Total Pageviews

Friday 15 June 2012

தமிழரின் அளவை முறை

இக்கட்டுரையுடன் (அல்லது இதன்
பகுதியுடன்) பழந்தமிழர்
அளவை முறை என்ற கட்டுரையை
இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
(கலந்துரையாடவும் )
பண்டைய தமிழர்களின் அளவை முறைகள்
மிகவும் விசித்திரமானவை . அந்தக்
காலக்கட்டங்களில் தமிழர்கள்
மனக்கணக்குகள்தான் செய்தார்கள்
என்று பல துப்புரவாளர்களும் ,
அறிஞர்களும் கூறுகின்றனர் .
பூமாலைகளை நீள அளவான முழம் என்ற
அளவினால் பயன்படுத்தும்
முறையை இன்றும் வழக்கில் உள்ளதைப்
பார்க்கலாம் . பண்டைய
கட்டடக்கலைகளிலும் முழம் என்ற
அளவையே தமிழர்கள்
பின்பற்றியிருக்கிறார்கள் . இதற்குச்
சான்றாகப் பல முழக்குச்சிகளை
( ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம்
உள்ள ) பயன்படுத்தியதாகத்
துப்புரவாளர்கள்
கண்டறிந்து உள்ளார்கள் .
ஆகவே தமிழர்களின் நீள
அளவை முறைகள் தரப்படுத்தப்
பட்டுள்ளதை நாம் தீர்க்கமாகச்
சொல்லமுடியும் .
பால் , எண்ணெய்களை (நீர்மம்)
அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற
அளவை உருவாக்கி இருக்கிறார்கள் .
அதற்குச் சான்றாக ஓர் உழக்கு ,
இரு உழக்கு அளவிலான செப்பு ,
பித்தளை , வெள்ளிப் பாத்திரங்கள்
தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில்
இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம் .
ஆகவே பண்டைய தமிழர்களின்
அளவை முறைகள் தனித்துவம்
வாய்ந்ததாக அமைகின்றன . பின்வரும்
பட்டியல் , வாய்பாடுகள் பண்டைய
தமிழர்கள் உருவாக்கிய
அளவை முறைகள் ஆகும் .
Uzhakku (உழக்கு: அளவைக்கருவி)
நிறுத்தலளவை
1 உளுந்து அல்லது 1 கிரெயின் - 65
மி. கி.
1 குன்றி - 130 மி. கி.
1 மஞ்சாடி - 260 மி.கி.
1 மாசம் - 780 மி.கி.
1 பனவெடை - 488 மி.கி.
1 வராகனெடை - 4.2 கி.
1 டிராம் - 4.2 கி.
1 கழஞ்சு - 5.1 கி.
1 பலம் - 41 கி. (35 கி.)
1 கஃசு அல்லது கைசா - 10.2 கி.
1 தோலா - 12 கி.
1 ரூபாவெடை - 12 கி.
1 அவுன்ஸ் - 30 கி.
1 சேர் - 280 கி.
1 வீசை - 1.4 கி.கி.
1 தூக்கு - 1.7 கி.கி.
1 துலாம் - 3.5 கி.கி.
பொன்நிறுத்தல் வாய்ப்பாடு
4 நெல் எடை = 1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி = 1 பனவெடை
8 பனவெடை = 1 வராகனெடை
5 பனவெடை = 1 கழஞ்சு
4 கழஞ்சு = 1 கஃசு
4 கஃசு = 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு
32 குன்றிமணி = 1 வராகனெடை
10 வராகனெடை = 1 பலம்
40 பலம் = 1 வீசை
6 வீசை = 1 தூலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்
முகத்தலளவை
1 சோடு - 360 நெல்
1 ஆழாக்கு - 168 மி.லி.
1 உழக்கு - 336 மி.லி.
1 உரி - 672 மி.லி.
1 நாழி - 1.3 லி.
1 குறுணி - 5.3 லி.
1 பதக்கு - 10.7 லி.
1 முக்குறுணி - 16.1 லி.
1 தூணி - 21.5 லி.
1 கலம் - 64.5 லி.
1 தேக்கரண்டி - 4 மி.லி
1 குப்பி - 700 மி.லி.
1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி.
1 நெய்க்கரண்டி - 4.0 மி.லி.
1 உச்சிக்கரண்டி - 16 மி.லி.
1 மேசைக்கரண்டி - 16 மி.லி.
1 பாலாடை - 30 மி.லி.
1 எண்ணெய்க்கரண்டி - 240 மி.லி.
முகத்தல் வாய்ப்பாடு
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 குறுணி (மரக்கால்)
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி
Liquid and grain measures:
2 செவிடு = 1 பிடி
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 நாழி
8 நாழி = 1 குறுணி
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி அல்லது காடி
3 தூணி = 1 கலம்
-சான்றாதாரம் : வித்துவான் வை.
சுந்தரேச வாண்டையார்,
முப்பது கல்வெட்டுக்கள்
பெய்தல் வாய்ப்பாடு
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
( 48 ) 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
கால வாய்ப்பாடு
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
எண் வாய்ப்பாடு
10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்
நீள வாய்ப்பாடு
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
எண் கூறுகளின் பெயர்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால் வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரை
1/102400 - கீழ்முந்திரை
1/1075200 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 -
குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்
துகள்
எண் கூற்று வாய்ப்பாடு
1 இம்மி = 11 மும்மி
11 மும்மி = 7 அணு
1 அணு = 9 குணம்
1 குணம் = 5 பந்தம்
1 பந்தம் = 6 பாகம்
1 பாகம் = 7 விந்தம்
7 விந்தம் = 17 நாகவிந்தம்
1 நாகவிந்தம் = 14 சிந்தை
1 குரல்வளைப்படி = 60 வெள்ளம்
1 வெள்ளம் = 100 நுண்மணல

No comments:

Post a Comment