Total Pageviews

Wednesday 16 May 2012

வளரி

வளரி என்பது ஓடித்
தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய
தமிழரால் பயன்படுத்தப்பட்ட
ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம்
ஆகும். இதற்கு ஒத்த
ஆயுதங்களை வளைதடி, பாறாவளை,
சுழல்படை, படைவட்டம் என்றும்
அழைத்தனர்.
அமைப்பு
இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால்
உபயோகப்படுத்தப்பட்ட பூமராங்
வகை ஆயுத
வடிவமைப்பை உடையது. பூமராங்
எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும்.
ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட
வளரி அப்படியல்ல. வளரிகள்
பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன.
சாதாரணமாக வளைந்த
இறக்கை வடிவான மரத்தால்
செய்யப்பட்ட துண்டாகும். சில
வளரிகளின் விளிம்புகள் பட்டையாக
கூராக இருக்கும்.
ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க,
மரத்தால் ஆன வளரியைப்
பயன்படுத்துவது உண்டு.
கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி,
விசிறி, வீசி விட வேண்டும்.
சிலவற்றை இரும்பிலும்கூட
செய்வார்கள். பட்டையான கூரான
வளரியை வீசினால்
சுழன்று கொண்டே சென்று,
வெட்டுப்படக்கூடிய இலக்காக
இருந்தால் சீவித்தள்ளி விடும்.
எறியப்படும் முறைகள்
வளரிகள் குறிவைத்து எறிவதற்குப்
பல முறைகள் உண்டு. பொதுவாக
சுழற்றப்பட்டே எறியப்படும்.
இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக
அல்லது கிடையாக சுழலும்.
அல்லது சுழலாமலே செல்லக்கூடும்.
அதன் சுழற்சி வேகத்திலும்
தங்கியுள்ளது.
உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின்
கழுத்தைக் குறிவைத்து எறியப்படும்.
பொதுவாக
கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.
பயன்
வளரி மான் வேட்டையின்
போது பயன்படுத்தப்படும்
ஒரு ஆயுதமாகும். பண்டைய போர்
வகைகளிலும்
பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கள்ளர் நாடு,
சிவகெங்கை - தற்போதைய
பட்டுக்கோட்டை, மதுரை,
இராமநாதபுரம் ஆகிய
மாவட்டங்களின் சில பகுதிகளில்
பாவிக்கப்பட்டிருக்கின்றது.
வளரி எறிதல் போட்டிகளும்
நடைபெற்றிருக்கின்றன.
சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த
மருது சகோதரர்கள், மற்றும்
அவர்களது படைத்தளபதிகளான
வைத்திலிங்க தொண்டைமான்
ஆகியோர் வளரியையே ஆயுதமாகப்
பாவித்து ஆங்கிலேயர்களுடன்
சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் வளரி
"வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள
கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும்
கள்வர், எயினர் (மறவர்) போன்ற
குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக
வாழ்ந்து வந்துள்ளனர். சங்க
இலக்கியமாகிய புறநானூறு 347ஆம்
பாடலில் மணம் நாறு மார்பின்
மறப்போர் அகுதை குண்டு நீர்
வரைப்பின் கூடல் என்ற
ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற
குறுநிலத் தலைவன் ஒருவன்
பொன்புனை திகிரி (உலோகத்தாலான
சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண
நேரத்துக்குள்,
கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும்
வண்ணம், கண் பார்வைக்குத்
தோன்றி மறைந்து விடக்கூடிய
வகையில் விரைந்து செலுத்தவல்ல
ஒரு வீரன் என்று புறநானூறு 233-
ஆம் பாடலில் (அகுதைக் கண்
தோன்றிய பொன்புனை திகிரியிற்
பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது.
மறவர்களின் முதன்மையான
போர்க்கருவி என்று இலக்கியங்களும்
பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற
வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில்
குறிப்பிடப்படுகிறது."
ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட
மருது பண்டியர், வளரி வீசுவதில்
வல்லவராய் விளங்கினார்.
சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட
கர்னல் வெல்ஸ் என்பவர்
எனது ராணுவ நினைவுகள் என்னும்
நூலில், ""சின்ன மருது தான்
எனக்கு ஈட்டி எறியவும்,
வளரி வீசவும் கற்றுக் கொடுத்தான்.
வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில்
தமிழகத்தில் மட்டும் தான்
பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலும்,
திறமையுமிக்க ஒருவரால் 300
அடி தூரம் குறி தவறாமல் வீச
முடிகிறது'' என்று கூறியுள்ளார்.
இந்த ஆயுதம் தமிழருக்கும்
ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும்
பொதுவானது.
தெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய
பழங்குடியினர்,
அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும்,
அவர்களின் மொழி, கலாசாரம்,
பண்பாடு உருவ அமைப்பு முழுவதும்
தமிழரோடு ஒப்புமை உடையது எனவும்
கூறியுள்ளனர்.
தமிழர்களின் வளரியைப்
பற்றி அக்காலத்தில்
புதுக்கோட்டை திவானாய்
விளங்கியவர்
தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது,
வளரியின் அமைப்பு பற்றியும்
அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும்
படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
""வளரி என்பது இழைக்கப்பட்ட
மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம்.
சில சமயங்களில் இரும்பினாலும்
செய்யப்படுவதுண்டு.
பிறை வடிவிலான அதன்
ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக்
கனமாய் இருக்கும். (அரிவாள்
அல்லது கத்தியைப் போல் அல்லாமல்)
இதன்
வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப்
பட்டிருக்கும். இதை எறிவதில்
பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான
முனையைக் கையில் பிடித்து, வேகம்
கொடுப்பதற்காகச்
சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன்
இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.
ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட
விலங்கையோ, ஏன்
மனிதரையோ கூட வீழ்த்தும்
படி வளரியால் எறியும்
வல்லமை படைத்தவர்கள் உண்டெனத்
தெரிகிறது. ஆனால், தற்சமயம்
அப்படிப்பட்டவர்கள்
இல்லை என்றே கூறும்படியான
நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம்
முயல்,
குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத்
தெரிகிறது. இருந்த போதிலும்,
வளரியின்
வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான்
கூற வேண்டும்''.
பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின்
வடகரையில் இருந்து எறிந்த வளரி,
அதன் மைய மண்டபத்தைத்
தீண்டாமல் அதையும்
தாண்டி எதிர்கரையில் உள்ள
முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்;
அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக்
கொப்புக்களைக் கத்தரித்து, அதைக்
கடந்து வீழ்ந்ததாம். இது இக்கால
ஒலிம்பிக் சாதனையை விட அதிக
தூரமாகும் என ஆய்வாளர்
மீ.மனோகரன் "மருதுபாண்டிய
மன்னர்கள்' என்ற நூலில் வியப்புடன்
கூறுகிறார்.

No comments:

Post a Comment