Total Pageviews

Tuesday 19 June 2012

6. முதுமை6. முதுமை***********செல்வப்பொலிவு,கொழுப்பு ஆகியவை மாறி உறுதியானபல் விழுந்து, கண்கள்குழி விழுந்து இருண்டு,வயது முதிர்ந்து, முடி நரைத்து,கண்களில் திரை விழுந்து, வாத நோய்வந்து பீடையுற்று வருந்தி,நடை தள்ளாடிக் கையில்தடி ஏந்தி நடக்கும்காலம் முதுமை.இதைப் பட்டினத்தார்:"வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்விழுந்து இருகண்கள்இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்துவாதவிராத குரோதம் அடைந்துசெங்கையினில் ஒருதடியும் ஆகியே -"என்கிறார்.8மறுமொழிகள்புதன், ஜனவரி 25, 20065. காளைப் பருவம்5. காளைப் பருவம்********************ஆண்டுகள் பதினாறு ஆனபின்னே,சிகையைக் கோதிக் கொண்டையிட்டு, அதில்பொன் மணி ஆரங்கள் தொங்கவிட்டு,அலங்கரித்து வெளியே வருகின்றபோது அனைவரும்வணங்குவர். மோகங்கொண்ட மங்கையர், இவன்மன்மதனின் அழ்குடையமேனியை உடையவனாய் இருக்கின்றான் எனஅவனைக் கவர மாய்மாலங்கள்செய்து அவனைக் கவர்கின்றனர். அவர்களின்நிலையில்லா அழகைக் கண்டு, அவர்களின்பின் ஓடி காம சுகத்தில் மயங்கிக்கூடி,இத்தனை நாள் சேர்த்து வைத்திருந்தகைமுதலாம்விந்து சக்தியை ஒட்டு மொத்தமாகஎடுத்து மங்கையருக்கு வழங்கி,தன்னிடமுள்ளசொத்து பத்து ஆகியவையெல்லாம்தொலைத்துப் பின் வாலிபத்தையும்இழக்கிறான்.இதை பட்டினத்தார்:********************"மயிர்முடிகோதி அறுபத நீல வண்டிமிர்தண்தொடைகொண்டை புனைந்து மணிபொன் இலங்கும்பணிகள் அணிந்துமாகதர் போகதர் கூடி வணங்க -மதன சொரூபன் இவன் என மோகமங்கையர்கண்டுமருண்டு திரண்டு வரிவழிகொண்டு சுழியஎறிந்துமாமல் போல் அவர் போவது கண்டுமனது பொறாமல் அவர் பிறகோடி மங்கலசெங்கலசந்திகள் கொங்கை மருவமயங்கி இதழ்அமுதுண்டுதேடியமாமுதல் சேரவழங்கிஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும்வம்பில் இழந்து மதனசுகந்த விதனம்இதென்றுவாலிபகோலமும் வேறு பிரிந்து "2மறுமொழிகள்வெள்ளி, ஜனவரி 20, 20064. கல்விப் பருவம்4. கல்விப் பருவம்********************பெயர் சூட்டுவிழா நடக்கிறது. உண்பவர்,தின்பவர் யாராயினும் பேதமில்லாமல்அவர்களோடு உண்ணும் பையன், தன்நண்பர்களுடன் தெருவில் புழுதியில்விழுந்து புரண்டு ஐந்து வயது வரை விளையாடுகிறான்.பின்னர் அவனைப் பெற்றோர்குருகுலத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.அங்கு எல்லாக் கலைகளையும்பயின்று வரும் சிறுவன், வளர்பிறைபோல்வளர்ந்து பதினாறு வயதுடைய் காளைப்பருவத்தை எட்டுகிறான்.இதைப் பட்டினத்தார்:"வாஇரு போவென நாமம் விளம்பஉடைமணிஆடை அரைவடமாட உண்பவர்தின்பவர்தங்களோடுஉண்டு தெருவிலிருந்து புழுதியழைந்துதேடியபாலரொ டோடிநடந்து அஞ்சு வயதாகி விளையாடியேஉயர்தரு ஞானகுரு உபதேசம்முத்தமிழின்கலையும்கரைகண்டு வளர்பிறையென்று பலரும்விளம்பவாழ்பதினாறு பிராயமும் வந்து"2மறுமொழிகள்திங்கள், ஜனவரி 16, 20063. மழலைப் பருவம்3. மழலைப் பருவம்*********************பிறந்த குழந்தைக்குப் பெயர்சூட்டு விழா நடக்கிறது.அது குழந்தைக்குத் தெரியாது.உணவு தேடுவதொன்றே அதற்குத்தெரிந்தது. அம்மாவிடம் பால்அருந்துகிறது. தூங்குகிறது. இந்தஇரண்டு செயல்கள் மட்டுமே அதற்குத்தெரியும். மனிதன்அப்படியே இருந்துவிட்டால் நம்"வாழ்க்கையெனும் ஓடத்தில்"ஓடி கஷ்டப்படவேண்டியிருக்காது அல்லவா?அதையும் பட்டினத்தார்:"மகளிர்கள் சேனை தரவணையாடை மண்படஉந்திஉதைந்து கவிழ்ந்து மடமயில்கொங்கை அமுதம் அருந்திஓரறிவாகி வளர்ந்துஒளிநகைஊறல் இதழ்மடவாரும்உவந்து முகந்திடவந்து தவழ்ந்து மடியில்இருந்து மழலை மொழிந்து" என்கிறார்.4மறுமொழிகள்2. மனிதனின் பிறப்பு - தொடர்ச்சி2. மனிதனின் பிறப்பு*********************ஒரு ஆணும் பெண்ணும் மனம்ஒருமித்து இசைந்து இணையும்போது,உணர்வு (கலங்கக் கூடாத ஒன்று)கலங்கி ஒழுகிய விந்து முட்டைக்குள்விழுந்து கர்ப்பப் பைக்குள்வளர்ந்து இந்தத் தரையில் விழுகிறது.இதைப் பட்டினத்தார்:""ஒருமடமாதும்ஒருவனுமாகி இன்பசுகந் தரும்அன்பு பொருந்தி உணர்வு கலங்கி ஒழுகியவிந்துஊறு சுரோணித மீது கலந்துபனியில்ஓர்பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்துபுகுந்துதிரண்டு பதுமஅரும்பு கமடம்இதென்றுபார்வை மெய்வாய்செவி கால்கைகள் என்றஉருவமுமாகி உயிர்வளர் மாதமொன்பதும்ஒன்றும்நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில்விழுந்து"என்கிறார்.மனிதன் பிறந்து விட்டான்.6மறுமொழிகள்ஞாயிறு, ஜனவரி 15, 20061. மனிதன் பிறப்பதெப்படி?1. மனிதன் பிறப்பதெப்படி?*************************"முட்டையிலிருந்து கோழியா?அல்லது கோழியிலிருந்து முட்டையா?"பதில் சொல்லுங்கள். சொல்ல முடியாது.அதுபோல்தான் மனிதனின் உற்பத்தியும்.மனிதனிடம் உற்பத்தியாகும்விந்து(முட்டை) ஆகியவற்றால் மனிதன்பிறக்கிறானா? அல்லது விந்து(முட்டை)ஆகியவை மனிதனிடம்உற்பத்தியாகிறதா?இதுக்குப் பதில் தேடிக்கொண்டிருந்தால்வாழ்க்கை முடிந்து விடும்.அப்படின்னா, வாழ்க்கை எனும் ஓடத்தில்பிரயாணம் செய்வதெப்படி.பின்வரும் பதிவுகளில்.


No comments:

Post a Comment