Total Pageviews

Sunday 10 February 2013

வெறியாட்டு

வெறியாட்டு
என்பது சங்க கால
வீட்டுவிழா.
தலைவியைத் துய்த்த
தலைவன் தலைவியிட்ம்
வராமல் 'ஒருவழித்
தணந்து' நிற்பதும்,
தலைவி தலைவனை எண்ணி உடல்
இளைப்பதும், இந்த
இளைப்புக்கான
காரணத்தை அவளது தாய்
வேலனையோ,
குறிசொல்லும்
முதுவாய்ப்
பெண்டையோ கேட்டறிவதும்,
அவர்கள் முருகன்
அணங்கினான் என்பதும்,
வெறியாட்டு அயர
முருகன் சினம்
தணிந்து மகள் நலம்
பெறுவாள் என்பதும்,
தாய்
மகளுக்கு வெறியாட்டு விழா நடத்துவதும்
வெறியாட்டு எனப்படும்.
இதனை முருகயர்தல்
என்றும் கூறுவர்.
வெறிபாடிய காமக்
கண்ணியார் கூறுவன
மறி
தலைவன் தலைவியைத்
துய்த்தான். அவன்
ஏக்கத்தால்
தலைவி மெலிந்தாள்.
மெலிவுக்குக் காரணம்
தாய்
ஆராய்ந்தது பற்றியும்,
வெறியாட்டு விழாக்
கொண்டாடியது பற்றியும்,
விழாவுக்குப் பின்
நிகழ்ந்தது பற்றியும்
பெண்புலவர்
வெறிபாடிய காமக்
கண்ணியார் தன்
இரு பாடல்களிலும்
கூறியுள்ள செய்திகளின்
தொகுப்பு இது.
தலைவன்
தலைவி உறவு தாய்க்குத்
தெரியாது.
தலையளி செய்யாத
தலைவனை நினைந்து ஏங்கும்
தலைவி உடல்
மெலிந்துபோகிறாள்.
அதனால்
அவளது கைவளை கழல்கிறது.
தலைவி மெலிவுக்குக்
காரணம்
என்னவென்று அவளது தாய்
குறிசொல்லும்
முதுவாய்ப் பெண்டைக்
கேட்கிறாள். அவளும்
அவளைச்
சேர்ந்தவர்களும்
'பொய்வல் பெண்டிர்'.
அவள் பிரம்பைத்
தலைவியின் கையில்
வைத்துப் பார்த்துக்
குறி சொல்கிறாள்.
குறிக்காரி நெடுவேளாகிய
முருகனைப்
பேணி விழாக்
கொண்டாடினால் இவள்
ஏக்கம் தணியும்
என்கிறாள்.
அதன்படி விழாக்
கொண்டாடினர்.
அந்த
விழாவை முருகாற்றுப்படுத்தல்
என்றும் கூறுவர்.
மகளின்
அழகு முன்பு இருந்ததைவிட
மேலும் சிறக்கவேண்டும்
எனத் தாய்
வேண்டிக்கொள்வாள்.
மனையில்
இன்னிசை முழங்கப்படும்.
விழாவுக்குக் களம்
அமைப்பர். அகன்ற பந்தல்
போடுவர்.
முருகாற்றுப்படுத்தும்
பெண்ணுக்கு வெள்ளெருக்கு மாலையும்,
கடம்பு மாலையும்
அணிவிப்பர்.
வேலன் வீடெங்கும்
எதிரொலிக்கும்படி முருகன்
பெயர் சொல்லிப்
பாடிக்கொண்டு கைகளை உயர்த்தி ஆடுவான்.
(மறி என்னும்
ஆட்டுக்குட்டியைப்)
பலி கொடுப்பான்.
அதன் குருதியில்
கலந்து தினையை மனையெங்கும்
தூவுவான்.
பொம்மலாட்டத்தில்
பொம்மையை ஆட்டுவது போல
வெறியாடு மகளைத் தன்
விருப்பப்படி ஆட்டுவிப்பான்.
இதுதான்
வெறியாட்டு.
↑முதல் பத்திக்குச் செல்
பிற புலவர்கள் கூறுவன
பெருஞ்சாத்தனார்
கூறுவன
மறியின் குரலை
அறுப்பர்.
அதன் குருதியில்
தினையை நனைத்துவைத்துப்
படைப்பர்.
பேய்ப்பிடித்தவள்
என்று பிரம்பால்
அடிப்பர்.
ஆற்றுக்
கவலைக்கு அழைத்துச்
செல்வர்.
அப்போது பல
இசைக்கருவிகள்
முழக்கப்படும்.
முருகனையும்
வேறு பல
தெய்வங்களையும்
வாழ்த்துவர்.
வேம்பற்றூர்க்
கண்ணன்கூத்தன்
ஆட்டுக்குட்டியைப்
பலி கொடுத்து, அதன்
குருதியை வெறியாடும்
தலைவி நெற்றியில்
வேலன் பூசுவான்.

No comments:

Post a Comment