
கோல்ஸுக்கு நேரிடையாக இராணுவத்
தாக்குதல் நடத்த வேண்டும்
என்பதில்தான் நாட்டமிருக்கிறது.
மொத்த நடவடிக்கைக்கும் ஸ்பானிய
விவசாயிகளை நம்ப
வேண்டியிருக்கிறதே என்று
எரிச்சலுமிருக்கிறது.
காடுகளின் ஊடே மலைப் பாதையில்
ஏறி ஜோர்டானை ஒரு குகைக்கு
அழைத்துச் செல்கிறான் அன்செல்மோ.
கொரில்லாக் கூட்டம் ஒன்றின் பிரதேசம்
அது. அகஸ்டினையும், ரபேலையும்
பார்க்கிறார்கள். ரபேல்
இதற்கு முன்பு ஒரு ரயிலை குண்டு
வைத்து தகர்ப்பதற்காக வந்து அதில்
தானே மாட்டிக் கொண்டு இறந்து போன
கஷ்கினைப் பற்றி சொல்கிறான்.
அந்தக் கொரில்லாக்களின் தலைவனான
பாப்லோ சிடுமூஞ்சியாகவும், மன
தைரியமற்றவனாகவும்
காணப்படுகிறான்.
கிராமத்திற்கு சென்று, தான்
சம்பாதித்து இருக்கும்
குதிரைகளை வைத்து அமைதியான
வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற
கனவோடு பாப்லோ இருக்கிறான்.
ஜோர்டானின் நடவடிக்கைகளில்
நம்பிக்கையில்லாமல் வாதிடுகிறான்.
அவனது வாழ்வையும், கூட்டத்தையும்
ஆபத்தில் மாட்டி விடுகிற
காரியத்தை அந்த அந்நியன் செய்யச்
சொல்வதாகத் தோன்றுகிறது.
அந்தக் கூட்டத்தில் இரண்டு பெண்கள்
இருக்கிறார்கள். ஒருத்தி பிளர்.
பாப்லோவின் மனைவி.
இன்னொருத்தி மரியா.
போர்க்கைதிகளை கொண்டு சென்ற
ரெயிலில் இருந்து காப்பாற்றப்பட்டவள்.
பாசிஸ்டுகளால் பலாத்காரம்
செய்யப்பட்டு முடி முழுவதும்
அகற்றப்பட்ட நிலையில் மிகுந்த
பரிதாபமான முறையில்
வந்தவளுக்கு இப்போது முடி கொஞ்சம்
வளர்ந்திருக்கிறது. அழகான தோற்றம்
கொண்டவளாயிருக்கிறாள். பிளர்
அழகற்றவளாயிருந்தாலும், அவளது
துணிச்சலுக்காக போற்றப்படுகிறவள்.
போர் ஆரம்பமானதும், பாப்லோவின்
நடவடிக்கைகளால்
நிலைகுலைந்து போயிருந்த அந்தக்
கூட்டத்தை அவளே
பாதுகாத்திருந்தாள். நாடோடிப்
பெண்ண்ணான அவள் ஜோர்டானின்
உள்ளங்கையைப் பார்த்து ஜோசியம் சொல்ல
ஆரம்பிக்கிறாள். முழுவதையும்
சொல்லாமல்  மறைக்கிறாள்.
பாப்லோ தனது கோழைத்தனத்தால்
கூட்டத்தின் தலைமைப் பொறுப்பில்
இருந்து விடுவித்துக் கொள்கிறான்.
பாலத்தை தகர்ப்பதில்
தனக்கு சம்மதமில்லை என பகிரங்கமாக
பேச ஆரம்பிக்கிறான். பிளர்
கூட்டத்தின் தலைவியாக
நின்று ஜோர்டானுக்கு
ஆதரவளிக்கிறாள்.
பாப்லோவை கொன்றுவிடலாமா என்று
ரபேலுக்கு ஆத்திரம் வருகிறது.
பாப்லோ தொடர்ந்து நம்பிக்கையற்றும்,
அவமானப்படுத்தியும்
பேசிக்கொண்டே இருக்கிறான்.
ஜோர்டானுக்கே தான் இறங்கியிருக்கும்
செயல் சரியா, தப்பா என்று தோன்ற
ஆரம்பிக்கிறது.
அந்த முதல் நாள் இரவில்,
குகைக்கு வெளியே இருக்கும்
அவனது கூடாரத்திற்கு மரியா
வருகிறாள். சிதைந்தும், நொந்தும்
போயிருந்த அந்த சின்னஞ்சிறு  பெண்
ஜோர்டானிடம் அன்பு செலுத்துவதற்கு
யோசிக்கவில்லை. இருவரும் கலந்து,
கரைந்து போகிறார்கள். பாவப்பட்ட
தன்னை, இந்தக் காதல்
புனிதப்படுத்துவதாக
மரியா நம்புகிறாள். மெல்ல
தன்னிலைக்குத் திரும்புகிற ஜோர்டான்,
வாழ்வில் முதன்முதலாக
ஒரு பெண்ணோடு ஏற்பட்ட உறவின்
சிலிர்ப்பில் சந்தோஷம் கொள்கிறான்.
இந்த புதிய உறவை கண்டு,
களிப்படையும் காலம்
ஜோர்டானுக்கு இருக்கவில்லை. தான்
இறங்கியிருக்கும் பாதையில்
எதிர்கொள்ளும் தடைகளே முன்னுக்கு
வந்து நிற்கின்றன. இரண்டாம் நாள்
காலையில் உயரத்தில் பறந்த
எதிரியின் விமானங்கள் அந்த
முகாமில் பெரும் குழப்பத்தையும்,
அதிர்வையும் ஏற்படுத்துகின்றன.
மரியா, பிளர், ஜோர்டான் மூவரும்
எல்சோர்டோ என்னும் கொரில்லாத்
தலைவனைச் சந்திக்க மலைப் பாதையில்
ஏறிச் செல்கிறார்கள்.
பாலத்தை தகர்ப்பது என்பது கடும்
ஆபத்தான செயல் என்று சொன்னாலும்,
அவன் உதவ சம்மதிக்கிறான். அவர்கள்
முகாமைவிட்டு கிளம்பவும்
பனி பொழிய  ஆரம்பிக்கிறது. அந்த
சமயத்தில் பயணிப்பது எதிரிகளுக்கு
எல்சோர்டோவின் தடங்களைக் காட்டிக்
கொடுத்து விடும்.
அன்செல்மோதான் ஒரே நம்பிக்கையாக
இருக்கிறான். ஒரு செயலில்
காட்டுகிற ஈடுபாட்டையும்,
விசுவாசத்தையும் மீறி, அவனுக்குள்
மனிதாபிமானம் நிறைந்து
இருக்கிறது. பாலம் தகர்க்கும்
பணியில்
இன்னொரு மனிதனை கொல்வதற்கு ஜோர்டான்
கட்டளையிடுவானோ என்றுதான்
கவலைப்படுகிறான். எதிரிகள்
எல்லோரையும் பாசிஸ்டுகளாக அவன்
பார்க்கவில்லை. தன்னைப் போல சாதாரண,
எளிய நாட்டுப்புற மனிதர்கள்தான்
அவர்களும் என்றுதான் தோன்றுகிறது.
கொரில்லாக்கள்
உட்கார்ந்து பேசுகிறார்கள்.
மரியாவைப்பற்றி ஜோர்டானிடம்
பாப்லோ கொச்சையாகப் பேகிறான்.
இதையேச் சாக்காக வைத்து அவனைச்
சண்டைக்கு அழைத்து கொன்றுவிடலாமா
எனத் தோன்றுகிறது. பிளர் அவனைக்
கடுமையாகப்
பேசி விரட்டி விடுகிறாள். மெல்ல
பாப்லோ தணிந்து விடுகிறான்.
நாடோடிகளுக்கு மரணத்தின்
வாசனை தெரிந்துவிடும் என்கிறாள்
பிளர். தான் அங்கு மிகக் குறைவான
அவகாசமே இருக்க வேண்டியிருக்கும்
என்பதை உணர்ந்திருக்கும் ஜோர்டான்
அன்றும்
மரியாவோடு தாபத்தோடு உறவு
கொள்கிறான். 'என் முயலே, உன்னை நான்
திருமணம் செய்து கொள்வேன்' என
பிதற்றுகிறான். மாட்ரீட்டில் அவர்கள்
நடத்தப் போகும் குடும்பத்தைப் பற்றிய
கனவுகளில் ஆழ்ந்து போகிறார்கள்.
தானும் மரியாவும், அந்தக் காட்டில்
ஒரே  விலங்காகி விட்டதைப் போல
இருக்கிறது. மரணத்திற்கு எதிரான
ஒரு கூட்டாகவும்
அது புலப்படுகிறது.
மூன்றாம் நாள் காலை, எதிரிப்படையின்
குதிரைகளின் சத்தத்தில்
விழிக்கிறான்.
ஓளிந்து நின்று பார்க்கிறார்கள்.
சத்தங்கள் கரைகின்றன. மரியாவை தான்
காதலித்தாலும்
அவளை ஜோர்டானுக்கு கொடுத்து
விட்டதாக அகஸ்டின் கருதுகிறான்.
மிக நாகரீகமாக ஜோர்டானிடம்
அதை வெளிப்படுத்துவதோடு
பெருந்தன்மையாகவும்
நடந்து கொள்கிறான்.
கொஞ்ச நேரத்தில் எல்சோர்டோவின்
முகாமிலிருந்து சத்தங்கள்
கேட்கின்றன. அவர்களுக்கு உதவ
வேண்டும் என்று ஜோர்டானுக்குத்
தோன்றவில்லை. பாலத்தைத்
தகர்ப்பதே அவனுக்கு பிரதான பணியாக
முன் நிற்கிறது.
அதுவரை கண்டுபிடிக்கப்படாமலிருக்க
வேண்டும் என்பதுதான்
முக்கியமாயிருக்கிறது.
எல்சோர்டாவின் முகாமில் ஜாக்குவின்
என்னும் இளைஞன் கம்யூனிஸக்
கோஷங்களை முழக்கமிட்டவாறே தன்
சகாக்களை உற்சாகப்படுத்துகிறான்.
முடிந்தவரையில் எதிரிகளைக்
கொல்வது என போரிடுகிறார்கள்.
மேலிருந்து வீசப்பட்ட சக்திவாய்ந்த
அதற்கு அவகாசம் அளிக்கவில்லை.
அங்கிருந்த அனைவரும்
கொல்லப்படுகிறார்கள்.
அடர்த்தியான
மரங்களுக்கு ஊடேயிருந்து
சூரியனின் கதிர்கள்
பாய்ந்துகொண்டிருக்க
அல்சென்மோ பிரார்த்தனை செய்கிறான்.
ஜெனரல் கோல்ஸுக்கு தாக்குதலை
தாமதப்படுத்த வேண்டும் என
ஒரு செய்தியை ஆண்ட்ரூஸ் மூலம்
ஜோர்டான் அனுப்புகிறான். அந்தப்
பயணத்தில் பார்க்கும் காட்சிகள்
படைகளிடம் காணப்படும்
அலட்சியத்தையும், தலைவர்களின்
அசிரத்தையையும் விவரிக்கின்றன.
மரணம் பற்றிய கவலையற்ற
மனிதனாயிருந்த
ஜோர்டானுக்கு இப்போது அடிக்கடி
மரணம் பற்றிய சிந்தனைகள் வருகின்றன.
தன் தந்தை தற்கொலை செய்து கொண்டதும்,
தன் தாத்தா போர்க்களத்தில் வீரமரணம்
அடைந்ததும் ஞாபகத்துக்கு
வருகின்றன.
அன்று இரவு மரியாவும், ஜோர்டானும்
தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக்
கவலைப்பட்டு பேசிக்
கொண்டிருக்கிறார்கள்.
உயிரோடு இருப்போமா, இல்லையா என்று
தெரியாத நிலையில்
அதிர்ஷ்டத்தை நம்புகிறார்கள்.
விரைவில் எல்லாவற்றையும்
முடித்து விடுபட வேண்டும்
என்று ஆசைப்படுகிறான். மரியாவோடு
சந்தோஷமாக வாழும்
ஆசை அவனை அலைக்கழிக்கிறது.
அவனது மொத்த காலத்தையும் இந்த
மூன்று நாட்களில் வாழ்ந்துவிட்டதாகத்
தெரிகிறது.
வெடிமருந்துகளை எடுத்துக்
கொண்டு பாப்லோ ஓடிவிட்டதாக
காலையில் பிளர்
வந்து எழுப்புகிறாள். தனது திட்டம்
பலிக்குமா என்று தெரியாமல்
தவிக்கிறான் ஜோர்டான்.
பாலத்தை தகர்ப்பதற்கு போதுமான
உபகரணங்கள் குறைவாக இருக்கிறது.
தாக்குதல் தொடுப்பதை தாமதப்படுத்த
ஜெனரல் கோல்ஸுக்கு அனுப்பிய  தகவல்
தாமதமாகப் போய்ச் சேருகிறது.
எப்படியும் பாலத்தை உடனடியாக
தகர்த்தாக வேண்டிய
நெருக்கடிக்கு ஆளாகிறான் ஜோர்டான்.
தான் ஒன்றும் கோழையல்ல
என்று ஐந்து புதிய
கொரில்லாக்களோடு வந்து சேருகிறான்
பாப்லோ. குதிரைகளுக்காக
தனது புதிய சகாக்களை பலியிட
தயாராகிவிட்டானோ என்று சந்தேகம்
வருகிறது.
பாலத்தை வந்தடைகிறார்கள். அதன்
காவலாளியைக்
கொல்லும்படி அன்செல்மோவுக்கு
கட்டளையிடுகிறான்  ஜோர்டான். கண்ணில்
நீர் பெருகியபடி அதனை
நிறைவேற்றுகிறான் அவன்.
பாலத்துக்கு வெடி வைக்கிறார்கள்.
உருண்ட பாறையின் அடியில்
சிக்கி அன்செல்மோ இறந்து போகிறான்.
எதிரிகளோடு நடக்கும் சண்டையில்
ஜோர்டான், பாப்லோ, பிளர், மரியா,
பிரிமிட்டிவோ, அகஸ்டின்
ஆகியோரே மிஞ்சுகிறார்கள்.
குதிரையில் ஏறித் தப்ப
முயற்சிக்கும்போது ஜோர்டான்
மீது குண்டு பாய்கிறது. கால்
ஒடிந்து அவனால் நகர முடியவில்லை.
"நாமிருவரும் ஒருவரே... நீ தப்பியாக
வேண்டும். நமக்காக வாழ வேண்டும்"
என்று மரியாவை அனுப்புகிறான்.
எதிரிகளோடு சண்டைபோட இயந்திரத்
துப்பாக்கியொன்றைக்
கொடுத்து விட்டு அவர்கள்
புறப்படுகிறார்கள்.
வலியில் துடிக்கும்
ஜோர்டானுக்கு தற்கொலை செய்து
கொள்ளும் எண்ணங்கள் தலை தூக்குகின்றன.
ஆனால் எதிரிகளோடு கூடுமான
வரை சண்டை போட்டு
நேரத்தை கடத்துவதன் மூலம், தன்
சகாக்கள் தப்பிக்க முடியும் என
காத்திருக்கிறான். முதல்
அத்தியாயத்தில் அவன்
தேவதாரு மரங்களடியில்
படுத்திருந்தானே அதே நிலையில்
இருந்தபடி உற்று கவனித்துக்
கொண்டு இருக்கிறான்.
அவனது இதயத்துடிப்பு கேட்டுக்
கொண்டிருக்கிறது.
கதை முடிவடைகிறது.
விவசாயிகளும், கொரில்லாக்களும்
எப்படி போரைப் பார்த்தார்கள்,
தலைவர்கள் குறித்த சிந்தனைகள்,
கம்யூனிஸம் குறித்த ஜோர்டானின்
பார்வை, ஒரு பெரும் காரியத்துக்காக
தன்னை இழக்கப் போகிறோம் என்னும்
போராளிகளின் தியாகங்கள்,
பாசிஸ்டுகளின் வக்கிரங்கள் என
ஒரு பெரும் அரசியல் களத்துக்குள்
அழைத்துச் செல்கிறது நாவல்.
ஹெம்மிங்வேயின் கவிதை தோய்ந்த
வரிகளில் காதலும், போரும்
எதிரெதிர்
நிலையிலிருந்து மனிதனை
ஆட்டுவிப்பதை காண முடிகிறது.
மரணத்தை எதிர்பார்த்திருக்கும்
மனிதனின் கண்கள்
எதையெல்லாமோ சொல்லிக்
கொண்டே இருக்கிறது. அவனுக்கான
இறுதி மணி அடிக்கப்பட்டுவிட்டது
என்பது புரிகிறபோது,
வாகனுக்குள்ளும் அந்த
ஓசை கேட்டு சலனப்படுத்துகிறது.
கதை முடிந்த பிறகும்
அது ரீங்காரமிடுகிறது. இழப்பைத்
தவிர வேறு எதையும்  போர் மூலம் பெற
முடியாது என்பதை உணர்த்தியபடி
இருக்கிறது.
நாவலில் போரைக் கடுமையாக எதிர்த்த
போதும்,
ஹெம்மிங்வே இடதுசாரிகளுக்கு
ஆதரவான நிலையில்
நின்றிருப்பதை உணரமுடியும்.
அவர்கள்தான் மக்களால் இறுதியாக
ஸ்பெயினில்
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
சாதாரண எளிய மனிதர்களுக்கான
அரசாக அது அமைந்திருந்தது.
சர்வாதிகார சக்திகளுக்கு  எதிராக
இயங்கும் கொரில்லாக்களில்
பெரும்பாலோர் விவசாயிகளாக
இருப்பதை நாவலில்
காட்டியிருக்கிறார். போராடும்
மக்களுக்காக, ஆரம்பத்தில்
ஹெம்மிங்வே நிஜ வாழ்க்கையிலும்
நிதி திரட்டி கொடுத்திருக்கிறார்.
சர்வாதிகாரி பிராங்கோவுக்கு
ஆதரவாக படையனுப்பிய
ஹிட்லருக்கும், முசோலினிக்கும்
எதிரான கருத்துக்கள் கொண்டிருந்தார்.
போர் நடந்து கொண்டிருக்கும்
போது அதை நேரில் பார்த்தவருக்கு,
போருக்கு காரணமான இரண்டு சக்திகள்
மீதும் விமர்சனம் ஏற்பட்டது. பிராங்கோ
ஸ்பெயினின் அதிகாரத்துக்கு வந்த
பிறகு இந்த நாவலை தடை செய்தார்.
பாசிசத்திற்கு எதிரான இந்த
நாவலை தனக்கு எதிரானதாக அவர்
கருதினார். அவர் மரணமடைந்த பிறகு,
1975ல் இந்த நாவல் ஸ்பெயினுக்குள்
விற்பனையானது. ஆனால் அதற்குள் உலகம்
முழுவதும் இந்த நாவல் பெரும் அளவில்
பேசப்பட்டு விட்டது. ஏராளமான
வாசகர்கள்
விவாதித்து விட்டிருந்தனர்.
பிராங்கோவுக்கு வந்த மரணம் இந்த
புத்தகத்திற்கு வரவில்லை.
சதாம் உசேன் கொல்லப்பட்ட போது, இந்த
நாவலின் தலைப்பில்
ஒரு கட்டுரை பாக்தாத்தில்
இருந்து எழுதப்பட்டு இருக்கிறது.
சதாமுக்காக அடிக்கப்பட்ட மணியா
ஈராக் போர் என்ற கேள்வியையும்,
இதுவரை இந்த போரில் இறந்து போன
லட்சக்கணக்கான சாதாரண
மனிதர்களுக்கான அனுதாபத்தையும்,
இதற்கு காரணமான புஷ்ஷை சர்வதேச
நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க
வேண்டும் என்று நியாயத்தையும்
வலியுறுத்துகிறது அந்த கட்டுரை.
'யாருக்காக  மணியடிக்கிறது'
சர்வாதிகாரிகளுக்கு எதிராக
தனது ஓசையை எழுப்பிக்கொண்டே
இருக்கிறது காலகாலமாய்.