Total Pageviews

Tuesday 20 November 2012

தமிழரின் கோவில்

தமிழர்கள் பெரும்பாலோர் ”குலதெய்வ
வழிபாடு” செய்வார்கள். நம்
முன்னோர்களை வழிபடுவதே ”குலதெய்வ
வழிபாடு”.
பண்டை காலத்தில் கோவில்கள் கீழ்காணும்
வகையில் வகைப் படுத்தபட்டுள்ளன.
பெருங்கோயில் - மாடக் கோயில்
குன்றுகள் மேல்
கட்டப்பட்டவை பெருங்கோயில்கள்.
கரக்கோயில்
தேரைப் போன்ற அமைப்புள்ளது.
ஞாழற் கோயில்
நறுஞ்சோலைகளின்
நடுவே யமைந்தது ஞாழற்கோயில்.
இளங்கோயில்
பழமையான கோயில்களுக்கு மாறாகக்
காலத்தால் பிற்பட்ட கோயில்கள்
இளங்கோயில்கள்.
மணிக்கோயில்
மணிபோன்ற விமான அமைப்பைக் கொண்ட
கோயில்.
கொகுடிக் கோயில்
முல்லைக் கொடிகள் படந்த சூழ்நிலையில்
அமைந்தது.
ஆலக்கோயில்
ஆலமரத்தடியில் எழுந்த கோயில்கள்
ஆலக்கோயில்கள்.


No comments:

Post a Comment