Total Pageviews

Friday 22 June 2012

விளக்கு குப்பை

விளக்கு வைத்தவுடன்
வீடு கூட்டி குப்பை கொட்ட கூடாது ஏன் ?
அக்காலத்தில் மின்சாரம் இல்லை.
சிறு அகல்விளக்கு, வெளிச்சம்
பெரியதாக தந்திருக்காது. அச்சமயம்
நாம் பயன்படுத்திய சிறுபொருட்கள்
( விலையுயர்ந்த அல்லது தேவையுள்ள
சிறிய பொருட்கள்) ஏதேனும் தவறுதலாக
கீழே விழுந்து கிடந்து, கூட்டிப்
பெருக்கி குப்பையாக எடுக்கும்பொழுது
அவற்றுடன் சேர்த்து கொட்டபடலாம்.
இதனையே பகல் நேரத்தில் செய்தால்
ஒருவேளை நம் கண்களுக்குப் புலப்படலாம்.
எனவே மாலையில் கூட்டிப் பெருக்குதல்
கூடாது என சொல்லி சென்றனர்.

No comments:

Post a Comment