Total Pageviews

Monday 11 February 2013

சங்க கால தண்டனை -நான்கு

தலை கொண்டு வந்தால் பரிசு
குமணனுக்கும் அவன்
தம்பி இளங்குமணனுக்கும்
இடையே சண்டை ஏற்பட்டு,
குமணனைக்
காட்டிற்கு விரட்டினான்
இளங்குமணன்.
அத்தோடு நில்லாமல் அவன்
(குமணனின்) தலையைக்
கொண்டு வருபவருக்கு பரிசு என்றும்
இளங்குமணன் அறிவித்தான்.
பெருந்தலைச் சாத்தனார் என்ற
புலவர் காட்டிற்குச் சென்று,
குமணனைப் பாடினார். ஆனால்
குமணன் கானகத்தில் வாழ்ந்ததால்
அவர் கையில்
பரிசு கொடுப்பதற்குப் பொருள்
ஏதும் இல்லை. தன்
இடுப்பிலிருந்த வாளை உருவிப்
புலவர் கையில் கொடுத்தான்.
இதனால் என்
தலையை வெட்டி எடுத்துச்
செல்லுங்கள். உங்களுக்கு என்
தம்பி பரிசு தருவான் என்று தன்
இன்னுயிரையும் தியாகம் செய்ய
முன்வந்தான் குமணன். ஆனால்
புலவர் சாத்தனாரோ பெரும்
அறிவாளி. கையில்
வாளை வாங்கிக்
கொண்டு ஒரு செவ்வாழை மரத்தை வெட்டி வாழைத்
தண்டைத் துணியில் சுற்றிக்
கொண்டு இளங்குமணனிடம்
வந்தார். அவரைப் பார்த்த
இளங்குமணன் அண்ணன்
தலையோ எனத்
திடுக்கிடவே புலவர்
உண்மையைக்
கூறி அவர்களை ஒன்று படுத்தினார்.
இதைப் புறநானூறு 165-ம்
பாடலில் ஓரளவு அறிய
முடிகிறது. ஏனைய
கதையை உரை மூலமே அறிகிறோம்.
ஆனால் பகைவனின் தலைக்குப்
பரிசுப் பணம் கொடுக்கும் வழக்கம்
அக்காலத்திலேயே இருந்தது என்பது இதில்
தெளிவாகிறது.
யானையின் காலால் இடறிக்
கொல்லுதல்
தற்காலத்தில் தூக்குத் தண்டனை,
மின்சார நாற்காலி, விஷ
ஊசி போன்றவை மூலம் மரண
தண்டனை அளிக்கப்படுகிறது.
பழந்தமிழகத்தில் கழுவேற்றுதல்,
யானையின் காலால்
தலையை இடறிக் கொல்லுதல்,
வாளால் வெட்டிக் கொல்லுதல்,
சுண்ணாம்புக் காளவாயில்
போடுதல் முதலிய மரண
தண்டனை முறைகள் இருந்தன.
பகை மன்னனின்
குழந்தைகளையும் கூட
இப்படி இரையாக்க முயன்றதைப்
புறநானூறு (46) மூலம்
அறிகிறோம்.
மலையமான்
மகன்களை யானையின் கால்களால்
நசுக்கிக் கொல்லுமாறு சோழன்
குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவன் உத்தரவிடுகிறான்.
அது கண்டு வருந்திய
கோவூர்க்கிழார் என்ற புலவர்,
''சோழ மன்னனே! ஒரு புறாவின்
உடலைக் காப்பதற்காகத்
தன்னையே பருந்துக்கு ஈந்த
செம்பியன் (சிபிச் சக்கரவர்த்தி)
பரம்பரையில் வந்தவன் நீ. இந்தச்
சிறுவர்களோ கொல்ல வரும்
யானையை, அது தீங்கு செய்யப்
போகிறது என்பதைக் கூட
உணராமல், அதைக் கண்டு மகிழும்
இளம் வயதினர்.

No comments:

Post a Comment