Total Pageviews

Monday 7 May 2012

ஹிராட்டஸின் தமிழ் ஆதாரம்

தமிழர் பங்கும்
மொழி வளர்ச்சியும்
ஹிராட்டஸின் ஆதாரங்கள் -
ஒரு ஆய்வு ஹிராட்டஸின்
வாழ்க்கைக்
குறிப்பு ஹிராட்டஸ் , உலக
வரலாற்றின்
ஆதி தந்தையாவார் .
உரைநடை என்ற
ஒரு நடையை உலகிற்குக்
காட்டிய முதல் மனிதன்
இவரே ! இவர் கிரேக்க
நாட்டைச் சேர்ந்த
மேதையாவார் . இவர் வாழ்ந்த
காலம் கி. மு. 484 -408 .
ஹிராட்டஸ என்ற
அம்மேதை இயற்றிய
“ வரலாறுகள் ” என்ற
வரலாற்று நூலின் வாயிலாக
பாரசீகர் , லிபியர் ஆகியோரின்
அன்றைய , பழமைப்
பழக்கவழக்கங்களையும் ,
உண்மை நிலைமைகளையும்
வெகு தெளிவாக அறிய
முடிகிறது . அவருடைய
படைப்புகள்
அனைத்துமே அன்றைய
வரலாற்றை உறுதிப்படுத்துகின்றன .
திரு .வி.எஸ் .வி. இராகவன்
இயற்றிய “ஹராட்டஸ் ”
என்ற வரலாற்று நூல்
இன்னும்
தெளிவுபடுத்தியது . உலகின்
வரலாற்றை எழுதத்
தொடங்கியவர்களில்
ஹிராட்டஸே முதன்மையானவர்
மட்டுமல்லாமல் , கி. மு. 107
- 43ல் சிசரோ - III என்னும்
கிரேக்கப் பெருமகனால்
“ வரலாற்றின்
உரைநடை என்ற
ஒரு வடிவமைத்து வரலாறு படைத்தவர்
இவரே !
இங்கிலாந்து நாட்டு வரலாற்று மேதை சார்லஸ்
டார்வினுக்குச் சமமானவர்.
இவர் ஹலிகார்னைஸ்
என்னும் ஊரில் கி.மு . 484 ல்
பிறந்தார் . இவர் கிரேக்க
அரசால் நாடு கடத்தப்பட்ட
ஒரு தளபதியாவார் . இவர்
கதை சொல்லுவதும்
வரலாறு படைப்பதுமே முக்கியத்
தொழிலாய்க் கொண்டார்.
கி. மு. 408 ல் ஆதன்ஸ் நகரில்
தனது எழுபத்தி ஆறாம்
வயதில் காலமானார் .
வரலாற்று என்ற
ஒன்று உருவாகக்
காரணக்கர்த்தாவே ஹிராட்டஸ்தான்.
அவரே வரலாற்றுக்கு வித்திட்ட
வித்தகனாவார் . அவர் எழுதிய
“ வரலாறுகள் ” என்ற நூல்,
வரலாற்றின்
அவசியத்தையும் ,
தேவையையும்
சுட்டிக்காட்டி ,
வரலாறு எழுதப்பட
வேண்டும் என
அறிவுரைக்கிறது .
வரலாற்று உலகின்
முதல்படியே அவர் எழுதிய
“ வரலாறுகள் ” என்னும்
நூல்தான் . இந்நூலின்
வாயிலாக தமிழனின்
உண்மை வரலாற்றை அறிய
முடிகிறது . ஹிராட்டஸின்
கூற்றின்படி தமிழரின்
வரலாற்றை இனிக்
காண்போம் . தமிழனின்
வரலாறு தமிழர்க்கும்,
தமிழ்நாட்டிற்கும் ,
தமிழ்மொழிக்கும்
வரலாறு உண்டா? என்றால்
உண்டு. 4000
ஆண்டுகளுக்கு முன்பே உண்டு என்கிறார்
ஹிராடடஸ் அவர்கள் . தொல்
பழங்காலத்தில், குமரிக்
கண்டமாகவும் , பழந்தமிழ்
நாடாகவும்
சிறப்புற்று விளங்கிய
பகுதியிலிருந்து சுமார் 4000
ஆண்டுகளக்கு முன்பே வரலாறு படைத்தவன்
தமிழன் என உறுதியாக்
கூறுகிறார் . பழந்
தமிழ்நாட்டில் தென்னை,
பனை போன்ற
மரமேறி வாழ்ந்த தமிழர்கள்
உலிகின் பல பகுதிகளுக்கும்
சென்று குடியேற்றங்களை அமைத்து வாழத்
தொடங்கினார்கள் எனவும் ,
அம்மரமேறித்
தமிழர்களே பாமேசியர்
என்றும்
அப்பாமேசியர்களே பினீசியர்கள்
எனப்
பேரேற்று வாழ்ந்து வந்தனர்
எனப் பறை சாட்டுகிறார்
ஹிராடடஸ் அவர்கள் ,
தாமியற்றிய
வரலாற்று நூலில் ,
தமிழர்களுக்கும் ,
தமிழ்நாட்டிற்கும் ,
தமிழ்மொழிக்கும் கிடைக்க
முடியாத
உண்மை வரலாற்றைப்படைத்துப்
பெருமை கொள்ளச்
செய்துள்ளார் .
வரலாறு காணா இருண்ட
வாழ்க்கை படைத்து முதல்
ஒளி ஏற்றிச் சிறப்பிக்கிறார்.
இந்தியாவைப் பற்றி ,
குறிப்பாகத் தமிழரைப் பற்றி,
மேலை நாட்டவர் எழுதிய
முதல் காவியம் , முதல்
ஓவியம் , முதல்
வரலாற்று நூல் ஹிராட்டஸ்
எழுதிய “வரலாறுகள் ” என்ற
நூலே ! உலக நாகரிகத்தின்
முன்னோடி உலக நாடுகளில்
உருவான நாகரிகங்களில்
முன்னணி வகுப்பது தமிழர்
நாகரிகமே !
வரலாறு படைத்துக் கொண்ட
மனித
வர்க்கத்திற்கே ஆதியும்
அந்தமுமாய் இருந்தவன்
தமிழனே ! இருந்த
மொழி தமிழ்மொழியே!
இருந்த நாகரிகம் தமிழ்
நாகரிகமே என மார்தட்டிக்
கூறுகிறார் ஹிராடடஸ்
அவர்கள் . தமிழ்மொழிச்
சிறப்பு பண்டை உலக
மொழிகள் அய்ந்தே , உலகில்
முதன்முதலில் உருவான
ஒலிமொழிகள் , கிரேக்கம்,
எபிரேயம் , தமிழ் , சீனம் ,
சமஸ்கிருதம் ஆகிய
இவ்வைந்துமே !
சமஸ்கிருத்த்தைத் தவிர
மற்ற மொழிகள் வரிவடிவம்
பெற்று எழுதப்பட்டு வந்துள்ளன
என்பது குறிப்பிடத்தக்க
ஒன்றாகும் . இவற்றில்
தமிழும் , கிரேக்கமும்
ஒன்றுடன்
ஒன்று இணைந்து கலந்திருந்தன.
இருவர் பண்பாடும்
கலந்திருந்தன .
இக்கலப்புக்கள்
முற்காலத்தில் நடைபெற்ற
வாணிகப் பரிமாற்றங்களின்
காரணங்களால்
ஏற்ட்டதே என்று கூறலாம்.
இக்கலப்பால், அன்றைய
கிரேக்கர் , தமிழர் வணிகத்
தொடர்புகளையும் , மொழித்
தொடர்புகளையும் ,
கலவைகளையும்
இனிக்காண்க . கிரேக்கம் தமிழ்
கிரேக்கம் தமிழ் ஆரம்(பொன் )
ஆரம் தேபா தெப்பம்
ஹேரா ஒரை நாரி நாரி(பெண்)
ஆக்ஸிஸ் அச்சு நோஸ்
நோய் அனிமா ஆன்மா பெர்ல்
பரல் செஞ்சிம் இஞ்சி பலி(ஸ் )
பள்ளி ஏனம் (பாத்திரம் ) ஏனம்
பாண்டஸ் பாண்டில்
( வளைந்த )
கேனா கனவு பில்லா பிள்ளை( பெண்)
சண்டலம் சந்தனம்
பெலி புலி கனல் அனல்
ஹீரோ வீரா கேடா கேடு ஹீரோ (கிரேக்கதுர்க்க
ை )
- வீரி ( காளி ) மற்றும் பிற
மொழிக்கலவைகளும் நிறைய
உண்டு. இம்மொழிகளின்
கலவைகளால் , நம்தமிழ்
மொழியின்
தொன்மையையும் ,
பெருமைகளையும் ,
சிறப்பையும்
காணமுடிகிறது .
அத்தோடு மட்டுமின்றி ,
நான்கு , அய்ந்து ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே உலகளாவப்பரவி,
வீறு நடை போட்ட மொழி நம்
தமிழ் மொழி என
எண்ணி மகிழ வைக்கிறது.
இப்பெரும்
வரலாற்றை நமக்குத் தந்த
வரலாற்று ஆதித்தந்தை ஹிராட்டஸ்
அவர்களுக்கு ஒவ்வொரு தமிழனும்
நன்றி கூறியே ஆக
வேண்டும் . தமிழன்தான் ,
உண்மையிலேயே ,
உலகிற்கு நாகரிகங்களைக்
கற்றுத் தந்த தந்தை ,
தமிழ்நாடுதான் உலக
நாகரிகங்களை உருவாக்கித்
தந்த கருவூலம் .
உலகிலேயே முதன்முதலாக
வரலாறு படைத்த மாவீரன்
தமிழனே ! தமிழர்
நாகரிகமே உலக
நாகரிகத்தின்
முன்னோடி என்று பல
வராற்று மேதைகள்
மெச்சுகின்றனர் .
வரலாறு படைத்துக் கொண்ட
மனித
வர்க்கத்திற்கே முதல்வன்தான்
நம் தமிழன், இப் பெரும்
பேரைப் பெற்றான். என
அறிந்து நெஞ்சம்
பூரிப்படைகின்றது .
நினைத்து , நினைத்துப்
பெருமிதம் அடைகிறது .
ஆரியர்களின் வருகையால்
உண்மைத் தமிழனின்
வரலாறு மறைக்கப்பட்டு விட்டது .
தமிழனின் உண்மையான
வரலாறு நிலைக்கப்பட
வேண்டுமானால் ,
வரலாறுகள் எழுதப்பட
வேண்டும் .
அவை உண்மை வரலாறாக
இருத்தல் அவசியம்.
அப்பொழுதுதான் , எதையும்
எவரையும் எதிர்பாராமல்,
தமிழ் மரபுக் காத்து, தமிழ்ப்
பரம்பரைக்கு விட்டுச் செல்ல
முடியும். உலகெங்கும்
தமிழன் உலா பண்டைத் தமிழ்
நூல்களான அகநானூறு ,
புறநானூறு ,
சிறுபாணாற்றுப் படை ,
மதுரைக்காஞ்சி , நற்றிணை,
சிலப்பதிகாரம் ,
பட்டினப்பாலை ,
கலித்தொகை வாயிலாகவும்,
கிரேக்க நூல்களான, பிளினி,
பெரிப்ளுஸ் ,
தாலமி ஸ்டிராபோ,
லெபனான் , மெகஸ்தனிஸ்
மற்றும் அரியன்
இண்டிகா வாயிலாகவும்
தமிழனின் வணிகத்
தொடர்புள்ள
நன்கு தெரிகின்றோம்.
தமிழ்நாட்டிற்கும் , கிரேக்கம் ,
ரோம் , சீனா , எகிப்து போன்ற
பிற உலக நாடுகளுக்கும்
உள்ள நல்லுறவும் , வணிக
நட்பும்
தொன்று தொட்டு பழங்காலம்
முதல் இருந்து வந்த
வரலாற்றை உணர்கிறோம் .
தமிழன் கடல் மார்க்கமாக
கப்பல்களிலும் , வாசனைப்
பண்டங்கள், முத்து , பொன் ,
மயிற்பீலி , மிளகு ,
சடாமாஞ்சி போன்ற
பொருள்களை , அய்ந்தாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றிச்
சென்றான் என்றால் ,
பெருமையே ! பெருமை !
வளரட்டும், தொடரட்டும்
தமிழனின் சுற்றுலா.
குமரிக்கண்டம்
அல்லது பழந்தமிழ்நாடு தென்னாப்பிரிக்க
ாவையும்,
இந்தியாவையும்
இணைத்துக் கொண்டிருந்த
நாடே பழந்தமிழ்
நாடு அல்லது குமரிக்கண்டம்
எனப் பேரறிஞர்கள் ,
ஓல்டுகாம், எல்கேல் ,
கிளேற்றர் , காட்டு எலியட்,
தேவ நேயப்பாவாணர்
போன்றோர் ஏகமனதாக
ஏற்றுக் கொண்டனர்.
அவர்கள்
எண்ணத்தையொத்தே ஹிராடடஸ்
தம் கருத்தைக் கூறுகிறார்.
அதாவது தொலைமேற்கில்
கிரேக்க நாடு , மேற்கில்
எகிப்து , தொலை கிழக்கில்
சீனா நாடு ,
இவற்றிற்கு மையத்தில்
அமைந்திருந்த
நாடே பழந்தமிழ்
நாடு என்கிறார். அந்நாட்டில்
வாழ்ந்தவன்தான் தமிழன்.
அவனுடைய வரலாறும் ,
நாகரிகமும் தான்
உலகிலேயே முதன்மை வாய்ந்தது.
இவனுடைய மொழியான,
தமிழ்தான் உலகெங்கும்
கொடிகட்டிப் பறந்தது.
பரவியது . தமிழர்கள்,
பழந்தமிழ்
நாட்டிலிருந்து கடல்வழியாகவும் ,
தரை வழியாகவும்
உலகெங்கும்
சென்று குடியேற்றங்களை அமைத்துக்
கொண்டு வாழ்ந்தனர் .
இதனை இலமுரியா கண்டம் ,
குமரிக்கண்டம் ,
நாகநன்னாடு ,
எழுதெங்கு நாடு ,
எழுபனை நாடு என
அழைப்பர் . தமிழர்களின்
உலகப் பயணம் எவ்வாறு பிற
நாட்டவர் இந்தியாவில்
ஊடுருவல் செய்தார்களோ ,
அதே போல் தமிழ்
நாட்டவரும் உலகிலுள்ள
பிறநாடுகளில்
ஊடுருவல்களை மேற்கொண்டனர்.
வாணிகம் என்ற பெயரில் ,
வியாபார நோக்கங்கொண்டு,
விலை மதிக்க முடியாத
பெரும் பொருட்களுடன் தன்
நீண்ட
பயணத்தை மேற்கொண்டனர்.
இவர்கள்
இரு மார்க்கங்களைக்
கையாண்டனர் .
ஒன்று தரைமார்க்கம் ,
மற்றொன்று கடல்மார்க்கம்.
தமிழர்களின் முதல் கடல்
வழி மற்றும்
தரை வழிப்பயணம்
பீனிசியர்களின் கடற்பயணம்
( கி.மு .25000) தமிழர்களின்
அமெரிக்கப் பிரவேசம்
தரைவழிப் பயணம் (கி. மு.
25000 ) தரைவழி மார்க்கத்தில்
தன் பயணத்தைத் தொடங்கிய
தமிழன், தன் தாய்நாடாகிய
தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டான் .
புறப்பட்ட தமிழன், தன்
தாய்மொழியையும் , தமிழ் 0
கையாண்டு , பயணத்தில்
வெற்றி பல பெற்ற,
உலகெங்கும் உலாவந்து ,
பாரெங்கும்
குடியேற்றங்களை அமைத்துக்
குடியேறினான் . 4000
ஆண்டுகளுக்கு முன்னர் ,
தமிழர்க்கும் ,
தமிழ்மொழிக்கும் ,
தமிழ்நாட்டிற்கும்
வரலாறு உண்டா?
இல்லையா ?
என்று எண்ணப்பட்டுக்
கொண்டிருந்த காலகட்டத்தில்
தமிழர்கள் (பனையேறிகள் ) ,
தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு ,
தரைமார்க்கமாகவும் , கடல்
மார்க்கமாகவும் உலகின் பல
பகுதிகளுக்குச்
சென்று குடியேற்றங்களை அமைத்து வாழ்ந்து வரலாறு படைத்தனர்.
ஏழை பனைநாடு மற்றும்
ஏழு தெங்குநாடு குமரிக்கண்டத்தை
பழந்தமிழ்நாடு எனப்
பல வரலாறுகள்
செப்புகின்றன .
அத்தமிழ்நாடு ,
ஏழு தெங்கு ( தென்னை)
நாடுகள் என இருபெரும்
பிரிவுகளாக பிரித்திருந்தனர்.
இயற்கையைப்
பயன்படுத்தி வாழ்ந்த காலம் ,
சிலர் கடல் நீரில் வாழும்
மீன்களையும் , சிலர்
மரங்களின் காய்,
கனி போன்றவைகளையும்
உண்டு வாழ்ந்தனர் . இன்னும்
சிலர் விலங்குகளையும் ,
பறவைகளையும் ,
வேட்டையாடி இறைச்சியை உண்டு வாழ்ந்தனர் .
தென்னை , பனை, போன்ற
நெடுமரங்களை அதிகம்
கொண்டமையால்
நெடும்பனை நாடு என்ற
மற்றொன்றும் உண்டு. அந்த
நெடும்பனை,
தென்னை மரங்களில் ஏறி ,
அம்மரத்தைத்
தன்வயமாக்கி அதிலிருந்து தேங்காய்,
நொங்கு , கள்( மாதுபானம்)
பதநீர் , பனைவெல்லம்
போன்றவற்றைத் தயாரித்த
தமிழனுக்குப் பெயர்
மரமேறிகள் . இவர்கள் வாழ்ந்த
நாடு பனைநாடாகவும்,
அங்கு வாழ்ந்தவர்கள்
பனையேறிகளாகவும் பெயர்
பெற்று நிலைத்தனர்.
பனையேறிகளே பினீசியர்கள் !
பழந்தமிழ் நாட்டிலுள்ள பல
பிரிவினர்களில் ,
ஏழு பனை நாடு , ஏழ
தெங்கு (தென்னை) நாடு ,
நெடும் பனைநாடு ,
குறும்பனை நாடு போன்ற
பகுதிகளில் வாழ்ந்தவர்கள்
மரங்களின் உதவியுடன்
கடல் பயணம்
மேற்கொண்டனர் , இந்தப்
பனையேறிகள் , பாமேசியர்
என்றும் ,
அம்பாமேசியர்களே பினீசியர்கள்
எனப் பேரேற்று வாழ்ந்தனர் .
மரமேறிகள் , பினிசியர்களாக
மாறி ஒருங்கிணைந்து ,
உறவுப்பாலம்
அமைத்து கொண்டனர் .
தமிழர்களின் பண்பாடும்,
நாகரீகமும் பினீசியர் என்ற
பெயரில் பாரெங்கும் பரவத்
தொடங்கின . வீரத்தமிழன்
பினீசியர் என்ற மாற்றுப்
பெயர் ஏற்றுச் சாதனை பல
புரிகிறான் . இச்செய்திகள்
அஸ்ஸீரியான்
கல்வெட்டுக்களிலிருந்து தெரிய
வருகிறது .பினீசியர்களின்
நாணயமும் உதவுகிறது .
பெயர்க்காரணம் இந்தியப்
பெருங்கடலின்
தென்கோடியிலிருந்து ,
தமிழ்நாடு , மலையாளக்
கரையோரங்களில்
தென்னை மற்றும் பனை மிக
வளர்ச்சி பெற்றிருந்தது .
அப்பகுதி மக்கள், தென்னை,
பனைகளை வளர்த்தும் ,
ஏறியும் வாழ்ந்தனர் . இவர்கள்
வாழ்ந்த
பகுதி ஏழுபனை நாடு ,
ஏழு (தென்னை)
நாடு எனப்படும்.
இங்கு வாழ்ந்த தமிழர்கள்,
அதாவது மரமேறிகள்,
தென்னை ,
பனை மரக்கட்டைகளைக்
கடலில் நீந்தப்
பயன்படுத்தினர் .
அவ்வாறே கடல் மார்க்கமாக
உலகில் பல பகுதிகளைச்
சென்றடைந்தனர் . தாம்
சென்றடைந்த புதிய நாட்டில்
தென்னை பனை மரங்களைப்
பயிரிட்டான் தமிழன்.
பனை நட்ட காரணத்தால்
பனேசியர் என்று மரமேறிகள்
அழைக்கப்பட்டனர் .
அப்பனேசியர்கள் என்ற
சொல்லே , நாளடைவில்
பனேசியர் , பாமேசியர் ,
பனீசியர்
என்று திரிபுற்று இறுதியில்
பினீசியர் என
உருப்பெற்று விளங்கலாயிற்று.
பினிசீய மக்கள்
தமிழ்நாட்டிலிருந்து , பிற
நாடுகள்
சென்று குடியேற்றங்களை ஏற்படுத்திக்
கொண்ட தமிழர்களே!
பினீசியர்கள் கி. மு. 3000
ஆண்டு அளவிலேயே தமிழ்நாட்டிலிரு
ந்து சென்று பிறநாடுகளில்
குடியேறியவர்கள் தான் என
முனைவர் , S. Radhakrishna,
( Our Heritage (Page -22 ) 44 -
லில் ) தெளிவாக்க் கூறுகிறார்.
கி. மு. 3000 இல் தமிழர்களின்
முதல் கடற்பயணம் 1 .
தமிழனின் முதற்கடற்பயணம்
கி. மு. 3000இல்
தொடங்கியது . அப்பயணம்,
தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு ,
செங்கடல் வழியாகச்
சென்று கீதோன், தீரே ஆகிய
துறைமுகங்களை அடைந்தது.
( ஒரு பிரிவு ) 2 . கி.மு.
25000 இல்,
பாரிகாஸாவிலிருந
்து தொடங்கி கடற்கரை ஓரமாகவே சென்று செங்கடல்
வழியாகத் தீரே, கீதோன்
ஆகிய
துறைமுகங்களை அடைந்தது.
( மற்றொரு பிரிவு)
பினீசியர்கள் கடற்பயணம் 1.
கி. மு. 800 இல், கீதோன்,
தீரே துறைமுகங்களிலிர
ுந்து தொடங்கி இங்கிலாந்தைச்
சுற்றி ,
அய்ஸ்லாந்தை அடைந்து,
அங்கிருந்து வடஅமெரிக்காவின்
வடசேலம் என்னும்
துறைமுகத்தை அடைந்தனர் .
2 . கி.மு . 500 இல் கீதோன்,
தீரே துறைமுகங்களிலிர
ுந்து புறப்பட்டு நேர்வழியில்
அமெரிக்காவிலுள்ள ,
வடசேலம் துறைமுகம்
அடைந்தனர் . 3. கி.மு . 300 ல்
கீதோன் ,
தீரே துறைமுகங்களிலிர
ுந்து புறப்பட்டு நேர்வழியில்
மெகானிக்ஸ்
பார்க்கை அடைந்தனர். 4 .
கி. மு. 150 இல் கீதோன் ,
தீரே துறைமுகங்களிலிர
ுந்து புறப்பட்டு அமேஸான்
ந்திக்
கழிமுகத்தை அடைந்தனர். 5 .
கி. மு. 1800இல் தீரே,
கீதோனிலிருந்து புறப்பட்டு ,
ஆப்பிரிக்காவைச் சுற்றிக்
கொண்டு , செங்கடல்
வரை வந்து,
அங்கிருந்து நேராகத்
தமிழ்நாட்டை அடைந்தனர் .
பினீசியர்கள்
கல்வெட்டு (கி. மு.1600 )
பினீசியர்கள் வடஅமெரிக்க
மேற்குக் கரையோரமாகச்
சென்று , வடஅமெரிக்காவின்
கீழைகடற் கரையிலும்
குடியேற்றங்களை அமைத்துக்
கொண்டனர் . இப்பகுதியில்
கிடைக்கப்பட்டுள்ள
பினீசியர்கள் கல்வெட்டு,
கி. மு. 1600அய்ச் சார்ந்தது .
இது அமெரிக்காவிலுள்ள
“ ரோட்ஸ் தீவில்”
கண்டெடுக்கப்பட்டது .
இக்கல்வெட்டில்
சிவலிங்கமும் , ஓர் என்ற
சொல்லையும் காணலாம் .
இதிலிருந்து நாம் என்ன
உணருகிறோம் ?
அதாவது கடந்த 4000
ஆண்டுகளுக்கு முன்பே ,
அமெரிக்காவிலும் ,
அதனருகிலுள்ளள ரோட்ஸ்
தீவிலும் தமிழன் வாழ்ந்தான்
என்பது தெளிவாகிறது .
ஆதிதமிழன்
சிவனை வழிப்பட்டான்.
சிவலிங்கங்களை உருவாக்கிப்
பூசித்து வந்தான் . ஓம் என்ற
வார்த்தை , தெய்வ
வழிபாட்டில் உச்சரிக்கும்
தமிழ்ச் சொல் , தமிழ்
மொழி 4000
ஆண்டுகளுக்கு முன்றே அமெரிக்காவில்
உச்சரிக்கப்பட்டது என்ற
வரலாற்றை உணர்கிறோம் .
கல்வெட்டுகளில்
செதுக்கப்படுகிறது என்றால் ,
தமிழனின் நிலைமையும் ,
தமிழ் மொழியின்
வளர்ச்சியையும்,
தொன்மையும்
நன்கு தெளிவாக உணர
முடிகிறது .
அப்பொலோ தெய்வம்
அப்பல்லோ தெய்வம்
அர்மிடஸ்தேவதை அப்பொலோ என்பது கிரேக்க
புராணங்களில் தோன்றும்
தெய்வங்களில் தலைமைத்
தெய்வமாகும் . எந்தக் கிரேக்க
தெய்வமும் பெறாத
பெரும்பேரைப் பெற்ற
தெய்வம் . இத்தெய்வம்
இந்தியக் கடவுள்களாகிய
இராமர், கிருஷ்ணர் இந்திரன் ,
சூரியன் போன்றோர்களின்
குணங்களையும் ,
செயல்களையும் கொண்ட
கடவுளாகச்
சித்தரிக்கப்படுகிறது.
அதாவது இந்தியத்
தமிழர்களின்
கலாச்சாரங்களை முழுமையாகப்
புகுத்தி , தமிழர்
கலாச்சாரத்தையும்
பண்புகளையும்
வலியுறுத்துகிறது .
இதிலிருந்து கிரேக்கம், ரோம்
போன்ற பகுதிகளில்
தமிழர்களின் கலாச்சாரங்கள்
4000
ஆண்டுகளுக்கு முன்றே பரவியிருந்தது என்பதைத்
தெரியலாம் . பினீசியர்களின்
கல்வெட்டு கி.மு . 1600 1 .
சிவலிங்கம் 2 . “ ஓம்”
காணப்படுகிறது அர்டமிஸ்
தேவதை அர்டமிஸ் என்பது,
ரோமானியர்கள் வழிபடும்
ஒரு பெண் தெய்வம் .
இதனை அர்டமிஸ்
தேவதை அல்லது டயானா தேவதை என
அழைப்பதுண்டு .
அப்பொலோ , தெய்வத்தின்
சகோதரி ஆவாள் . அர்டமிஸ்
திருவிழாவில்
பெண்களே அதிகம்
பங்கு பெறுவார்கள்.
இது தமிழ் நாட்டில்
வழங்கி வரும்
அல்லது நிகழ்ந்து வரும்
திருப்பாவை , திருவெம்பாவை,
வரலட்சுமி விரதம் ,
நவராத்திரிக்கொழு போன்ற
பாவை நோண்பாகும் .
இது பெண்களால்
போற்றி நடத்தப்படும்,
பெண்களின் வழிபாடாகும்.
இத்தேவதை இந்தியத்
தெய்வங்களாகிய இலட்சுமி,
சரசுவதி ,
பார்வதி போன்றோர்களின்
குணங்களையும் ,
செயல்களையும் கொண்ட
தேவதையாகச்
சித்தரிக்கப்படுகிறது.
சுருங்கக் கூறின்
இந்தியத்தமிழ்ப் பெண்களின்
கலாச்சாரங்கள்
முழுமையாகத்
திணிக்கப்பட்டு ,
மாற்றுரு பெற்ற
தமிழ்த்தேவதையாக
இயங்குகிறது .
இதிலிருந்து தமிழர்களின்
கலாச்சாரங்களும் ,
பண்பாடுகளும் 4000
ஆண்டுகளுக்கு முன்பே பாரெங்கும்
பரப்பிய தமிழ் முழக்கத்தில்
பெருமிதம் கொள்கிறேன் .
பினீசியர்களின் நாணயங்கள்:
ஆதியில் தமிழ்நாட்டுக்
கரையோரப் பகுதிகளில்
வாழ்ந்த தமிழன் மீன்
பிடிக்கும் தொழிலையும்,
மரமேறும் தொழிலையும்
கையாண்டு வந்தான் . அவன் ,
கடலனில் செல்ல ,
பனை மற்றும்
தென்னை மரங்களை ஒன்றுடன்
ஒன்றை இணைத்துப்
படகுகள் அமைத்து நீரில்
மிதக்கும் கற்றிருந்தான்.
மரமேறிகளாகிய தமிழன்
பினீசியர்கள்
எனப்பேரேற்று பாரெங்கும்
பரவினான் . அவன் கடலைக்
கடக்கப்
படகுகளை (பரிசில்கள் )
பயன்படுத்தினான் .
ஆண்டுகள் பல கடக்க,
ஆற்றலும் பல பெற்றான்,
வளர வளர
பாய்மரக்கப்பல்களைப்
பயன்படுத்த முனைந்தான் .
மொத்தத்தில் கடல்
கடந்து வழித்தடம்
அதாவது கடல்மார்க்கத்தை
நன்கு தெரிந்து கொண்டான் .
வணிகத்தைப் பிற
நாடுகளுடன் பெருக்கினான்.
கடல்வழித் தடத்தைக்
கண்டறிந்த பினீசியர் (தமிழன்)
படகு பொறிக்கப்பட்ட
நாணயத்தை வெளியிட்டான் .
பினீசியர்களின் நாணயங்கள்
கி. மு. 6 - ம் நூற்றாண்டு 1 .
குதிரை வண்டி பொறிக்கப்பட்ட
நாணயம் 2. படகு சின்னம்
பொறிக்கப்பட்ட நாணயம்
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள
பினீசியர்களின் நாணயத்தைச்
சற்று உற்றுப்பாருங்கள்.
ஒன்றில்
படகு இருப்பதையும்,
அதை ஒரு தமிழன்
தலைப்பாகையுடன்
உட்கார்ந்துகொண்டு மரத்துடுப்பால்
தள்ளுவதையும்
நன்கு அறிவீர்கள் .
அப்படகானது தமிழ்நாடு ,
கேரளா போன்ற பகுதிகளில்
கட்டப்படும் படகுகளையும் ,
கட்டுமரங்களையும் ,
ஒத்திருப்பது நன்கு புரியும் .
அப்படகில் சூலம் போன்ற
ஒரு மீன்பிடி ஆயுதம்
இருப்பதையும் காணுங்கள்.
ஒரு தமிழன், ஒரு படகில்
தலைப்பாகையுடன்
உட்கார்ந்து கொண்டு,
துடுப்பால் படகைத் தள்ளிச்
செல்வது, 4000
ஆண்டுகளுக்கு முன்பே தமிழன்
கடல்வழி உலகெங்கும்
சென்று , தன் தாய்மொழித்
தமிழையும் , தன் கலாச்சாரப்
பண்பாடுகளையும்
பாரெங்கும்
பரப்பி வரலாறு படைத்தான்
என்ற உண்மை தெளிவாகும் .
மற்றொரு நாணயத்தில் ,
தரைவழித் தடம்
கண்டு உலகெங்கும்
என்று பரவினான் என்பதைத்
தெளிவுபடுத்தும் வகையில்
ஒரு தமிழன் ( பினீசியர்)
சரக்கேற்றப்பட்ட
குதிரை வண்டியில்,
தலைப்பாகையுடன்
குதிரைகளை ஓட்டும்
காட்சியையும் ,
அவ்வண்டியில் பின்புறமாக
பொருட்களை காவல் காத்துக்
கொண்டு , ஆயுதபாணியாய்
ஓர் தமிழன் நிற்பதையும்
காணுங்கள் . தரைவழியிலும்
தமிழன் உலகாண்டான் என்ற
உண்மையை இந்நாணயம்
வெளிக்காட்டுகின்றது. இந்த
நாணயங்களே , தமிழர்,
தமிழ்நாட்டிலிருந்து கடல்
வழியாகவும் ,
தரைவழியாகவும் , கடல்
கடந்து ,
நாடு கடந்து உலகெங்கும்
வரலாறு கண்டான் என்ற
உண்மையை படம் பிடித்துக்
காட்டுகிறது . மற்றும்
அஸ்ஸியரின்
கல்வெட்டுக்கள் தமிழனின்
வரலாற்றிற்கு நற்சான்றாய்
உள்ள செய்தி பல
செப்புகின்றன . [. ..]

No comments:

Post a Comment