பெண்கள் முடியில் கயிறு திரித்தல்
சங்க கால மன்னர்கள், அவர்களிடம்
தோற்றுப் போன அரசனின்
மனவியரை இழுத்து வந்து அவர்களுடய
தலைமுடியைச்
சிரைத்து அதிலிருந்து கயிறு திரித்து அக்
கயிற்றால் பகையரசரின் யானையப்
பிடித்து இழுத்து வந்தனர். நன்னன்
என்ற கொடுங்கோலரசன் இப்படிச்
செய்ததைப் பரணர் என்னும்
புலவர் நற்றிணைப் பாடலில் (270)
குறிப்பிட்டுக் கண்டித்துள்ளார்.
ஊரைத் தீக்கிரையாக்குதல்
பழந்தமிழர்கள் செய்த பெரிய
தவறுகளில்
ஒன்று பகையரசர்களின் ஊரைத்
தீக்கிரையாக்குவதாகும். இதனால்
வரலாற்றுத் தடயங்கள் ஏதுமின்றி,
இன்று நாம் தவிக்கிறோம். சங்க
இலக்கியத்தில் நிறைய இடங்களில்
இப்படித் தீக்கிரையாக்கப்பட்டுப்
பகையரசர்களின் ஊர்கள் பாழாய்ப்
போனதையும் அவ்விடங்களில்
ஆந்தையும் கூகையும்
அலறுவதையும் படித்தறிகிறோம்.
தனி ஒருத்திக்கு இழைக்கப்பட்ட
தீங்கிற்காக
மதுரை நகரையே கண்ணகி தீக்கிரையாக்கியதைச்
சிலப்பதிகாரம் அறிவிக்கிறது.
கழுதை ஏர் பூட்டி உழுவது
அதியமான் அஞ்சியின் மகன்
பொருட்டெழினியைப்
புகழ்ந்து பாடிய ஒளவையார்
(புறம் 39) ''திறை கொடாத
மன்னனின்
மதில்களை வஞ்சனையின்றி அழித்துக்
கழுதை பூட்டி உழுது வரகும்
கொள்ளும் விதைக்கும் மன்னன்''
என்று கூறுகிறார்.
இவ்வாறு எதிரியின் நிலத்தைக்
கழுதை கொண்டு உழுவதைக்
கி.மு. முதல் நூற்றாண்டில்
ஒரிஸ்ஸாவை ஆண்ட காரவேலன்
என்ற கலிங்க மன்னனும் அவனுடய
கல்வெட்டில் கூறுகிறான். ஆக
இது பரவலாக இருந்த வழக்கம்
என்று தெரிகிறது.
சிலப்பதிகாரத்தில் நீர்ப்படக்
காதையில் மருதப் பண்ணிலும்
கழுதை பூட்டிய ஏரால்
உழுது வரகு பயிரிடுவது குறிப்பிடப்பட்டுள்ளது.
தோற்ற மன்னர்களைச் சிறையில்
அடைப்பது
சோழன் செங்கணானோடு சேரமான்
கணக்கால் இரும்பொறை போர்
புரிந்தான். இதில்
இரும்பொறை தோற்றான்.
உடனே இரும்பொறையைச் சிறைப்
பிடித்துக் குடவாயில் கோட்டத்துச்
சிறையில் அடைத்தான். தண்ணீர்
தா என்று கேட்ட
போது காவலாளி தண்ணீர்
கொண்டு வரத் தாமதித்ததால்
சேரன் அவமானம் தாளாது உயிர்
துறந்தான்
Total Pageviews
Monday, 11 February 2013
சங்க கால தண்டனை முறை-இரண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment