Total Pageviews

Thursday 20 December 2012

தமிழை பற்றி பாரதி

தமிழை பற்றி பாரதி
கூறியது..
1) யாமறிந்த
மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய்,
உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக்
கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ?
சொல்லீர்!
தேமதுரத்
தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
2) யாமறிந்த
புலவரிலே கம்பனைப்போல,
வள்ளுவர்போல்,
இளங்கோ வைப்போல்
பூமிதனில்
யாங்கணுமே பிறந்ததிலை,
உண்மை, வெறும்
புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க்
குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில்
தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!
3) பிறநாட்டு நல்லறிஞர்
சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல்
வேண்டும்;
இறவாத புகழுடைய
புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்
வேண்டும்;
மறைவாக
நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில்
வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல்
வேண்டும்.
4) உள்ளத்தில்
உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல்
கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும்
குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின்
சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.
மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

அடிப்படை தமிழ் குழந்தைகளுக்கு

'அடிப்படைத் தமிழறிவைக்
குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?'
''எண்களோடு எண்ணங்களை இணைத்துக்
கற்றுக்கொடுங்கள்;
அப்படியே நெஞ்சில் ஒட்டும்.
ஒன்று: வானம் - ஒன்று.
இரண்டு: ஆண், பெண் -
சாதி இரண்டு.
மூன்று: இயல், இசை, நாடகம்-
தமிழ் மூன்று.
நான்கு:
வடக்கிலிருந்து வருவது வாடை,
தெற்கிலிருந்து வீசுவது தென்றல்,
கிழக்கிலிருந்து
தீண்டுவது கொண்டல்,
மேற்கிலிருந்து வாட்டுவது கோடை-
தமிழன் காற்றுக்கு வைத்த பெயர்
நான்கு.
ஐந்து: எழுத்து, சொல், பொருள்,
யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.
ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு,
உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-
சுவைகள் ஆறு.
ஏழு: குரல், துத்தம், கைக்கிளை,
உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப்
பண்கள் ஏழு.
எட்டு: நகை, அழுகை, இளிவரல்,
மருட்கை, அச்சம், பெருமிதம்,
உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள்
எட்டு.
ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு,
நாசி இரண்டு, வாய் ஒன்று,
முன்னொன்று, பின்னொன்று-உடலி­
ன் வாசல்கள் ஒன்பது.
இப்படி எண்களுக்குப் பக்கத்தில்
எண்ணங்களைப் பொருத்தித்
தமிழியம் கற்றுக்கொடுக்க
முடியுமா என்று கருதிப்பாருங்கள்
தமிழாசிரியப் பெருமக்களே!''
-அகரமுதலி

Thursday 6 December 2012

சாதனை காது கேளாதவர்க்கு

காது கேளாதவர்களும்
செல்போனை பயன்படுத்துவதற்கான
கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள்
புதுக்கோட்டை மாணவர்கள்...
காது கேளாதவர்களும் இனி செல்போனில்
பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக்
கண்டுபிடித்துள்ளார்கள்,
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள
செந்தூரான் பொறியியல்
கல்லூரி மாணவர்களான சிவனேஷ்,
வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர்.
இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல்
மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்
இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும்
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் படிப்பின்
இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள்
கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம்
மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத்
துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல்,
நம்மைப் போலவே காது கேளாதவர் கள்
பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும்
ரசிக்கமுடியும்.
ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக்
கருவியில் பிரத்யேகமாக
இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான்
இருக்கிறது சங்கதி.
ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப்
பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப்
பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின்
பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன்
செயல்பாடு.
"பொதுவாகவே மூக்கு, தொண்டை,
காது போன்றவை ஒரே நரம்பால்
பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால்,
இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான
பல் இதற்கு உதவி செய்கிறது.
ஹெட்போனில் இருக்கும் நீண்ட
குச்சி போன்ற அமைப்பு பேசும்போது,
தொடர்ந்து பல்லில்
பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள்
கேட்க உதவி செய்கிறது. இந்தத்
தொழில்நுட்பத்தால் பேசுவதைக்
கேட்பதோடல் லாமல் பாடலையும் கேட்க
முடியும்" என்று சிவனேஷ் தங்கள்
கருவியின் செயல்பாட்டைப்
பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும்
கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500
ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.
பேட்டரி மூலம் இயங்கும் இந்தக்
கருவியை எந்த
செல்போனோடு வேண்டுமானாலும் இணைத்துப்
பயன்படுத்த முடியும்.
தற்பொழுது பேடண்ட் வாங்க
முயற்சித்து வருகிறார்கள்.
அது கிடைத்து, தொழிற் சாலையில்
தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான
விலைக்கே வழங்க முடியும்
என்கிறார்கள்.