Total Pageviews

Wednesday 9 May 2012

ஆத்திகம் நாத்திகம்

ஆஸ்திகமும் நாஸ்திகமும் -
அறிஞர் அண்ணா
1. ஆஸ்திகம் என்று உண்டானதோ,
அன்றே நாஸ்திகமும் உண்டாயிற்று.
2. ஆஸ்திகம் அறியாமை, பயம்,
சுயநலம் இவற்றில் முளைத்தது;
நாஸ்திகம் அறிவின் விசாரணைகளில்
முளைத்தது.
3. ஆஸ்திகம் அறிவைப்
பாழ்படுத்துகிறது. நாஸ்திகம்
அறிவை ஓங்கச் செய்கிறது.
4. ஆஸ்திகம்
உலகை மிருகநிலைக்கு அழைத்துச்
செல்கிறது; நாஸ்திகம் அதை நாகரிக
நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
5. ஆஸ்திகம்
மக்களை அவமதிக்கிறது. நாஸ்திகம்
மக்களை மேன்மைப்படுத்துகிறது.
6. ஆஸ்திகம் மக்களை அழிய
வைக்கும். நாஸ்திகம் மக்களை வாழ
வைக்கும்.
7. ஆஸ்திகத்தால் வறுமை,
பிணி முதலியன ஓங்கும்.
நாஸ்திகத்தால் அவை அழியும்.
8. ஆஸ்திகமும் நாஸ்திகமும் என்றும்
தீராப்பகை கொண்டன.
9. ஆஸ்திகத்திற்கு அறியாமையும்
அரசாங்கமும், முதலாளித்துவமும்
துணை. நாஸ்திகத்திற்குப்
பகுத்தறிவே (விஞ்ஞானம்) துணை.
10. ஆஸ்திகம் அழியக் கூடியது.
நாஸ்திகம் என்றும் அழியாதது.
11. ஆஸ்திகம் சில சமயம்
நாஸ்திகத்தைப் புறம்பே அழிக்கும்.
ஆனால்,
நாஸ்திகமோ ஆஸ்திகத்தை உள்ளும்
புறமும் அழிக்கவல்லது.
12. ஆஸ்திகத்தின் வெற்றி தற்காலிக
வெற்றியாகும். நாஸ்திகத்தின்
வெற்றியோ நிலைபெற்ற
வெற்றியாகும்.
13. ஆஸ்திக நாஸ்திகப்
போராட்டத்தின் லாப நஷ்டக் கணக்கு.
ஆஸ்திகத்திற்குத் தோல்வியும்,
நாஸ்திகத்திற்கு வெற்றியும் சரித்திர
முறைப்படி இதுவரை உண்டு,
இனியும் உண்டு.
14. ஒரு மதத்தின்படி அதனை நம்பாத
மற்ற மதங்கள் நாஸ்திகமானபடியால்,
எல்லா மதத்தையும் நம்பாத
முழு நாஸ்திகமோ நன்மையளிக்கும்,
பெருமையளிக்கும். ஆகையால்,
அம்முழு நாஸ்திகமே எங்கும் பரவுக!
ஓங்குக!!

No comments:

Post a Comment