Total Pageviews

Friday, 4 May 2012

அறிவு

அறிவு
அறிவு (Knowledge)
என்பது உணர்தலாலும்,
அனுபத்தாலும், கற்பதாலும்
கிடைக்கப்பெறுவைகளாகும்.
அறிவு என்பது ஒருவரின்
பிறப்பு முதல்
இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன.
அதனை படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும்,
அறிஞர்கள் என்றும்
ஒரு தோற்றப்பாடு பொதுவாக
அநேகமானோரிடம்
காணப்படுகின்றன.
அத்தோற்றப்பாடு முற்றிலும்
தவறானது.
அறிவு என்பது எல்லோருக்கும்
உண்டு, மனிதரல்லாத
விலங்குகளுக்கும் உண்டு.
அவற்றை இயற்கையறிவு,
உணர்வறிவு, படிப்பறிவு,
பட்டறிவு, கல்வியறிவு,
தொழில்சார் அறிவு, துறைச்சார்
அறிவு, அனுபவ அறிவு,
பொது அறிவு,
ஆள்மனப்பதிவறிவு என
பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.
இந்தப்பிரிவுகளை பல்வேறு உற்பிரிவுகளாக
வகுத்துக்கூறலாம்.
எடுத்துக்காட்டாக அறிவை கூட
சிலர் பேரரறிவு,
சிற்றறிவு என்று வகைப்படுத்தும்
முறைமையும் உள்ளது.
இயற்கையறிவு
இயற்கையறிவு என்பது இயற்கையைப்
பற்றி அறியும் அல்லது கற்கும்
அறிவன்று.
அது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும்
அறிவைக் குறிக்கும்.
ஒரு குழந்தை பிறந்தவுடன்
கிடைக்கப்பெறும் அறிவு
இயற்கையறிவு ஆகும்.
அது முதலில் பசியை உணரும்
அறிவை இயற்கையறிவாகவே கொண்டுள்ளது.
அதனாலேயே பசித்தால்
குழந்தைகள்
அழத்தொடங்கிவிடுகின்றன.
அதன்பின் உணரும்
அறிவை பெறுகின்றது.
அதாவது தாயின்
முலைக்காம்பை தொட்டதும்
அதையுணர்ந்து (அழுகையை நிறுத்தும்)
பாலருந்தத் தொடங்கிவிடும். இதன்
வளர்ச்சிப்போக்கில் பாலைத் தரும்
தாயை அறியும் அறிவையும்,
அவரிடத்தில் அன்புகொள்ளும்
அறிவையும் பெற்றுக்கொள்ளும்.
இவைகளை இயற்கையறிவு
எனலாம்.
அறிவும் உணர்வும்
தமிழில் அறிவு எனும்
சொல்லுக்கான
வரைவிலக்கணத்தையே; ஆங்கிலச்
சொல்லான Knowledge
கொண்டிருப்பதாகக் கொள்ள
முடியாது. ஏனெனில் தமிழில்
விலங்குகளுக்கு ஐந்தறிவு என்றும்,
மனிதர்களுக்கு ஆறறிவு என்றும்
கூறும் வழக்கம்
தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
ஆனால் ஆங்கிலத்திலோ Five
Sense, Sixth Sense என்று கூறும்
வழக்கைக்கொண்டுள்ளனர்.
அதாவது இந்த "sense" எனும்
சொல் அறிவு, புலன்,
உணர்வு போன்றவற்றுடன்
தொடர்புக்கொண்ட
ஒரு வரைவிலக்கணத்தைத்
தருகின்றது. தமிழில் ஐம்புலன்
என்று கூறும்
ஒரு கூற்று இருப்பதனையும்
நோக்கலாம்.
கல்வி அறிவு
ஒரு பாடசாலையில்
கற்பிப்பதை ஒரு மாணவன்
உடனடியாக
அவற்றை விளங்கிக்கொள்கின்றான்
என்றால், அது அம்மாணவரின்
கிரகிக்கும் ஆற்றலின்
தன்மையையே காட்டுகிறது.
அதேவேளை ஒழுங்காக
பாடங்களில் கவனம் செலுத்தாத
மாணவனை அறிவற்றவன்
என்று கூறவும் முடியாது.
சிலவேளை அம்மாணவன்
விளையாட்டுத் துறையிலோ,
வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில்
ஆர்வம் மிக்கவராக இருக்கலாம்.
இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம்
கொள்ளும்
துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
எனவே எல்லோரது அறிவும்
ஒரே மாதிரியானதாகவும்,
ஒரே தன்மைக்கொண்டதாகவும்
இருப்பதில்லை.
அதேவேளை கல்வியால்
கிடைக்கப்பெறும் அறிவை
கல்வியறிவு
என்று மட்டுமே கூறலாம்.
எழுத்தறிவு
எழுத்தறிவு என்பது எழுத வாசிக்க
அறிந்துள்ள அறிவைக் குறிக்கும்.
அதேவேளை ஒருவர் சிறப்பாக
எழுதக்கூடியவராயின்
அவரை சிறப்பான எழுத்தாற்றல்
மிக்கவர்
என்பதே பொருத்தமானதாகும். இந்த
எழுதும் ஆற்றலையும் சிலர்
முறைப்படி கற்று பெற்றுக்கொள்பவர்களும்
உளர். தமது ஆர்வத்தின் காரணமாக
அற்புத ஆற்றல்மிக்க
எழுத்தாளர்களாய் ஆவோரும் உளர்.
ஆழ்மனப்பதிவறிவு
ஆழ்மனப்பதிவறிவு என்பது தாம்
பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப
பிறராலோ, வாழும் நாட்டின்
அரசியல் அமைப்புக்கு அமைவாக
ஆழ்மனதில்
பதிந்து அதுவே சரியென
ஏற்றுக்கொள்ளும் அறிவெனலாம்.
எடுத்துக்காட்டாக: பிறந்த
ஒரு குழந்தையை அது தானாக
உணர்ந்துக்கொள்ளும் முன்
வேறு ஒரு தம்பதியினர்
எடுத்து தமது குழந்தை என்று கூறி வளர்ப்பதால்,
அக்குழந்தை தமது பெற்றோர்
அவர்களே என ஆழ்மனதில்
பதிந்துக்கொள்ளும்
அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம்.
இன்னுமொரு எடுத்துக்காட்டாக:
GOD எனும் ஆங்கிலச் சொல்லின்
ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் "காட்"
என்பதே சரியெனும் அறிவையும்,
இலங்கைத் தமிழர்கள் "கோட்"
என்பதே சரியெனும் அறிவையும்
கொண்டிருப்போம். ஒரே தமிழரான
நாம் ஒரு வேற்று மொழி சொல்
தொடர்பில் இத்தகைய
உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம்
எனில் நாம் பிறந்த வளர்ந்த
நிலப்பரப்பின் அரசியல்
எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும்
சிலவிதிமுறைகள் மனதில்
ஆழப்பதிந்து அதுவே சரியெனும்
மனநிலைக்கு நாம்
சென்று விடுவதே காரணமாகும்.
இதுவே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது.
குறிப்பாக சிவபெருமான்
அடித்ததாலேயே எல்லோரது முதுகிலும்
தழும்பு இருக்கின்றது என
இந்துக்கள் நம்பும்
நம்பிக்கை போன்ற
ஒவ்வொரு மதங்களிலும் உள்ள
வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென
கொள்ளுதலும்
ஆழ்மனப்பதிவறிவின்
வெளிப்பாடே ஆகும்.

No comments:

Post a Comment