Total Pageviews

Monday 11 February 2013

சங்க கால தண்டனை -மூன்று

கண்களைப் பறித்துத் தண்டனை
பயிர் விளைந்த ஒரு நிலத்தில்
ஒரு பசு மேய்ந்ததற்காகப் பசுவின்
சொந்தக்காரர் ஒருவரின் கண்களைப்
பறித்தனர் கோசர்கள். ஊர்
மன்றத்தில் இந்தக் கடும்
தண்டனை பற்றிக் கோசர்கள்
முடிவு செய்தனர்.
கண்களை இழந்த
தந்தைக்கு நியாயம் கிடக்கும்
வரை நோன்பு இருக்க அவனுடைய
மகள்
அன்னிமிஞிலி முடிவெடுத்தாள்.
உண்கலத்தில் உண்ண மாட்டேன்
என்றும் புத்தாடைகளை உடுக்க
மாட்டேன் என்றும்
உறுதி எடுத்தாள். பின்னர் குதிரைப்
படைத் தலைவனான திதியன்
என்பவனிடம் சென்று கோசர்களைப்
பழி வாங்கும் படி முறையிட்டாள்.
திதியனும் படையெடுத்துச்
சென்று கோசர்களைக் கொன்றான்.
அன்னிமிஞிலி சினம்
தணிந்து உடல் பூரித்து நின்றாள்.
இந்தச் செய்தியை (அகம் 262, 196)
பரணர் நமக்கு அழகிய கவிதையில்
தெரிவிக்கிறார். இதைப்
படிக்கையில் மதுரையை எரித்த
கண்ணகியும், துரியோதனின்
தொடையைப் பிளந்த
போது மகிழ்ந்த திரௌபதியும் நம்
மனக்கண் முன் வருகின்றனர்.
பல்லைப் பிடுங்கிக் கதவில்
புதைத்தது
அகநானூறு 211-வது பாடலில்
புலவர் மாமூலனார்
நமக்கு ஒரு செய்தியைத்
தெரிவிக்கிறார்:
யானை பிடிக்க
வருமாறு அனைத்துப் படைத்
தலைவர்களுக்கும் சோழ மன்னன்
உத்தரவிடுகிறான். அரச
நெறிகளை அறியாத
எழினி என்பவன் மட்டும்
வரவில்லை. உடனே மத்தி என்ற
படைத் தலைவனைச் சோழன்
அனுப்புகிறான். அவன்
எழினியை எளிதில்
கொன்று விடுகிறான்.
அத்தோடு நில்லாமல் எழினியின்
பல்லை எடுத்து வந்து 'பெண்மணி வாயில்'
என்னும் கோட்டை வாயிலில்
கதவில் அழுத்தி வைக்கிறான்.
இதே புலவர் மாமூலனார் பாடல்
197-ல் கண்ணன்
எழினி என்று ஒருவரைக்
குறிப்பிடுகிறார். அவனுடய மகன்
தான் பல்லைப் பறி கொடுத்த
எழினியோ அல்லது இருவரும்
ஒருவரா என்று தெரியவில்லை.
பல்லையும், கண்ணையும் பறித்த
சம்பவங்களைப் பார்க்கையில்
பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண்
என்ற பாபிலோனிய மன்னன்
ஹமுரபியின் நீதியை இவர்கள்
பின்பற்றினர் போலும்!
புத்தரின் பல்லையும்
முகம்மது நபியின் முடியையும்
பாக்தாத் வழிபாட்டுத் தலங்களில்
வைத்திருப்பதை நாம் அறிவோம்.
ஆனால் அவை அவர்களின் மீதுள்ள
மதிப்பின்பால் செய்யப்பட்டவை.
இங்கே எழினியை அவமதிப்பதற்காக
மத்தி அப்படிச் செய்தான்.

No comments:

Post a Comment