Total Pageviews

Tuesday 5 June 2012

எம்டன்

நாஞ்சில்
நாட்டிலிருந்தும்
உலகம்
போற்றிய
உன்னத
மகவு ஒன்றை தமிழகம்
ஈன்றெடுத்தது.
திருவாங்கூர்
சுதேச
அரசாங்க சேவையில்
தலைமை கான்ஸ்டபிளாக இருந்த
சின்னச்சாமி அவர்களுக்கும் – நாகம்மாள்
என்ற சாதாரண ஏழைத்தாய்க்கு 1891- ல்
பிறந்தார் செண்பகராமன். இவரை “செம்பக்”
என்றும் அழைப்பர்.
திருவனந்தபுரத்தில் செண்பகராமன்,
உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார்.
பையனாக இருக்கும்போதே சர் வால்டர்
ஸடிரிக்லாண்டைச் (British biologist)
சந்தித்தார். செண்பகராமனின் உறவினர்
பத்மநாபப் பிள்ளையும் அந்தப்
பிரிட்டிஷ்காரருக்கு நெருங்கிய
நண்பரானார். வால்டர், கப்பலில் அவருடைய
நாட்டுக்குத் திரும்பியபோது,
செண்பகராமனையும் பத்மநாபப்
பிள்ளையையும் தம்முடனேயே அழைத்துச்
சென்றார். ஆனால்
பத்மநாபப்பிள்ளை கொழும்பு போனவுடன்
கப்பலில்
இருந்து இறங்கி திருவனந்தபுரம்
வந்து சேர்ந்தார்.
செண்பகராமனுக்கு அப்போது வயது பதினைந்து.
அவர் பிரயாணத்தைத்
தொடர்ந்து ஐரோப்பாவில் இறங்கினார்.
அவரை வால்டர் அங்குள்ள பள்ளியில்
சேர்த்து உயர்நிலைப் படிப்பை முடிக்க
வைத்தார் பிறகு, செண்பகராமன் ஓர்
இன்ஸ்டியூட்டில் சேர்ந்து என்ஜினீயரிங்
படிப்பில் டிப்ளமா பெற்றார்.
முதல் உலகப் போர் நடந்த
போது ஜிரிஸ்டின் சர்வதேசிய இந்தியக்
கமிட்டியை 1914-ல் செண்பகராமன்
உண்டாக்கினார். அவரைப் போன்ற எண்ணம்
கொண்ட இந்தியர்களும்
அங்கே இருந்தனர்.சரோஜினி நாயுடுவின்
மூத்த சகோதரர் வீரேந்திரநாத்
சட்டோபாத்யாயா,
மகாத்மா காந்தி இவர்களுடன்
சேர்ந்து இந்திய தேசியக் காங்கிரûஸ
ஐரோப்பாவில் உண்டாக்கினார். அதில்
சுவாமி விவேகானந்தரின் சகோதரர்
பூபேந்திரநாத் தத்தாவும்
சேர்ந்திருந்தார்.
இந்தியன்
விடுதலை கமிட்டியை ஆம்ஸ்டர்ம்ஸ், ஸடாக்
ஹோம் நகரங்களிலும் அமெரிக்காவிலுள்ள
வாஷிங்டனிலும் ஆரம்பித்தார்கள்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
வியன்னாவுக்கு வந்தபோது செண்பகராமன்
அவரிடம்
தமது திட்டங்களை விளக்கினார். ஹிட்லர்,
இந்தியர்கள்
ஆட்சி பொறுப்பை நடத்துவதற்கு தகுதி அற்றவர்கள்
என்று கூறியபோது செண்பகராமன்
அவருக்குக் கடிதம்
எழுதி அவரை மன்னிப்பு கேட்கும்படி செய்தார்.
1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம்
நாள் எம்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில்
பயணித்து, சென்னையிலுள்ள செயின்ட்
ஜோர்ஜ் கோட்டையைத் தகர்க்க
வெடிகுண்டு வீசியவர்தான்
செண்பகராமன் .
அமெரிக்கப் பேரரசின் இனவெறியில்
சிக்கி நாள்தோறும் செத்துப் பிழைத்த
நீக்ரோ மக்களுக்காகக் குரல் கொடுத்தார்,
அருந்தமிழ்ப் புதல்வன் செண்பகராமன்.
அப்போதைய அமெரிக்க குடியரசுத்
தலைவர் உட்ரோ வில்சனைச் சந்தித்து,
கறுப்பின மக்களின்
துயரங்களை எடுத்துரைத்தார்.
“பெரும்பான்மை மக்களின்
கருத்திற்கு மாறாக தாம் நடந்து கொள்ள
இயலாது” என்று உட்ரோ வில்சன்
மறுத்துரைத்துவிட்டார். இருந்தும்
சோர்வுபடாமல், தன்னைக் கொலை செய்யக்
காத்திருக்கும் இனவெறியர்களின்
மிரட்டலை மீறி, செண்பகராமன் ஊர் ஊராகச்
சென்று நீக்ரோ மக்களைச் சந்தித்துத்
தனது வலிமையான கருத்துப்
பிரசாரத்தை நடத்தினார்.
1931-ல் மணிப்பூரைச் சேர்ந்த
லஷ்மிபாயை பெர்லினில் சந்தித்துத்
திருமணம் செய்து கொண்டார்
செண்பகராமன். “விடுதலை பெறக்கூடிய
தகுதி இந்தியர்களுக்குக் கிடையாது”
என்று சொன்னதற்காக ஹிட்லரிடம்,
இந்தியா பற்றியும் அதன் தலைவர்கள்
குறித்தும் ஆணித்தரமான தகவல்களைக்
கூறி செண்பகராமன் வாதம் புரிந்தார்.
அவரின் கூர்மையான
வாதத்திறமைக்கு முன்னர் ஹிட்லரின்
பேச்சு எடுபடாத காரணத்தால்,
எழுத்து மூலமாக செண்பகராமனிடம்
மன்னிப்புக் கோரினார் ஹிட்லர். ஜெர்மன்
நாஜிகளுக்கு இந்தச் சம்பவம்
எரிச்சலூட்டிய காரணத்தால்,
செண்பகராமனைக் கொலை செய்யத் திட்டம்
தீட்டி உணவில் விஷம் வைத்துக் கொஞ்சம்
கொஞ்சமாகக் கொன்றனர். 1934 ஆம்
ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள்
அவரது அன்பு மனைவி இலட்சுமி பாயின்
மடியில் உயிர் துறந்தார்.பிள்ளைக்குத்
தனது அஸ்தியை இந்தியாவுக்குக்
கொண்டு செல்லவேண்டும் என்பதுதான்
இறுதி ஆசையாக இருந்தது. அவர் இறந்த
பிறகு அவர் மனைவிக்கு எண்ணற்ற
கஷ்டங்களை ஜெர்மானியர்கள்
கொடுத்தார்கள்.எல்லாவற்றையும்
பொறுத்துக் கொண்ட செண்பகராமனின்
மனைவி மும்பை வந்து சேர்ந்தார்.
செண்பகராமனின் அஸ்தியையும்
அவரது டயரிகளையும் சில ரகசிய
தஸ்தாவேஜுகளையும் கொண்டு வந்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற
பிறகு இந்திய
கடற்படை அவரது அஸ்தியை 1966-ல்
கொச்சிக்கு எடுத்துச் சென்றது.
“சுதந்திர இந்தியாவின் முதல்
குடியரசுத் தலைவராக வீரன்
செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்”
என்ற ஜெர்மன் மன்னர் கெய்சரின் விருப்பம்
நிறைவேறாமற் போனாலும், “சுதந்திர
இந்தியாவில், நாஞ்சில்
தமிழகத்து வயல்களிலும்,
கரமனை ஆற்றிலும் எனது சாம்பலைத் தூவ
வேண்டும்” என்ற செண்பகராமனின்
விருப்பம் மட்டும் 1966 ஆம்
ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் நாள்
இந்திய அரசின்
உதவியோடு நிறைவேறியது.
ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில்,
“நாஜிகளுடன் கலந்து, சற்றும்
பயமின்றிப் பணிபுரிந்த சொற்ப
இந்தியர்களில் செண்பகராமன்
முதன்மையானவர்”
என்று புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
உலக நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து,
உலகத் தலைவர்களைச்
சந்தித்து இந்தியாவின் விடுதலைக்காக
ஆதரவு திரட்டிய செண்பகராமன் என்ற
பெருமகனின் வரலாறு, மிக விரிவான
அளவில் ஆராயப்பட்டு பள்ளி, கல்லூரி,
பல்கலைக்கழகம் என அனைத்து நிலையிலும்
உள்ள பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட
வேண்டும்.

No comments:

Post a Comment