Total Pageviews

Wednesday, 27 March 2013

என் முகமூடியை கிழிக்க விரும்புகிறேன்

சாலையில்
உயிர்க்கு போரடுபவனை பார்க்கும்
போது,பசி என்று அழும்
குழந்தையை வேடிக்கை பார்க்கும்
போது,வறுமையின்
உச்சிக்கு சென்று வேசியென பெயர்
எடுத்தவளின் உடல் பசி ஆற்றும்
போது,நாளிதழில் தினமும்
கொலை,கற்பழிப்பு பார்த்தும்
பார்க்காததுமாக செல்லும்
போதும்,வெட்டி வார்த்தை பேசி,போலி
ஒப்பந்தம் போட்டு ஏமாற்றும்
போதும்,நான்
கொள்கை வாதி என்று நெஞ்சை
நிமிர்த்தி நடக்கும்,மனித
எந்திரமான என் முகத்தின்
முகமூடிகளை கிழிக்க
விரும்புகிறேன் ,கோழை என
தடுக்கிறது என் எந்திர வாழ்வு.

No comments:

Post a Comment